Daily Archives: ஓகஸ்ட் 26th, 2014

ஃப்ரியா படுத்தா சந்தோசம் அதிகமாகுமாம்!

லண்டன்: படுக்கை அறையில் ஆடையின்றி உறங்கினால் தம்பதியரிடையே மகிழ்ச்சி அதிகமாகும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த 1004 தம்பதிகளிடம் அமெரிக்காவின் காட்டன் அமெரிக்கா என்ற அமைப்பு இது தொடர்பான வித்தியாசமான கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. தம்பதிகள் இரவில் படுக்கையில் தூங்கும்போது எவ்வாறு தூங்குகிறார்கள் என்றும், அவர்களுக்குள் இருக்கும் உறவின் தன்மை அதனால் எப்படி

Continue reading →

இணையத்தில் சந்திக்கும் தவறான பாதைகள்

]கோடிக்கணக்கில் தேவையற்ற மின் அஞ்சல்களும், பல ஆயிரம் எண்ணிக்கையில் கெடுதல் விளைவிக்கும் இணைய தளங்களும், எண்ணிப் பார்க்க இயலாத வகையில், ஹேக்கர் தாக்குதல்களும் இடம் பெற்றிருக்கும் இணைய வெளியில், பாதுகாப்பாக ஒருவர் தனக்கான தகவல்களைத் தேடுவது என்பது அதிகத் திறன் வேண்டும் ஒரு செயல்பாடாகத்தான் இருக்கும், இருக்கிறது. இருப்பினும், பல வேளைகளில் நாம் தெரிந்தே சில ஆபத்து வளையங்களில் சிக்கிக் கொள்கிறோம். அது போன்றவற்றைச் சரியாக உணர்ந்தால், இந்த ஆபத்துக்களிலிருந்து தப்பிக்கலாம். அவற்றை இங்கு பார்ப்போம்.
1. விளம்பரங்கள்: இணையத்தில் மிக எளிதாக நாம் மேற்கொள்ளக் கூடிய செயல், அதன் தளங்களில் உலா வருவதுதான். ஆனால், அது நாம் எண்ணுகிறபடி, அவ்வளவு எளிதான ஒன்று அல்ல. அதில் நம் கண்ணுக்குத் தெரியாத வகையில் புதைக்கப்பட்டிருக்கும் வெடி குண்டுகள் ஏராளம். நம்மை இழுத்து அழுத்தும் புதைகுழிகளும் கணக்கிலடங்காதவை. இணையத்திற்கு புதியதாய் வரும் பலர், இவற்றில் தங்களை அறியாமலேயே, தாங்கள் விரும்பா மலேயே விழுந்து இழப்பினைச் சந்திக்கின்றனர்.

Continue reading →

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்! காலக் கணிதத்தின் சூத்திரம்

ர்க்கடக ராசி லக்னமாகவோ, சந்திரன் இருக்கும் ராசியாகவோ அமைந்து, புதனின் த்ரிம்சாம்சகத்தில் பிறந்தவள், சிற்பக் கலையில் தேர்ச்சி பெற்றவளாக இருப்பாள். ஓவியங்களின் வாயிலாக தனது சிந்தனையை வடிவமைப்பவளாக இருப்பாள். எண்ணத்தில் இருக்கும் தத்துவ விளக்கத்தை, ஓவியத்தின் மூலம் வெளிப்படுத்துவதில் திறமை அதிகமாகக் காணப்படும் என்கிறார் வராஹமிஹிரர் (சில்பினீ).

