ஃபேஷியல் எண்ணெய்களை சருமத்திற்குப் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

kgbeshiyal enneykalai sarumathirkub bayanbaduthuvathal kidaikkum nanmaikal!!!

சரும எண்ணெய்கள் தற்போது நிறைய கிடைத்து வருகின்றன. இவ்வகை எண்ணெய்களை பயன்படுத்துவது சிறந்ததா என்ற கேள்வி அனைவருக்கும் இருக்கும். இந்த வகை எண்ணெய்களை பயன்படுத்தும் போது அவை சருமத்தில் உள்ள துளைகளை அடைத்துக் கொண்டுவிடும் என்று நாம் நினைத்து அதை பயன்படுத்தாமல் இருந்திருப்போம். ஆனால் அது தவறான கருத்து என்றும், சரும எண்ணெய்கள் நன்மை தருவதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். http://www.essence.com என்ற இணையதளத்தின் தகவல் படி நியூயார்க்கில் உள்ள மெட்ரோபாலிட்டன் மருத்துவமனையில் உள்ள தோல் அறுவை சிகிச்சை நிபுணர், டென்னி இன்கில்மேன் சரும எண்ணெய்களின் நன்மைகளைப் பற்றி இங்கு

விளக்குகின்றார். எண்ணெய்கள் சருமத்தில் உள்ள துளைகளை அடைப்பதில்லை. அது மட்டுமில்லாமல் நீங்கள் பூசும் எண்ணெய்களும் சரி, சுரக்கும் எண்ணெயும் சரி பருக்களை வரவழைக்காது. பருக்கள் சருமத்தில் உள்ள மயிர்க்கால்களில் தேங்கி இருக்கும் எண்ணெய்களினாலும் இறந்த திசுக்களினாலும் ஏற்படுகின்றன. ஆகையால் நாம் எண்ணெய்களை பயன்படுத்துவதன் மூலம் எந்த வித பிரச்சனையும் வருவதில்லை. மாறாக, இந்த வகை எண்ணெய்கள் சரும சிக்கல்களை நீக்கி அழகான பளபளப்பான தோலை தருகின்றன. எண்ணெய் வகைகளில் நிறைய ஊட்டமளிக்கும் பொருட்கள் அதிக அளவில் உள்ளன. அதாவது திராட்சை விதை, கருப்பு திராட்சை மற்றும் ஆர்கன் ஆகியவற்றின் தன்மையும் நற்குணங்களும், ஈரப்பதமூட்டும் மாய்ஸ்சுரைசர்களில் கண்டிப்பாக இருக்கும். ஆனால் இவைகளை எண்ணெய் பொருட்களிலும் சேர்ப்பார்கள். அதுமட்டுமல்லாமல் இவற்றை சேர்க்கும் போது மிகுந்த அளவில் சுத்தமான தன்மையுடன் சேர்ப்பார்கள். ஆகையால் எண்ணெய்களை பயன்படுத்துவது ஒரு சிறந்த சருமப் பாதுகாப்பு முறையாக உள்ளது. எண்ணெய் வகைகள் சருமத்தை பிசுபிசுப்படையச் செய்வதில்லை. முகத்தில் தடவப்படும் எண்ணெய்கள் பொதுவாக குறைந்த எடையுடைய மற்றும் சருமத்திற்குள் சீக்கிரம் ஈர்த்துக் கொள்ளும் சக்தி உடையவை. ஓரிரு சொட்டுக்களே உங்கள் முழு முகத்திற்கும் போதுமானதாய் இருக்கும். இதனால் சருமத்தில் வறட்சி ஏற்படாமல், சருமம் போதிய எண்ணெய் சத்துடன் இருக்கும். எண்ணெய்கள் சருமத்தை பாதுகாத்து உங்களை இளமையாக வைக்கின்றன. எண்ணெய்களில் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் அதிகம் உள்ளன முக்கியமாக அதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஈ ஆகியவை நோய் பரப்பும் கிருமிகளை எதிர்த்துப் போராடி சூரியனின் தாக்கத்திலிருந்து தப்பிக்க உதவுகின்றன. வயது அதிகரித்தால், நமது உடம்பில் இயற்கையாக சுரக்கப்படும் எண்ணெய்களின் அளவு குறையத் துவங்குகின்றது. இதனால் தான் நம் சருமத்தில் சுருக்கங்கள் மிகுதியாகவும், ஆழமாகவும் இருப்பதை காண முடிகின்றது. ஆனால் இப்படிப்பட்ட மேல்புறத்தில் பூசப்படும் எண்ணெய்களை வாங்கி நாம் பயன்படுத்தும் போது நாம் இயற்கையாக சுரக்காமல் விட்டதை செயற்கையாக பெற முடியும்.

%d bloggers like this: