"உறவு"க்குள் உட்புகும் முன் இதை ஒரு கை பாருங்களேன்….!
அன்றாடம் உறவில் ஈடுபடுவது எவ்வளவு நல்லது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், தினமும் காலையில் ஜாக்கிங் செல்வதை விட, உறவில் ஈடுபடுவதால், இதயம் ஆரோக்கியமாகவும், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் செய்யும். ஆனால் தினமும் ஈடுபடுவதால், உடலில் எனர்ஜியானது குறைந்துவிடும். ஆகவே
இம்சிக்கும் இடப்பற்றாக்குறை… குறைந்த செலவில் எளிய தீர்வு!
பெரிய நகரங்களில் ஃப்ளாட்களில் வசிப்பவர்கள் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்னை இடப்பற்றாக்குறை. சிங்கிள் பெட்ரூம் அல்லது டபுள் பெட்ரூம் ஃப்ளாட்களில் ஐந்து, ஆறு பேர்கள் பகிர்ந்துகொள்ள வேண்டிய கட்டாயம். தற்போது ஃப்ளாட்கள் விற்கும் விலையில் கூடுதல் இடவசதி பெறும் நிலை பலருக்கும் இல்லை என்கிறபோது இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு என்று தெரியாமல் தவிப்பவர்கள் பலர். ‘‘கவலையை விடுங்க. இருக்கிற இடத்தை இன்னும் புத்திசாலித்தனமாக பயன்படுத்தினால் தீர்ந்தது பிரச்னை’’ என்கிறார் எஸ்.ராம். இவரது ஸ்பெஷாலிட்டியே இடப்பற்றாக் குறையைத் தீர்க்க குறைந்த செலவில் என்னென்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பதைச் சொல்வதுதான். அவரைச் சந்திக்க அவர் வீட்டுக்குப் போனோம்.
சரியான பாத்திரத்தில் தான் சமைக்கிறீர்களா?
தினமும் சாப்பிடும் உணவு, சரிவிகிதத்தில் இருக்கிறதா, சத்தானதா என்று யோசிக்கும் நாம், அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள் சரியானவைதானா என்று யோசிப்பது இல்லை. அவசரகதியில் இதற்கெல்லாம் ஏது நேரம் என்று, சமைக்கவும் சாப்பிடவும் தொடங்குகிறோம். சமையலறையில் குக்கரில் தொடங்கி, கடாய், தவா, பால் பாத்திரம் எனச் நான் ஸ்டிக் பொருட்கள் நிறைந்துகிடக்கின்றன. மண் பானை, இரும்பு, ஈயச்செம்பு, பித்தளை சாமான்களை இனி அருங்காட்சியகத்தில்தான் பார்க்க முடியும் என்ற நிலை.
”கொடநாடு எஸ்டேட்டுக்கும் ஜெயலலிதாவுக்கும் சம்பந்தம் இல்லை!” சசிகலா வழக்கறிஞரின் திடீர் தகவல்!
பெங்களூரில் நடந்து வரும் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு கிட்டத்தட்ட க்ளைமாக்ஸை நெருங்கியிருக்கிறது. ஒன்பது நாட்களில் 27 மணி நேரம் இறுதி வாதத்தை எடுத்துவைத்து முடித்திருக்கிறார் சசிகலாவின் வழக்கறிஞர் மணிசங்கர். இறுதி வாதம் நடந்த ஒன்பது நாட்களுமே தினமும் வழக்கறிஞர் மணிசங்கரைத் தொடர்புகொண்டு அன்றைய நிலவரம் பற்றி பேசியிருக்கிறார் சசிகலா. ‘உங்க மேல எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு. நிச்சயம் நாம் ஜெயிப்போம்!’ என்று வழக்கறிஞரிடம் சொல்லி சசிகலா சந்தோஷப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.
இனி மணிசங்கர் வாதத்தில் இருந்து….
மன்னார்குடியில் மருந்துக் கடை!
மனிதன் மாறி விட்டான்!
கண்களும் கவிபாடுமே!
மின்னுகிற கண்கள் கண்ணீரால் நிரம்பிய உணர்ச்சியின் வெளிப்பாடு. அழுகை என்பது சக்தி வாய்ந்த சமூக சமிக்ஞை. நாம் அழுவதை தண்ணீரில் இருந்து உற்பத்தியான பாரம்பர்யத்திலிருந்து கையகப்படுத்தியாகச் சொல்கிறார்கள். சீல் என்கிற கடல்வாழ் இனம் பதற்றமானால் கண்ணீரைச் சிந்தும். அதில் இருந்து வந்த பரம்பரை பழக்கம் இது. சீறுநீரைப்போல கண்ணீரிலும் பல தேவையற்ற பொருட்கள் வெளியேற்றப்படுகின்றது. எனவே மனம் கனமாகிறபோது நாம் அழுதால் தேவையற்ற வேதியல் பொருட்கள் வெளியாகி நாம் சகஜமான நிலைக்கு வந்தததைப் போன்ற நிலை ஏற்படுகிறது. அதனால்தான் துக்கம் இருக்கிறபோது அழுதபின் பலர் நிம்மதியடைகிறார்கள். அடுத்தவர்களை அழவைத்து பிறகு நிம்மதியடைகிறவர்கள் பற்றி நாம் இங்கு பேசவில்லை.
வேட்டையாடும் மிருகங்களுக்கு இருந்த பைனாகுலர் பார்வை மனிதனுக்கு பரிணாம வளர்ச்சியில் ஏற்பட்டது. வேட்டையாடுவதை நிறுத்தி நாகரிக வளர்ச்சி பெற்ற பிறகும் நம் விழிகள் அந்தப் பார்வையை தக்கவைத்துக் கொண்டன. அதனால், இன்னும் குரங்குகளைப்போல நமக்கு கண்களே புலன்களின் உச்சம். நம் உடலில் உணர்ச்சி செல்கள் 70 சதவிகிதம் கண்களிலேயே முகாமிட்டு இருக்கின்றன.
இருட்டு நமக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஆதிகாலத்தில் இருட்டில் வனவிலங்குகள் தாக்குமோ என்றிருந்த அச்சம் இன்னும் ஆழ்மனத்தில் தொடர்வதே இதற்குக் காரணம்.