Daily Archives: ஓகஸ்ட் 12th, 2014

மூளை பலம் அடைய சுட்ட மீன் சாப்பிடுங்க!

மீனில் உள்ள, ‘ஒமேகா-3’ என்ற அமிலமானது, நம் உடலுக்கு பலவிதமான நன்மைகளை தர வல்லது என, பலர் அறிந்திருப்பர். ஆனால், அதை விட சிறப்பான தகவல் ஒன்றை, தற்போது, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அது யாதெனில், வாரம் ஒரு முறை சுட்ட மீன் சாப்பிட்டால், அது மூளைக்கு நல்லது; அது, திறம்பட செயல்பட உதவும் என்பதே. சுட்ட மீனில், ‘ஒமேகா-3’ அமிலம் இருந்தாலும், அதனால், பிரச்னை ஏற்படாது என்றும், ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். அவர்கள் மேலும் கூறியுள்ளதாவது:

Continue reading →

சர்வதேச நாடுகளை கலங்கடிக்கும் ‘எபோலா’ வைரஸ் பரவியது எப்படி?

உலக நாடுகளை அச்சுறுத்தி கொண்டிருக்கும், ‘எபோலா’ வைரஸ் என்ற உயிர்கொல்லி நோய், கடந்த ஆண்டு இறுதியில், மேற்கு ஆப்ரிக்க நாடான கினியாவில் வசித்த, 2 வயது சிறுவனிடம் இருந்து தான், மற்றவர்களுக்கு பரவியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 1976ல், மேற்கு ஆப்ரிக்க நாடான, காங்கோவில், எபோலா நதிக்கரையில் தோன்றி யதால், இந்த நோய்க்கு, ‘எபோலா வைரஸ்’ என, பெயர் வைக்கப்பட்டது.இதன்பின், மேற்கு ஆப்ரிக்க நாடுகளில், குறிப்பிட்ட இடைவெளிகளில் இந்த நோயின் தாக்கம் தெரியும். இதில், ஏராளமானோர் செத்து மடிவர். இந்த நோயை குணமாக்குவதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காத நிலையில், முன் எப்போதையும் விட, தற்போது, மிக தீவிரமாக இந்த நோய் தாக்கத் துவங்கியுள்ளது.

Continue reading →

குளிர்பானங்களுக்கு ‘குட் பை’ சொல்லிட்டு வெந்நீர் குடித்து நிவாரணம் பெறுங்கள்!

வெறும் தண்ணீர் மட்டுமல்ல; வெந்நீரிலும் மருத்துவ குணம் நிறையவே இருக்கிறது. சிறுநீரகத்தை பாதுகாக்க, தினந்தோறும் மூன்று லிட்டர் தண்ணீர் குடியுங்கள் என்று, தண்ணீரின் மகத்துவம் பற்றி, விழிப்புணர்வு பிரசாரம் நடக்காத இடமே இன்றைக்கு இல்லை.
அதற்கு இணையாக, வெந்நீரும் உடல் நலத்திற்கு உகந்தது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் என்கின்றனர், மருத்துவர்கள்.
அப்படியென்ன பலன்களை வெந்நீர் தந்து விடப் போகிறது என, சிந்திப்போருக்காக, சில விஷயங்கள் இதோ:

Continue reading →

மனிதன் மாறி விட்டான்!-11

முகக் குறிப்புகள் மனிதனுக்கு மட்டுமே சொந்தமானவை அல்ல. உற்றுப் பார்த்தால், வெகு நாள் கழித்து வந்த எஜமானரைப் பார்த்து நாய் வாலாட்டி சிரிக்கும். பருவத்தில் இருக்கும் பெண் நாயை, பல ஆண் நாய்கள் சிரித்துக்கொண்டே சுற்றி வரும். சிங்கத்தின் ஆக்ரோஷத்தையும் புலியின் உக்கிரத்தையும் முகத்தில் இருந்து அறிந்துகொள்ளலாம். நாம் முறைத்தால், நம்மை முறைத்து சிங்கவால் குரங்குகள் மிமிக்ரி செய்யும். அதாவது, மிருகங்களுக்கும் முகக் குறிப்புகள் உண்டு. ஆனால், மனிதனைப்போல அதிகமாக முக வெளிப்பாடுகளை வேறு எந்த விலங்கும் உணர்த்த முடியாது. ‘2,50,000 குறிப்புகளை மனித முகம் வெளிப்படுத்த முடியும்’ என்கிறார் ரே பேர்ட்விசில் என்ற விஞ்ஞானி.

Continue reading →

ப்ளக் இன் புரோகிராம் அப்டேட்

ப்ளக் இன் (Plugin) புரோகிராம் நம் பிரவுசருடன் இணைக்கப்பட்டு இயக்கப்படும் கூடுதல் புரோகிராம்களாகும். சில கூடுதல் வசதிகளைப் பெறுவதற்காக இவை இணைக்கப்படுகின்றன. மிகப் பிரபலமான ப்ளக் இன் புரோகிராம்கள் சிலவற்றைக் கூறுவதென்றால், அடோப் ப்ளாஷ், ஜாவா மற்றும் குயிக் டைம் பிளேயர் போன்றவற்றைக் கூறலாம். இவற்றை நாம் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தினால், தொடர்ந்து அப்டேட் செய்வதும் அவசியமாகிறது. இல்லை எனில் முழுமையான பயன் கிடைக்காதது மட்டுமின்றி, வைரஸ் மற்றும் மால்வேர் புரோகிராம்கள் இவற்றின் வழியாக உங்கள் கம்ப்யூட்டர்களில் நுழைந்திடும் வாய்ப்புகளும் ஏற்படும்.

Continue reading →