உண்மை வெளிவர புத்தகம் எழுதுவேன்: நட்வர் சிங்குக்கு சோனியா பதிலடி
புதுடில்லி: முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங் தெரிவித்திருந்த கருத்துக்களுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா பதிலடி கொடுத்துள்ளார். தானும் புத்தகம் எழுத உள்ளதாகவும், அப்போது உண்மையை மக்கள் அறிந்து கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங் தனியார் டி.வி., ஒன்றிற்கு அளித்த பேட்டியில், காங்கிரஸ் தலைவர் சோனியா பிரதமர் பதவிக்கு வரமுடியாததற்கு காரணம் ராகுலே என்றும், சோனியா பிரதமர் ஆனால் அவர் கொல்லப்படலாம் என ராகுல் அச்சப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், மத்திய அரசின் செயல்பாடுகளில் சோனியா தலையிட்டதாகவும், முக்கிய கோப்புகள் சோனியாவின் பார்வைக்கு சென்ற பின்னரே ஒப்புதல் பெறப்பட்டதாகவும் கூறியிருந்தார். Continue reading →
ஸியோமி எம்.ஐ.3
குறைந்த விலையில் ஸ்மார்ட் போன் என்கிற தாரக மந்திரத்தை வைத்து பெரும் நிறுவனங்களுக்கு போட்டி தர வந்திருக்கிறது ‘ஸியோமி’ (Xiaomi) என்னும் சீன நிறுவனம். இது சீனாவின் ‘ஆப்பிள்’ என்று அழைக்கப்படுகிறது. காரணம், ‘ஆப்பிள்’ போல தனது ஸ்மார்ட் போன்களில் சிறந்த தரத்தையும் தோற்றத்தை யும் தருவதனால் சீனர்கள் இப்படி பெருமையாக அழைக்கிறார்கள். ஆனால், ஒரு ஆப்பிள் போனின் விலையில் குறைந்தபட்சம் நான்கு ஸியோமி ஸ்மார்ட் போன்களை வாங்கிவிடலாம்.
மிஸ்டர் கழுகு: விஜயகாந்த்துக்கு என்னாச்சு?
”தி.மு.க ஆட்சிக் காலத்தில் செய்த விஷயங்களாக இருந்தால், கண்ணை மூடிக்கொண்டு கல்தா கொடுப்பார்கள் என்பது அனைவரும் அறிந்த விஷயம். அதுவே பசையான மேட்டராக இருந்தால், எப்படி நடந்துகொள்வார்கள் என்பதற்கு உதாரணமான சமாசாரம் ஒன்றைச் சொல்கிறேன்!” என்ற பீடிகையுடன் வந்த கழுகார், அந்த மேட்டரை அவிழ்க்க ஆரம்பித்தார்.
”தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில், திருவான்மியூர் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 7.44 ஏக்கர் நிலத்தை, தனியார் கல்வி நிறுவன அறக்கட்டளைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான தீர்மானம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் வாரியக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த வட்டாரத்தில் கிரவுண்ட் வேல்யூ சுமார் 60 லட்சம் என்று சொல்லப்படுகிறது. விற்பனை செய்யப்படுவது 1 கோடி ரூபாய்க்கு மேல். ஆனால், அடிமாட்டு விலைக்குக் கொடுத்துள்ளதாக தீர்மானம் கூறுகிறது!”
”ரொம்பவும் செல்வாக்கானவர்களாக இருக்கும்!”
இருப்பவர்கள் விட்டுக் கொடுத்தால் இல்லாதவர்கள் பயன்பெறலாம்
புதுடில்லி : நாட்டின் மூலைமுடுக்குகளில் உள்ள ஏழை எளிய மக்களும் அனைத்து வசதிகளையும் பெறுவதற்கு, வசதி படைத்தவர்கள் தானே முன்வந்து அரசு அளிக்கும் மானியங்களை ஒதுக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. வசதி படைத்தவர்கள் அரசு மானியங்களை வேண்டாம் என்று கூறினால், அந்த மானிய தொகையை வசதி இல்லாதவர்களுக்கு அளிக்க முடியும் என அரசு முடிவு செய்துள்ளது.
நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்கு அனைவரும் அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ள மத்திய அரசு, அதன் முதல்படியாக வசதி படைத்தவர்கள் தாமாக முன்வந்து தாங்கள் பெறும் அரசு மானியங்களை வேண்டாம் என கூற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. இதன் முதல் கட்டமாக சமையல் சிலிண்டர்களுக்கு அளிக்கப்படும் அரசு மானியங்களை பெறாமல் வசதி படைத்த வாடிக்கையாளர்கள்,சந்தை விலையை செலுத்தியே சிலிண்டரை பெற்றுக் கொள்ளலாம் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது. 2013-14ம் நிதியாண்டில் சிலிண்டருக்கு மட்டும் ரூ.40,000 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த மானியத் தொகையை வசதி படைத்தவர்கள் மறுக்கும் பட்சத்தில், அந்த தொகையைக் கொண்டு வசதி இல்லாதவர்களுக்கு மானிய விலையில் பொருட்களை வழங்கவும், வளர்ச்சித் திட்டங்களையும் ஏற்படுத்த முடியும் என அரசு முடிவு செய்துள்ளது.
