பிபிஎஃப் Vs இஎல்எஸ்எஸ் எதில் அதிக வருமானம்?

இந்த ஆண்டின் பட்ஜெட்டில் வருமான வரிப் பிரிவு 80சி வரிச் சலுகை உச்சவரம்பு ரூ.1  லட்சத்திலிருந்து ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. இது நடுத்தர வருமானப் பிரிவினருக்கு மகிழ்ச்சியான செய்தி. வருமான வரிச் சலுகை பெற பல முதலீட்டு வழிகள் இருந்தாலும் முதலீட்டாளர்கள் அதிகம் விரும்புவது பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் மற்றும் இஎல்எஸ்எஸ் திட்டங்களைத்தான். 
இந்த இரண்டுக்கும் அடிப்படையான வித்தியாசம் என்ன?

பிபிஎஃப் என்பது அரசின் உத்திரவாத முள்ள திட்டம். இதன் தற்போதைய ஆண்டு வட்டி விகிதம் 8.7%. இஎல்எஸ்எஸ் என்பது மியூச்சுவல் ஃபண்டுகளால் வழங்கப்படும் பங்குச் சந்தை சார்ந்த சேமிப்புத் திட்டம். இவை இரண்டுக்கும் வேறு வித்தியாசங்கள் என்று பார்த்தால், பிபிஎஃப் முதலீட்டை 15 வருட காலத்துக்கு திரும்ப எடுக்க முடியாது. என்றாலும், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு 6-ம் ஆண்டிலிருந்து பணத்தை எடுக்க வழி உண்டு. ஆனால், இஎல்எஸ்எஸ் என்பது 3 வருட லாக்-இன் திட்டம். அதாவது, 36 மாதங் களுக்குப்பின் பணத்தைத் திரும்ப எடுத்துவிடலாம்.
சரி, இப்படி வித்தியாசங்கள் இருக்கையில் எதில் முதலீடு செய்து வரிச் சலுகை பெறுவதோடு, அதிக வருமானம் ஈட்டலாம் என்பதுதானே உங்களின் கேள்வி.  உங்கள் கேள்விக்கான விடையை கீழ்க்காணும் உதாரணத்தின் மூலம் தெளிவாகப் புரிந்துகொள்ள முயற்சிப்போம்.

அருண், வருண், தருண் என்ற மூன்று நண்பர்கள் தங்களின் வரிச் சலுகை முதலீட்டை 2000-ம் ஆண்டு துவங்கி னார்கள். மூவரும் தலா ரூ.10,000 முதலீடு செய்தார்கள். அருண் தனது முதலீடு முழுவதையும் பிபிஎஃப்-ல் செய்தார். வருண் தனது முதலீடு முழுவதையும் இஎல்எஸ்எஸ்-ல் செய்தார். தருண் 10,000-ல் 5,000-த்தை பிபிஎஃப்-லும் மீதியுள்ள 5,000-த்தை இஎல்எஸ்எஸ்-லும் முதலீடு செய்தார். மூவரும் நிதி ஆண்டின் துவக்கம், அதாவது ஏப்ரலில் முதலீடு செய்தனர்.
அருணின் முதலீடு!

முதலில் அருணின் முதலீட்டைப் பார்ப்போம்.

* முதிர்வு தொகை 2014-15 இறுதியில் பதினைந்து ஆண்டுகளில் அருணின் மொத்த முதலீட்டுத் தொகை ரூபாய் 1,50,000 இந்தக் காலகட்டத்தில் அவருடைய வருமானம் ஏறக்குறைய இரட்டிப்பு ஆகிறது.

வருணின் முதலீடு!

அடுத்து, வருணின் முதலீட்டைப் பார்ப்போம். வருண் தனது ஆண்டு முதலீடான 10,000-த்தை இஎல்எஸ்எஸ்-ல் முதலீடு செய்கிறார். அவர் குரோத் பிளானை தேர்ந் தெடுத்தார்.

மொத்த முதலீட்டு யூனிட்கள் 4,558 வருணின் மொத்த முதலீடான ரூ.1.50 லட்சத்தின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூபாய் 10,77,010 அவர் முதலீடு செய்த ஃபண்டின் நடப்பு ஏன்ஏவி ஆனது 236.29 (22 ஜூலை, 2014). அதாவது, அவரது முதலீட்டுத் தொகை ஏறக்குறைய ஏழு மடங்காகப் பெருகியிருக்கிறது. அதுதான் பங்குச் சந்தையின் நீண்ட கால அடிப்படையின் மாயாஜாலம்.

தருணின் முதலீடு!

அடுத்து, தருண் தனது ஆண்டு முதலீடான ரூபாய் 10,000-த்தைப் சரிபாதியாகப் பிரித்து பிபிஎஃப்-லும், இ்ல்எல்எஸ்எஸ்-லும் முதலீடு செய்தார்.

தருணின் பிபிஎஃப் முதலீட்டு வருமானம் ரூ.1,50,820. தருணின் இஎல்எஸ்எஸ்-ன் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.5,38,504. இரண்டிலும் சேர்த்து கூட்டு மதிப்பு ரூ.6,89,324.

மூவரின் முதலீட்டுப் போக்கை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அருண் ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்ததால், மற்ற இருவரையும்விட மிகக் குறைந்த வருமானமே ஈட்ட முடிந்தது. வருண் அதிக ரிஸ்க எடுத்ததால், மற்ற இருவரையும்விட பன்மடங்கு வருமானம் பெற முடிந்தது. தருண் மிதமான ரிஸ்க் எடுத்ததால், அவருடைய வருமானம் அருணைவிட சிறப்பாகவே இருந்தது.

வரிச் சலுகையை மட்டுமே மனதில் வைத்து முதலீடு செய்யாமல், கூடுதல் ரிஸ்க் எடுத்தால், அதிக வருமானம் பெறுவதோடு, வரிச் சலுகையும் பெறலாம் என்பதற்கு மேற்கண்ட உதாரணங்களே சிறந்த உதாரணம்.

மேலும், பிபிஎஃப் திட்டத்தில் வட்டி விகிதம் தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது. 90-களில் 12 சதவிகிதத்தில் இருந்த வட்டிவிகிதம் தற்போது 8.7 சதவிகிதத்தில் உள்ளது என்பதையும் மறந்துவிடக் கூடாது.

நன்றி- நாணயம் விகடன்

%d bloggers like this: