Daily Archives: ஜூலை 30th, 2014

கொய்யா

குறைந்த விலையில் கிடைப்பதால், ‘ஏழைகளின் ஆப்பிள்’ என்று அழைக்கப்படுகிறது. இதில் நார்ச்சத்து நிறைவாக உள்ளதால் நல்ல மலமிளக்கியாக செயல்படுகிறது. மேலும், இதில் உள்ள நார்ச்சத்து குடலைச் சுத்தப்படுத்தும். இதனால் குடலில் நச்சுக்கள் சேருவது தவிர்க்கப்பட்டு, குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைகிறது.

Continue reading →

தடுப்பூசி ரகசியங்கள்! – 4

தடுப்பூசி என்பது தமிழ் சூழலுக்குப் புதிய விஷயம் அல்ல. ‘வெள்ளம் வரும் முன் அணை போடு’ என்பது காலங்காலமாய் நம் சூழலில் உலவிவந்த சொலவடைதான். தடுப்பூசி என்பது அந்தக் கருத்தாக்கத்தில் விளைந்த கருவிதான்.

குழந்தைக்கு உரிய காலத்தில் போடப்படும் தடுப்பூசி, பிற்காலத்தில் அந்தக் குழந்தையின் ஆரோக்கியத்தைக் காக்கும் அரணாக அமையும். பெரும் செலவையும் மன உளைச்சலையும் தவிர்க்கும். அதனால், தடுப்பூசி விஷயத்தில் அலட்சியம் கூடாது. செலவு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அரசாங்கமே, அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு மருத்துவ முகாம்களிலும் பெரும்பாலான ஊசிகளை இலவசமாகப் போடுகின்றது. பெற்றோராகிய நம்முடைய மிகப் பெரிய பொறுப்பு… உரிய காலத்தில் அவற்றை எல்லாம் குழந்தைகளுக்குப் போடுவது மட்டும்தான்.

Continue reading →

தலை முடியின் பராமரிப்புகள்

தலைமுடியின் வறட்சியை போக்க வாரம் ஒரு முறை முட்டையின் வெள்ளை கருவை தலையில் தேய்த்து 20 நிமிடம் கழித்து முடியை அலசவும். முடி மென்மை யாகவும், மினுமினுப்பாகவும் இருக்கும். பொடுகு தொல்லை நீங்க தேங்காய் பூவை மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைத்து பிழிந்து வடிகட்டி முடியின் வேர்களில் தடவி 20 நிமிடம் கழித்து முடியை அலசவும். வாரம் ஒரு முறை செய்யவும். பேன் தொல்லை நீங்க வேப்பிலையை அரைத்து தலையில் பேக்காக போட்டு அரைமணி நேரம் கழித்து முடியை அலசவும். வெளியில் சென்று வீட்டிற்குள் வருவதற்கு முன் கால்களை நன்கு கழுவி விட்டு வர

Continue reading →

சாதனை பெண்மணி!

ஜூலை 30 –ஆடிப்பூரம்


இந்து மதத்தில், எத்தனையோ தெய்வப் பெண்களைப் பற்றி படித்திருப்போம். உலக நன்மைக்காக லட்சுமி தாயாரே சீதா, ருக்மணி என்ற அவதாரங்களை எடுத்து பூமிக்கு வந்த போது, பகவான் விஷ்ணுவும் ராமனாக, கிருஷ்ணனாக மனித அவதாரமெடுத்து பூமிக்கு வந்தார். இவர்களும் தங்கள் பக்தியின் காரணமாக ராம, கிருஷ்ணரை கணவராக அடைந்தனர்.
ஆனால், பூமாதேவி, ஆண்டாளாகப் பூமியில் பிறந்த போது, அவளுக்காக, பகவான் பூமியில் பிறக்கவில்லை. கோவிலிலே அர்ச்சாவதாரமாக (சிலை வடிவில்) சயனம் கொண்டிருந்த பெருமாளை, கணவனாக அடைய வேண்டும் என, மனதிற்குள் உறுதி பூண்டாள் ஆண்டாள்.
மகளின் இந்த விசித்திரமான ஆசையை அறிந்த பெரியாழ்வார், ‘மானிடப் பெண் ஒருத்தி, கோவிலில் சிலையாக இருக்கும் கடவுளை எவ்வாறு கணவனாக அடைய முடியும்…’ என, நினைத்து வேதனைப்பட்டார். ஆனால், ஆண்டாள் அதை பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. அவள் மனதில், பெருமாள் மட்டுமே நீக்கமற நிறைந்திருந்ததால், கண்ணன் சிலையாக இருந்தால் என்ன, அவன் தான் தன் கணவன் என்பதில் உறுதியாக இருந்தாள்.
பெரியாழ்வார், தினமும் பூமாலை கட்டி பெருமாளுக்கு சூட எடுத்துச் செல்வார். அதை யாருக்கும் தெரியாமல் எடுத்து, அந்த மாலை, பெருமாளுக்கு பொருத்தமாக இருக்குமா என, தன் கழுத்தில் அணிந்து அழகு பார்ப்பாள் ஆண்டாள். ஒருசமயம், அவள் அவ்வாறு அழகு பார்த்த போது, அவளது கூந்தல் முடி ஒன்று அதில் ஒட்டிக்கொள்ள, குட்டு உடைந்து போனது. பெரியாழ்வார் அவளை கண்டித்து, வேறு ஒரு மாலை கட்டி எடுத்துச் சென்றார். ஆனால், பெருமாளோ, ‘பக்தை அணிந்து தரும் மாலை தான் வேண்டும்…’ எனச் சொல்லி, ஆண்டாளின் காதலை ஏற்றுக் கொண்டார்.
கடவுள் மேல் அவள் கொண்ட ஆத்மார்த்தமான பக்தியும், காதலும், சிலையாக இருந்த தெய்வத்தையும், மனம் உருக வைத்து, அவளை ஏற்றுக் கொள்ள வைத்தது. தான் நினைத்த திருமாலையே கணவனாக அடைந்து, எந்த மானிட பெண்ணும் செய்யாத சாதனையைச் செய்தாள் ஆண்டாள். அந்த தெய்வமும், அவள் வாழும் காலத்திலேயே அவளுக்கு அனுக்கிரகம் செய்தது.
தன் மனதையே யாக குண்டலமாக்கி, தன்னுடைய பக்தியையும், காதலையும் நெருப்பாக்கி, தன் ஆன்மாவையே ஹவிசாக இட்டு, திருப்பாவை என்னும் மந்திரத்தால் அவனைத் துதித்து, தான் நினைத்ததை சாதித்தாள் ஆண்டாள்.
இத்தகைய வைராக்கிய உணர்வு கொண்ட இந்த சாதனைப் பெண்மணி, ஆடிமாதம் பூரம் நட்சத்திரத்தில் அவதரித்தாள்.
தங்கள் லட்சியத்தில் ஒருமித்த ஈடுபாடும், அதை அடைய வேண்டும் என்ற வைராக்கிய உணர்வும் இருந்தால், நினைத்ததை சாதிக்கலாம் என்பதற்கு, ஆண்டாளே வாழ்ந்து காட்டியுள்ளாள்!