Daily Archives: ஓகஸ்ட் 9th, 2014

சாத்துக்குடி

நோயாளியைப் பார்க்கச் செல்லும்போது கையோடு வாங்கிச் செல்லும் பழங்களில் சாத்துக்குடிக்குத்தான் முதல் இடம். அந்த அளவுக்கு ஊட்டச்சத்துக்களைக் கொண்டது சாத்துக்குடி.

செரிமான மண்டலத்தைத் தூண்டக்கூடிய ஃபிளவனாய்ட், சாத்துக்குடியில் அதிக அளவில் உள்ளது. இதனால் வயிறு மற்றும் செரிமானக் குறைபாடு உள்ளவர்களுக்கு இது பரிந்துரைக்கப்படுகிறது. மலமிளக்கியாக மட்டுமல்லாது வயிற்றுப்போக்கையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு. செரிமானக் குறைபாடு உள்ளவர்கள் சாத்துக்குடி சாறுடன் ஒரு சிட்டிகை உப்பு போட்டு குடிக்கலாம்.

Continue reading →

வயிற்று வலிக்கான காரணங்கள்!

 

நடுவயிற்றிலும், வலதுபக்க விலாவுக்குக் கீழும் வலி வந்தால், அது வயிற்றுப்புண்ணாகவோ, பித்தக்கல் வலியாகவோ, கணைய அழற்சி வலியாகவோ இருக்கலாம்.

இரைப்பை, குடல் பகுதிக்குப் போகும் ரத்தக்குழாய்களில் உண்டாகும் அடைப்பு தீவிர வலி உண்டாக்கலாம்.

Continue reading →

நலம் 360’ – 8

ல்வாழ்வை நம்முள் பத்திரப்படுத்த குலேபகாவலி மூலிகை, நானோ துகள் மருந்து, எட்டுக் கை அம்மன் ஆசி… இவை மட்டும் போதாது. நம்மைக் கட்டுப்படுத்தும் ஐந்து முதலாளிகளும் (மண், நீர், தீ, காற்று, ஆகாயம்) நன்றாக இருக்க வேண்டும். அதை மனதில் வைத்துக்கொண்டு நமது ஒவ்வொரு செயல்பாட்டையும் அமைத்துக்கொள்வதே, இயற்கைக்கு நாம் செய்யும் மரியாதை. இயற்கையைச் சீண்டுவது எப்படி நமது சுற்றுச்சூழலைச் சிதைக்கிறதோ, அதேபோல நம் உடலின் உயிர்ச்சூழல் கடிகாரத்தைச் சிதைப்பதும் பல பக்கவிளைவுகளை உண்டாக்கும். அதில் முக்கியமானது, வயிற்று வலி!

வயிற்று வலியைப்போல் மண்டையைப் பிராண்டும் விஷயம் வேறு இல்லை. வலது விலா எலும்புகளுக்குக் கீழே அவ்வப்போது வலி, சில நேர

Continue reading →

விண்டோஸ் 7 – ஸ்டிக்கி நோட்ஸ்

விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரும் புதிய வசதிகளில், மேம்படுத்தபப்ட்ட ஸ்டிக்கி நோட்ஸ் என்னும் வசதி குறிப்பிடத்தக்கதாகவும், பயனுள்ளதாகவும் அமைந்துள்ளது. இது குறித்து பல வாசகர்களும் நமக்கு எழுதி உள்ளனர். அனைவரும் அறியும் வண்ணம் அது குறித்த தகவல்களை இங்கு காணலாம்.
ஸ்டிக்கி நோட்ஸ் மூலம், நாம் கம்ப்யூட்டர் திரையில், குறிப்புகளை எழுதி வைக்கலாம். இதனை இயக்கத்திற்குக் கொண்டு வர, ஸ்டார்ட் சர்ச் பாக்ஸில், sticky என டைப் செய்திடவும். இதன் மூலம் ஸ்டிக்கி நோட்ஸ் புரோகிராமினை இயக்கத்திற்குக் கொண்டு வரலாம். இதனைப் பயன்படுத்துவது மிக எளிது. இதனை இயக்கத்திற்குக் கொண்டு வந்தவுடன், ஒரு காலியான ஸ்டிக்கி நோட், டெஸ்க் டாப்பில் காட்டப்படும். இதனை டெஸ்க்டாப்பில் எங்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். பின்னர், இதில் உங்கள் குறிப்பினை டைப் செய்திடலாம். டைப் செய்திடுகையில், அதன் தேவைக்கேற்ப, இந்த நோட் விரிவடையும். இதன் எல்லையை அடைந்தவுடன், சுருளும் தோற்றத்தைப் பெறும். இருப்பினும், இதன் அளவை நாம் விரும்பும் வகையில் அமைத்துக் கொள்ளலாம். இந்த ஸ்டிக்கி நோட்டின் வண்ணத்தையும் மாற்றலாம். இதற்கு ஸ்டிக்கி நோட்டின் உள்ளாக, ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், வண்ணத்தை மாற்றலாம். புதிய ஸ்டிக்கி நோட் ஒன்று உருவாக்க, பழையதில் மேலாக இடது மூலையில் உள்ள நோட்டில் காணப்படும் + அடையாளத்தில் கிளிக் செய்திட வேண்டும். அல்லது [Ctrl]+[N] என்ற கீகளை அழுத்த வேண்டும். நோட் ஒன்றை அழிக்க, மேல் வலது மூலையில் உள்ள எக்ஸ் ("+ button”) பட்டனில் கிளிக் செய்தால் போதும். அல்லது என்ற [Ctrl]+[D] கீகளை அழுத்த வேண்டும்.

Continue reading →

ரௌட்டர் (Router) என்பது என்ன?

இங்கு ரௌட்டர்கள் எதற்காகப் பயன்படுத்தலாம் என்பது குறித்து காணலாம்.
ஒரு ரௌட்டர் சாதனத்தைப் பயன்படுத்துவதன் மூலம், நமக்கு வழங்கப்படும் இணைய தொடர்பினைப் பலர் ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம். இணையத்துடன் இணைந்து கொள்ள நமக்கு ஒரு இணைய முகவரி (IP address) தேவை. நம் வீடுகளைப் போல, ஒவ்வொரு இணைய முகவரியும் ஒன்றுக்கொன்று வேறுபாடாக இருக்கும், இருக்க வேண்டும். ஒரு ரௌட்டர், உங்கள் இணைய சேவை நிறுவனத்தால் வழங்கப்படும் பொதுவான தனி முகவரி கொண்டு உங்கள் மோடத்துடன் இணைப்பை ஏற்படுத்துகிறது. அதன் பின்னர், இந்த ரௌட்டர் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு சாதனத்திற்கும் தனியான முகவரி ஒன்றைத் தருகிறது. இதன் மூலம் ஒவ்வொரு சாதனமும் இணைய இணைப்பினைப் பெறுகிறது.

Continue reading →