Daily Archives: ஓகஸ்ட் 14th, 2014

எப்போதும் வரலாம் எபோலா!

உலகம் முழுதும் இப்போது ஒரு அறிவிக்கப்படாத அவசரநிலைப் பிரகடனம் அமலுக்கு வந்திருக்கிறது. நாடுகள் ஒன்றுக்கு ஒன்று அதிலும் குறிப்பாக மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் தங்களுக்கு இடையேயான கதவுகளை இறுக்கமாக மூடிக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றன. ஆப்பிரிக்காவில் இருந்து எந்த விமானத்தில் யார் வந்தாலும் எந்த நாட்டின் வழியாக வந்தாலும் அந்தப் பயணிகளை பத்திரமாக மருத்துவமனைக்கு கொண்டுசென்று பரிசோதனை செய்கிறார்கள் மருத்துவ அதிகாரிகள். அனைத்துக்கும் காரணம் – எபோலா!

மேற்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் கினி, சியாரா லியோன், லைபிரியா ஆகிய நாடுகளில்  எபோலாவின் தாக்குதல் தொடங்கி இருக்கிறது. அதிலும் எந்தவித மருத்துவ வசதிகளும் இல்லாத கிராமங்களிலும், காட்டுப்பகுதிகளை ஒட்டியிருக்கும்

Continue reading →

மனிதன் மாறி விட்டான்!-12

பெண்களின் புருவத்துக்கும் ஆண்களின் புருவத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது.  மெல்லிய புருவம் இருந்தால் அழகு அதிகம் என்பது, பெண்களின் சாமுத்திரிகா லட்சணத்தின் அம்சம். எனவே, ஏற்கெனவே சன்னமாக இருக்கும் புருவத்தை மேலும் மெல்லியதாக மாற்ற அவர்கள் முயற்சிகள் எடுத்துக்கொள்கிறார்கள். மழித்தல், பிடுங்குதல், வண்ணம் தீட்டுதல் போன்றவற்றின் மூலம் புருவத்தை வில்லைப்போல அமைத்துக்கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் பெண்கள் ஐந்தாறு வண்ணங்களில் புருவத்தைத் தீட்டும் பென்சில்களை வைத்திருந்தார்கள். பிறகு நூலைப் பயன்படுத்துகிற பழக்கம் வந்தது. புருவத்தை முற்றிலுமாக மழித்துவிட்டு, எலித் தோலில் சன்ன புருவத்தைச் செய்து ஒட்டிக்கொள்வது இங்கிலாந்தில் இருந்தது. இதைப்பற்றி ஜோனதன் ஸ்விஃப்ட் தன்னுடைய நூலில் குறிப்பிடுகிறார். புருவத்தை செம்மையாக்குவதற்கு கடுமையான எதிர்ப்பு ஒருகாலத்தில் லண்டனில் தெரிவிக்கப்பட்டது. நர்ஸ்கள் புருவத்தைப் பிடுங்கி அழகுபடுத்துவதை லண்டன் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அனுமதிக்கவில்லை. நர்ஸ்கள் கவர்ச்சியாகக் காட்சியளித்தால்,  நோயாளிகளுக்கு இதயத்துடிப்பு எக்குத்தப்பாக எகிறும் என்பதுதான் காரணம். 

Continue reading →

மிஸ்டர் கழுகு: ‘சந்திரபாபு நாயுடு ஆகிறார் ஸ்டாலின்!’

பாரத ரத்னா விருது பற்றிய சர்ச்சைகளில் இருந்து ஆரம்பித்தார் கழுகார்!

”இந்தியாவின் மிக உயர்ந்த விருதான ‘பாரத ரத்னா’ பலத்த சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று டெல்லியில் ஒரு தகவல் கிளப்பியது. ஐந்து பாரத ரத்னா விருதுகளுக்கான காயின்களை செய்யச் சொல்லி மத்திய அரசு ஆர்டர் கொடுத்திருப்பதாக செய்திகள் கசிந்தன. ‘ஐந்தா..? அது எப்படி முடியும். இப்போது இருக்கும் நெறிமுறைகளின்படி, ஒரு ஆண்டுக்கு மூன்று பாரத ரத்னா விருதுகளுக்கு மேல் கொடுக்க முடியாதே!’ என சில மூத்த பத்திரிகையாளர்கள் ‘லா’ பாயின்ட் பேச… ‘அதெல்லாம் தெரியாதுப்பா… அரசு உத்தரவு போட்டுவிட்டது. சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி பாரத ரத்னா விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளியிடுவார்’ என்று அவர்களுக்குப் பதில் கிடைத்திருக்கிறது. அதுதான் சர்ச்சைகளுக்குக் காரணம்?”

”யார் அந்த ஐந்து பேர்?”

Continue reading →

தகவல் தொழில்நுட்ப குற்ற சட்ட திருத்தம்: அஞ்சி நடுங்கும் வலை பதிவர்கள்

தகவல் தொழில் நுட்பக் குற்றங்களைத் தடுப்பதற்காக, சிறப்பு சட்டம் ஒன்றை, நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் கொண்டு வந்திருக்கிறது, தமிழக அரசு.

அதாவது தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துவோர் மீது, இந்த சட்டத்தின் மீது வழக்குப் பதிந்து, அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், ஓராண்டு சிறையில் தள்ள, இந்த சட்டம் வகை செய்கிறது.சமூக வலைதளங்களில், சமூகம் குறித்த தங்கள் ஆதங்கங்களை பதிவு செய்து கொண்டிருப்பவர்கள் மத்தியில், இது பெரும் கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.குறிப்பாக, அரசுக்கு எதிரான கருத்துக்களை, சமூக வலைதளங்களில் இனி, தைரியமாக பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது என, அவர்கள் புலம்புகின்றனர். அரசியல் வட்டாரங்களிலும் இது மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது தொடர்பாக, ம.தி.மு.க., பொது செயலர் கூறியிருப்பதாவது:

Continue reading →

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்: மத்திய அரசு அதிரடி

மதுரை: ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உட்பட இந்திய ஆட்சிப் பணியில் உள்ள அதிகாரிகளுக்கு மோடியின் புதிய அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அகில இந்திய பணிகள் 1968 ல் விதி 3 (1)ல் தற்போது புதிதாக 1(ஏ) என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பணியாளர் நலத்துறை நேற்று இந்த அறிவிப்பை கெஜட்டில் வெளியிட்டுள்ளது. இதில் அனைத்து அதிகாரிகளும் பின்வரும் 6 குணங்களை கொண்டிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
1. உயர் அறநெறியுடன், நம்பிக்கை, நாணயமும் கொண்டிருக்க வேண்டும்.
2. அரசியல் கட்சிகளிடம் பாரபட்சம் இன்மை,
3. கடமையை செய்யும்போது விதிகள், நியாயங்களை கடைபிடிக்க வேண்டும்.
Continue reading →

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு…

நிலத்திலும், தங்கத்திலும், வீட்டிலும், ஃபிக்ஸட் டெப்பாசிட் களிலும் மட்டுமே முதலீடு செய்துவந்த நம்மில் பலருக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் இன்றும் ஒரு புதிய முதலீடாகவே உள்ளது. பங்குச் சந்தை தற்போது நல்ல நிலையில் இருப்பதால், இனிவரும் ஆண்டுகளிலும் நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் முதலீட் டாளர்களின் கவனம் மியூச்சுவல் ஃபண்டுகளின் பக்கம் திரும்பியுள்ளது. இந்தத் தருணத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதைக் காண்போம்.

முதலீட்டுக் காலம்!

Continue reading →

அளவாக, ‘தண்ணி’ அடித்தாலும் அது ஆபத்தே!

தினமும் மிதமான அளவுக்கு மது அருந்தினால், அது இதயத்திற்கு நல்லது, ரத்த அழுத்தத்தை குறைக்கும் என, சில தரப்பில் சொல்லப்படுவது உண்டு. ஆராய்ச்சிகளிலும், இது உண்மையே என, முன்னர் நிரூபிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒரு கோப்பை, ‘ரெட் ஒயின்’ சாப்பிட்டால், அது இதயத்திற்கு மிகவும் நல்லது என, மற்றவர்களிடம் தகவல் பரப்பி வருவோர் அதிகம்.

Continue reading →

எக்ஸெல் டிப்ஸ்-ஒரே டேட்டா பல செல்களில்

ஒரே டேட்டா பல செல்களில்: எக்ஸெல் ஒர்க்ஷீட் ஒன்றில், நூறு செல்களில் ஒரே எண்ணை அமைக்க விரும்புகிறீர்கள். அந்த ஒர்க்ஷீட்டில் மேற்கொள்ளப்படும் கணக்கீட்டில் அந்த எண் பயன்படுத்தப் படுவதாக இருக்கலாம். ஆனால் இதற்காக, ஒவ்வொரு செல்லாக அந்த எண்ணை அமைக்க முடியுமா? இதற்கான சுருக்கு வழி என்ன?
எண் வர வேண்டிய எல்லா செல்லுகளையும் முதலில் தேர்வு செய்யுங்கள். எண்ணை டைப் செய்து கன்ட்ரோல் + என்டர் கீகளை அழுத்துங்கள். அந்த எண், தேர்வு செய்யப்பட்ட எல்லா செல்லுகளிலும் வந்து விடும்.
வரைபட கோடுகள்: எக்ஸெல் ஒர்க்புக் ஒன்றில், அமைக்கப்படும் டேட்டாவிலிருந்து நீங்கள் வரைபடம் ஒன்றை உருவாக்கும்போது, எக்ஸெல் சார்ட் ஒன்று எப்படி அமைய வேண்டும் எனப் பல விஷயங்களைத் தானே கையாள்கிறது. இவற்றில் ஒன்று இதில் அமைக்கப்படும் வரையறைக் கோடுகள் (Gridlines). இந்த வரையறைக் கோடுகள், நாம் வரைபடத்தில் பயன்படுத்தும் கிராபிக் பொருட்களின் உயரம் அல்லது அகலத்தை எளிதாக வரையறை செய்திட உதவுகின்றன. எந்த கோடுகள் காட்டப்பட வேண்டும், எவை காட்டப்படத் தேவையில்லை என்பதனை அமைக்க எக்ஸெல் நமக்கு உதவுகிறது. கீழே தரப்படும் செயல்முறைகளின் மூலம் இவற்றை நாம் அமைக்கலாம்.
1. முதலில் எந்த சார்ட்டில் இந்த வரையறைகளைக் கையாள வேண்டுமோ, அதில் கிளிக் செய்து அதனைத் தேர்ந்தெடுக்கவும். selection handles தேர்ந்தெடுப்பதற்கான வரைபடத்திற்கு வெளியே காட்டப்படுவதனைக் காணலாம்.
2.ரிப்பனில் Layout என்ற டேப் காட்டப்படுவதனை உறுதி செய்திடவும். சார்ட் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே இவை காட்டப்படும்.
3. அடுத்து Axes என்ற குரூப்பில், Gridlines tool என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது பல ஆப்ஷன்களுடன், கீழ்விரி மெனு ஒன்று காட்டப்படும்.
4. இந்த மெனுவில் இருந்து, நீங்கள் விரும்பும் வகையில், Primary Horizontal Gridlines அல்லது Primary Vertical Gridlines என தேவையானதைப் பயன்படுத்தி, நீங்கள் விரும்பும் வகையில் அமைக்கலாம்.
சார்ட்டுக்கான எழுத்து வகை தேர்வு: எக்ஸெல் தொகுப்பில், சார்ட் ஒன்றை உருவாக்குகையில், அதில் பல வகையானவற்றை இணைக்கலாம். தலைப்பு, டேட்டா லேபிள் போன்றவற்றை அமைக்கலாம். இவற்றிற்கான எழுத்து வகையினை உங்கள் விருப்பம் போல அமைத்திட எக்ஸெல் உங்களுக்கு அனுமதியும் வசதியும் தருகிறது. இந்த வகை சொற்களுக்கு மட்டும் என தனி எழுத்து வகையினைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம். அதற்கான வழிகளை இங்கு பார்க்கலாம்.
1. எழுத்து வகையினைத் தனியே அமைக்க விரும்பும் சார்ட்டினை இயக்கவும். அதன் மீது கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும்.
2. எந்த டெக்ஸ்ட்களுக்கு எழுத்து வகையினை மாற்ற எண்ணுகிறீர்களோ, அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். எடுத்துக்காட்டாக, சார்ட்டிற்கான தலைப்பின் எழுத்தினை மாற்ற விரும்பினால், அதனைத் தேர்ந்தெடுக்கவும். தேர்ந்தெடுத்தவுடன், எக்ஸெல், இவற்றைச் சுற்றி சிறிய கருப்பு சதுரங்களை அமைக்கிறது. இது நீங்கள் இவற்றினைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்பதனைக் காட்டுவதற்காக.
3. அடுத்து ரிப்பனில் ஹோம் டேப்பினைக் காட்டவும்.
இங்கு Font group இல் கிடைக்கும் டூல்களை இயக்கி, எழுத்து வகையின் தோற்றத்தினை மாற்றவும்.

இரண்டு கங்கை! (ஆக.,15 – ஆடி கடைசி வெள்ளி)

ஒரு கங்கையைப் பார்த்தாலே புண்ணியம்; இதில், இரண்டு கங்கைகளைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்தால், அந்த அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடலாமா! அர்ஜுனா மற்றும் வைப்பாறு என, இரு கங்கைகள் பாயும் இருக்கன்குடி பற்றி தெரிந்து கொள்வோம்…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கிராமம் இருக்கன்குடி. ஆயிரம் கண்ணுடையாளான மாரியம்மன், அனைத்துக் கண்களின் அருளையும் ஒன்று திரட்டி, இரண்டு கண்கள் வழியாகப் பக்தர்கள் மீது செலுத்துகிறாள்; இதனால் இவ்வூருக்கு, ‘இருக்கண்குடி’ என்ற பெயர் வந்தது. அதுவே பின் நாளில், இருக்கன்குடியாகத் திரிந்தது. இந்தக் கோவில், அர்ஜுனா மற்றும் வைப்பாறு என்ற இரண்டு ஆறுகளுக்கு நடுவே அமைந்துள்ளது.
முன்னொரு காலத்தில் பஞ்சபாண்டவர்கள், தங்களுடைய வனவாச காலத்தின் போது, வத்திராயிருப்பு அருகிலுள்ள மகாலிங்க மலைக்கு வந்தனர். அங்கே குளிப்பதற்கு நீர் ஊற்று தென்படாததால், அர்ஜுனன் கங்காதேவியை வணங்கி, தன் அம்பால் பூமியைப் பிளந்தான். அந்த பிளவிலிருந்து தோன்றிய ஆறே, அர்ஜுனா நதி!
அதே போல், ராமாயணக் காலத்தில், ராமபிரான் சம்புகன் என்பவனிடம் போரிட தென்பகுதிக்கு வந்தார். அப்போது இப்பகுதியை அவர்கள் கடந்த போது, ராமபிரானின் படைவீரன் சாம்பவன் என்பவன், ‘ராமா… அகத்தியர் இவ்விடத்தில், உலகிலுள்ள புண்ணிய தீர்த்தங்கள் எல்லாவற்றையும் ஒரே குடத்தில் நிரப்பி புதைத்து வைத்துள்ளார். தங்கள் கைபட்டால், அது பலருக்கும் பயன்படும் புண்ணிய நதியாகும்…’ என்றான். இதுகேட்ட ராமர், தன் அம்பால், புதைத்து வைத்திருந்த குடத்தை உடைத்தார். இப்படி வைப்பில் (புதையலில்)இருந்து தோன்றியது வைப்பாறு எனப்பட்டது.
ராமனும், அர்ஜுனனும் உருவாக்கிய நதிகள் என்பதால், இவைகள் கங்கைக்கு சமமாகப் போற்றப்படுகின்றன.
கடந்த, 300 ஆண்டுகளுக்கு முன், ஒரு பூஜாரி பெண், ஆற்று மணலில் கிடந்த மாட்டுச்சாணத்தை அள்ளி கூடையில் நிரப்பி, அதைத் தூக்க முயன்ற போது, முடியாமல் போகவே, அங்கிருந்த சிலரை உதவிக்கு அழைத்தாள். அவர்கள் தூக்க முயற்சித்த போது, அந்தப் பெண்ணுக்கு அருள்வந்து, ‘இந்த சாணிக்கூடையின் கீழ், மாரியம்மனான நான், சிலையாக மணலில் புதையுண்டு கிடக்கிறேன்; என்னை பிரதிஷ்டை செய்து கோவில் கட்டுங்கள்…’ என்றாள்; அவள் கூறியபடியே கோவில் எழுந்தது.
இருக்கன்குடி மாரியம்மன் சக்தி மிக்கவள்; இவளுக்கு ஆடி கடைசி வெள்ளி விசேஷ நாள். குழந்தை பாக்கியம், திருமணத்தடை, பிரிந்த தம்பதியர் ஒன்று சேருதல் என, எந்த வேண்டுதலாக இருந்தாலும், இவளை வழிபடலாம்; மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல் ஆகியவை இங்கு மேற் கொள்ளப்படும் முக்கிய வழிபாடுகள்.
இன்று இங்குள்ள இரு கங்கைகளிலும், மழைக்காலத்தில் மட்டுமே தண்ணீர் வருகிறது; மழை தரும் மாரியம்மனின் மனம் குளிரும் வகையில், நம் செயல்பாடுகளை மாற்றிக் கொண்டால், ஆண்டு முழுவதும் வற்றாத நீர் வளம், தருவாள் அந்த அம்பிகை.