Daily Archives: ஓகஸ்ட் 22nd, 2014

காலை உணவு தவிர்த்தால் சர்க்கரை நோய் வரும்

அடிக்கடி வாய்ப்புண் வருவதை தடுப்பது எப்படி?

‘சாலையோர கடைகளில் சாப்பிடுவோருக்கு, உணவுக்குழாய் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. பழைய உணவு சாப்பிடுவதாலும், இந்த பாதிப்பு வரும். காலை உணவை தவிர்த்தால் சர்க்கரை நோய் வரும்’ என, டாக்டர்கள் எச்சரித்தனர். சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, குடல், இரைப்பை பிரிவு சார்பில், ‘உணவு பழக்கமும், உடல் ஆரோக்கியமும்’ என்ற தலைப்பில், பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. குடல் இரைப்பை சிகிச்சைத் துறைத் தலைவர் சந்திரமோகன், சண்முகம், ரகுநந்தன், நாராயணசாமி, பழனிச்சாமி மற்றும் மீனாட்சி உள்ளிட்ட நிபுணர் குழு, பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தது.
பொதுமக்களின் கேள்விகளும், நிபுணர்களின் பதில்களும்:

1. உணவுக்குழாய் புற்றுநோய் ஏன் ஏற்படுகிறது? Continue reading →

மனை வாங்குவோர் உஷார்…

ரியல் எஸ்டேட் சதுரங்க வேட்டை!

பாமர மக்கள் முதல் கோடீஸ்வரர்கள் வரை அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு வீட்டு மனை வாங்கி வருகிறார்கள். காரணம், வீட்டு மனை மூலம் பல மடங்கு லாபம் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்புதான். 15 ஆண்டுகளுக்கு முன் சுமார் ஒரு லட்சம் ரூபாய் தந்து வாங்கிய காலிமனை இன்றைக்கு 30 லட்சத்துக்கும் 40 லட்சத்துக்கும் விலைபோவதைப் பார்க்கும் மக்கள், இனிவரும் காலத்திலும் அப்படி ஒரு லாபம் கிடைக்கும் என்று நினைத்து காலி மனைகளை வாங்குகிறார்கள்.

மக்களின் இந்த எதிர்பார்ப்பைப் பயன்படுத்தி லாபம் பார்க்கும் நோக்கத்தோடு தமிழ்நாடு முழுக்க ஏராளமான ரியல் எஸ்டேட் கம்பெனிகளும் புதிது புதிதாக முளைத்து, பல லே-அவுட்டுகளைப் போட்டுவருகின்றன.

குறையும் ச.அடி!

Continue reading →

முகத்தில் உள்ள சுருக்கத்தை போக்குவது எப்படி…?

mukathil ulla surukkathai bokkuvathu eppadi...?

முகச் சுருக்கம் என்பது அனைவருக்கும் இயல்பு தான் என்றாலும் அதை மனதால் ஏற்று கொள்ள முடியாது. அனைவருக்கும் அழகாகவும் இளமையாகவும் இருக்க வேண்டும் என்பதே விருப்பமாக இருக்கும். வயதாக ஆக தோல் சுருங்க ஆரம்பித்துவிடுகின்றது. இதனால் நம் வயது மேலும் கூடியது போன்ற உணர்வு ஏற்படுகின்றது. இதற்காக கவலைப்படுவது எல்லோரும் செய்வதே. அது தேவையற்ற கவலை. முகச் சுருக்கத்திற்காக கவலைப்படுவதை விடுத்து என்ன செய்வது என்று கவனிக்க வேண்டும். அக்காலத்தில் பெண்களுக்கு முக சுருக்கம் ஏற்பட்டால் எதுவும் செய்ய முடியாத நிலை இருந்தது. ஆனால் தற்பொழுது முகச் சுருக்கத்தை போக்குவதற்கென்று பல அழகு நிலையங்கள் வந்து விட்டன. அவைகள் அழகை மேம்படுத்தோடு இளமை அழகுடன் ஜொலிக்கவும்

Continue reading →

மனிதன் மாறி விட்டான்! கண்ணுக்குத் தெரியாதா?

வியப்பும் ஆர்வமும் அதிகரிக்கும்போது, கண்மணிகள் இயல்பாகவே விரிவடைகின்றன. ஒருவர் நம்மைச் சந்திக்கிறபோது, அவை விரிவடைகின்றனவா என்று பார்த்து அவர்கள் ஆர்வம் காட்டுகிறார்களா, இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ளலாம். தொடக்க காலத்தில் இத்தாலி போன்ற நாடுகளில் உள்ள பொதுமகளிர், தங்கள் விழிகளில் பெல்லாடோனா என்கிற மருந்தை ஊற்றி வாடிக்கையாளர்களை வரவேற்பது வழக்கம். அப்போது அந்த ஆண்களுக்கும், அவர்கள் மீது ஆர்வம் இருப்பதைப்போல உணர்வு ஏற்படும்.

மனிதக் கண்கள் 2.5 சென்டி மீட்டர் ஆரம் கொண்டவை. உலகத்திலேயே சக்தி வாய்ந்த தொலைக்காட்சி கேமராவைக் காட்டிலும் வலிமை வாய்ந்தவை இவை.  அதில் 1,370 லட்சம் செல்கள் இருக்கின்றன. அவை மூளைக்குத் தகவல் அனுப்புகின்றன. பிறப்பில் இருந்து இறப்பு வரை அதிக மாற்றத்தை அடையாததும் விழிகள்தான்.   

கண்களின் திறன் ஒவ்வொரு விலங்குக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது.  பூச்சிகளின் விழிகள் தொகுப்புக்கண்களாக உருவாக்கப்பட்டிருக்கின்றன.  ஆயிரக்கணக்கான ஒளி உணர் பாகங்களால் ஆனவை அவை. எந்தக் கோணத்திலும் ஒளியில் ஏற்படும் மாற்றத்தை அவை உணர்ந்துகொள்கின்றன. அதனால்தான் ஒரு ஈயை வெறும் கையால் அடிப்பதோ, பிடிப்பதோ கடினம். 

மனிதக் கண்களில் கணிசமான வெள்ளைப்பகுதி இருக்கிறது. அந்த வெள்ளைப் பகுதி மற்ற விலங்குகளுக்கு குறைவாகவே இருக்கிறது. இதுவே நம் விழிகளை உடல்மொழிக்கு ஏற்றவாறு படைத்திருக்கிறது. கண்ணில் உள்ள கரும்பகுதியில் மெலனின் என்கிற வேதியியல் பொருள் இருந்து, கண்களுக்குப் பழுப்பு நிறத்தைத் தருகிறது. வெள்ளை நிறத் தோல் உடையவர்களுக்கு அந்த மெலனின் குறைவாக இருப்பதால், கண்கள் அடர்ந்த பழுப்பு நிறத்தில் இருப்பது இல்லை.  பிறந்த குழந்தைகளின் கண்கள் நீல நிறத்திலேயே இருக்கின்றன. அந்த மெலனின் பிக்மன்ட் உருவாக உருவாக, கண்கள் பழுப்பு நிறத்தை அடைகின்றன. அல்பினோ என்று அழைக்கப்படுகிற, முழுவதும் வெள்ளைத் தோலால் ஆன மனிதர்களுக்கு மெலனின் சுத்தமாக உருவாவதே இல்லை.

சில விலங்குகளுக்கு மூன்றாவது இமை இருக்கிறது. அது மெல்லிய சவ்வாக கண்ணின் உள்பகுதியில் மூக்குக்கு அருகில் அமைந்திருக்கிறது. அது கண்ணைத் தொடர்ந்து சுத்தப்படுத்திக்கொண்டே இருக்கிறது. வாத்து போன்ற நீரில் வாழும் பறவைகளுக்கு இந்த மூன்றாம் இமை அதிகப் பருமனுடன் அமைந்திருக்கின்றன. 

கண்ணீரின் நோக்கமோ, கண்ணுக்குள் நுழைகிற அந்நியப் பொருட்களை அகற்றுவதற்காகத்தான். இமைகளின் மேலும் கீழும் வளர்ந்திருக்கும் முடிகள், அந்நியப் பொருட்கள் உள்ளே வராமல் காப்பாற்றுகின்றன. திடீரென காற்று வீசும்போது மண் துகள்கள் உள்ளே போகாமல் அவை தடுக்கின்றன. கண்ணீர்த் துளிகள் உப்புத்தன்மை உடையனவாக இருக்கின்றன. அதில், லைசோசைம் என்கிற புரதச்சத்து இருக்கிறது.  அது பாக்டீரியாக்களை அழிக்கும் ஆற்றல் கொண்டது.

கடல் நீரில் உயிர் தோன்றியதால், நம் கண்கள் தொடர்ந்து உப்பு நீரில் மூழ்க வேண்டிய கட்டாயம் உள்ளது. கண்களில் இருக்கும் இரண்டு சன்னமான குழாய்களின் வழியாக, கண்ணீர் சுரப்பிகளின் வழியாக உற்பத்தியாகும் கண்ணீர் தொடர்ந்து வழிந்துகொண்டே இருக்கின்றன. ஒரு சின்னக் குழாய் அதை மூக்கின் உள்பகுதிக்கு எடுத்துச்செல்கிறது. திடீரென எரிச்சலோ, மனத்தை பாதிக்கும் உணர்ச்சியோ ஏற்படும்போது கண்ணீர் சுரப்பிகள் அதிகமான கண்ணீரை வெளிப்படுத்துகின்றன. அப்போது அந்த சன்னக் குழாய்கள் முழுவதுமாக அவற்றை வழிக்க முடியாமல் தடுமாறுகின்றன. இந்த அதிகப்படியான கண்ணீர் நம் கன்னங்களின் வழியாக வழிந்து வெளியேறுகிறது. நாம் உணர்ச்சிவசப்படும்போதும், தம்மைப் பாதுகாத்துக்கொள்ள கண்கள் முயலும்போதும், வெங்காயம் உரிக்கையில் எதிர்வினை செய்யும்போதும் கண்ணீர் வருகிறது.   

கார்னியா என்கிற பகுதியில் ஏற்படும் காயம், கண்களைக் குருடாக்கிவிடக் கூடிய ஆற்றல் உடையது. இது மத்திய கிழக்கு ஆசியாவில் சகஜம். அதனால்தான் அதிகமான பார்வையற்ற பிச்சைக்காரர்கள் ஆயிரத்தொரு அராபிய இரவுகளில் தோன்றுகிறார்கள். 

இரண்டு விழிகள் இருப்பது, ஒன்று பழுதடைந்தால் பாதுகாக்க மட்டுமல்ல, பார்வையை விசாலப்படுத்தவும் ஆழத்தை அதிகப்படுத்தவும் அவை உதவுகின்றன.  இடது கண்ணை மூடிக்கொண்டு வலது கண்ணால் மரத்தைப் பார்த்தால், அது ஒரு மாதிரியாகவும், இடது கண்ணால் பார்த்தால் இன்னொரு மாதிரியாகவும் தெரிகிறது.  ஆந்தை போன்ற உயிரினங்கள் பின்னால் நடப்பவற்றையும் பார்க்கிற அளவுக்கு 180 டிகிரி கோணத்தில் விழியமைப்பைப் பெற்றிருக்கின்றன. தசைகளின் கட்டுப்பாட்டில் சரியாக இயங்காததால்தான், அது மாறுகண்ணாக நமக்குத் தெரிகிறது. 

கண்களின் ரெட்டினா என்கிற பகுதியில்தான் ஒளி உணர் பாகங்கள் இருக்கின்றன.  ஒளி தால்மியா வழியாக நுழைந்து, ப்யூபில் வழியாக ஊடுருவி லென்ஸ்கள் வழியாக ரெட்டினாவை அடைகிறது. கண்களில் இருக்கும் கார்னியா என்கிற பகுதியைத்தான் கண் தானத்துக்கு நாம் பயன்படுத்துகிறோம்.

வண்ணத்தை சரியாக அறிந்துகொள்ள முடியால் இருப்பது ஒருவித குறைபாடு.  பெரும்பாலும் சிவப்பு, பச்சை வண்ணங்கள் பிரித்தறிய முடியாததாக இருக்கின்றன. சிலர் எந்த வண்ணத்தையும் அறிய முடியாமல் கறுப்பு வெள்ளையிலேயே அறிகிறார்கள். ஆனால், பெரும்பாலானவர்கள் சிவப்பு, பச்சை ஆகியவற்றுக்கு இடைப்பட்ட வண்ணத்தை அறிவதில் தடுமாறுகிறார்கள்.

கண்களை அழகானதாக ஆக்க வேண்டும் என்கிற ஆர்வம் தொடக்கத்திலேயே பெண்களுக்கு இருந்திருக்கிறது. சுமார் 6,000 ஆண்டுகளுக்கு முன்பே கண்களை அழகாக்க எகிப்து போன்ற நாடுகளில் மக்கள் முயன்றிருக்கிறார்கள். இமை, கண் இமை மயிர், புருவம் போன்றவற்றை வண்ணமயமாக்குவது தொடர்ந்து பல்வேறு மாற்றங்களை அடைந்த வண்ணம் இருந்திருக்கிறது.

மனிதர்களைப் பொறுத்தவரை 80 சதவிகிதம் வெளியுலகத் தகவல்கள் கண்களின் மூலமாக உள்ளே நுழைகின்றன.

பெண்களின் விழிகள் ஆண்களின் விழிகளைவிட அளவில் சின்னவை. ஆனால், அவற்றில் இருக்கும் வெண்பகுதி அதிகம். கண்ணீர் சுரப்பிகளும் துரிதமாகச் செயல்படுகின்றன. பண்பாட்டுக்கூறும் அதற்கு ஒரு காரணம். 

ஒரு பூனைக்குட்டியின் ஒரு கண்ணை மட்டும் பிறந்தவுடன் நான்கைந்து வாரம் மூடியே இருக்கும்படி செய்தால், அதன் பார்வைக்கான செல்கள் பழுதடைந்து நிரந்தரமாகப் பார்வையை இழந்துவிடும். அதைப்போலவே சில குழந்தைகளுக்கு சோம்பேறிக் கண் உண்டு. மருத்துவர்கள் இன்னொரு கண்ணின் பார்வையை மறைத்துவிட்டு, சோம்பல் கண் மூலம் பார்க்கச் செய்து, அது பழுதாகாமல் குணப்படுத்துவார்கள். 

பழங்காலத்தில் சின்ன வயதிலேயே பார்வைக்குறைபாடு ஏற்பட்டுவிடுவதால், இளைஞர்களைக் கொண்டு படிக்க வைத்து கேட்பது வழக்கம். செனகா என்பவர் ஒரு கண்ணாடி உருண்டை நிறைய தண்ணீரை நிரப்பி அதன் முன்பு புத்தகங்கங்களின் எழுத்துக்களை பெரிதாக்கிப் படித்தார். பதின்மூன்றாம் நூற்றாண்டில் ஜோரர் வேகன் என்பவர் ஆடிகளைப் பயன்படுத்தி படிக்க வசதி செய்துகொள்ளலாம் என்று சொன்னார். மார்க்கோபோலா சீனாவில் மூக்குக் கண்ணாடிகள் பயன்படுத்தப்படுவதைப் பார்த்தார். பெஞ்சமின் ப்ராங்ளின் இந்த ஆய்வில் முக்கியப் பங்கு வகித்தார்.

ஒரு சமூகக் கூட்டம் நடக்கிறபோது வலிமையானவர்கள் வேறுபக்கம் பார்த்துக்கொண்டு பேசுவார்கள். கீழ்நிலைப் பணியாளர்களோ அவர்கள் முகத்தையே பார்த்துக்கொண்டு இருப்பார்கள். சமமானவர்கள் பேசும்போது இருவருமே அவ்வப்போது முகத்தைப் பார்த்துக்கொண்டு பேசுவது வழக்கம். தொடர்ந்து ஒருவரை பார்த்துக்கொண்டு இருப்பது அன்பையோ, வெறுப்பையோ வெளிப்படுத்துவதாக இருக்கிறது. முறைத்துப் பார்ப்பதும் கோபத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. 

நாம் ஓர் அருவியை ஒரு நிமிடமோ அதற்கு மேலோ தொடர்ந்து உற்றுப் பார்த்துவிட்டு, பிறகு அதற்கருகில் உள்ள பாறைகளையோ மரங்களையோ பார்த்தால் அவை மேல் நோக்கிப் பாய்வதைப்போலத் தோன்றும். இதற்குப் பெயர் அருவி காட்சிப் பிழை. கீழ்நோக்கிய அசைவைப் பார்த்துக்கொண்டிருப்பதால், நியூரான்களில் ஏற்படும் ஒருவித சலிப்புணர்வே இதற்குக் காரணம்.     

வேர்ட் டிப்ஸ்-வெவ்வேறு அளவில் டேபிள் செல் அமைப்பு:

வெவ்வேறு அளவில் டேபிள் செல் அமைப்பு: வேர்ட் அதன் டாகுமெண்ட்களில் டேபிள்களை உருவாக்குவதை மிக எளிமையான ஒரு செயலாகத் தந்துள்ளது. ஆனால், அதில் செல்களை நாம் விரும்பிய வகையில் அமைப்பது சற்று சுற்றி வளைத்துச் செயல்படும் வேலையாக உள்ளது. எடுத்துக்காட்டாக, டேபிள் ஒன்றின் முதல் இரு செல்கள் ஒரு குறிப்பிட்ட அளவில் அதிக அகலத்திலும், மற்ற பத்து செல்கள் குறைவாக சமமான அளவில் வேண்டும் என்றால் என்ன செய்திடலாம்? வேர்ட் தானாக இதனை அமைக்காது. அதன் மாறா நிலையில், குறிப்பிட்ட அளவில் அனைத்து செல்களையும் அமைத்துவிடும். எனவே, மேலே கூறியபடி அகலத்துடன் 12 செல்கள் கொண்ட டேபிள் ஒன்றை அமைக்க, ஒரு சுருக்கமான வழியைப் பார்ப்போம்.
1. மூன்று செல்கள் கொண்ட ஒரு வரிசை டேபிள் ஒன்றை உருவாக்கவும். இது உங்கள் டாகுமெண்ட்டின் ஒரு மார்ஜின் முனையிலிருந்து அடுத்த மார்ஜின் வரை நீட்டிக்கப்பட்டு கிடைக்கும்.

Continue reading →

கண்ணன் கருணை!

கடவுள் நம் வாழ்வில் எத்தனையோ சந்தோஷங்களைக் கொடுத்திருப்பார்; அப்போதெல்லாம், மகிழ்ச்சியின் உன்மத்தில், ‘நான்’ எனும் அகங்காரத்துடன், கடவுளை மறந்து விடுவர். ஆனால், சிறு துன்பம் வந்து விட்டால், ‘கடவுளுக்கு கண்ணில்லை…’ என்று நிந்திப்பதுடன், அவர் இருப்பையே சந்தேகிப்பர்.
இத்தகையோருக்கு மத்தியில், தனக்கு ஏற்பட்ட கடுமையான உடல் நோவுக்கு மத்தியிலும், கண நேரம் கூட கடவுளின் திருவருளை மறக்காத பக்தர் ஒருவருக்கு, கண்ணன் அருளிய கதை இது:
‘நாராயணீயம்’ பாடிய மேப்பத்தூர் நாராயண பட்டதிரி, ‘ஞானப்பானை’ என்ற நூலை எழுதிய பூந்தானம், ‘கிருஷ்ண கர்ணாம்ருதம்’ பாடிய வில்வமங்கள் ஆகியோர் வாழ்ந்த காலத்தில், அத்யாச்ரமி என்ற மகான் வாழ்ந்து வந்தார்.
இவர் பலகாலமாக குருவாயூரப்பன் சன்னிதியில், ஸ்ரீமத் பாகவத பாராயணம் மற்றும் நாராயண நாம சங்கீர்த்தனம் செய்து, தொண்டுகள் செய்து வந்தார். ஆனாலும், காலகிரமத்தில், அவரைக் குஷ்டநோய் பாதித்தது.
ஊரார் அதையும் குத்தலாக, ‘நாம ஜபம் செய்யறேன்னு இந்தப் பாவி என்னவெல்லாம் செய்தானோ… அது தான் இப்படி நோய் வந்து அவதிப்படுறான்…’ என்று ஏசினர்.
ஆனால், அத்யாச்ரமியோ, ‘குருவாயூரப்பன் ஏதோ அனுக்கிரகத்திற்காகவே நமக்கு இந்த நோயைத் தந்திருக்கிறார்…’ என்று நினைத்தார். ஆனாலும், ‘இந்நோயுடன் இங்கு இருப்பது சரியல்ல…’ எனத் தீர்மானித்து, குருவாயூரில் இருந்து புறப்பட்டு, நாம சங்கீர்த்தனம் பாடியபடி, திருச்சம்பரம் எனும் திருத்தலத்தை அடைந்தார்.
அப்போது, அவருக்கு நோய் முற்றி, உடம்பெங்கும் புண்ணாகி, புழு உருவாகி, துர்நாற்றம் அடித்தது. இதனால், அசையக் கூட முடியாத அவர், அங்கிருந்த இலஞ்சி மரத்தடியில் படுத்து விட்டார்.
மறுநாள், அந்த வழியாக, வில்வமங்கள் சுவாமிகள், தன் பரிவாரங்களுடன் வந்தார். அப்போது சில வழிப்போக்கர்கள் அவரிடம், ‘சுவாமிகளே… அந்தப் பக்கமாகப் போய் விடாதீர்; அங்கே ஒரு மகாபாவி குஷ்ட நோயால் புழுத்து கிடக்கிறான்…’ என்று சொல்லிச் சென்றனர்.
அந்த திசைப் பக்கமாக திரும்பிப் பார்த்தார் வில்வமங்களம். அப்போது, ‘வில்வமங்கள்… வில்வமங்கள்…’ என, இனிமையான குரல் ஒன்று அழைப்பது கேட்டு, குரல் வந்த திசையை நோக்கி நடந்தார். அங்கே…
அத்யாச்ரமியை, தன் மடியில் படுக்க வைத்து, மருத்துவம் செய்து கொண்டிருந்தார் பகவான். உலகையே காக்கும் தன் திருக்கரங்களால், அத்யாச்ரமியின் புண்களில் இருந்த புழுக்களை எடுத்தவர், உடலெங்கும் மென்மையாகத் தடவிக் கொடுத்தார்; விசிறியால் வீசினார். அநாதரட்சகனாகிய குருவாயூரப்பனின் செயலைக் கண்டு, வில்வமங்கள் சுவாமிகள் கண்ணீர் விட்டு வணங்கி, ‘கண்ணா… தீனபந்து; எல்லையில்லாத உன் கருணையை என்னவென்று சொல்வேன்…’ என்று பலவாறாக துதித்தார்.
அப்போது, குருவாயூரப்பன், ‘வில்வமங்கள்… என் பக்தன் ஒருவன், அவனுடைய கர்ம வினையின் பொருட்டு எத்தகைய துன்பத்தை அனுபவிக்க நேர்ந்தாலும், என் கிருபை அவனுக்கு அனுபவமாகும்; நாம சங்கீர்த்தனம் செய்யும் பக்தன் ஒருக்காலும் நாசமடைவதில்லை; சத்தியம்…’ என்றார்.
எந்த விதமான கஷ்டத்தையும் கடவுள் கிருபையாகக் கருதி, இன்பமடைய முடியும் என்பதை, வில்வமங்கள சுவாமிகள் உணர்ந்து கொண்டார்.