Daily Archives: ஓகஸ்ட் 13th, 2014

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி… எடுக்கும்முன் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது என்பது பொருட்களை வாங்குவதுபோல அல்ல. ஏனெனில், இது உங்களின் தேவை, பட்ஜெட் ஆகியவற்றைப் பொறுத்து அமையும். ஒரு குடும்பம் எடுக்கும் பாலிசி இன்னொரு குடும்பத்துக்குப் பொருந்தாது. எனவே, ஒரு திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் முன் அதன் சாதக, பாதகம் என்ன என்பதைத் தெரிந்துகொள்வது நல்லது. மேலும், ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதற்கு முன் கீழ்க்கண்ட கேள்விகளை நீங்களே கேட்டுக்கொள்வது அவசியம்.

1 பாலிசியின் கவரேஜ் தொகை போதுமானதா?

Continue reading →

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் பயன்பாடுகள்

தொடர்ந்த இணையத் தொடர்பு, இக்கால வாழ்க்கையில் அத்தியாவசியத் தேவையாக மாறிவருகிறது.
இதற்கென அனைவரும் லேப் டாப் கம்ப்யூட்டரையும், இணைய இணைப்பு பெற டேட்டா கார்ட் என அழைக்கப்படும் இணைய சிறிய மோடங்களையும் எடுத்துக் கொண்டு அலைய முடியாது. இந்த தேவையை நிறைவு செய்திடவே, நமக்கு ஸ்மார்ட் மொபைல் போன்கள் அதிக அளவில் வந்துவிட்டன. அனைவரும் வாங்கும் வகையில், பட்ஜெட் விலையிலும் இவை கிடைப்பதால், அநேக மக்கள் இவற்றை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். பெரும்பாலான ஸ்மார்ட் போன்களில் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டமே பயன்படுத்தப்படுகிறது. அடிப்படை போன்களில் கீ போர்டுடனும், அழைப்புக்கான பட்டன்களுடனும், முகவரிகளில் ஒருவகையான தேடும் வசதியுடனும் மட்டும் பழகி வந்த மக்கள், ஸ்மார்ட் போன்கள் தரும் நவீன வசதிகளை முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல், குறிப்பிட்ட சிலவற்றை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இதற்குக் காரணம் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் தரும் வசதிகள் குறித்தும், அவற்றை அமைத்து இயக்கும் வழிகள் குறித்து அறியாமல் இருப்பதுவும் தான். இங்கு அவற்றின் சில முக்கிய வசதிகள் குறித்துப் பார்க்கலாம்.
நிறுவனங்கள் தரும் சில வேறுபாடுகள்: நீங்கள் வாங்கிப் பயன்படுத்தும் ஸ்மார்ட்

Continue reading →

கல்லீரல் அலர்ஜி புற்றுநோயாக மாறும்: அலட்சியம் வேண்டாம்!

நாம் சாப்பிடும் உணவை செரிக்கத் செய்து, அதில் இருக்கும் சக்தியை உடலுக்கு தருவது கல்லீரலின் பணி. அதாவது, சக்தியை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இது. கல்லீரலின் செயல்பாடு சரியில்லை என்றால் பசிக்காது; சாப்பிட முடியாது. எனவே, கல்லீரலை பாதுகாப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்தவே, ஒவ்வொரு ஆண்டும், ஜூலை 28ம் தேதி, உலக கல்லீரல் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
ஆரோக்கியமான வாழ்வு வாழ வேண்டும் எனில், இந்த கல்லீரலை கவனமாக பாதுகாக்க வேண்டும். வைரஸ் கிருமிகளாலும், குடி பழக்கத்தாலும், மாத்திரைகள் அதிகம் சாப்பிடுவதாலும், மரபு ரீதியான காரணங்களாலும், ஒருவருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்படுகிறது. கல்லீரல் பாதிப்பின் அறிகுறியே மஞ்சள் காமாலை. அலட்சியம் காட்டினால், கல்லீரல் பாதிப்பு புற்றுநோயாக மாறும் ஆபத்து உள்ளது என்கிறார், சென்னை அரசு பொது மருத்துவமனை கல்லீரல் துறைத் தலைவர் நாராயணசாமி.
நமது கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:
1. கல்லீரல் அலர்ஜி என கூறப்படுகிறதே அது என்ன?

Continue reading →

விண்டோஸ் 7 அமைப்பினை மாற்ற ஸ்டாரட் மெனுவில் உள்ள கேம்ஸ் நீக்க

உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 இன்ஸ்டால் செய்யப்படுகையில், இதனுடன் வரும் சில விளையாட்டுக்கள், ஸ்டார்ட் மெனுவில் சேர்க்கப்பட்டு, மாறா நிலையில் இருக்கும். இவை தேவைப்படாதவர்கள், ""இது எதற்கு ஸ்டார்ட் மெனுவில்?” என்று கவலைப்படுவார்கள். கேம்ஸ் வேண்டுமென்றால், ஆல் புரோகிராம்ஸ் சென்று, தேவையானதைத் தேர்ந்தெடுத்து இயக்கலாமே! என்று எண்ணுவார்கள். எனவே ஸ்டார்ட் மெனுவில் இருந்து இவற்றை நீக்கும் வழிகளை இங்கு காணலாம்.

Continue reading →