ஹால்மார்க் தங்கம்…சுத்த தங்கமல்ல! உஷார் ரிப்போர்ட்
தங்க நகை வாங்கும்போது ஹால்மார்க் முத்திரை உள்ள நகையான்னு பார்த்து வாங்குங்கள் என்றுதான் எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால், இப்போது ஹால்மார்க் முத்திரையிட்ட தங்க நகைகள்கூட அசல் தங்க நகைகள் அல்ல என்று சொல்கிற அளவுக்கு சில விஷயங்கள் நடந்திருக்கின்றன.
இது என்ன, புதுக் குழப்பமாக இருக்கிறது என்கிறீர்களா? மேற்கொண்டு படியுங்கள்.
ஹால்மார்க் நகையை விற்பனை செய்யும் கடைக்காரர்களுக்கு பிஐஎஸ் (Bureau of Indian Standards)அனுப்பியுள்ள ஆணையின்படி, ஹால்மார்க் முத்திரையிட்ட நகைகளில் ஏதாவது தரக்குறைவு ஏற்பட்டால், அதற்கு நகை விற்பனை செய்யும் கடைக்காரர்தான் பொறுப்பு என்று சொல்லப்பட்டுள்ளது. இதை எதிர்த்து கோவை நகை உற்பத்தியாளர் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்த வழக்கில் இந்த ஆணைக்கு தற்காலிக தடை வழங்கப்பட்டுள்ளது.
உணவு யுத்தம்!-28
பிஸ்கட் என்ற ஆங்கிலச் சொல் பெஸ்கட் என்ற பிரெஞ்சு சொல்லில் இருந்து உருவானது. இதன் மூலச் சொல் லத்தீன் மொழியில் இருந்து பெறப்பட்டது என்கிறார்கள். லத்தீனில் பிஸ்க் கோட்டாமா என்றால் இருமுறை சுட்டது என்று பொருள். அதிலிருந்தே பிஸ்கட் உருவாகியிருக்கிறது. அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் குக்கீஸ் என்றும் மற்ற ஆங்கிலம் பேசும் நாடுகளில் பிஸ்கட் என்றும் அழைக்கப்படுகிறது. ஸ்காட்லாந்தில் குக்கீ என்றால் ‘பன்’னை மட்டுமே குறிக்கும் என்கிறார்கள்.
மிஸ்டர் கழுகு: என் வாழ்க்கையும் கடைசியை நெருங்குகிறது!
கழுகார் உள்ளே நுழைந்ததும், தனது சிறகுகளுக்குள் இருந்து சில காகிதங்களை எடுத்து விரித்தார்!
”இவை சாதாரண காகிதங்கள் அல்ல. கனலும் கண்ணீருமான கடிதங்கள். இதனை எழுதியிருப்பவர் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நண்பராக இருந்து தற்கொலை செய்துகொண்ட சாதிக் பாட்ஷாவின் மனைவி ரேகா பானு. கணவர் சாதிக் இறந்த பிறகு, வாழ்க்கையின் அனைத்துவிதமான கஷ்டங்களையும் சந்தித்து வருகிறாராம் இந்தப் பெண். சாதிக் பாட்ஷா ஆரம்பித்ததுதான் கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் என்ற நிறுவனம். அதில் பின்னர் பலரும் உள்ளே வந்து நுழைந்திருக்கிறார்கள். அதுதான் சாதிக் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்குப் போனது. தனது கணவர் மரணத்துக்குப் பிறகு, தனக்குச் சேர வேண்டிய பணத்தைக் கேட்டு ரேகா பானு பல்வேறு கடிதங்களை அனுப்பிய பிறகும், அவருக்கு அது தரப்படவில்லையாம். வாய்வார்த்தைகளில் கேட்பதைவிட அதிகாரபூர்வமாகக் கேட்கலாம் என்று கடிதங்களை அனுப்பியிருக்கிறார். அதற்கும் சரியான ரெஸ்பான்ஸ் இல்லை. ‘தன்னை இந்த கம்பெனியில் இருந்து கழற்றிவிட நினைக்கிறார்களோ?’ என்று நினைத்தவர், ‘எனக்கான பங்காக 50 கோடி ரூபாயைத் தாருங்கள்’ என்று சொல்லியிருக்கிறார். அதில் ஒரு கடிதம்தான் நம் கைக்குக் கிடைத்துள்ளது!”
”அதனுடைய சாராம்சம் என்ன?”
ஹார்ட் டிஸ்க்கின் இடம் அறிய
இப்போதெல்லாம் டெராபைட் அளவுகளில் ஹார்ட் டிஸ்க் பயன்படுத்தப்பட்டாலும், பயன்படுத்தத் தொடங்கிய சில மாதங்களிலேயே, ஹார்ட் டிஸ்க்கில் இடம் குறித்த பிரச்னை தலை தூக்குகிறது. எந்த ட்ரைவில் இடம் உள்ளது? ஏன் இந்த ட்ரைவில் இவ்வளவு இடம் பயன்படுத்தப்பட்டுள்ளது? காலி இடம் கொஞ்சமாக உள்ளதே? என்ற கேள்விகளெல்லாம் நம்மை ஆக்ரமிக்கின்றன. இதற்குக் காரணம் நாம் பயன்படுத்தும் புரோகிராம்கள் மற்றும் உருவாக்கும் பைல்கள் மட்டுமின்றி, நாம் ஹார்ட் டிஸ்க்கினை நிர்வகிக்கும் செயல்பாடுகளும் தான். அதிக அளவில் இடம் உள்ளதே என்ற எண்ணத்தில், தேவையற்ற புரோகிராம்களையும் பைல்களையும் நீக்காமல் விட்டுவிடுகிறோம். பின், ஒரு நிலையில், எதனை நீக்குவது, எதனை வைத்துக் கொள்வது என்ற குழப்பத்திற்கு ஆளாகிறோம். இது போன்ற சூழ்நிலைகளில் ஹார்ட் டிஸ்க்கின் நிலை குறித்து தெரிவிக்கும் சில புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றில் சிறந்த புரோகிராமான TreeSize Free குறித்து இங்கு பார்க்கலாம்.