வாடிக்கையாளர்கள் அனைவரும் தாங்களே முன்வந்து சிலிண்டருக்கான மானியம் தங்களுக்கு வேண்டாம் என மறுக்குமாறு பெட்ரோலிய துறை சார்பில் வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பப்பட்டு வருகிறது. பெட்ரோலியத்துறை மற்றும் எரிபொருள் நிறுவனங்களின் இணையதளத்திலும் இது குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசின் செலவை கட்டுப்படுத்தவும், மானியங்களுக்கான தொகையை குறைக்கவும், இந்த புதிய யுக்தியின் மூலம் சேமிக்கப்படும் மானிய தொகையைக் கொண்டு ஏழைகளுக்கான நலத் திட்டங்கள் பலவற்றை ஏற்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. பெட்ரோலியத் துறையைத் தொடர்ந்து மற்ற துறை அமைச்சகங்களும் வாடிக்கையாளர்களின் உதவி்யையும், பொது மக்களின் ஒத்துழைப்பையும் கேட்க முடிவு செய்துள்ளன.விரைவில் மற்ற அமைச்சகங்களும் மானிய தொகையை குறைக்கும் நடவடிக்கையில் இறங்கும் என எதிர்பார்க்கலாம்.
மானியங்களை திரும்ப ஒப்படைத்து, நாட்டை வளர்ச்சி பாதைக்கு எடுத்துச் செல்லும் அரசின் முயற்சிக்கு அனைவரும் கைகொடுப்போம்.
இணைத்த நோக்கியா இளைத்தது ஏன்?
முதன் முதலில் மொபைல் போன்கள் மக்களை அடைந்த போது அனைவரின் மனதிலும் இருந்த ஒரு பெயர் நோக்கியா. பின்லாந்து நாட்டில் எஸ்போ (Espoo) நகரில் தன் தலைமை இடத்தைக் கொண்டு, பன்னாடுகளில் கிளைகளை அமைத்து, மொபைல் போன்களை அனைத்து நிலை மக்களுக்கும் என தயார் செய்து வளர்ந்து, உயர்ந்த நிறுவனம் நோக்கியா. கடந்த 12 ஆண்டுகளாக மொபைல் போன் பயன்படுத்தும் அனைவரும், நோக்கியா போனில் தான் முதன் முதலில் தொடங்கி இருப்போம். பச்சை நிறப் பின்னணியில், ஒரே நிற எழுத்துக்களோடும், தெளிவான அழைப்பு பரிமாற்றங்களுடனும், ஸ்நேக் என்னும் விளையாட்டுடனும் நமக்குக் கிடைத்த நோக்கியாவை ஒரு பொக்கிஷமாகவே தொடர்ந்து கருதி வந்திருக்கிறோம். கையில் எடுத்துச் சென்று பயன்படுத்தும் டிஜிட்டல் சாதனமாக, நோக்கியா போன்கள் தான் முதலில் நமக்கு அறிமுகமாயின.
இன்று அதற்கு விடை கொடுத்துவிட்டோம். நோக்கியாவினை முழுமையாக, மைக்ரோசாப்ட் சென்ற ஏப்ரல் 25 அன்று தனதாக்கிக் கொண்டது. அதற்கு Microsoft Mobile Oy எனப் பெயர் சூட்டியுள்ளது. மிக நன்றாக இயங்கும் வலிமையான நிறுவனங்கள் கூட ஒரு நாளில் விழலாம் என்ற படிப்பினையை நாம் நோக்கியாவிடமிருந்து கற்றுக் கொண்டுள்ளோம். 750 கோடி டாலர் தொகைக்குத்தான் நோக்கியா கை மாறியுள்ளது. 2007 வரை 41 சதவீத சந்தைப் பங்கினைக் கொண்டிருந்த நோக்கியா தொடர்ந்து சரிந்து, வேறு வழியின்றி தன்னை மைக்ரோசாப்ட் வசம் ஒப்படைத்துள்ளது. ஏன், சென்ற ஆண்டு கூட, நோக்கியா 15% பங்கு கொண்டிருந்தது.
அன்னாசிப் பழம்
தென் அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட அன்னாசிப் பழம் உலகம் முழுக்கப் பரவ கப்பல் மாலுமிகள் ஒரு மிகப் பெரிய காரணம். அவர்கள் எங்கு பயணத்தை மேற்கொண்டாலும் வைட்டமின் சி குறைபாட்டால் ஏற்படக்கூடிய ஸ்கார்வி நோயைத் தவிர்ப்பதற்காக, அன்னாசிப்பழத்தை எடுத்துச்செல்வது வழக்கம். இதில் இருந்தே இந்தப் பழத்தின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ளலாம்.
அகமும் சார்ந்ததே அழகு!
அழகு என்பதை புறத்தோற்றத்தை வைத்தே அளவிடுகிறோம். ஆனால், அந்த அழகு, உடலின் உள் உறுப்புகளின் ஆரோக்கியம், உணவு மற்றும் வாழ்க்கை முறைப் பழக்கங்களின் பிரதிபலிப்பு என்பதைப் பலரும் உணர்வதில்லை. ”எந்த ஒரு அழகுப் பிரச்னைக்கும் மேலோட்டமாக எடுத்துக் கொள்கிற சிகிச்சைகள் தற்காலிகப் பலனைத் தருமே தவிர, நிரந்தரத் தீர்வளிக்காது. புற அழகு என்பது ஒவ்வொருவரது உடலிலுள்ள வாதம், பித்தம், கபம் அளவுகளின் சமநிலையைப் பொறுத் தது” என்கிறார் சஞ்சீவனம் நேச்சுரல் பியூட்டி சென்டரை சேர்ந்த மருத்துவர் யாழினி. ”ஒவ்வொருவர் உடம்பிலும்