Daily Archives: ஜூலை 29th, 2014

தலைசுற்றல், மயக்கமா? மூளை பாதிப்பாக இருக்கலாம்!

பல்வேறு நோய்களால் மூளை பாதிக்கப்படும்போது, நம் உடலில் நிரந்தர ஊனம் ஏற்படுகிறது. இதனால் வேலை செய்ய முடியாது. குடும்பத்தில் வறுமை, நிதி நெருக்கடி, மற்றவர்களை சார்ந்திருத்தல் போன்று சமூக பொருளாதார பிரச்னைகள் எழுகின்றன

தலைசுற்றல், மயக்கம் ஆகியவை, மூளை சார்ந்த பாதிப்பாக இருக்கலாம். பக்கவாதம் வந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வது அவசியம். காலம் தாழ்த்திச் சென்றால் சிக்கலாகிவிடும். புகை, மது தவிர்த்தல், தினமும் பழம், காய்கறி சாப்பிடுதால் மூளை பாதிப்பு வராமல் தப்பலாம்.
– இப்படி சொல்கிறார், நரம்பியல் துறை நிபுணர் டாக்டர் கே.பானு. இப்படி எச்சரித்தவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் பதில்களும்:

1. மூளையின் செயல்பாட்டால் என்ன நடக்கிறது? Continue reading →

மசாலா டீ குடித்தால் தொண்டை வலி விலகும்

தொண்டை வலி என்பது எல்லா வயதினருக்கும் எந்த நேரத்திலும் வரக்கூடியது. இவ்வாறு தொண்டை வலி ஏற்பட்டால் எச்சில் விழுங்கக்கூட முடியாது. சாப்பிடும்போதும் சிரமம் இருக்கும். எனவே இதை விரட்ட சில டிப்ஸ்… சுகாதாரமின்மை மற்றும் வைரஸ், பாக்டீரியா தொற்றுதான் தொண்டையில் துவங்கி உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. தொண்டையில் புண் இருக்கும்போது தொண்டை கரகரப்பு மற்றும் அரிப்பு இருக்க வாய்ப்புள்ளது. இதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டால் சில நாட்களில் குணமாகி விடும். சுகாதாரமற்ற தண்ணீரை குடிக்கும்போது வைரஸ் தொற்றும், சுகாதாரமற்ற

Continue reading →

நீங்கள் எவ்வளவு உப்பு சாப்பிடுகிறீர்கள்?

ஷாக் தரும் சால்ட் வில்லன் "நாலு காபி” என ஆர்டர் சொன்னதுமே, எதிரில் இருப்பவர்களிடம் ”ஷுகர் நார்மல்தானே?” எனக் கேட்கும் பழக்கம் நம்மிடம் வந்துவிட்டது. ஸோ, சர்க்கரை விஷயத்தில் நாம் கொஞ்சம் உஷார்தான். ஆனால், உப்பு?”உங்களுக்கு உப்பு எவ்வளவு போடணும்?” என்ற கேள்வியே நமக்கு பரிச்சயமில்லை. ஆனால், சமீபத்தில் ‘உலக உயர் ரத்த அழுத்த நோய் நாளை’க் கடைப்பிடித்த உலக சுகாதார நிறுவனம், உலக அளவில் ஏற்படுகிற இறப்புகளுக்கு முக்கியமான காரணிகளில் ஒன்றாக உப்பைக் குறிப்பிட்டிருக்கிறது. ‘உப்புதானே… என்ன செய்துடும்?’ என்ற நம் அசட்டை மனப்போக்கை சட்டை பிடித்து உலுக்குகிறது இந்தத் தகவல். ”எல்லோரது உடம்புக்கும் உப்பு தேவை. ஆனால், அது கொஞ்சமும் அளவு தாண்டக் கூடாத அமிர்தம். அந்தக் கால Continue reading →

மாதுளை

உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை அள்ளித்தருவதால், மாதுளம் பழத்தை ‘சூப்பர் ஃபுரூட்ஸ்’ என்று அழைக்கிறோம். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கும் கொழுப்பைக் கட்டுக்குள் கொண்டுவர நினைப்பவர்களுக்கும், இந்தப் பழத்தைத் தாரளமாகப் பரிந்துரைக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதில் உள்ள கிரானடின் பி (Granatin B) உள்ளிட்ட வேதிப்பொருட்கள் இதய நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கின்றன. மேலும் திசுக்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதால், தோலில் சுருக்கம், கருவளையம் போன்ற சரும பிரச்னைகளைத் தவிர்க்கும் ஆற்றல் இதற்கு உண்டு.

Continue reading →

மனிதன் மாறி விட்டான்!-7

ஒருவர் தொலைபேசியில் உரையாடும்போது அவருடைய உரையாடலைக் கேட்காமலேயே… தொலைவில் இருந்தே அவர் யாருடன் பேசுகிறார் என்பதை அறிந்துகொள்ளலாம். தலையைக் குனிந்துகொண்டு பேசினால், ‘மேலதிகாரியிடம் பேசுகிறார்’ என்று பொருள். நேராக வைத்துக்கொண்டு பேசினால், ‘தனக்குக் கீழ் பணிபுரிபவரிடம் பேசுகிறார்’ என்று பொருள். தலையை அசைப்பதை மட்டும் மும்முரமாக செய்தால், ‘மனைவியிடம் பேசுகிறார்’ என்று பொருள். முதுகைத் திருப்பிக்கொண்டுப் பேசினால், ‘காதலியிடம் பேசுகிறார் ’ என்று பொருள். இப்படி எளிதில் சொல்லிவிட முடியும்.  இரண்டு பேர்  ஓரிடத்தில் அமர்ந்து பேசும்போது, யார் மேலதிகாரி என்பதை ஒருவருடைய தோரணையில் இருந்தே தெரிந்துகொள்ளலாம்.  ஒய்யாரமாக அலட்டிக்கொள்ளாமல் பேசுபவர் அதிகாரி. அவர் பேசுகிற அபத்தங்களையும் அர்த்த சாஸ்திரத்தைக் கேட்பதைப் போல் குறிப்பெடுப்பவர் பணியாளர். சாரு ரங்னேங்கர் சொல்வதைப்போல, ‘யார் அடுத்தவர்கள் நேரத்தை அதிகம் வீணடிக்கும் உரிமை பெற்றவரோ, அவரே மேலதிகாரி’!

Continue reading →