Daily Archives: ஓகஸ்ட் 18th, 2014

பென் ட்ரைவில் இருந்த கோப்புகளைக் காணோமா?

படிப்பின் தேவைக்கோ பணியின் தேவைக்கோ பென் ட்ரைவ்களையும், எக்ஸ்டெர்னல் ஹார்டிஸ்க்குகளையும் பயன்படுத்துகிறோம். நாம் அவற்றைப் பல கணினிகளிலும் மடிக்கணினிகளிலும் பயன் படுத்துவோம். அப்போது நம்மை அறியாமலேயே சில சமயங்களில் வைரஸ் அல்லது மால்வேர் தாக்குதலுக்கு உள்ளான கணினிகளில் பயன்படுத்திவிடுவோம்.

பல நாட்கள் உழைத்துச் சேகரித்த ஆவணங்கள் உள்ளிட்டு பெரும்பாலும் நமது அதிமுக்கியமான கோப்புகளை நாம் பென் ட்ரைவ்களில் வைத்திருப்போம். மால்வேர் தாக்குதல்களுக்கு உள்ளான கணினிகளில் இவற்றைப் பயன்படுத்திய பிறகு, நமது பென் ட்ரைவைச் சோதித்துப் பார்த்தால், நாம் அதில் வைத்திருந்த கோப்புகள் எல்லாம் காணாமல் போய், வெறும் 1 KB மட்டுமே அளவுள்ள அவற்றின் ஷார்ட் கட்கள் மட்டுமே இருப்பதைக் கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்திருக்கலாம்.

Continue reading →

இன்னும் எத்தனை மனுக்கள்தான் கொடுப்பீர்களோ? ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு… நீதிபதி குன்ஹா கோபம்

”இந்த வழக்கின் இறுதி வாதம் 40 நாட்களைக் கடந்தும் நடந்துகொண்டிருக்கிறது. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்” – பெங்களூரு சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தரப்பு இறுதி வாதங்கள் நீண்டுகொண்டே போவதால், அந்த வழக்கை விசாரித்துவரும் நீதிபதி குன்ஹா இப்படி எச்சரிக்கை செய்துள்ளார்.

கடந்த வாரத்தில் இரண்டு நாட்கள் வாதம் செய்துவிட்டு போன சுதாகரன், இளவரசி தரப்பு வழக்கறிஞரான மும்பையைச் சேர்ந்த அமீத் தேசாய், மீண்டும் இந்த வாரம் இரண்டு நாட்கள் தன் வாதத்தை எடுத்து வைத்துவிட்டு மும்பைக்குக் கிளம்பிச் சென்றார். இவருக்கு உதவியாக செந்தில், அசோகன், அன்புக்கரசு, பன்னீர்செல்வம் ஆகிய வழக்கறிஞர்கள் இருந்தார்கள்.

அமீத் தேசாய் வாதத்தில் இருந்து…

கூட்டுச்சதியில் ஈடுபடவில்லை!

Continue reading →

பாலியல் ஆரோக்கியத்தைப் பற்றி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள்!!!

பல பெண்கள் தங்கள் உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான நலனின் மீது அக்கறை கொள்வதே இல்லை. ஆண்களை போலவே பெண்களுக்கும் பாலியல் ரீதியான ஆரோக்கியம் மிகவும் முக்கியமாகும். அதனை கொண்டு தான் உடன் நலத்திற்கு முக்கிய அம்சங்களாக விளங்கும் உணர்ச்சி, உடல் மற்றும் ஹார்மோன்

Continue reading →

உங்களது 168 மணி நேரத்தில் நீங்கள் என்ன செய்யலாம்?

நாம் ஒரு நாளைக்கு எவ்வளவு பணம் செலவு செய்கிறோம் என்று கணக்கு வைத்துள்ளோம், நமது அன்றாட தேவைகளுக்கு எவ்வளவு தொகை செலவு செய்கிறோம் என்று கணக்கு வைத்துள்ளோம் ஆனால் நாம் கணக்கு இல்லாமல் செலவழிக்கும் ஒரு விஷயம் நேரம் மட்டும்தான். "ஒரு நாளைக்கு நான் பார்க்கும் வேலைக்கு 24 மணி நேரம் போதவில்லை..!" என நேரத்தை குற்றம் சொல்பவர்கள் நம்மில் பலர் இருக்கிறோம். அதனால் சற்று விலக்கு அளித்து 24 மணி நேரங்களை கொண்ட ஏழு நாட்கள் என்று வைத்து கொள்வோம். இப்போது நமக்கு 168 மணி நேரம் கையில் உள்ளது. இதில் நாம் என்ன செய்யப் போகிறோம்.. நமக்கு கிடைக்கும் நேரம் என்ன? அதனை எப்படி செலவழிப்பது போன்ற பல கேள்விகளுக்கு பதில் இதோ… இந்த 168 மணி நேரத்தில் 49 மணி

Continue reading →

சரும கருமையைப் போக்கும் சில சூப்பரான ஃபேஸ் பேக்!!!

