கொல்லும் வைரஸ் எபோலா

தற்போது மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் பரவியுள்ள எபோலா வைரஸ், இந்தியாவையும் மிரட்டி வருகிறது. இது தாக்கினால் 10ல் 9 பேருக்கு மரணம் நிச்சயம். இந்த வைரஸால் அந்நாடுகளில் இதுவரை 700க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.வைரஸ் தாக்கிய 90 சதவீதம் பேருக்கு மரணம் நிச்சயம்.நோய் தாக்கிய 2-21 நாள் வரை மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும்.

அறிகுறி 1: காய்ச்சல், பலவீனம், தலை, தசை, தொண்டை வலி.

அறிகுறி 2: மத்திய நரம்பு மண்டலத்தை தாக்குகிறது.

அறிகுறி 3: நோய் முற்றிய நிலையில் ரத்தவாந்தி, கண், மூக்கு, வாயில் ரத்தக்கசிவு ஏற்படுகிறது.

எபோலா வைரஸ் நோயை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. நோய் அறிகுறிகளை சீர்செய்ய மருத்துவ முறைகளும் கண்டறியப்படவில்லை.

தற்போது பரவியுள்ள இடங்கள்:

சியரா லியோன் நாட்டில் பீரிடவுன் நகரிலும், லைபீரியாவில் மன்ரோவியா நகரிலும், கினியாவில் கோனக்ரி பகுதியிலும் தற்போது இந்த வைரஸ் கடுமையாக தாக்கியுள்ளது.

* இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இவ்வைரஸின் அறிகுறி கினியா நாட்டில் கண்டறியப்பட்டது.

* மார்ச் 18ல் பாதுகாப்பில்லாமல் சிகிச்சையளித்த மருத்துவருக்கு பரவியது.

* மார்ச் 21ம் தேதி எபோலா வைரஸ் என உறுதிப்படுத்தப்பட்டது.

* உலக சுகாதார நிறுவனம் ஜூலை 2ம் தேதி இந்நோய் வைரஸ் தாக்குதல் குறித்து அறிவிப்பு வெளியிட்டது.

* இந்த வைரஸ் தாக்குதலை அடுத்து லாவோஸ், நைஜீரியா மற்றும் அண்டை நாடுகளில் உச்சகட்ட பாதுகாப்பு நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

* எபோலா வைரஸ் முதன்முதலாக 1976ல் காங்கோவில் கண்டுபிடிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டோர்: 1300

மரணம்: 729

மூன்று நாடுகளில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் வைரஸ் தாக்குதல் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது.

பரவிய விதம்:விலங்கிலிருந்து இந்த வைரஸ் மனிதர்களை தாக்கியுள்ளது. குறிப்பாக பழம் தின்னி வவ்வாலிலிருந்து பரவியுள்ளது.இவ்வைரஸ் தாக்கியுள்ள மனிதர்களிலிலிருந்து மற்ற மனிதர்களுக்கு ரத்தத்தின் மூலம் பரவுகிறது.எபோலா வைரஸ் தாக்கினால் குடும்ப உறுப்பினர்களும், சிகிச்சை அளிப்பவர்களும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கும் எளிதில் பரவும் அபாயம் உள்ளது.காங்கோ நாட்டின் எபோலா நதிக்கரையில் முதன்முதலில் பரவியதால் இதற்கு "எபோலா வைரஸ்’ என பெயரிடப்பட்டது.

பாதுகாப்பு நடைமுறை:* நோய் தாக்கியவரிடமிருந்து தள்ளி இருக்க வேண்டும்.

* மருத்துவர்களும், குடும்ப உறுப்பினர்களும் தகுந்த பாதுகாப்பு கவசங்கள் அணிந்த பிறகே அருகே, அவர்களின் அருகே செல்ல வேண்டும்.

* நோய் தாக்குதலால் பலியான உடலை, மருத்துவரின் அறிவுரையுடன் கவனமாக அப்புறப்படுத்த வேண்டும்.

தாக்கிய ஆண்டு மற்றும் பலி

ஆப்ரிக்கா

கினியா (2014)

லைபீரியா (2014)

ஐவரி கோஸ்ட் (1994)

காபோன் (2001, 1996, 1994)

காங்கோ (2005, 2003, 2001)

சூடான், தெற்கு சூடான் (2004, 1979, 1976)

காங்கோ ரிபப்ளிக் (2012, 2008, 2007, 1995, 1977, 1976)

உகாண்டா (2012, 2011, 2007, 2000)

தென் ஆப்ரிக்கா (1996)

நோய் தாக்குதல்

பலி

=========

கிளைகோபுரோட்டீன்

ஆர்.என்.ஏ., மரபணு

நியுகிள்புரோட்டீன்

வைரஸ் உற்பத்தியாகுமிடம்

வைரஸ் உறை

%d bloggers like this: