Monthly Archives: ஓகஸ்ட், 2014

ஆல் அமைச்சர்ஸ்… அலர்ட்!

அட... அமைச்சரவை மாற்றங்களின்போது மட்டுமே தமிழக அமைச்சர்கள் செய்திகளில் அடிபடுகிறார்கள். மற்ற நேரங்களில் அவர்கள் என்னதான் செய்துகொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரின் பிரத்யேக இயல்புகள் என்ன? எதுவுமே தெரியாத மூடுமந்திரமாகத்தானே இருக்கிறது. ஒரு ‘மினிஸ்ட்ரி ரவுண்ட்-அப்’ அடிப்போம். வாருங்கள்…

யார் என்ன பழமொழி சொன்னாலும் அதன் அர்த்தம் கேட்டு மனதில் இருத்திக்கொள்வது நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பழக்கம். அதோடு பழமொழிகள் தொடர்பான புத்தகங்களையும் படிப்பார். ‘கிழிஞ்ச ஜிப்பா… தகர டப்பா’ என கருணாநிதி பெயர் சொல்லாமல் வளர்மதி சட்டசபையில் பேசியபோது, தி.மு.க உறுப்பினர்கள் கொந்தளித்தனர். உடனே, ‘மூளி என்றால் இவர்கள் ஏன் மூக்கை தொட்டுப் பார்க்கிறார்கள்?’ என பதிலடி கொடுத்தார் ஓ.பி. அதற்கெல்லாம் அந்தப் பழமொழி பிரேமையே காரணம்!

Continue reading →

எக்ஸெல் பிட்ஸ்:

எக்ஸெல் பிட்ஸ்:
தேர்ந்தெடுக்கப்பட்ட பார்முலாவிற்கு எந்த செல்கள் எல்லாம் தொடர்பு உள்ளது என்று அறிய CTRL+[ அழுத்தவும்.
ctrl+] கீகளை அழுத்தினால் எந்த செல்லில் கர்சர் இருக்கிறதோ அந்த செல் சம்பந்தப்பட்ட பார்முலாக்கள் காட்டப்படும்.
ஷிப்ட் + ஆரோ கீ (Shift+Arrow key) அழுத்தினால் செல்கள் தேர்ந்தெடுக்கப்படுவது ஒரு செல்லுக்கு நீட்டிக்கப்படும்.
கண்ட்ரோல் + ஷிப்ட் + ஆரோ கீ (Ctrl+Shift+ Arrow key) அழுத்தினால் அதே படுக்கை அல்லது நெட்டு வரிசையில் டேட்டா இருக்கும் கடைசி செல் வரை செலக்ஷன் நீட்டிக்கப்படும்.

Continue reading →

விண்டோஸ் 9 வர இருக்கிறது

மிகப் பெரியஎதிர்பார்ப்புகளுடனும், முற்றிலும் மாறுபட்ட தொழில் நுட்பத்துடனும் வெளியிடப்பட்ட விண்டோஸ் 8 மக்களின் ஆதரவினைப் பெறுவதில் வெற்றி அடையவில்லை. வழக்கமான இயக்கத்தில், முற்றிலுமாக மாறுபட்ட மாறுதல்களை மேற்கொள்ள பயனாளர்கள் தயங்கினார்கள். விண்டோஸ் 8.1 மற்றும் அதற்கான அப்டேட் வந்தும் கூட, விண்டோஸ் 8 பயனாளர்களின் எண்ணிக்கை இன்னும் எதிர்பார்த்தபடி உயரவில்லை.