saruma karumaiyaib bokkum sila soopparana kgbes

கோடையில் வெயிலில் அதிகம் சுற்ற நேருவதால், சூரியக்கதிர்களின் தாக்கமானது சருமத்தில் அதிகரித்து, சருமத்தின் நிறம் மங்க ஆரம்பிக்கும். சிலருக்கு சருமம் கருப்பாகிவிடும். ஆகவே பலர் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க, கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த க்ரீம்களை பயன்படுத்துவார்கள். அக்குள் ரொம்ப கருப்பா இருக்கா..? அதை போக்க இதோ சில வழிகள்!!! அப்படி சருமத்தின் நிறத்தை அதிகரிக்க கண்ட கண்ட க்ரீம்களை சருமத்திற்கு பயன்படுத்தினால், சருமத்தில் வேறு சில பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். இங்கு வெயிலினால் மாறிய சருமத்தின் நிறத்தை சரிசெய்ய சில ஃபேஸ் பேக்குகள்

Continue reading →

வீழ்கிறாரா விஜயகாந்த்? தேயும் தே.மு.தி.க ரேங்க் கார்டு

”அரசியலுக்கு வர்றதா இருந்தா நிச்சயம் வருவேன். அப்படி நான் அரசியலுக்கு வந்தா சும்மா அறிக்கை விடுறது, பேசுறது… இதெல்லாம் பிடிக்காது. இறங்கின முதல் நாளே முழு வேகத்துல இறங்கணும். அப்படி இறங்கி நின்னு வேலை பார்க்கப் பிரியப்படுறவன் நான்’ – தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தை தொடங்குவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் விஜயகாந்த் தனக்குத்தானே போட்டுக்கொண்ட சபதம் இது. இதோ… அவர் கட்சி தொடங்கி 10-வது ஆண்டு தொடங்கவிருக்கிறது. சபதம் அப்படியேதான் இருக்கிறது. ஆனால் ‘கடமைக்கே’ என்று அறிக்கை மட்டுமே விட்டு கட்சி நடத்தியதால், 10-வது ஆண்டின் தொடக்கத்திலேயே கட்சி தேய்ந்துகொண்டிருக்கிறது!

Continue reading →

முழுமையான புரோகிராம் நீக்கம்

பெர்சனல் கம்ப்யூட்டரில் பதியப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம் இனி தேவைப்படாது என நாம் உணரும் பட்சத்தில், அதனை அன் இன்ஸ்டால் செய்வதே நல்லது.
இவ்வாறு அன் இன்ஸ்டால் செய்திடுகையில், அதனுடன் இணைந்த பல சிறிய பைல்கள் நம் கம்ப்யூட்டரிலேயே ஒட்டிக் கொண்டு ஹார்ட் டிஸ்க்கின் இடத்தை எடுத்துக் கொள்கின்றன. நாளடைவில் இவையே குறிப்பிட்ட அளவில் நம் டிஸ்க் இடத்தை அடைத்துக் கொள்கின்றன.

Continue reading →

எக்ஸெல் டிப்ஸ்-ஒர்க் ஷீட்டின் இறுதி வரிசை:

ஒர்க் ஷீட்டின் இறுதி வரிசை: எக்ஸெல் தொகுப்பில் Ctrl+End அழுத்துகையில், எக்ஸெல், ஒர்க்ஷீட்டின் கீழாக டேட்டா அமைக்கப்பட்டுள்ள செல்லுக்கு, உங்களை அழைத்துச் செல்லும். இது கீழ் வரிசையில் குறுக்கு வலது நெட்டு வரிசை எனச் சொல்லப்படும். நீங்கள் சில படுக்கை வரிசைகள் அல்லது நெட்டு வரிசைகளை, ஒர்க்ஷீட்டில் நீக்கினால், Ctrl+End கீகள் உங்களை நீக்கியவற்றிற்கு முன்பாகக் கீழாக டேட்டா அமைந்துள்ள வலது ஓர செல்லுக்கு எடுத்துச் செல்லும் என்று தானே எதிர்பார்ப்பீர்கள். அதுதான் இல்லை. ஏற்கனவே ஒரிஜினலாக, இறுதியாக எந்த செல்லுக்குச் சென்றதோ, அந்த செல்லுக்குத் தான் செல்லும்.
எடுத்துக்காட்டாக, நீங்கள் அமைத்த ஒர்க் ஷீட் ஒன்றில் H20 செல் கீழாக, இறுதியானதாக இருப்பதாக வைத்துக் கொள்வோம். இதில் நீங்கள் மூன்று படுக்கை வரிசைகளையும், ஒரு நெட்டு வரிசையினையும் இடையே நீக்குகிறீர்கள். இப்போது Ctrl+End கீகளை அழுத்தினால், கர்சர் G17 செல்லுக்குத்தானே செல்லும் என்று எதிர்பார்க்கிறீர்கள். இல்லை. அதற்குப் பதிலாக H20 என்ற செல்லுக்கே செல்லும். இதற்குக் காரணம் என்னவென்றால், நீங்கள் ஏற்படுத்திய மாற்றம், பைலில் பதியப்படாததே ஆகும். எனவே, மாற்றத்திற்கேற்ற வகையில் இறுதி செல் காட்டப்பட வேண்டும் என்றால், பைலை சேவ் செய்தால் போதும். மாற்றத்தின் அடிப்படையில் கடைசி செல்லைக் காட்டும்.
அலகுகளை மாற்ற பார்முலா தேவையா?

Continue reading →