கண்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க 8 டிப்ஸ்…

உங்கள் உடலில் உங்களுக்கு பிடித்த அங்கம் எது என்றால், கண்கள் என்பது தான் பெருவாரியான பதிலாக இருக்கும். பின்ன என்ன அனைத்தையும் பார்க்க கண் இல்லாவிட்டால் எப்படி? அப்படிப்பட்ட கண்களை நாம் சரியாக பராமரிக்க வேண்டாமா? அதுவும் மாஸ் நிறைந்த இன்றைய உலகத்தில் கண்களின் மீது கூடுதல் கவனம் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். கம்ப்யூட்டர்வாசிகளே… உங்க கண்ணைப் பாதுகாக்க இதைப் படியுங்க…! கண்களின் ஆரோக்கியத்தை சரியாக பராமரிக்க சரியான பராமரிப்பு

நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். கண்களுக்கு போதுமான ஈரப்பதம், உணவு ஊட்டங்கள் மற்றும் சரியான உடற்பயிற்சியை அளித்து வந்தால், உங்கள் கண்கள் ஆரோக்கியமாக விளங்கும். பார்வையும் தெளிவாக இருக்கும். கீழ்கூறிய டிப்ஸ்களை தினமும் பின்பற்றினால் அழகிய நற்பதமான கண்களை நீங்கள் பெறலாம். வைட்டமின் ஏ மற்றும் கே வளமையாக அடங்கிய ஆரோக்கியமான உணவுகள் சிறப்பான கண்களை பெறுவதற்கு உதவும். கண் பார்வையையும் ஆரோக்கியத்தையும் பராமரிக்க தேவையான போதிய வைட்டமின்கள் மற்றும் கனிமங்களை பெறுவதற்கு தினமும் காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்ளுங்கள். படிக்கும் போதோ அல்லது கணிப்பொறியில் வேலை பார்க்கும் போது சிறிது இடைவேளை எடுத்துக் கொள்ளுங்கள். 5 நிமிட குறைந்த இடைவேளை எடுத்துக்கொண்டால் உங்கள் கண்களின் தசைகள் ஓய்வு பெறும். கண்களின் மீது தண்ணீர் தெளித்து, கண்களை ஒரு ஐந்து நிமிடங்களுக்கு மூடிக்கொள்ளுங்கள். அதன் பின் மீண்டும் உங்கள் வேலையை தொடரலாம். கண்களுக்கு ஏதேனும் பயிற்சிகள் அளியுங்கள் – கண்மணிகளை வட்ட வடிவில் 5 நிமிடங்களுக்கு சுழற்றுங்கள் அல்லது பல முறை கண்களை இமைக்கவும். காலையில் கைகளை 2 நிமிடங்களுக்கு நன்றாக தேய்த்த பின், வெதுவெதுப்பான கைகளை கண்களின் மீது வைக்கலாம். இவ்வகையான கண் பயிற்சிகள் கண்களின் ஈர்பதத்தை மீண்டும் கொண்டு வரும். இதனால் கண்கள் ஆரோக்கியமாக இருக்கும். கண்களை சுற்றி கருவளையம் மற்றும் வீக்கம் உண்டாவதை தவிர்க்க தினமும் 8 மணி நேரமாவது தூங்குங்கள். போதிய தூக்கம் இல்லையென்றால், கண்கள் சிவப்பாக மாறுவதுடன், உங்கள் முகத்தின் ஒட்டு மொத்த தோற்றத்தையும் மாற்றி விடும். போதிய நேரத்திற்கு தூங்கினால் தான் முகமும் கண்களும் தெளிர்ச்சியாக இருக்கும். குளிர்ந்த வெள்ளரி துண்டுகளை கண்களின் மீது வைத்தால், கண்களுக்கு அளவுக்கு அதிகமான ஈரப்பதம் கிடைக்கும். மேலும் கருவளையங்களை போக்கவும், சிகப்பு நிற கண்களை இயல்பு நிலைக்கு மாற்றவும், கண்களை அழகாகவும் ஆரோக்கியாமகவும் வைத்திருக்கம் வெள்ளரி உதவுகிறது. கண்களை சரியாக வைத்துக் கொள்ள ஈரப்பதம் என்பது மிகவும் முக்கியமான அங்கமாகும். உங்களிடம் வெள்ளரி இல்லையென்றால், மாய்ஸ்சுரைசிங் ட்ராப்ஸ் வாங்கி, கண்களுக்கு தினமும் போட்டு கொள்ளவும். காலையில் கண்களை தேய்ப்பதை தவிர்க்கவும். அல்லது கண்களில் ஏதனும் தூசி விழுந்து அதனால் உறுத்தல் ஏற்பட்டாலும், கண்களை தேய்க்காதீர்கள். கண்களில் ஏதேனும் விழுந்தால், தேப்பதற்கு பதிலாக தண்ணீரை கொண்டு கண்களை கழுவுங்கள். வெயில் செல்லும் போது கண்ணாடி (சன் கிளாஸ்) அணிந்து கொள்ளுங்கள். இதனால் ஈரப்பதம் குறைவு, கருவளையம் உண்டாவது, பார்வை குறைவு ஆகியவைகளை தவிர்க்கலாம். கண்களை சரியாக பராமரிக்க நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இவைகள். இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்…

%d bloggers like this: