ஆரோக்கியப் புல்!
”அருகம்புல் என்றதும் பிள்ளையார்தான் ஞாபகத்துக்கு வருவார். சித்த மருத்துவத்தில் மிக முக்கியமான மருந்தாகக் கருதப்படுகிற மூலிகைகளில் ஒன்று, அருகம்புல். இது நீர்ப்பதம் உள்ள எல்லா இடங்களிலும் வளரக்கூடியது. நம் முன்னோர்கள், இந்த அரிய மூலிகையை, உணவின் ஒரு பகுதியாகவே பயன்படுத்தி வந்தனர். மனித உடலில் பல்வேறு நோய்களுக்குக் காரணமான வாதம், பித்தம், கபம், நாடி போன்றவற்றை நீக்கும் மூலக்கூறுகள் அருகம்புல்லில் அதிகம் உள்ளன” என்கிறார் சென்னை சித்த மருத்துவர் க.அருண்.
ஹெல்த் இன்ஷூரன்ஸ் க்ளைம்: நிராகரிப்பிலிருந்து தப்புவது எப்படி?
இன்றைய சூழ்நிலையில் மனிதர் களின் மருத்துவத் தேவையானது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஒவ்வொருவரும் மெடிக்ளைம் பாலிசி எடுப்பது அவசியமாகிறது.
ஆனால், மெடிக்ளைம் பாலிசி எடுத்திருந்தாலும், சில சமயங்களில் சிகிச்சைக்கான இழப்பீட்டைத் தராமல் நிராகரித்து விடுகின்றன தேர்டு பார்ட்டி அட்மினிஸ்ட்ரேட்டர் (TRA) என்று அழைக்கப்படுகிற இழப்பீட்டை செட்டில் செய்யும் நிறுவனங்கள். இந்த நிராகரிப்பிலிருந்து தப்புவது எப்படி?
இதைத் தெரிந்துகொள்ளும்முன், க்ளைம்கள் நிராகரிக்கப்படுவதற்கான காரணங்களைத் தெரிந்துகொள்வோம்.
பாலிசிதாரருக்கு ஏதாவது உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. அவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்துக்கொள்கிறார். ஆனால், மருத்துவர் தனது மருத்துவ அறிக்கையில் இந்தப் பாதிப்பு, தொற்று நோய் மூலமாக வந்தது என எழுதினால் க்ளைம் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது.
லிப்ஸ்டிக் பயன்படுத்தினால் இதய நோய் வரும்
இன்றைய யுவதிகள் மட்டுமல்ல சிறுமிகள் முதல் மூதாட்டி வரை அனைத்து தரப்பினரும் உதட்டை எடுப்பாய் காட்ட லிப்ஸ்டிக் பயன்படுத்துகின்றனர். ஆரம்ப காலத்தில், விழாக்களுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த லிப்ஸ்டிக், இப்போது அன்றாட மேக்கப் பொருளாகவே மாறி விட்டது. அருகில் உள்ள கடைகளுக்கு செல்லும்போது கூட லிப்ஸ்டிக் போட்டு செல்லாமல் இருப்பதில்லை. ஆனால், நாம் அலங்காரத்துக்காக பயன்படுத்தும் லிப்ஸ்டிக்குள் பல அதிர்ச்சி தரும் தகவல் புதைந்துள்ளது. இது குறித்து சமீபத்தில் நடத்திய ஆய்வு முடிவில் வெளிவந்துள்ளது. அதுகுறித்து பெண்களுக்கான சிறிய எச்சரிக்கை. லிப்ஸ்டிக்குகள் மற்றும்
‘ஜெயலலிதாவும் சசிகலாவும் பிசினஸ் பார்ட்னர்கள்!’ சொல்கிறார் வழக்கறிஞர் மணிசங்கர்
”இந்த வழக்கு காலகட்டத்துக்கு ( 1991_96) முன்பே ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் பழக்கம் இருந்தது. முன்பே அவர்கள் இருவரும் பிசினஸ் பார்ட்னர்கள். ஒரே வீட்டில் இருக்கிறார்கள் என்பதற்காக ஜெயலலிதாவின் பணத்தில் பல கம்பெனிகளில் சசிகலா முதலீடு செய்துள்ளார் என்பது ஏற்புடையதல்ல. சசிகலாவுக்கு ஜெயலலிதா பணம் கொடுக்கவும் இல்லை. ஜெயலலிதாவிடம் சசிகலா பணம் வாங்கவும் இல்லை என்பதே உண்மை!” – பெங்களூரு நீதிமன்றத்தில் நடந்துவரும் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவின் வழக்கறிஞர் மணிசங்கர் வைத்த இறுதிவாதம்தான் இது.
மணிசங்கரின் வாதங்களை நீதிமன்றத்துக்குள் தனி மேஜையில் அமர்ந்து இரண்டு பயிற்சி நீதிபதிகள் குறிப்பு எடுத்துக் கொண்டிருக்க… ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் செந்தில், குலசேகரன், பன்னீர்செல்வம், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மணிசங்கருக்கு குறிப்பு எடுத்துக் கொடுத்தபடியே இருக்கிறார்கள். அரசு வழக்கறிஞர் மராடி, அவ்வப்போது குறுக்கிட்டு கேள்விகளைக் கேட்டபடியே இருக்கிறார்.
மணிசங்கரின் வாதத்தில் இருந்து…
ஸ்கைப்பில் குரூப் வீடியோ
ஒருவருக்கொருவர் திரையில் கண்டு பேசி மகிழ்ந்து கொள்ள உதவும் அப்ளிகேஷன் புரோகிராம்களில், பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவது ஸ்கைப் ஆகும். இதனை மைக்ரோசாப்ட் நிறுவனம் விலைக்கு வாங்கி, அதில் மேம்படுத்துதலைக் கொண்டு வந்துள்ளது.
கெட்டதிலும் நல்லதையே பார்!
‘பார்க்கும் பார்வை சரியாக இருந்தால், காணும் காட்சி நல்லனவாக இருக்கும்…’ என்றனர் மகான்கள். மனித மனங்களை ஆசை, கோபம், ஆணவம் ஆட்டி வைப்பது போல், பிறரிடம் குறை காணும் மனோபாவமும் சிலரை ஆட்டி வைக்கிறது. இத்தகைய குறை காணும் மனோபாவம் நீங்கினால், அவன் எல்லாருடைய அன்புக்கும், மரியாதைக்கும் உரிய மனிதன் ஆகி விடுவான். இதற்கு ஒரு கதையே இருக்கிறது…
பூலோகத்தில், கிருஷ்ண தேவன் என்று ஒரு அரசன் ஆட்சி புரிந்து வந்தான். அவன் நற்குணங்களின் பிறப்பிடம்; எத்தகைய கெட்ட தன்மையிலும் நல்லதையே காணும் சிறப்பு குணம் கொண்டவன். இம்மன்னனின் குணங்களைப் பற்றி ஒருநாள் தேவர்களிடம் சிலாகித்து பேசினான் தேவேந்திரன்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த தேவர்களில் ஒருவன், ‘இந்த தேவேந்திரன் சொல்லும் அந்த அரசனை சோதித்து பார்க்க வேண்டும்…’ என்று நினைத்தான்.
அதன்படி, கிருஷ்ணதேவன் நாட்டிற்கு வந்தவன், அரசன் வரும் வழியில், ஒரு நாயைப் போல் தன் வடிவத்தை மாற்றி, இறந்து கிடப்பது போல் படுத்திருந்தான்.
செத்துக் கிடந்த நாயின் உடம்பில் இருந்து துர்நாற்றம் வீசியது. அந்தப் பக்கம் போன அனைவரும், நாற்றத்தை தாங்க முடியாமல், மூக்கை பொத்தியபடி சென்றனர்.
அதேசமயம் அந்தப்பக்கம் வந்த அரசன், நாயின் துர்நாற்றத்தை பொருட்படுத்தாமல், ‘இறந்துபோன இந்த நாய்க்குத்தான் எத்தனை அழகான பல்வரிசை…’ என்று சொல்லி, ஆச்சரியப்பட்டான்.
அதைக்கேட்டதும், நாயாக இருந்த தேவன், தன் சுயவடிவோடு, மன்னன் முன் தோன்றி, ‘மன்னா… பிறர் குற்றத்தைப் பார்க்காத நீயே உண்மையில் நற்பண்புகள் வாய்ந்தவன்…’ என்று சொல்லி பாராட்டினான்.
அந்த மன்னன், கிருஷ்ண தேவனைப்போல, இறந்து கிடக்கும் விலங்குகளிடம் கூட, நல்லதை பார்க்கும் மன பக்குவம் நமக்கு இல்லாவிட்டாலும், பரவாயில்லை. நம்முடன் இருக்கும் சக மனிதர்களின் குற்றங்குறைகளைப் பார்க்காமல், அவர்களிடம் இருக்கும் நல்லதையே பார்க்கும் அளவிற்குப் பக்குவம் பெற முயல்வோம்.
– பி.என். பரசுராமன்
விதுர நீதி!: விவேகம், உயர்குடிப் பிறப்பு, புலன் கட்டுப்பாடு, கல்வியறிவு, வீரம், மிதமான பேச்சு, தான தருமம் செய்தல், நன்றியுணர்வு இந்த எட்டு பண்புகளும், மனித வாழ்க்கையை புகழ் பெறச் செய்கின்றன.