மதுபானங்கள் விலை உயர்வு மூலம் டாஸ்மாக் வருவாய் ரூ.24,500 கோடியை தாண்டும்

கோவை: தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானம் விலை உயர்வினால் மாநில அளவில் 2014-2015ம் ஆண்டில் 3 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  தமிழகத்தில் 6,823 டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளும், 500க்கும் மேற்பட்ட தனியார் பார்களும் (எப்.எஸ் 2 உரிமம் பெற்றது) செயல்படுகிறது. இந்த கடைகளின் மூலமாக தினமும் சுமார் 1.2 கோடி குவார்ட்டர் பாட்டில் விற்பனையாகிறது. கடந்த 2009&2010ம் ஆண்டில் 12,497 கோடி ரூபாய்க்கு விற்ற மதுபானம் 2013&2014ம் ஆண்டில் ரூ.21,657 கோடியாக உயர்ந்தது.

இந்நிலையில், நேற்று முதல், அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுபான பாட்டில்கள் விலை உயர்த்தப்பட்டது. குவார்ட்டர் பாட்டில்களின் விலை 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரையிலும், ஆப் பாட்டில் விலை 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரையிலும், புல் பாட்டில் விலை 40 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. பீர் பாட்டில்கள் 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. அதிகளவு விற்பனையாகும் முக்கிய பிராண்ட் மதுபானங்களின் விலை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  வெளிநாட்டு மதுபானங்களுக்கு 100 ரூபாய் முதல் 300 ரூபாய் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
விலை உயர்வினால் மாநில அளவில் டாஸ்மாக் நிர்வாகத்தினருக்கு ஆண்டிற்கு சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும்.  அதாவது 2014&15ம் ஆண்டில் ரூ.24,500 கோடிக்கும் அதிகமாக வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவை டாஸ்மாக் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், மாவட்ட அளவில் 45 டாஸ்மாக் குடோன்களில் சுமார் 15 கோடி மதுபாட்டில்கள் இருப்பு உள்ளது. பழைய விலையில் உள்ள மதுபாட்டில்களிலும் தற்போதைய விலைக்கு ஏற்ப கட்டணம் பெறப்படும். புதிய விலைபட்டியல் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ஒட்டப்பட்டுள்ளது என்றார்.

One response

  1. super sir a good work but it’s use full thing tamil nadu develop good good

%d bloggers like this: