Daily Archives: ஓகஸ்ட் 21st, 2014

டாஸ்மாக் புதிய விலைபட்டியல் -MRP PRICE LIST w.e.f. 20.08.2014

CLICK HERE  TO VIEW டாஸ்மாக் புதிய விலை பட்டியல் – Tasmac new price list – 15.03.2021

CLICK HERE TO VIEW TASMAC NEW PRICE LIST W.E.F. 07.05.2020


CLICK HERE TO VIEW TASMAC NEW PRICE LIST W.E.F .07.02.2020

————————————————————————————————————

CLICK HERE TO VIEW TAMIL NADU STATE MARKETING

CORPORATION LIMITED

MRP PRICE LIST w.e.f. 13.10.2017 new

TAMIL NADU STATE MARKETING CORPORATION LIMITED

MRP PRICE LIST w.e.f. 20.08.2014

Continue reading →

மதுபானங்கள் விலை உயர்வு மூலம் டாஸ்மாக் வருவாய் ரூ.24,500 கோடியை தாண்டும்

கோவை: தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானம் விலை உயர்வினால் மாநில அளவில் 2014-2015ம் ஆண்டில் 3 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  தமிழகத்தில் 6,823 டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளும், 500க்கும் மேற்பட்ட தனியார் பார்களும் (எப்.எஸ் 2 உரிமம் பெற்றது) செயல்படுகிறது. இந்த கடைகளின் மூலமாக தினமும் சுமார் 1.2 கோடி குவார்ட்டர் பாட்டில் விற்பனையாகிறது. கடந்த 2009&2010ம் ஆண்டில் 12,497 கோடி ரூபாய்க்கு விற்ற மதுபானம் 2013&2014ம் ஆண்டில் ரூ.21,657 கோடியாக உயர்ந்தது.

Continue reading →

ஸ்மார்ட் போன் மூலம் பணப்பரிமாற்றம்-சில டிப்ஸ்..!

ன்றைய டிஜிட்டல் உலகிலும் சில பழைய முறைகள் புழக்கத்தில் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள்.

பலருக்கு பர்ஸில் இருக்கும் பணத்தை விட கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை அதிகம். இதை தவிர்க்க தற்போது அறிமுகமாகி இருக்கும் வசதிதான் ஸ்மார்ட்போன் மூலம் பணம் செலுத்தும் வசதி. இதில் நிறைய வழிகள் உள்ளன. அமெரிக்காவில் பிரபலமாகி வரும் இந்த வசதி விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் ஆகக்கூடும். இவற்றினை ஒவ்வொன்றாக இந்த கட்டுரையில் பார்ப்போம்.

பேபால்

Continue reading →

கேட்ஜெட் : சிக்னல் சிக்கலை தீர்க்கும் கோடென்னா!

வாட்ஸ் ஆப், பிபிஎம், ஹைக் போன்ற இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்ஸ் பல வந்துவிட்டாலும் சரியான நெட்வொர்க் சிக்னல் கிடைக்கவில்லை எனில் இவை எதையுமே பயன்படுத்த முடியாது. இதைப் போக்கும் வகையில் சமீபத்தில் ‘கோடென்னா’ (goTenna) என்ற கருவி வெளியாகியுள்ளது.

சிற்றலை (Low frequency) மூலம் இயங்கும் இந்தக் கருவி எந்த செல்போன் நெட்வொர்க்கின் உதவியும் இல்லாமல் டெக்ஸ்ட் மெசேஜை அனுப்பவல்லது. அதாவது, இந்த ‘கோடென்னா’ கருவியை இரண்டு நபர்கள் வைத்திருந்தால், அவர்கள் இருவரும் செல்போன் சிக்னலைப் பயன்படுத்தாமல், தங்களுக்குள் செய்திகளை பரிமாறலாம். மௌத்-ஆர்கன் போலத் தோற்ற மளிக்கும் இந்தக் கருவியின் மேல்புறத்தை ஆன்டெனா போல இழுத்துவிடலாம்.

Continue reading →

வருங்கால கணவர் இப்படித்தான்!

ண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’ என்பார்கள் ஆன்றோர்கள். நம் வாழ்வில் எண்களுக்கான பங்களிப்பு மிக முக்கியமானது. இந்த அடிப்படையிலேயே எண்ணியல் ஆய்வாளர்கள் பலரும் எண்கணிதத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளார்கள். எண்கணித ஜோதிடத்தின் முக்கிய அங்கங்களாக பிறவி எண்ணையும் விதி எண்ணையும் குறிப்பிடுவார்கள். இவற்றைப் போன்று லக்ன எண்ணையும் கவனத்தில் கொண்டால், விரிவான பலாபலன்களை அறிய முடியும் என்கிறார்கள், சில எண்கணித ஆய்வாளர்கள்.

இங்கே, லக்ன எண் அடிப்படையில்… கல்யாணத்துக்குக் காத்திருக்கும் கன்னிப்பெண் களுக்கு, அவர்களுடைய வருங்கால கணவருடைய இயல்புகளை அறியும் விதமாக ஓர் அட்டவணையையும், உரிய பலாபலன்களையும் கொடுத்திருக்கிறோம். பலனை அறிய விரும்புவோர் முதலில் பெண்ணுக்கான லக்னத்தை தெரிந்துகொள்ள வேண்டும் (பிறந்த வேளையில் சூரியன் எந்த ராசியில் இருக்கிறாரோ அதுவே லக்னம் ஆகும்). ஜாதகத்தில்- ராசிக்கட்டத்தில் ‘ல’ என்ற குறிப்பை வைத்து லக்னத்தை அறியலாம். உதாரணமாக ‘ல’ எனும் குறியீடு மேஷ ராசிக்கான கட்டத்தில் இருந்தால், அந்த ஜாதகரின் லக்னம் மேஷம் ஆகும் (உதாரணப் படமும் இங்கே இடம்பெற்றுள்ளது).

Continue reading →

பேஸ்புக்கில் நண்பனை நீக்கும் வழி

பேஸ்புக்கில் நமக்கென ஓர் அக்கவுண்ட் இருந்தால், நம்மோடு பலர் நண்பர்களாக, அஞ்சல் அனுப்பிக் கொண்டிருப்பார்கள். நாம் அவற்றைப் பார்த்து உறுதி செய்துவிட்டால், அவர்கள் பேஸ்புக்கில் இடும் அஞ்சல்கள் நமக்கு தொடர்ந்து வரும். இதில் என்ன பிரச்னை என்றால், நாம் அவர்களின் அழைப்பினை ஏற்ற பின்னரே, அவர் இடும் தகவல்கள் நமக்கு ஒப்பானவை அல்ல என்று தெரியவரும். சிலர் தேவையற்ற வகையில் அரசியல்

Continue reading →

உணவு யுத்தம்!-31

உருளைக்கிழங்கு சாப்பிடப் பிடிக்கும் என்றால் உலகில் எந்த நாட்டுக்கும் நீங்கள் போய் வரலாம். எல்லா ஊர்களிலும் விதவிதமான சுவைகளில் உருளைக்கிழங்கில் செய்த உணவு கிடைக்கும். சாப்பாட்டுப் பிரச்னையை ஓரளவு சமாளித்துவிடலாம்’ என்கிறார் பிராட் ஜான்சன். இவர் ஒரு பயண எழுத்தாளர். உணவு பற்றி எழுதுவதற்காக நிறைய நாடுகளைச் சுற்றியிருக்கிறார்.

பிராட் சொல்வது உண்மை என்பதை நானும் உணர்ந்திருக்கிறேன். விமானப் பயணத்தில் தரப்படும் பெரும்பான்மை உணவு வகைகளை வாயில் வைக்க முடியாது. அதிலும் ஐரோப்பிய பயணங்களில் தரப்படும் உணவு பெரும்பாலும் இத்தாலிய வகையாக இருக்கும். அவற்றை என்னால் சாப்பிட முடியாது. ஆகவே, வேகவைத்த உருளைக் கிழங்குடன் ஒரு துண்டு ரொட்டி. கடுங்காப்பி குடித்து பசியை தணித்துக்கொள்வேன்.

Continue reading →