பக்தி, பணிவு, உற்றார், உறவினர், புத்தி, யுக்தி, கணிதம், வேதாந்தம், அறிவு, வார்த்தைகள், தேவதைகளை உபாசனை செய்வதில் ஆர்வம், உண்மை உரைத்தல், சிற்பக்கலை, இளவரசர், நண்பர்கள், மருமகன் (அக்கா-தங்கைகளின் புதல்வன்) படித்தவர்களின் பாராட்டு, விஷ்ணுபரமான செயல்பாடுகள், கதை, கட்டுரை, விமர்சனம், எடுத்துக்காட்டு, கட்டுரையின் தர நிர்ணயம், நகைச்சுவை, மருத்துவம், அமைதி ஆகிய விஷயங்களை புதனை வைத்து இறுதி செய்வார்கள். இவற்றில் சிற்பக்கலையில்… புதன் த்ரிம்சாம்சகத்தில் பிறந்தவள் தனித்திறமை பெற்றிருப்பாள் என்பதை விளக்குகிறது ‘சில்பினீ’ என்ற செய்யுள்.

Continue reading →

செல்வமும் கீர்த்தியும் யாருக்கு? கிரகங்களின் சேர்க்கை…

‘பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது’ என்பார்கள். நவகிரகங்களில் புத பகவானின் அனுக்கிரகம் வாய்ப்பதும் அப்படித்தான்! ஒருவர் சீரும்சிறப்புமாக வாழவும், வித்யைகளில் சிறந்து விளங்கவும் புத பகவானின் திருவருள் தேவை. அவரு டைய அருள் பரிபூரணமாகக் கிடைப்பது எப்போது? எந்தெந்த கிரகங்களுடன் சேர்ந்திருக்கும்போது புதன் என்னென்ன பலன்களைத் தருவார்? தெரிந்துகொள்வோமா!

புதன் – சூரியன்: தெய்விக அருளைப் பெற்றிருப்பார்கள். தனவந்தனாக இருப்பதுடன் புத்தியால் பெயரும் புகழும் பெற்றிருப்பர். அற்பமான எண்ணங்களும் மற்றவர்களைப் பற்றிப் புறம்பேசும் குணமும் கொண்டவர்களாக இருப்பர். புராணங்கள், இதிகாசங்கள்,

Continue reading →

லைக் செய்தாலே குண்டாஸ்!

மிழக அரசு குண்டர் சட்டத்தில் கொண்டுவந்திருக்கும் மாற்றம், அதிர்ச்சி அலைகளைக் கிளப்பியிருக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், ஒரே நாளில் மொத்தம் 19 சட்ட மசோதாக்கள் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டன. அதில் ஒன்று… குண்டர் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றம். இதன்படி, கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பவர்கள், போலிமருந்துக் குற்றவாளிகள், வனக் குற்றவாளிகள், பாலியல் குற்றவாளிகள், மணல் கடத்துபவர்கள், இணையதளக் குற்றவாளிகள் போன்றவர்களை… அவர்கள் முதல்முறை குற்றம் செய்யும்போதே, குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய வழி செய்கிறது இந்தப் புதிய மசோதா. இதில் பாலியல் மற்றும் இணையதளக் குற்றங்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

Continue reading →

சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகளைப் போக்க உதவும் சில இயற்கை வழிகள்!!!

sarumathil tangiyulla azhukkukalaib bokka uthavum sila

அழுக்குகளானது சருமத்தில் சேர்ந்து கொண்டே தான் இருக்கும். அதிலும் சுருக்கங்கள் விழும் பகுதியில் தான் அழுக்குகள் அதிகம் சேரும். அதில் குறிப்பாக கழுத்து, மூட்டுகள், அக்குள் மற்றும் பல கண்ணுக்கு தெரியாத பகுதிகளில் அதிகம் சேரும். அழுக்குகள் சரியாக போகாமல் இருந்தால், அவ்விடங்கள் கருமையாக மாற ஆரம்பிக்கும். இப்படி இந்த இடங்களில் சேரும் அழுக்குகள் குளித்தால் போகாது. மாறாக வாரம் ஒரு முறை ஸ்கரப்பிங், கிளின்சிங் போன்ற முறையை தவறாமல் செய்து வந்தால், அழுக்குகளை போக்கலாம். அதற்கு கடைகளில் பல பொருட்கள் விற்கப்படுகின்றன. இருப்பினும் அப்படி பணத்தை செலவழித்து அவற்றை பயன்படுத்தி, அதனால் சில சமயங்களில் சருமத்தில் பிரச்சனைகளை சந்திப்பதை விட, இயற்கை முறை என்னவென்று தெரிந்து கொண்டு,

Continue reading →

‘கைதி கிச்சன்’

வாடிக்கையாளர்களை வெரைட்டியான உணவுகள் மூலம் மட்டுமல்லாமல், வித்தியாசமான உள் கட்டமைப்புகள் மூலமும் கவர்ந்து வருகின்றன, பல ரெஸ்டாரன்ட்டுகள். பிரமிக்க வைக்கும் கட்டமைப்புகள் கொண்ட அந்த தீம் ரெஸ்டாரன்ட்டுகள், சென்னை போன்ற பெருநகரங்களில் தற்போது பெருகிவருகின்றன. அவற்றில் ஒன்றுதான் சென்னை, மயிலாப்பூரில் உள்ள ‘கைதி கிச்சன்’.

முழுக்க முழுக்க சிறை போன்ற அமைப்பில் உள்ள இந்த ரெஸ்டாரன்ட்டின் வாசல், வேலூர் ஜெயில் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. உணவகத்தில், செல்லுக்குள் அமர்ந்துதான் உண்ண வேண்டும். போலீஸ் உடை அணிந்தவர்தான் ஆர்டர் எடுப்பார். உணவு பரிமாறுபவர், கைதி உடையில் இருப்பார். ஆங்காங்கே கைவிலங்குகள், துப்பாக்கிகள் என்று அசத்தியுள்ளனர்.

Continue reading →

கூகுள் தேடல்கள் – சில வரையறைகள்

கூகுள் தேடல் சாதனம் மூலம் தேடுகையில், நீங்கள் தேடும் நோக்கத்திற்கு ஒவ்வாத பல தகவல்கள் பட்டியலிடப் படுகின்றனவா? எப்படிப் பார்த்தாலும் தேடி அறிய விரும்பும் தகவல்கள் கிடைக்கவில்லையா? தேடலுடன் சில ஆப்பரேட்டர்களை இணைத்து தேடலுக்குச் சில வரையறைகளைத் தர கூகுள் இடம் அளிக்கிறது. அந்த வரையறைத் தேடல்களை எப்படி அமைப்பது என இங்கு பார்க்கலாம். கீழே தரப்பட்டிருப்பவற்றை நீங்கள் மனப்பாடம் செய்து இயக்க வேண்டிய அவசியமில்லை. தேடல் வரையறைகள் நினைவிற்கு வர இயலாத சூழ்நிலையில் http://support.google.com/websearch/bin/answer.py?answer=35890 என்ற தளம் சென்று இவற்றை அறிந்து கொள்ளலாம்.
1. குறிப்பிட்ட சொல் மட்டும்: நாம் சொற்கள் அடங்கிய சில சொல் தொகுதிகளைத் தருகையில், அடிப்படைத் தேடலில் அவை எந்த வரிசையில் இருந்தாலும், அந்த டெக்ஸ்ட் உள்ள தளம் காட்டப்படும். அப்படி இல்லாமல், குறிப்பிட்ட வரிசையில் சொற்கள் அமைக்கப்பட்டால் மட்டுமே தேவை எனில் என்ன செய்திட வேண்டும்? எடுத்துக்காட்டாக, "nor custom stale her infinite variety” என்ற வரிசையில் உள்ள ஷேக்ஸ்பியர் வரியினைக் கொண்டுள்ள டெக்ஸ்ட் உள்ள பக்கம் மட்டுமே வேண்டும் எனில், இந்த சொற்களை மேற்கோள் குறிகளுக்குள் தர வேண்டும். அப்படிக் கொடுக்கையில், இந்த வரிசையில் உள்ள சொற்றொடர்கள் உள்ள பக்கங்கள் மட்டுமே பட்டியலிடப்படும்.

Continue reading →

கம்ப்யூட்டர் பைல்களின் பின் ஒட்டுப் பெயர்

]

கம்ப்யூட்டர்களில் நாம் பயன்படுத்தும் பைல்களின் பெயர்கள் இரு பிரிவுகளாக அமைக்கப்படுகின்றன. முதல் பகுதி பைலுக்கான விளக்கம் தரும் வகையில் பெயரைக் கொண்டு இருக்கும். அடுத்த பகுதி பைல் எக்ஸ்டன்ஷன் பெயராக இருக்கும். எந்த சாப்ட்வேர் கொண்டு பைல் உருவாக்கப்பட்டது என்பதனை அது சுட்டிக் காட்டும். இரண்டு பிரிவுகளை முற்றுப் புள்ளி ஒன்று பிரித்து அமைக்கும். எடுத்துக்காட்டாக, July report.doc என்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வேர்ட் புரோகிராம் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பைல் ஆகும். .doc என்னும் துணைப் பெயரைக் கொண்டு இதனை நாம் அறிந்து கொள்கிறோம். இதே போல Umbrella.mp3 என்பது ஒரு மியூசிக் பைல். இதன் துணைப் பெயர் மூலம் இதனை மியூசிக் இயக்கும் எந்த புரோகிராமும் திறந்து இயக்கும் என்பதனை நாம் உணர்ந்து கொள்கிறோம்.
விண்டோஸ் சிஸ்டமானது, மாறா நிலையில், பைல்களை நிர்வகிப்பதை எளிமையாக்க, பைல் பெயரின் பின் பகுதியைக் காட்டுவதில்லை. இதில் இன்னும் ஒரு சிக்கல் உள்ளது. முற்றுப் புள்ளி பைலின் பெயரையும், வகையையும் பிரித்தாலும், பேரில் எத்தனை புள்ளிகளையும் வைத்துக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக July report.doc என்பதை July.report.doc என்றும் அமைத்துக் கொள்ளலாம். இதனை விண்டோஸ் காட்டும் போது July.report என்று மட்டுமே காட்டும்.
பைல் எக்ஸ்டன்ஷன்களை மாற்ற முடியாது. எடுத்துக்காட்டாக, July.report என்பதை July.report.doc என மாற்றினால், அது July.report. doc.doc என்றே இருக்கும். இனி, இவற்றின் பைல் எக்ஸ்டன்ஷன்கள் காட்டப்பட வேண்டும் என்றால் என்ன செய்திட வேண்டும் எனப் பார்க்கலாம். இங்கு விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஆகிய சிஸ்டங்களில் பார்க்கலாம். இவை காட்டப்பட வேண்டும் என்றால், நாம் அதற்கேற்ற வகையில் சில அமைப்புவழிகளை மாற்ற வேண்டும்.
முதலில் விண்டோஸ் 7 சிஸ்டத்தில் எப்படி அமைப்பது என்பதைக் காணலாம்.
1. முதலில் Windows Explorer ஐத் திறந்து கொள்ள வேண்டும். பின், இடது மேல்புறமாக Organize என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். அடுத்து மெனுவில் Folder and search என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
2. இங்கு திறக்கப்படும் விண்டோவில், View என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். பின் கீழாகச் சென்று, ‘Hide file extensions for known file types’ என்று இருப்பதன் முன்னால் உள்ள சிறிய பெட்டியில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.
அடுத்து விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இந்த மாற்றத்தைக் கொண்டு வரும் வழிகள்:
1. முதலில் Windows Explorer (இங்கு இதன் பெயர் File Explorer) ஐத் திறந்து கொள்ள வேண்டும். இங்கு View டேப் மீது கிளிக் செய்திடவும்.
2. அடுத்து, File name extensions என்று இருப்பதில் டிக் செய்திடவும். டிக் செய்யப்பட்டால், பைல் எக்ஸ்டன்ஷன்கள் காட்டப்படும். இது விண்டோஸ் 7 மற்றும் விஸ்டாவில் இருப்பதற்கு நேர் மாறானது என்பதனை அறியலாம்.