Continue reading →

மனிதன் மாறி விட்டான்! -15

செல்வத்துள் செல்வம்

காதுகளை மான்கள், யானைகள், முயல்கள் போன்றவை அசைக்க முடியும், ஓசை வருகிற பக்கம் திருப்ப முடியும். ஆனால் அது குரங்குகளுக்கு இல்லை. எனவே, மனிதனும் அவற்றை  அடையவில்லை. மனிதனின் காதுக்குள் செவிக்குழாய் ஒன்று செல்கிறது. காது மடல் சேகரிக்கும் ஓசைகள் செவிக்குழாய் வழியாக உள்ளே செல்கின்றன. செவிக்குழாயின் உள்பகுதியில் ஒரு சின்ன மெல்லிய பறை இருக்கிறது. அதுவே செவிப்பறை.  அதன் கனம் பத்தில் ஒரு மில்லிமீட்டர் மட்டுமே.  அது ஒலியின் வேகத்துக்கேற்ப அசைகிறது.

Continue reading →

தீராத நோய்களைத் தீர்க்கும் திபெத் மருத்துவம்!

விரிந்து பரந்துகிடக்கும் சி.பி.ராமசாமி ஃபவுண்டேஷன் வளாகத்துக்கு வெளியே இருந்து பார்த்தால், உள்ளே அப்படி ஒரு மருத்துவமனை இருப்பது தெரியாது. சென்னை தேனாம்பேட்டை, எல்டாம்ஸ் ரோட்டில் உள்ள அந்தப் பிரமாண்டமான கட்டடத்தின் உள்ளே நுழைந்தால் அழகிய குடிலுக்குள் அமைந்திருக்கிறது திபெத்தியன் மெடிக்கல் சென்டர். உள்ளே நுழைந்தால் வழக்கமாய் மருத்துவமனைகளில் நாம் உணரும் மருந்து வாசனையோ, நோயின் தடமோ இல்லை. திபெத் கொடிகள் இரண்டு, சுவரில் தொங்க, நடுநாயகமாய்ச் சிரிக்கிறது தலாய்லாமா புகைப்படம். இங்குதான் பல அலோபதி மருத்துவர்களால் தீர்க்க முடியாத நோய்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கிறார்கள்.

நாடி பிடித்துப் பார்த்து நோயின் மூலத்தைக் கண்டறிபவர்கள் மாத்திரைகளாகவும் மருந்துகளாகவும் தருவது எல்லாமே மூலிகைகளால் செய்யப்பட்டவை.

Continue reading →

ஜாவா வல்லுநர்களே தேவை

தற்போதைய சாப்ட்வேர் வேலை வாய்ப்பு சந்தையில், அதிகம் தேடப்படுபவர்கள், ஜாவா தொழில் நுட்பம் தெரிந்தவர்களே. வேலை தேடிப் பதிந்தவர் களைத் தேடுகையில், இந்த தொழில் நுட்பத்தில் வல்லுநர்களாக இருப்பவர்களையே, வேலை தருபவர்கள் தேடுகிறார்கள் என்று இந்த பிரிவில் செயல்படும் Dice.com என்ற இணைய தளம் தெரிவித்துள்ளது. இருபது ஆண்டுகளுக்கு முன் ஒரு புரோகிராமிங் மொழியாக அறிமுகப்படுத்தப்பட்டு, இன்று பல்வேறு பிரிவுகளில், பல வகைகளில் பயன்படுத்தப்படும் ஜாவா தொழில் நுட்பம், இன்றும் உறுதியான கட்டமைப்பை ஏற்படுத்தக் கூடிய மொழியாக இயங்குகிறது என Dice.com நிறுவனத் தலைவர் கூறியுள்ளார்.

Continue reading →

எக்ஸ்புளோரரில் நாம் விரும்பும் போல்டர்

விண்டோஸ் 7 சிஸ்டத்தில், நாம் விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறந்தவுடன், நாம் இருப்பது லைப்ரரீஸ் (Libraries) பிரிவில். இதில் பணியாற்ற விரும்புபவர்களுக்கு இது நல்ல ஏற்பாடாக இருக்கும். ஆனால், எனக்கு இது தேவையில்லை என்று எண்ணுபவர்கள், எக்ஸ்புளோரர் வேறு ஒரு போல்டரில் திறக்கப்பட வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். குறிப்பிட்ட ஒரு போல்டரில் திறக்கப்பட எப்படி செட் செய்திட வேண்டும் என்பதனை இங்கு பார்க்கலாம்.

Continue reading →

உணவு யுத்தம்!-32

16-ம் நூற்றாண்டில் ஐரோப்பிய கடல் பயணிகள் உருளைக்கிழங்கை பிலிப்பைன்ஸ் நாட்டில் அறிமுகப்படுத்தினர். 17-ம் நூற்றாண்டில் இந்தோனேஷியாவின் ஜாவா தீவுப் பகுதிகளில் அறிமுகமானது. அப்போதுதான் இந்தியாவுக்கும் உருளைக்கிழங்கு வந்து சேர்ந்தது.

 

உலகளவில் உருளைக்கிழங்கு உற்பத்தி 315 மில்லியன் மெட்ரிக் டன்கள். இதில் நான்கில் ஒரு பகுதி, அதாவது 79 மில்லியன் மெட்ரிக் டன்களை சீனா உற்பத்தி செய்கிறது. அடுத்த இடம் ரஷ்யாவுக்கு. இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது.

உருளைக்கிழங்கு உற்பத்தி மற்றும் விற்பனையை முறைப்படுத்துவதற்காக சர்வதேச மையம் ஒன்று பெரு நாட்டின் தலைநகர் லிமா நகரில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இதற்கான ஆராய்ச்சி மையம் சிம்லாவில் உள்ளது.

Continue reading →

எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்க…

1. ஏழு மணி நேரக் கும்மிருட்டுத் தூக்கத்துக்குப் பின், இளங்காலை மொட்டைமாடி வெயிலில் 20 நிமிட உலாவல், தோட்டத்து வேப்பங்காற்றில் கபாலபாதி பிராணாயாமம், பின்னர் நலுங்கு மாவு தேய்த்துக் குளியல், காலையில் கரிசாலை முசுமுசுக்கைத் தேநீர், மத்தியானம் தூய மல்லிச்சம்பா சோறு, அதற்கு மிளகுவேப்பம்பூ ரசம், ‘தொட்டுக்கா’வாக நெல்லிக்காய்த் துவையல், இரவில் சிவப்பு அரிசி அவலுடன் சிவப்புக் கொய்யா சாப்பிட்டு வந்தால், எந்தத் தொற்றும் நெருங்க நிச்சயம் யோசிக்கும்!

Continue reading →

ஆட்டோ பார்மட் எங்கு உள்ளது?

வேர்ட் புரோகிராம் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட காலம் தொடங்கி, அதன் ஆட்டோ பார்மட் டூல் பல வகை திருத்தங்களை மேற்கொள்ள உதவி வந்தது. குறிப்பிட்ட டெக்ஸ்ட் அல்லது முழு டாகுமெண்ட்டினைத் தேர்ந்தெடுத்து, அதன் பின்னர், Format | AutoFormat கிளிக் செய்தால், வேர்ட் நாம் அமைத்து வைத்த பார்மட்டில், அந்த டெக்ஸ்ட்டினை அமைத்துத் தரும்.
இந்த வசதி தந்த டூல், வேர்ட் 2007க்குப் பின்னர், நீக்கப்பட்டதாகக் காட்சி தந்தது. ஏனென்றால், மைக்ரோசாப்ட் நிறுவனத்தில், வேர்ட் புரோகிராமினை வடிவமைத்தவர்கள், இந்த டூலை அநேகம் பேர் பயன்படுத்தவில்லை என்று கருதி, எடுத்துவிட்டனர். அதனாலேயே, வேர்ட் 2007 தொகுப்பிலும், ரிப்பன் கிளிக் செய்து அதன் மெனுக்களில் தேடினாலும், இந்த டூல் கிடைப்பதில்லை. ஆனால், உண்மையிலேயே, இந்த டூல் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்த நீங்கள் ஆர்வம் உடையவராக இருந்தால், தேடி அமைத்துக் கொள்ளும்படி மைக்ரோசாப்ட் விட்டுவிட்டது.

Continue reading →