Daily Archives: ஓகஸ்ட் 17th, 2014

திட்டக்குழுவை கலைப்பது சரியா?

புதிய பிரதமரின் முதலாவது சுதந்திர தின பேச்சில் உள்ள முக்கிய பொருளாதார கொள்கைகளில் ஒன்று மத்திய திட்டக் குழுவை கலைத்து அதற்கு பதில் ஆலோசனைக் குழு ஒன்றை ஏற்படுத்துவதாகும். திட்டக்குழுவை அதிகாரத்தை மையப்படுத்தும் ஓர் அமைப்பாக மாநில அரசுகள் பார்க்க; மத்திய அமைச்சகங்களோ தங்களின் அதிகாரத்தில் திட்டக்குழு தலையிடுகிறது என்று நினைக்க; இன்று அதன் மூடுவிழாவுக்கு வந்துள்ளோம்.

சந்தை பொருளாதாரத்தில், அரசின் பொருளாதார செயல் பாடுகள் குறையும்போது, திட்டக்குழுவின் அவசியமும் குறைந்துள்ளது என்ற பொருளாதார சிந்தனை வலுப்பெற்றுள்ளதும் இதற்கு முக்கிய காரணம்.

சுதந்திரத்துக்கு முன்பே திட்டமிட்ட பொருளாதாரத்தை அமைக்கவேண்டும் என்று காங்கிரஸ் கட்சி முடிவு செய் தது. இதனை தொடர்ந்து, இந்திய தொழிலதிபர்களும் ‘பாம்பே திட்டம்’ (Bombay Plan) என்று ஒன்றை 1945-ம் ஆண்டு உருவாக்கினர். ஆனால், மத்திய அரசின் நிதியை மாநிலங் களுக்கிடையே பகிர்ந்தளிக்க ‘நிதிக் குழு’ உருவாக்கிய இந்திய அரசியல் சட்டம், ‘திட்டக் குழுவை’ உருவாக்கவில்லை. அரசிய சட்டம் நிறைவேறிய பிறகு, ‘திட்டக் குழு’ ஒரு செயல்முறை அமைப்பாகத்தான் உருவாக்கப்பட்டது.

திட்டக்குழுவின் தேவை

1950களில் இயற்கை வளங்களை அரசே பயன்படுத்தி தொழிற்சாலைகளை உருவாக்க, நீர்த்தேக்கங்கள், பாசன வசதிகளை உருவாக்க திட்டமிடல் அவசியமாக இருந்தது. இன்று தொழில் துறை முழுவதும் தனியார் துறைக்கு வந்த பிறகு, தொழில் துறையை ஒழுங்குபடுத்தும் ஒழுங்குமுறை ஆணையங்கள் இருந்தால் போதும், திட்டக்குழு தேவை இல்லைதான். இருந்தாலும், இன்றும் பெரிய நீர்ப்பாசன வசதிகள் அரசிடமே உள்ளன. பாசனவசதியை மேம்படுத்துவதில் இன்றும் அரசுக்கு முக்கிய பொறுப்பு உள்ளது, அதனை சரியான திட்டமிடல் மூலமே நடத்தமுடியும்.

1970கள் வரை, அரசு பெரிய திட்டங்களையும், அதற்கான முதலீடுகளையும் செய்தால் மட்டும் போதும், அதன் செயல்பாடு ஏழ்மையை தானாகவே குறைத்துவிடும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், அவ்வாறு நடைபெறவில்லை. அதனால் நேரடியான வறுமை ஒழிப்பு திட்டங்களை செயல் படுத்தவும், திட்டங்களின் குறை களை நீக்கி, காலத்திற்கு ஏற்ப மாற்றவும் திட்டக்குழு போன்ற ஓர் அமைப்புக்கு தேவை இருந்தது.

Continue reading →

தம்பிதுரை ‘டெல்லி’ துரை ஆன கதை

ஆகட்டும் பார்த்துக்கலாம், அடுத்து…’- கட்சிக்காரர்களோ பொதுமக்களோ யார் எந்தப் பிரச்னைக்காகப் போனாலும் இப்படிச் சொல்வது தம்பிதுரையின் வழக்கம். அவர் அதிகபட்சமாக கட்சிக்காரர்களிடம் பேசுவது இதுமட்டுமாகத்தான் இருக்கும். மிகக்குறைவாக பேசுபவர் என்பதால்தான், துணை சபாநாயகர் பதவி கொடுத்தார்களோ என்னவோ?

1985-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் துணை சபாநாயகராக இருந்தார் தம்பிதுரை. கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இப்போது துணை சபாநாயகர் ஆகியிருக்கிறார் தம்பிதுரை!

Continue reading →

சரும பிரச்சனைகளும்… அதற்கான இயற்கை தீர்வுகளும்…

saruma birachanaikalum... atharkana iyarkai teervukalum...

பிரச்சனை இல்லாம சருமம் யாருக்கு தான் உள்ளது. எல்லோருக்குமே சருமத்தில் ஒருசில பிரச்சனைகள் வரத்தான் செய்கிறது. இதற்கு முக்கிய காரணம், சருமத்தை சரியாக பராமரிக்காமல் இருப்பது, கண்ட கண்ட க்ரீம்களைப் பயன்படுத்துவது மற்றும் இதுப்போன்ற பல உள்ளன. இப்படி சரும பிரச்சனைகள் வருவதற்கு ஒருபக்கம் க்ரீம்கள் காரணமாக இருக்க, அந்த பிரச்சனைகளைப் போக்க உதவும் க்ரீம்களை வாங்கி போட்டால், அது எந்த பயனும் தராமல் அப்படியே இருக்கும். ஆகவே சருமத்தில் எந்த பிரச்சனைகள் வந்தாலும், உடனே அதனை சரிசெய்வதற்கான இயற்கை வழிகளை தேட வேண்டுமே தவிர, க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்தக்கூடாது. சரும கருமையைப் போக்கும் சில சூப்பரான ஃபேஸ் பேக்!!! இங்கு சருமத்தில் ஏற்படும் சில பிரச்சனைகளையும், அதற்கான இயற்கை தீர்வுகளையும் பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து அதனை முயற்சித்துப் பாருங்கள். உங்கள் சருமம் வறட்சியால் தோலுரிய ஆரம்பித்தால், தினமும் சருமத்திற்கு

Continue reading →

விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கான வைப்பர்

வாட்ஸ் அப் மற்றும் ஸ்கைப் போன்ற மொபைல் தகவல் பரிமாற்றம் மற்றும் மெசேஜ் அனுப்புதல் ஆகியவற்றிற்குப் பயன்படும் புரோகிராம்களுக்கு இணையாக, பன்னாட்டளவில் புகழ் பெற்ற புரோகிராம் Viber ஆகும். இவற்றில் ஸ்கைப் புரோகிராமினை விண்டோஸ் பயன்படுத்தும் எந்த சாதனத்திலும் எளிதாகப் பயன்படுத்தலாம். இப்போது இந்த பிரிவில் வைப்பர் புரோகிராமும் நுழைந்துள்ளது. விண்டோஸ் 8 சிஸ்டத்தில் பயன்படுத்தும் வகையில், வைப்பர் புரோகிராம் வடிவமைக்கப்பட்டு கிடைக்கிறது. இதனை இலவசமாக இணைய தளத்தி லிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இதனை மொபைல் சாதனங்கள் மட்டுமின்றி, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அண்மைக் காலத்திய விண்டோஸ் சிஸ்டம் பயன்படுத்தும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களிலும் பயன்படுத்தலாம்.

Continue reading →