Advertisements

Daily Archives: ஓகஸ்ட் 2nd, 2014

ஆப்பிள்

நம் ஊரில் விளையக்கூடிய பழம் இல்லை என்றாலும் நம் வாழ்வில் இடம்பெறும் பழங்களுள் ஒன்றாகவே மாறிவிட்டது ஆப்பிள். தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டுவந்தால், டாக்டரிடம் செல்லவேண்டிய அவசியமே இருக்காது என்பார்கள்.

Continue reading →

Advertisements

பிரிக்ஸ் பேங்க்:உலக வங்கிக்கு ‘செக்’!

சீனா, ரஷ்யா, பிரேசில், இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் கூட்டாக இணைந்து தங்கள் நாடுகளின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக 50 பில்லியன் டாலரில் புதிய வளர்ச்சி வங்கியை சீனாவின் ஷாங்காய் நகரில் தொடங்க முடிவு செய்திருக்கிறது. தவிர, இந்த ஐந்து நாடுகளுக்கும் பொருளாதாரச் சிக்கல் ஏற்படும்பட்சத்தில் உதவி செய்வதற்காக அவசரகால நிதி ஏற்பாடாக 100 பில்லியன் டாலர் பணத்தையும் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்திருக்கிறது.

பிரிக்ஸ் நாடுகள் தொடங்கும் இந்த வங்கியில் இந்தியா 28 பில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் 1.68 லட்சம் கோடி ரூபாய்) முதலீடு செய்ய வேண்டும். இந்த பிரிக்ஸ் வங்கி பற்றி தெளிவாக எடுத்துச் சொன்னார் சர்வதேச பொருளாதார நிபுணர் டாக்டர் அனந்த நாகேஸ்வரன்.

Continue reading →

மனிதன் மாறி விட்டான்!-8

 

‘கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிரைத் தும்பி’ என்கிற பாடல் ‘திருவிளையாடல்’ படத்தில் ஒலித்தது. பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா என்கிற விரிவான சர்ச்சை அதன்மூலமாக நடந்தது. புலவர் நக்கீரர், ‘தேவலோகப் பெண்களுக்குக்கூட கூந்தலில் மணம் இருக்க முடியாது’ என்று ஏதோ அவர் தேவலோகத்தில் எல்லாம் நுழைந்து முகர்ந்தது மாதிரி பேசுவார். ஆனால் உண்மை என்ன?

நம்முடைய தலைமுடியில் சிபாசியஸ் சுரப்பி என்கிற ஒன்று இருக்கிறது. இந்த நுண்ணிய சுரப்பிகள் முடியின் வேர்ப்பகுதியில் இருந்துகொண்டு சீபம் என்கிற எண்ணெய்ப் பதம் கொண்ட ஒரு திரவத்தை உற்பத்திச் செய்கின்றன. அவை தலைமுடியை உலராமல் வைத்திருப்பதோடு, பாதுகாப்பையும் தருகின்றன. சிபாசியஸ் சுரப்பிகள் அதிகம் சுரந்தால், எண்ணெய் பதம் உள்ள தலைமுடி இருக்கும். அதில் வந்து தூசு ஒட்டிக்கொள்ளும். அதனால்தான் அடிக்கடி தலைக்குக் குளிக்கிறோம். அதிகம் தலைக்குக் குளித்தாலும் சீபம் பாதிக்கப்படும். இந்த வேதியியல் பொருளால் தலைக்கு என்று ஒரு மணம் இருக்கிறது.

Continue reading →

வேர்ட் டிப்ஸ்-காப்புரிமை அடையாளம் அமைக்க

காப்புரிமை அடையாளம் அமைக்க: வேர்ட் டாகுமெண்ட்களில் பல சிறப்பு குறியீடுகளை நாம் அவ்வப்போது அமைக்க வேண்டியதிருக்கும். அவற்றில் அடிக்கடி நாம் பயன் படுத்துவது, எழுத்துரிமையைக் குறிக்கும் காப்புரிமை குறியீடு ஆகும். இதனை ஆங்கில எழுத்து சி (C) அமைக்கப்பட்டு அதனைச் சுற்றி சிறிய வட்டம் அமைக்கப்பட்டிருக்கும். உங்களுடைய வேர்ட் தொகுப்பில் ஆட்டோ கரெக்ட் வசதி தரப்பட்டு, அதன் இயக்கம் நிறுத்தப்படாமல் இருந்தால், இதனை அமைப்பது எளிதாகும். அவ்வாறு இருந்தால், எழுத்து "c” யினை இரு அடைப்புக் குறிக்குள் அமைத்தால், அது தானாகவே காப்புரிமைக் குறியீடாக (C) மாற்றப்பட்டு அமைக்கப்படும்.

Continue reading →