Daily Archives: ஓகஸ்ட் 16th, 2014

மிஸ்டர் கழுகு: போயஸ் கார்டனுக்கு வருவேன்!

”முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் வெற்றி விழாவைக் கொண்டாட முதல்வர் 22-ம் தேதி மதுரைக்குச் செல்ல இருக்கிறார். ஆனால் தென்மாவட்டங்களில் வேறொரு கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது” என்று சொல்லியபடியே நம்முன் ஆஜரானார் கழுகார். என்னவென்று நாம் கேட்பதற்குள் அவரே ஆரம்பித்தார்.

”முல்லை பெரியாறு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தமிழக அரசுக்கும் ஜெயலலிதாவுக்கும் மிகப்பெரிய சாதனையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜெயலலிதாவுக்குப் பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று அமைச்சர்கள் சிலர் தங்களது ஆலோசனையைச் சொல்ல… மதுரை பரபரப்பானது.  ‘இரண்டாம் பென்னிகுயிக்’ என்று அப்போது பட்டம் தரலாம் என்றும் சொல்லப்படுகிறது. அந்த விழாவை கட்சி பேனரில் நடத்தாமல், முல்லை பெரியாறு அணையால் பயன்பெறும் விவசாயிகள் சார்பாக நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.”

”நல்ல யோசனைதான்!”

Continue reading →

திகட்டாத தேடல்கள்… சந்தோஷத் திக்குமுக்காடல்கள்!

உடல் ரீதியான, மன ரீதியான முழுமையான ஆளுமையின் சங்கமம்தான் செக்ஸ். இந்த உறவை முழுமையாக, முற்றிலும் சந்தோஷத்துடன், புதுப் புதுத் தேடல்களுடன்

Continue reading →

பிபிஎஃப் Vs இஎல்எஸ்எஸ் எதில் அதிக வருமானம்?

இந்த ஆண்டின் பட்ஜெட்டில் வருமான வரிப் பிரிவு 80சி வரிச் சலுகை உச்சவரம்பு ரூ.1  லட்சத்திலிருந்து ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. இது நடுத்தர வருமானப் பிரிவினருக்கு மகிழ்ச்சியான செய்தி. வருமான வரிச் சலுகை பெற பல முதலீட்டு வழிகள் இருந்தாலும் முதலீட்டாளர்கள் அதிகம் விரும்புவது பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் மற்றும் இஎல்எஸ்எஸ் திட்டங்களைத்தான். 
இந்த இரண்டுக்கும் அடிப்படையான வித்தியாசம் என்ன?

பிபிஎஃப் என்பது அரசின் உத்திரவாத முள்ள திட்டம். இதன் தற்போதைய ஆண்டு வட்டி விகிதம் 8.7%. இஎல்எஸ்எஸ் என்பது மியூச்சுவல் ஃபண்டுகளால் வழங்கப்படும் பங்குச் சந்தை சார்ந்த சேமிப்புத் திட்டம். இவை இரண்டுக்கும் வேறு வித்தியாசங்கள் என்று பார்த்தால், பிபிஎஃப் முதலீட்டை 15 வருட காலத்துக்கு திரும்ப எடுக்க முடியாது. என்றாலும், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு 6-ம் ஆண்டிலிருந்து பணத்தை எடுக்க வழி உண்டு. ஆனால், இஎல்எஸ்எஸ் என்பது 3 வருட லாக்-இன் திட்டம். அதாவது, 36 மாதங் களுக்குப்பின் பணத்தைத் திரும்ப எடுத்துவிடலாம்.
சரி, இப்படி வித்தியாசங்கள் இருக்கையில் எதில் முதலீடு செய்து வரிச் சலுகை பெறுவதோடு, அதிக வருமானம் ஈட்டலாம் என்பதுதானே உங்களின் கேள்வி.  உங்கள் கேள்விக்கான விடையை கீழ்க்காணும் உதாரணத்தின் மூலம் தெளிவாகப் புரிந்துகொள்ள முயற்சிப்போம்.

Continue reading →

உங்களை நீங்களே அருமையாகக் கவனித்துக் கொள்ள 8 அழகான வழிகள்!!

