மிஸ்டர் கழுகு: ஆண்மை சோதனைக்கு உடன்பட மாட்டேன்!
”சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் புகைப்படத்தை எடுத்து வைத்துக்கொள்ளும்!” என்று வாட்ஸ் அப்பில் கழுகார் தகவல் அனுப்பியிருந்தார். போட்டோவை சேகரிப்பதற்குள் கழுகார் அலுவலகத்துக்குள் வந்து குதித்தார்!
பப்பாளிப் பழம்
இதன் நிறைவான ஊட்டச்சத்துக்கள், செரிமானத்துக்கு உதவும் திறன், மருத்துவ குணநலன்கள் காரணமாக அனைவரும் விரும்பிச் சாப்பிடவேண்டிய பழம். கண் முதல் முடி வரை உடலின் அனைத்துப் பகுதிக்கும் தேவையான சத்துக்களை அள்ளித் தரும் பழம் இது.
பணம் கொட்டும் தொழில்கள்- கற்றாழை சாகுபடி!
கற்றாழை வறட்சியான பகுதிகளில் வளர்ப்பதற்கேற்ற ஒரு மருத்துவச் செடி. அழகுசாதன, மருந்துப் பொருட்கள் தயாரிப்பில் கற்றாழை பெரிதும் பயன்படுகிறது. எனவே, இந்தத் திட்ட அறிக்கையில் கற்றாழை சாகுபடி மற்றும் அதிலிருந்து ஜெல் பிரித்து எடுப்பது குறித்து பார்க்கலாம். குறிப்பாக, சொந்த நிலம் உள்ள விவசாயிகள் மேற் கொள்ள ஏதுவான தொழில் என்றாலும், குத்தகை நிலம் மூலமும் இந்தத் தொழிலை மேற்கொள்ள முடியும்.
வணிக ரீதியாக பயிரிட்டால் நல்ல வருமானம் நிச்சயம் என்றாலும், சரியான வழிகாட்டுதல்கள் இல்லை என்பதால் கற்றாழை சாகுபடி குறித்து யோசிப்பதில்லை. வேளாண்மைத் துறை வழிகாட்டுதல்கள் மற்றும் விவசாயப் பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பவர்களுடன் கூட்டுவைத்துக் கொள்ளும்போது நல்ல வருமானம் கிடைக்கும் என்பது உண்மை.
ஆஸ்துமா அறிகுறிகளை அறிவோம்!
அவஸ்தையின் மறுபெயர் ஆஸ்துமா. மூச்சுக் குழாயின் உட்சுவர் வீக்கம் அடைதல் மற்றும் சளியை அதிக அளவில் சுரத்தல் போன்ற காரணங்களால் மூச்சுக்குழாயின் பாதை சுருங்கி மூச்சுவிடச் சிரமப்படுவதையே ஆஸ்துமா என்கிறோம். இதனால், இருமல், வீசிங் பிரச்னையும் ஏற்படுகிறது.
சிலருக்கு இந்தப் பிரச்னை எப்போதாவது ஏற்படலாம். வேறு சிலருக்கோ இது வாழ்வையே பாதிக்கக்கூடிய, உயிரைப் பறிக்கக்கூடிய அளவு மிகக் கடுமையானதாக இருக்கும். ஆஸ்துமாவை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. ஆனால், டாக்டரிடம் சென்று தொடர் மருத்துவ ஆலோசனையின்படி ‘இன்ஹேலர் தெரப்பி’ பெறுவதன் மூலம் இதனைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இதன்மூலம் ஆஸ்துமா இல்லாதவர்கள் போலவே இயல்பான வாழ்க்கையை வாழ முடியும்.
புரோகிராமினை மாற்றுவது எப்படி?
புதிய கம்ப்யூட்டரில் அல்லது விண்டோஸ் ரீ இன்ஸ்டால் செய்த கம்ப்யூட்டரில், நமக்குத் தேவையான புரோகி ராமினை, அதன் போல்டரில் உள்ள பைல்களை, அப்படியே காப்பி செய்து பேஸ்ட் செய்தால், ஏன் அவை இயங்குவதில்லை? ஒரு புரோகிராம், கம்ப்யூட்டர் ஒன்றில் எப்படி தன்னைப் பதித்துக் கொள்கிறது என்பதனை அறிந்தால், இந்த சந்தேகம் நமக்கு வராது. அதனைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஒரு சில புரோகிராம்கள் மட்டும், குறிப்பாக, கேம்ஸ் புரோகிராம்கள், அவை பதியப்பட்டு இயங்கும் போல்டர்களில் இருந்து மொத்தமாக காப்பி செய்து, இன்னொரு கம்ப்யூட்டரில் பேஸ்ட் செய்து, இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு கிடைக்கின்றன. இவற்றை எடுத்துச் செல்லும் வகையிலான புரோகிராம்கள் ("Portable apps”) எனக் கூறலாம். மற்றவை அப்படி அல்ல. அவற்றை அதன் மூலக் கோப்பினைக் கொண்டு, இன்ஸ்டால் செய்திட வேண்டும். எனவே காப்பி செய்து, எடுத்துச் சென்று, பதிந்து இயக்க முடியாது. Continue reading →