Daily Archives: ஓகஸ்ட் 7th, 2014

சப்போட்டா

மாம்பழம், வாழையைப் போலவே அதிக அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, எளிதில் செரிமானம் ஆகக்கூடிய பழம் சப்போட்டா. இதில் சர்க்கரை மிக எளிய வடிவத்தில் இருப்பதால், சாப்பிட்ட உடனேயே உடலுக்கு ஆற்றலைத் தரும்.

Continue reading →

மளிகை கடை TO சூப்பர் மார்க்கெட் மாற்றும் சூட்சுமங்கள்!

வால்மார்ட் போன்ற வெளிநாட்டு கம்பெனிகள் காட்டும் பயம் ஒருபக்கம்; ரிலையன்ஸ், ஃபியூச்சர் போன்ற உள்நாட்டு கம்பெனிகள் தரும் போட்டி இன்னொருபக்கம் என நம்மூர் மளிகைக் கடைகள் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் பலப்பல. இந்த சவால்களை கொள்கை அளவில் மட்டும் எதிர்த்தால் போதாது. தொழில்ரீதியில் பெரிய நிறுவனங்களுடன் போட்டி போடக் கூடிய அளவுக்கு மளிகைக் கடைகள் தங்களை வளர்த்துக்கொண்டால் மட்டுமே காலவோட்டத்தில் நிலைத்து நிற்பதோடு, அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கியும் செல்ல முடியும். இதற்கு மளிகைக் கடைகள் என்ன செய்ய வேண்டும், எப்படிப்பட்ட தொழில் யுக்திகளை பின்பற்ற வேண்டும் என ரீடெய்ல் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின் முன்னாள் சிஇஓ டாக்டர் ஜிப்சன்.ஜி.வேதமணியிடம் கேட்டோம்.

Continue reading →

உயிர்மேல் ஆசை இருக்கா? உருக்குலையாம காப்பாற்றுங்க இதயத்தை!

உலக சுகாதார அமைப்பு – WHO, 2008ல், வெளியிட்ட தகவல்படி, உலக அளவில் இதய நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை, ஒரு ஆண்டுக்கு, 1.73 கோடி பேர். இதில், தென் கிழக்கு ஆசியாவில் மட்டும், 37 லட்சம் பேர் இறந்துள்ளனர்.
கடந்த, 2013ம் ஆண்டு புள்ளிவிவரப்படி, இந்தியாவில், இதய நோயாளிகள் எண்ணிக்கை, 24 சதவீதம். அடுத்த சில ஆண்டுகளில், இது, 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என, நம்பப்படுகிறது. இந்தியாவிலேயே, தமிழகத்தில் தான் இந்த எண்ணிக்கை அதிகம்.
மாரடைப்புக்கு காரணம்: இதய இயலை (Cardiology) பற்றிய விஞ்ஞானத்தை, அதிகாரப்பூர்வமாக விவரிப்பது அல்ல, இக்கட்டுரையின் முக்கிய குறிக்கோள். இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை தவிர்க்க, நாம் தினமும் கையாள வேண்டிய நடைமுறைகளை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே, நோக்கமாகும்.

Continue reading →

மனிதன் மாறி விட்டான்! -10

கண்ணுக்கு தெரியாத வேலிகள்

நான் இந்திய வருவாய்ப் பணிப் பயிற்சியில் இருந்தபோது, என்னுடன் துப்டன் டெம்பா என்ற அருணாச்சலப் பிரதேச நண்பர் இருந்தார். பல நூறு ஏக்கர் ஆப்பிள் தோட்டங்களுக்குச் சொந்தக்காரர். அவர் பௌத்தத்தைச் சார்ந்தவர். அவருடைய அண்ணன் அமைச்சராக இருந்தார்.  இவரும் இந்திய ஆட்சிப்  பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, பணியை உதறிவிட்டு  அரசியலில் நுழைந்து அமைச்சரானார். அவர் பெயரின் பொருள் ‘புத்தரைப் பின்பற்றுபவர்’. திபெத்திய எல்லைப் பகுதியில் இருந்தது அவர்களுடைய ‘டவாங்’ மாவட்டம்.  அவர் வீட்டுக் குதிரையில் அமர்ந்து கொண்டுதான் தலாய் லாமா இந்தியாவுக்கு வந்தாராம்.  அதற்குப் பிறகு அந்தக் குதிரையின் மீது அமர்ந்து சவாரி செய்ய யாரையும் துப்டனின் அம்மா அனுமதிக்கவில்லையாம். ஒரு முறை துப்டன் சவாரி செய்ய  முற்பட்டபோது, அவரைக் கண்டித்த அவர் தாய், ‘புனித லாமா பயணம் செய்த குதிரையில் சவாரி செய்ய நீ விரும்புகிறாயா?’ என்று தடுத்தாராம். அந்தக் குதிரை உயிரோடு இருக்கும் வரை அதுவும் புனிதப் பொருளாகவே பார்க்கப்பட்டது.

பழைய தமிழ்த் திரைப்படம் ஒன்றில் வருகிற காட்சி.  மனைவியை இழந்த கணவர் ஒருவர், தனது மனைவி  மிகவும் நேசித்த ஒரு நாற்காலியை மரியாதையுடன் பாதுகாப்புடன் வைத்திருக்கிறார்.  தனது வீட்டுக்கு வந்த ஒரு பெண், அந்த நாற்காலியில் ஏறி, எதையோ எடுக்க முயலும்போது, அந்தப் பெண்ணை அறைந்துவிடுவார். அந்த நாற்காலியில் மனைவியின் மறைவுக்குப்பின் யாரையும் அமர அவர் அனுமதித்தது இல்லை.  இது ஒரு வகையான வேலி. நாம் விற்ற வீடு, சின்ன வயதில் நாம் படித்த பள்ளிக் கூடங்கள் போன்றவை நம்மிடம்  ஏற்படுத்தும் தாக்கங்களும், நினைவுச் சலன வட்டங்களும் அப்படிப்பட்டவையே!

பெரிய மனிதர்களைச் சந்திக்கச் செல்லும்போது அவர்கள் அறைக்குள் செருப்பை அணியாமல் வெளியே விடுவது மரியாதை செலுத்துவதில் ஒரு பகுதி.  முதலில் அந்தப் பெரிய மனிதர்கள் இதை யாரிடமும் எதிர்பார்ப்பது இல்லை. ஆனால் ஒரு சிலர் அப்படிச் செய்ய ஆரம்பித்ததும், மற்றவர்களும் அப்படிச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். மு.மேத்தா செருப்புகளைப் பற்றிய கவிதையில் ‘பெயர்ப் பலகை பின்னால் வந்தது. ஒருவர் இருக்கிறாரா இல்லையா என்பதை வீட்டிற்கு வெளியே இருக்கும் செருப்புகளே உணர்த்துகின்றன!’ என்று குறிப்பிட்டிருப்பார். செருப்பு குறியீடாக சிம்மாசனம் ஏறிய நிகழ்வு நம் இதிகாசத்தில் உண்டு.

ஒரு வகையில் அமர்வதும், நகர்வதும், பவனி வருவதும் கண்ணுக்குத் தெரியாத அதிகார மச்சங்கள்.  ஒரு மேலதிகாரி அந்த அலுவலகத்தில் எந்தப் பகுதிக்குள் எப்போது வேண்டுமானால் நுழையலாம், ஆய்வு செய்யலாம், திடீரென சென்று யார் என்ன செய்கிறார் என்று பார்க்கலாம்.  அந்த உரிமை அவருடைய பதவியால் வருகிறது.  வட்டாட்சியர் அலுவலகம் சென்றவுடன், அங்கு மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் இருக்கையில் அமர்ந்துகொள்வதைப் பார்க்கலாம். நடைமுறையில் ஆட்சியர் வட்டாட்சியருக்கு எதிரே உள்ள இருக்கையில் அமர்வது நம் நாட்டில் சாத்தியம் இல்லை. ஹாஃப்ஸ்டடே என்பவர் ‘பண்பாட்டுத் தாக்கம்’ குறித்த மேலாண்மைப் புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார்.  அதில் ‘அதிகார இடைவெளி குறியீடு’ என்று குறிப்பிடுகிறார். மேலதிகாரிக்கும் அடுத்த அதிகாரிக்கும் உள்ள இடைவெளி எவ்வளவு என்பது மேற்கத்திய நாடுகளுக்கும், கிழக்கத்திய நாடுகளுக்கும் மாறுபடுகிறது என்கிறார். உண்மைதான். ஒரு மேலதிகாரி மேற்கு நாடுகளில் தேவையேற்பட்டால் பணியாளருடைய அறைக்குள் அனுமதி வாங்கிய பிறகே வருவார்.  அப்போதும், அவருடைய இருக்கையை ஆக்கிரமிக்கமாட்டார். இதை யுனிசெஃப் நிறுவனத்தில் நான் பணியாற்றியபோது நேரடியாகக் கண்டிருக்கிறேன்.  மேற்கில் மேலதிகாரியை ‘மிஸ்டர் ஸ்மித்’ ‘மிஸஸ் இசபெல்’ என்று பெயர் சொல்லி அழைக்க முடியும். இங்கு அது சாத்தியமில்லை.  நான் பணியில் சேர்ந்தபோது மாவட்ட ஆட்சியரிடம் சிலர், ‘கலெக்டர் சொன்னீங்கன்னா செஞ்சுடலாம்’ எனக் கூறுவதைப் பார்த்து நான் குழம்பினேன்.  ‘நீங்க சொன்னீங்கன்னா செய்யலாம்’ எனச் சொல்ல ஏன் மறுக்கிறார்கள் என்பது புரியவில்லை.  இதுதான் அதிகார இடைவெளி குறியீடு.  இது அதிகரிக்க, அதிகரிக்க அந்த நிறுவனம் ஒருவிதமான எதேச்சாதிகாரத்தை நோக்கிச் செல்லத் தொடங்கிவிடும்.

இதுபோன்ற இடைவெளி கேரளாவில் குறைவு. அங்கு மரபுவழி மரியாதையில் நெகிழித்தன்மை உண்டு. வேளாண் அலுவலராகப் பணியாற்றியபோது ஹைதராபாத்தில் உள்ள ஒரு நிறுவனத்துக்குப் பயிற்சியின் பொருட்டுச் சென்றிருந்தோம்.  பல்வேறு  மாநிலங்களிலிருந்து அலுவலர்கள் வந்திருந்தார்கள். அந்நிறுவனத்தின்  இயக்குநர் எங்களிடம் வகுப்பு எடுக்கும்போது கலந்துரையாடினார். அவர் நாங்கள் எதிர்பார்க்காத வகையில் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தார். அப்படி அவர் செய்ததும், எங்களுடன் கேரளாவிலிருந்து வந்த சக பயிற்சியாளர் பாலகிருஷ்ண மேனன் உடனே தன்னுடைய சட்டைப் பையிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தார்.  ஒரு சில நிமிடங்களில் நான்கைந்து பேருடைய வாயில் அந்த வெண்சுருட்டு புகைய ஆரம்பித்தது.  வகுப்பு முடிந்ததும் நான் பாலகிருஷ்ண மேனனிடம் சிரித்துக்கொண்டே, ‘உங்கள் செய்கை இயக்குநரை திகைப்படையச் செய்திருக்கும்’ என்றேன். அதற்கு மேனன் ‘எங்கள் மாநிலத்தில் இவ்வாறு எங்கள் மேலதிகாரி செய்தால், நாங்களும் செய்வோம்.  இந்த அதிகார வெளிப்பாடுகளுக்கு இப்படித்தான் எங்கள் எதிர்வினை’ என்றார்.

உடல்மொழியின் ஒரு பகுதியாக யார் முன்பு யார் அமரலாம் என்பது நம்மிடம் வரையறை செய்யப்பட்டுள்ளது.  ‘அடுத்த நிலையில் உள்ளவர்கள் அமரலாம்’ என்பதே விதி.  மாவட்ட ஆட்சியர் முன்பு மாவட்ட வருவாய் அலுவலர் அமரலாம். மேலாண் இயக்குநர் முன்பு பொது மேலாளர் அமரலாம். இணை இயக்குநர் முன் துணை இயக்குநர் அமரலாம். நம்முடைய  வீட்டைச் சுற்றி சுவர் எழுப்புவதும், வயலைச் சுற்றி வேலி அமைப்பதும் கண்ணுக்குத் தெரிகிற வேலிகள்.  ‘நல்ல வேலிகள்… நல்ல அண்டைவீட்டுக்காரர்களை  உருவாக்குகின்றன’ என்று ராபர்ட் ஃப்ராஸ்ட் ஒரு கவிதை எழுதியிருப்பார்.  நாம் எங்கு சென்றாலும் கண்ணுக்குத் தெரியாத வேலியை சுமந்து செல்கிறோம் என்பதே உண்மை.  ஒரு வகையில் அது பரிணாமவளர்ச்சியுடன் தொடர்புகொண்டது.  பழங்குடி மக்களாக நூற்றுக்கும் குறைவாக இருந்தபோது, நாம் ஒரு வம்சாவளி  எல்லையை வகுத்திருந்தோம்.  குடியிருப்புகளும், வேட்டையாடும் நிலங்களுமாக.  குடியிருப்புப் பகுதி தலைநகராகவும், தொடக்ககாலப் போர் சின்னம் வண்ணம் மருவி கொடிகள், முத்திரைகள், சீருடைகளாகவும் நாகரிக மேம்பாட்டில் ஆக்கம் பெற்றன. இன்னமும் தனக்கென தனி ஆதிக்கப்பகுதி வேண்டுமென்றே சின்னச் சின்ன அமைப்புகளின் மூலம் அவர்கள் அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள். 

இரண்டாவது,  குடும்ப எல்லை. அதில் ஒரு குடும்பத்தைச் சார்ந்தவர்கள் எங்கு வேண்டுமானாலும் சுதந்தரமாகச் சென்று வரலாம்.  அந்நியர்கள் எதுவரை நுழையலாம் என்பதில் எல்லைகள் உண்டு.  ஓர்  இல்லத்தில் இருப்பவர்கள் கூட சில அறைகளுக்குள் செல்ல தடையிருக்கும். அதுபோல எல்லோருக்கும் சொந்த இடைவெளி உண்டு.  அதையும் குறிக்க நாம் முயற்சி செய்கிறோம். 

மன அளவிலான எல்லையென்று ஒன்றுண்டு.  யானைகளின் வாசனை போதும்;  குதிரைகள் மிரண்டு ஓட.  எனவே குதிரைகளைப் போருக்குப் பழக்க முதலில் யானை உண்டதிலிருந்து  மீதி தீவனத்தைக் கொண்டுவந்து போட்டு படிப்படியாக அந்த வாசனைக்குப் பழக்குவார்கள்.  அதைப் போலவே ஏ.டி.எம். பூத்தில் ஒருவர் நிற்கும் போது, அருகில் வேறோருவர்  வருவதை அவர் விரும்புவது இல்லை. ஆனால் அப்படிப்பட்ட  அணுகுமுறையை பேருந்தில் செல்லும்போது  கடைப்பிடிக்க முடியாது.

இப்படி மனித இனத்தின் ஒட்டுமொத்த வரலாறே எல்லைகளைப் பாதுகாப்பதற்கும், விரிவாக்கிக்கொள்வதற்குமான போராட்டங்களின் பதிவாகவே இருக்கின்றது. எந்த வரையறையைத் தாண்டினாலும் அது எல்லைத் தாண்டிய பயங்கரவாதமே.

பூர்வ ஜன்ம ஞாபகம்! செவ்வாய் சேர்க்கை…

செவ்வாய்- பூமிகாரகன். ரத்தம், சகோதர உறவுகள், நோய், பகை முதலானவற்றுக்கு காரகத்துவம் வாய்ந்தவராகத் திகழ்பவர். பிற கிரகங்களுடனான இவரது சேர்க்கை, மிக முக்கியமான பலாபலன்களைத் தரவல்லது. அங்காரகனான இவர் எந்தெந்த கிரகங்களுடன் இணைந்து, என்னென்ன பலன்களை அளிப்பார் என்பதை அறிவோமா?

செவ்வாய் – சூரியன்: எப்போதும் சுறுசுறுப்பும் ஊக்கமும் கொண்டவர்கள், எடுத்த காரியத்தை திறமையுடனும், வெற்றியுடனும் செயல்படுத்துவதில் தீவிரமாக முனைவார்கள். தைரியம் மிக்கவர்கள். எதையும் நேருக்கு நேராகப் பேசுவார்கள். நல்ல குணங்களுடன் திகழ்வார்கள். பரந்த நோக்கம் கொண்டவர்கள்.  கூடப் பிறந்த தம்பிகளிடமும் தந்தையிடமும் அதிக பாசம் உள்ளவர்கள். வாழ்க்கையில் சிரமங்களும், சண்டை சச்சரவுகளும் அதிகமாக இருக்கும். கடைசி வரை உழைத்துக்கொண்டே இருப்பார்கள். உடலில் உஷ்ணம் அதிகமாக இருக்கும்.

Continue reading →