நீங்கள் எப்போதும் மற்றவர்கள் அல்லது உங்கள் குடும்பத்தினருக்காக மட்டும் மாடாய் உழைத்து, ஓடாய் தேய்கிறீர்களா? அதே நேரத்தில், உங்களைப் பற்றிய அக்கறை உங்களுக்குத் துளிக்கூட இல்லையா? நீங்கள் ஒன்றும் அவ்வளவு ‘பாசக்காரப் பயபுள்ளை’யாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இதற்காக யாரும் உங்களுக்கு உதவ வேண்டும் என்ற அவசியமும் இல்லை. அடுத்தவர்களுக்கே நீங்கள் உதவும் போது, உங்களை நீங்களே கவனித்துக் கொள்ள முடியாதா? மாதத்திற்கு ஒரு முறையாவது உங்களுக்கென ஒரு நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள். அந்த அளவிற்காவது நீங்கள் ஒரு சுயநலவாதியாக இருந்தால் தான் அடுத்தவர்களை இன்னும் நன்றாகக் கவனித்துக் கொள்ள முடியும். இப்போது உங்களை நீங்களே எப்படிக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று

Continue reading →

அழகை அதிகரிக்க உலகில் மேற்கொள்ளும் சில விசித்திரமான ஃபேஷியல்கள்!

azhakai athikarikka ulakil merkollum sila visithiramana

இன்றைய காலத்தில் ஆண்கள் பெண்கள் இருவருக்குமே அழகை அதிகரிப்பதில் ஆர்வம் அதிகம் உள்ளது. அதற்காக அவர்கள் கடைகளில் விற்கப்படும் பல பொருட்களை வாங்கி பயன்படுத்துவதுடன், வாரந்தோறும் சருமம் மற்றும் உடலை பராமரிக்க ஸ்பா சென்று வருகின்றனர். இப்படி இருக்க, உலகில் உள்ள மக்கள் தங்களது அழகை அதிகரிப்பதற்கு சில விசித்திரமான ஃபேஷியல்களை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக அத்தகைய ஃபேஷியல்களை பிரபலங்கள் தான் பின்பற்றுவார்கள். அப்படி அவர்கள் பின்பற்றும் ஃபேஷியல்கள் அனைத்தும் விசித்திரமாக இருப்பதுடன், அவை மிகவும் காஸ்ட்லி. அதுமட்டுமின்றி, அவற்றில் சில ஃபேஷியல்களைப் பற்றி தெரிந்தால், முகத்தை சுளிப்பதுடன், சில நேரங்களில் பயப்படும் அளவிலும் இருக்கும். பாட்டி சொல்லும் அழகு குறிப்புகள் வேஸ்ட்ன்னு நினைக்குறவங்களா? முதல்ல இத படிச்சு பாருங்க… இங்கு அப்படி உலகில் மக்களால் அழகை அதிகரிக்க மேற்கொள்ளப்பட்டு வரும் சில விசித்திரமான

Continue reading →

புளூடூத் – பயன்பாடும் பாதுகாப்பும்

வயர்கள் எதுவுமில்லாமலும் தானாகவும் இணைப்பினை ஏற்படுத்திக் கொள்வதுதான் புளுடூத். நம் அன்றாட வாழ்க்கையின் பல அம்சங்களை எளிமைப்படுத்தும் விஷயங்கள் இதில் உள்ளன. நாம் கம்ப்யூட்டர்கள், பொழுது போக்கு சாதனங்கள், டெலிபோன் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது அவை தங்களுக்குள் பல வகைகளில் இணைத்துக் கொள்கின்றன. பலவித வயர்கள், கேபிள்கள், ரேடியோ சிக்னல்கள், இன்ப்ரா ரெட் கதிர்கள் எனப் பல வகைகளில் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது. ஆனால் புளுடூத் சாதனங்களை இணைப்பதில் தனி வழி கொண்டுள்ளது. குறைந்த மின் சக்தி பயன்பாடு, ஒரே நேரத்தில் எட்டு சாதனங்களுடன் தொடர்பு, எந்த வகையிலும் ஒன்றுக்கொன்று குறுக்கிட்டு செயல் இழக்காத நிலை, இணைந்திடும் சாதனங்கள் நேராக இருந்திடத் தேவையற்ற நிலை, 32 அடி வட்டத்தில் புளுடூத் தொழில் நுட்பம் கொண்ட எந்த சாதனத்தையும் கண்டு இணையும் லாகவம் எனப் பல ப்ளஸ் பாய்ண்ட்களை அடுக்கிக் கொண்டு செல்லலாம்.

Continue reading →