Daily Archives: ஓகஸ்ட் 11th, 2014

உங்கள் மட்டன்ல உயிர் இருக்கா? மட்டன் மர்மம்

கெட்டுப்போன ஆட்டு இறைச்சி பிடிபட்டது’ என்பது செய்தித்தாள்களில் நாம் அடிக்கடி படிக்கும் செய்தி. கடந்த மாதம்கூட ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து கொண்டுவரப்பட்ட 3,300 கிலோ ஆட்டு இறைச்சி அழுகிக் கெட்டுப்போன நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அதிகாரிகளால் பிடிக்கப்பட்டது. புழுத்துப்போய் துர்நாற்றம் வீசிய அந்த இறைச்சியை, கொடுங்கையூர் குப்பைக்கிடங்கில் குழி தோண்டிப் புதைத்தனர். உண்மையில் அந்த இறைச்சி சென்றுசேர்ந்திருக்க வேண்டிய இடம் குப்பைக்கிடங்கு அல்ல; நம் வயிறு. மிகைப்படுத்திச் சொல்லவில்லை. ஒவ்வொரு நாளும் வட மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான கிலோ ஆட்டு இறைச்சி சென்னைக்குக் கொண்டுவரப்படுகிறது. அதில் கணிசமானவை, கெட்டுப்போனவை. என் றைக்கோ ஒரு நாளைக்குத்தான் பிடிக்கிறார்கள் என்றால், மற்ற நாட்களில் அவை எங்கு சென்று சேர்கின்றன?

Continue reading →

‘காளான் விற்ற சசிகலா கடன் கொடுத்தார் ஜெயலலிதாவுக்கு!” பலே கணக்கு காட்டும் பெங்களூரு வழக்கு

”பிரெஞ்சு படத்துக்கு, ஜெர்மன் மொழியில் எழுதி, ஸ்வீடன் பாடகரிடம் பாடக் கொடுத்து, இத்தாலி மொழியில் மொழிபெயர்த்து, ஆங்கிலம் மட்டுமே தெரிந்த மக்களுக்காக அரங்கேற்றப்பட்ட பாடலைப்போல, தமிழக ஊழல் தடுப்பு போலீஸாரின் கீழ் செயல்பட்ட பொதுப்பணித் துறை பொறியாளர்கள் என் மனுதாரர் சசிகலாவின் சொத்து மதிப்பைக் கணக்கீடு செய்திருக்கிறார்கள்”- இது பெங்களூரு நீதிமன்றத்தில் நடைபெறும் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையில் சசிகலாவின் வழக்கறிஞர் மணிசங்கர் சொன்ன உதாரணம்.

Continue reading →

வீட்டுக் கடன்… சுகமா, சுமையா?

நம் வாழ்க்கையில் வீடு என்பது இன்றியமையாதது. இந்த வீட்டை மொத்தமாகப் பணம் கொடுத்து வாங்குவது என்பது நம்மில் 90 சதவிகிதம் பேருக்கு முடியாத காரியம். காரணம், சொத்தின் விலை, அந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறது. பணத்தை மொத்தமாகச் சேர்த்துவைத்து  வீடு வாங்குவது என்பதும் இயலாத காரியம். காரணம், வீடு வாங்குவதற்கான தொகையைச் சேர்க்க  எப்படியும் பத்தாண்டு களாகிவிடும். ஆனால், பத்தாண்டு கழித்து வீட்டின் விலை இருமடங்காகி இருக்கும். பிறகு எப்படிதான் ஒரு மனிதனுக்கு அந்தஸ்தத்தைக் கொடுக்கும் வீட்டை சொந்தமாக்கிக் கொள்வது என்கிறீர்களா? அதற்கு ஒரே வழி வீட்டுக் கடன்தான்.

இந்த வீட்டுக் கடன் 15 – 20 ஆண்டுகளுக்குமுன் அவ்வளவு சுலபமாக கிடைக்காது. அரசு ஊழியர்கள் மற்றும் லிமிடெட் கம்பெனி ஊழியர்களுக்கு மட்டுமே வங்கிகள் கடன் வழங்கின. அதுவும் வாங்கிய கடனை 10 – 15 வருடங்களுக்குள் கட்டியாக வேண்டும். வட்டி விகிதமும் 13 – 15% என்பதுபோல் அதிகமாக இருந்தது.

Continue reading →

உணவு யுத்தம்!-29

வனராஜா, சோனாலி, தேவேந்திரா, விஷால், தன்ராஜா, உத்தம், ஸ்வேதா, பியர்ல், கிரிஷிப்ரோ, கிரிராஜா. சுவர்ணதாரா இவை எல்லாம் யாருடைய பெயர்கள் எனத் தெரிகிறதா? அத்தனையும் பிராய்லர் கோழி இனங்களின் பெயர்கள்.

 

சாலையோர தள்ளுவண்டி கடைகள் தொடங்கி ஸ்டார் ஹோட்டல்கள் வரை எங்கு சென்றாலும் சிக்கன்தான் முக்கிய உணவுப் பொருளாக இருக்கிறது.

கிரில் சிக்கன், ஃபிங்கர் சிக்கன், செட்டிநாடு சிக்கன், சிக்கன் 65, முந்திரி சிக்கன், சில்லி சிக்கன், போன்லெஸ். தந்தூரி, ஆப்கானி, சிக்கன் டிக்கா, சிக்கன் நக்கட்ஸ் நாட்டுக் கோழி வறுவல், சிக்கன் ஹலீம், சிக்கன் மொகல், கடாய் சிக்கன், அராப் சிக்கன்… என நூற்றுக்கணக்கான வகைகளில், ருசிகளில் கோழி இறைச்சி சமைத்து சாப்பிடப்படுகிறது. இந்தியாவில் கோழிக்கறி சாப்பிடுகிற பழக்கம் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்தபோதும், கடந்த 50 வருஷங்களுக்குள்தான் கோழி அன்றாடம் சாப்பிடும் உணவுப் பொருளாக மாறியிருக்கிறது. அதற்கு முக்கியமான காரணம், பிராய்லர் கோழிகளின் வருகை.

Continue reading →

டெஸ்க்டாப் பதிலாக எங்கு பதியலாம்?

முதலில் டெஸ்க்டாப் பகுதியில் சேவ் செய்வதில் உள்ள பிரச்னைகளை மீண்டும் நினைவு படுத்திக் கொள்ளலாம். இதில் பதிந்து வைப்பதனால், பயன்படுத்த எடுப்பது எளிதாகிறது. ட்ரைவ் மற்றும் போல்டர்களைத் தேடி எடுக்க வேண்டிய அவசியமில்லை. இந்த உடனடி அணுகுமுறையே நமக்கு டெஸ்க்டாப்பில் பைல்களை சேமிக்கும் பழக்கத்தைத் தூண்டுகிறது. இதனால் பிரச்னைகளையும் நாம் வரவேற்கிறோம் என்பதே உண்மை.
முதலில், சிஸ்டம் ரெஸ்டோர் பயன்படுத்துகையில், டெஸ்க்டாப்பில் உள்ள பைல்கள் உறுதியாக மீண்டும் கிடைக்காது. இந்த ஆபத்தை பலர் உணர்ந்திருப்பதில்லை. பல பைல் பேக் அப் புரோகிராம்கள், டெஸ்க்டாப்பில் உள்ள பைல்களை கண்டுகொள்வதில்லை. தொடர்ந்து பைல்களை டெஸ்க்டாப்பில் சேவ் செய்திடுகையில், அவை குப்பையாக அமைகின்றன. தேவையான பைல் ஒன்றைத் தேடி எடுப்பது சிரமமான காரியமாகிறது. சரி, இனி எங்கு சேவ் செய்திடலாம், செய்திடக் கூடாது எனப் பார்க்கலாம்.

Continue reading →