கணிணியுடன் நேரடி தொடர்பு வாணிகம் பற்றிய கருத்தரங்கு- By Concert
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்திய நுகர்வோர் சங்கம் (Consumers Association of India), நுகர்வோர் நலனைக் கருத்தில் கொண்டு நாடு முழுதும் உள்ள தனது உறுப்பினர்கள் மூலம், குடிமக்களுக்கு, அவர்களுடைய உரிமைகள் போன்றவற்றை எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்திய அரசு மற்றும் மாநில அரசின் பல குழுக்களில் அங்கம் வசித்து வரும் இவ்வியக்கத்தின் சார்பாக இது தொடர்பாக கருத்தரங்கங்கள் நடத்தப்படுகின்றன. இவ்வாண்டில், எதிர்வரும் ஆகஸ்ட் 30ம் தேதி அன்று “கணிணியுடன் நேரடி தொடர்பு வாணிகம்” (Online Marketing) என்ற தலைப்பில் கருத்தரங்கு நடை பெற உள்ளது.
நடைபெறும் இடம்: முத்தமிழ் பேரவை, துர்காபாய் தேஷ்முக்சாலை,
சென்னை 600 028 (MGR ஜானகி அறிவியல் கல்லூரி எதிரில்)
நேரம் : காலை 9 மணி முதல் மாலை 4:45 மணி வரை
வருடத்திற்கு ரூபாய் 14 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கும் இப்பிரிவு கடந்த சில ஆண்டுகளில் அபரிதமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இது இன்னும் 2 ஆண்டுகளில் 2 to 4 % ஆக உயர வாய்ப்புகள் உள்ளன. வீட்டு உபயோகப் பொருட்கள், ஆடை, காலணிகள் ஆகியவை அதிகம் விற்பனையாகும் இந்த வாணிகம் இப்பொழுது அனைவராலும் விரும்பப்படுகிறது.
டெக்னோ பேக் என்னும் நிறுவனம் நடத்திய ஆய்வில் அடுத்த 10 ஆண்டுகளில் 100% வளர்ச்சியை இவ்வாணிகம் பெறும் என்றும், 1.8 கோடி பேர் இதன் மூலம் பொருட்களை வாங்குவார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
சில்லறை வணிகம் 93 சதவீதமகவும் வர்த்தக நிறுவனங்களின் மூலம் நடத்தப்படும் வாணிகம் 6.9% ஆகவும் இருக்கும் போது கணிணி வர்த்தகம் 0.1% மட்டுமாக உள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் இது 5% ஆக உயர வாய்ப்பு உள்ளதால்.
இவ்வாணிகத்தை முறைப்படுத்த, மத்திய அரசின் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முயற்சிகள் எடுத்துவருகிறது.
நாளுக்கு நாள் பெருகி வரும் இவ்வாணிபத்தால் நுகர்வோர் உரிமைகள் எவ்வாறு காப்பற்றப்பட வேண்டும், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் எவ்வகையில் திருத்தப்பட வேண்டும் என்ற பல விஷயங்கள் இக்கருத்தரங்கில் விவாதிக்கப்படும்.
நுகர்வோருக்கு நேரடி பயனைத் தரும் இக்கருத்தரங்கு பற்றி தங்கள் பத்திரிகையில் செய்தி வெளியிட்டு அனைவரும் அறிந்து கொள்ள வேண்டுகிறோம்.
இக்கருத்தரக்கை தொடங்கி வைக்க இந்திய அரசின் நுகர்வோர் துறை செயலாளர் அவர்களும், மாநில அரசின் வாணிக வரி துறை ஆணையார் அவர்களும் இசைத்துள்ளனார்.
இது தொடர்பான பொருட்களை விவதக்களில் பல விற்பனார்கள் கலந்து கொள்வார்கள்.
இது தொடர்பான விவரங்களுக்கு திரு.வி.ஸ்ரீனிவாசன் (9444830199) அல்லது
திருமதி. எஸ்.ஜெயதனுஷ்யா(996226690) ஆகியோருடன் தொடர்பு கொள்ளலாம்.
இங்ஙனம்
ஜி.ராஜன்
பொது செயலாளர்
—————————
Tentative Agenda for Seminar on e-Commerce
Date: Saturday, 30th August 2014 Venue: Muthamizh Peravai Hall
R. A. Puram, Chennai – 600 028
Chief Guest: Mr. Keshav Desiraju, IAS,
Secretary, DoCA, GOI
0900– 0930 am – Registration
0930 – 1015 am – Inaugural Session
0930 – 0935 am Tamizh Tai Vazhthu / Welcome address
0935 – 0945 am Need for seminar – Shri K. Rajaraman IAS,
Commissioner, Comml Taxes, Government of TN
0945 –1005 am Inaugural address – Shri Keshav Desiraju IAS,
Secretary,Department of Consumer Affairs, GOI
1005 – 1015 am Need for change in CP Act to include e-Commerce –
Shri S. Gopalakrishnan, IAS, CCS, Government of TN
1015 – 1020 am Vote of Thanks
1025 – 1115 am First Session – e- Commerce and the Consumer
1025 – 1035 am Presentation of Survey Results
1035 – 1105 am Panel discussion – Pros and Cons of e-commerce
– 4 panelists
Moderator Prof Keshav Rao, Vizag
1105 – 1115 am Q & A
1115 – 1130 am Tea Break
1130 – 1230 pm Second Session – Regulating e-Commerce
1130 – 1200 pm Issues faced by Consumers –
S. Saroja, Civic and Consumer Action Group (CAG)
1200 – 1220 pm Need for regulation of e-Commerce industry –
Mr. N. Sivasailam IAS, Secretary, Health & FW,
Government of Karnataka
1220 – 1230 pm Q & A
1230– 1330 pm Third Session – e Commerce Guidelines
Panel discussion – 4 panelists
Moderator – Mr. K. S. Natarajan, Senior Advocate
1330 – 1415 pm Lunch break
1415 – 1515 pm Fourth Session – Taxes and financials in e-Commerce
1415 – 1430 pm Concerns of the Govt. – Shri K. Rajaraman IAS,
Commissioner, Coml. Taxes – Government of TN
1430 – 1445 pm Service Tax implications in e-Commerce –
Commissioner, Service Taxes, Government of TN
1445 – 1500 pm Industry viewpoint/ Self-regulatory measures – CII Rep
1500 – 1515 pm Q & A
1515 – 1625 pm – 5th Session – Way Forward
1515 – 1530 pm Suggested Regulations for e-Commerce –
Ms. Pratima Narayan, Legal Consultant, Bangalore
1530 – 1545 pm Consumer Grievance Redressal – Mr. S. Martin,
Advocate, Tiruchirapalli and Consumer Activist
1545 – 1600 pm Third Party Certification for e-Com players? –
1600 – 1615 pm Q & A
1615 – 1630 pm Valedictory address – Mr. G. Gurucharan IAS,
Addl. Secretary, DoCA, Govt. of India
1630 – 1640 pm Summing up/ Recommendations,
(Proposed) Mr. N. L. Rajah,
1640 – 1645 pm – Vote of Thanks
1645 – National Anthem
இணையத்தை வளர்த்த வல்லுநர்கள்
நீர் மட்டுமல்ல, இணையம் இன்றியும் இந்த உலகம் வாழாது என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டு வருகிறோம். நம் வாழ்க்கையோடு இணைந்துவிட்ட இணையத்தின் இன்றைய நிலைக்குப் பலர் காரணமாக இருந்துள்ளனர். இவர்களில் சிலர், முக்கிய சில திருப்பங்களை இணைய வளர்ச்சியில் ஏற்படுத்தி பங்காற்றியுள்ளனர். அவர்களையும் அவர்களின் பங்களிப்பினையும் இங்கு காணலாம்.
1. மார்க் ஆண்ட்ரீசன் (Marc Andreesen): Mosaic என்னும் பிரவுசரை உருவாக்கியவர். முதல் நிலையில், இணையத்தினை மக்களிடம் பரவலாகக் கொண்டு சென்றதில், இந்த பிரவுசருக்கு இடம் உண்டு. பின்னால், நெட்ஸ்கேப் நேவிகேட்டர் என்ற இணைய பிரவுசரை உருவாக்குவதில் இவர் அதிகம் துணை புரிந்தார். 1990 ஆம் ஆண்டுவாக்கில், இணையப் பயன்பாடு தொடர்ந்து உயர்ந்த போது, இந்த பிரவுசரின் இடமும் முதல் இடத்தில் இருந்தது.
2. விண்ட் செர்ப் (Vint Cerf): இணையத்தை உருவாக்கிய தந்தை என, Bob Kahnஎன்பவரோடு சேர்த்து அழைக்கப்படுபவர் விண்ட் செர்ப். TCP/IP தொழில் நுட்பம் வளர்ச்சி அடைய இவருடைய பணி அதிகம் உதவியது. இவர் அமைத்த MCI mail சிஸ்டம் தான் இன்றைய மின் அஞ்சல்களுக்கு முன்னோடியாய் அமைந்தது. இணைய பெயர்களை வரையறை செய்திடும் ICANN எனச் சுருக்கமாக அழைக்கப்படும் Internet Corporation for Assigned Names and Numbers என்னும் அமைப்பினை உருவாக்கிய முன்னோடி இவர்.
இந்திய அதிகாரிகள் வசம் கறுப்பு பணம் பதுக்கிய 100 பேர் பட்டியல்
புதுடில்லி: சுவிட்சர்லாந்தின் ரகசிய காப்பு விதிமுறைகளை மீறி, அந்நாட்டு வங்கியில் கறுப்பு பணம் பதுக்கி வைத்துள்ள 100 பேரின் பட்டியலை,இந்திய அதிகாரிகள் பெற்றுள்ளனர். அவர்கள், தாங்களாகவே தங்களது வைப்புத்தொகை விபரங்களை தாக்கல் செய்யவும் அதிகாரிகள் அறிவுருத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அவர்கள் ரூ. 50-80 கோடி வரை வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.
மதுபான புரட்சி!
‘பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் உடல்நலனுக்கும் அவர்களின் சமூக பொருளாதார நல்வாழ்வுக்கும் ஊறுவிளைவிக்கும் கள்ளச்சாராய பிடியில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதே அரசின் முக்கியக் கொள்கையாகும். கள்ள மதுபானம் அருந்தி மோசமாக பாதிக்கப்படும் மக்களின் சமூக பொருளாதார நலனை(!) மேம்படுத்தும் உறுதியான நோக்கத்தை செயல்படுத்துவதற்காக சீரிய கொள்கையை (டாஸ்மாக்) செயல்படுத்தி வருகிறது. இதனால் சமூக விரோதிகளிடம் சட்டவிரோதமாகப் பணம் சேருவதை கட்டுப்படுத்துவதிலும் அரசு கருவூலத்துக்கு வருவாய் சென்றடைவதையும் உறுதி செய்கிறது” – மதுவை விற்பதற்காக இப்படியொரு கேலிக்கூத்தை எந்த அரசாவது சொல்லத் துணியுமா? சட்டமன்றத்திலேயே இதைப் பதிவுசெய்யும் அளவுக்கு துணிச்சல் படைத்த அரசாக விளங்குகிறது ஜெயலலிதா அரசு.
மிஸ்டர் கழுகு: அழகிரி உள்ளே!
‘மீண்டும் கண்கள் பனிக்கக் காத்திருக்கிறது” என்று சொல்லியபடியே வந்தார் கழுகார்!
”அண்ணன் – தம்பி மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகிறார் கருணாநிதி. அதற்கான ஏற்பாடுகள் நாலாபக்கமும் நடந்து வருகின்றன. இதற்கான முஸ்தீபுகளை அதிகமாக எடுத்தது கருணாநிதியின் மூத்த மகள் செல்விதான் என்று சொல்கிறார்கள். ‘நம் குடும்பத்துக்குள்ளே மோதலைத் தொடர்ந்தால், அதனால் லாபம் அடையப்போவது நம்முடைய எதிரிகள்தான். அண்ணன் – தம்பி மோதலை கட்சிக்குள்ளேயே சிலரும் ரசிக்கிறார்கள். இவர்கள் இருவரும் ஒன்றுசேர்ந்தால், தங்கள் அரசியல் வாழ்க்கை முடிந்துபோகும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதனால்தான் இரண்டு பக்கமும் உட்கார்ந்து இந்த வேலைகளைப் பார்க்கிறார்கள்’ என்று அவர் சொல்லி வந்துள்ளார். தன் ஆசைகளை அவர் அனைவரிடமும் சொல்லி வந்தார். ஆரம்பத்தில் கருணாநிதி இதுபற்றி எதையும் பேச விரும்பவில்லை. ‘நேரடியாக என்னிடம் மோதுவது மாதிரி வந்து, தம்பியைப் பற்றியே தகாத வார்த்தைகள் என்னிடமே சொன்னவரை எப்படி மன்னிக்க முடியும்?’ என்று கருணாநிதி சொல்லி வந்தார். கருணாநிதி, ஸ்டாலினைத் தவிர மற்றவர்கள் கருத்து அழகிரிக்கு ஆதரவாக இருந்தது!”