சரும பிரச்சனைகளும்… அதற்கான இயற்கை தீர்வுகளும்…

saruma birachanaikalum... atharkana iyarkai teervukalum...

பிரச்சனை இல்லாம சருமம் யாருக்கு தான் உள்ளது. எல்லோருக்குமே சருமத்தில் ஒருசில பிரச்சனைகள் வரத்தான் செய்கிறது. இதற்கு முக்கிய காரணம், சருமத்தை சரியாக பராமரிக்காமல் இருப்பது, கண்ட கண்ட க்ரீம்களைப் பயன்படுத்துவது மற்றும் இதுப்போன்ற பல உள்ளன. இப்படி சரும பிரச்சனைகள் வருவதற்கு ஒருபக்கம் க்ரீம்கள் காரணமாக இருக்க, அந்த பிரச்சனைகளைப் போக்க உதவும் க்ரீம்களை வாங்கி போட்டால், அது எந்த பயனும் தராமல் அப்படியே இருக்கும். ஆகவே சருமத்தில் எந்த பிரச்சனைகள் வந்தாலும், உடனே அதனை சரிசெய்வதற்கான இயற்கை வழிகளை தேட வேண்டுமே தவிர, க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்தக்கூடாது. சரும கருமையைப் போக்கும் சில சூப்பரான ஃபேஸ் பேக்!!! இங்கு சருமத்தில் ஏற்படும் சில பிரச்சனைகளையும், அதற்கான இயற்கை தீர்வுகளையும் பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து அதனை முயற்சித்துப் பாருங்கள். உங்கள் சருமம் வறட்சியால் தோலுரிய ஆரம்பித்தால், தினமும் சருமத்திற்கு

பால் தடவி மசாஜ் செய்து கழுவி வாருங்கள். இதனால் சருமத்திற்கு வேண்டிய ஈரப்பசை கிடைத்து, சருமம் பொலிவோடு இருக்கும். தற்போது பலருக்கு கருவளையம் இருக்கிறது. அத்தகைய கருவளையத்தைப் போக்க தினமும் வெள்ளரிக்காயை அல்லது குளிர்ச்சியான டீ பேக்கை கண்களில் வைத்து எடுத்தால் போக்கிவிடலாம். நீண்ட நேரம் கம்ப்யூட்டரின் முன்பு உட்கார்ந்து கண்கள் சோர்வுடன் காணப்படுகிறதா? அப்படியானால் க்ரீன் டீ பேக்கை கண்களின் மேல் 10-15 நிமிடம் வைத்து வந்தால், சோர்வு மற்றும் கண்களில் உள்ள வீக்கம் குறைந்துவிடும். பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் உதடுகள் வறட்சியடைவது. உதடுகள் வறட்சி அடைய காலநிலை மாற்றம், உதடுகளை கடிப்பது, அடிக்கடி எச்சில் வைப்பது, லிப்ஸ்டிக் போடுவது என்று பல காரணங்கள் இருந்தாலும், தினமும் இரவில் படுக்கும் போது தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலை உதடுகளில் தடவி தூங்க வேண்டும். மேலும் தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். இளம் வயதினர் சந்திக்கும் ஒரு சரும பிரச்சனை தான் முகப்பரு. இத்தகைய முகப்பருவை கற்றாழை ஜெல், எலுமிச்சை மற்றும் தக்காளி போன்றவற்றைப் பயன்படுத்தி போக்கலாம். கோடையில் சருமத்தின் நிறமானது பழுப்பு நிறத்தில் மாற ஆரம்பிக்கும். எனவே இத்தகைய சரும நிற மாற்றத்தை தடுக்க ஆரஞ்சு பழச்சாறு, பால், தயிர் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றைக் கொண்டு போக்கலாம். முகத்தில் கருமையான தழும்புகள் இருந்தால், அவை அசிங்கமான தோற்றத்தைக் கொடுக்கும். எனவே இத்தகைய கருமையான தழும்புகளைப் போக்க எலுமிச்சை சாறு மற்றும் சந்தனப் பொடி ஆகியவற்றுடன், தேன் மற்றும் தயிர் சேர்த்து கலந்து, சருமத்திற்கு ஃபேஸ் பேக் போட்டால், விரைவில் போக்கலாம். தேன், எலுமிச்சை சாறு, ஓட்ஸ், முட்டை, ஜாதிக்காய் பொடி ஆகியவை கரும்புள்ளிகளைப் போக்கக்கூடியவை. அதற்கு இந்த பொருட்களைக் கொண்டு சருமத்தை ஸ்கரப் செய்து வர வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்கிவிடும். சிலருக்கு சருமத்தில் வெள்ளை திட்டுக்கள் இருக்கும். இவை பொலிவற்ற தோற்றத்தைக் கொடுக்கும். ஆகவே அதனை தடுக்க பால் மற்றும் மில்க் க்ரீம் பயன்படுத்தி சருமத்தை ஈரப்பசையுடன் வைத்துக் கொள்ள வேண்டும். வேண்டுமானால் தேன் பயன்படுத்தி சருமத்தை மசாஜ் செய்தும் வெள்ளை திட்டுக்களைப் போக்கலாம். நிறைய மக்கள் எண்ணெய் பசை சருமத்தினால் அதிக பிரச்சனைக்கு உள்ளாவார்கள். அத்தகையவர்கள் சருமத்திற்கு எலுமிச்சை அல்லது ஆரஞ்சு பழத்தின் சாற்றினைப் பயன்படுத்தி, சருமத்தை மசாஜ் செய்தால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கிவிடும்.

%d bloggers like this: