அளவாக, ‘தண்ணி’ அடித்தாலும் அது ஆபத்தே!

தினமும் மிதமான அளவுக்கு மது அருந்தினால், அது இதயத்திற்கு நல்லது, ரத்த அழுத்தத்தை குறைக்கும் என, சில தரப்பில் சொல்லப்படுவது உண்டு. ஆராய்ச்சிகளிலும், இது உண்மையே என, முன்னர் நிரூபிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒரு கோப்பை, ‘ரெட் ஒயின்’ சாப்பிட்டால், அது இதயத்திற்கு மிகவும் நல்லது என, மற்றவர்களிடம் தகவல் பரப்பி வருவோர் அதிகம்.

ஆனால், இது, தவறு என, சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் உள்ள பென்சில்வேனியா பல்கலை கழக ஆராய்ச்சியாளர்கள், இதுதொடர்பாக கூறியுள்ளதாவது:
குடிப்பழக்கத்திற்கும், இதயத்தின் பலத்துக்கும் இடையேயான தொடர்புகள் குறித்து, சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டோம். அமெரிக்கா, ஐரோப்பா, வடஅமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த, 155 ஆராய்ச்சியாளர்கள் மூலம், ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 2.60 லட்சம் பேர், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.
குறிப்பிட்ட ஜீன்களை கொண்ட நபர்கள், வாரம் ஒன்றுக்கு, 17 சதவீதத்திற்கும் குறைவான மதுபானத்தை நுகரும்போது, அது பெரிய அளவில் பலன் அளிக்கவில்லை என்பதும், மாறாக இதயத்திற்கு பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தி உள்ளதும் தெரியவந்தது. அதேநேரத்தில், மதுபானம் உபயோகிக்காத நபர்களுக்கு, இதயத்தில், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதனால், குறைவாக தண்ணி அடித்தாலும், அது பாதிப்பையே ஏற்படுத்தும். இவ்வாறு, ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

%d bloggers like this: