மழை நேரம் கதகத டிப்ஸ்!
வெயிலோடு விளையாடி மழையோடு உறவாடி மகிழ்ந்ததெல்லாம் சென்ற தலைமுறையோடு நின்று விட்டது. மழைக்காலத்தில், சிறப்பு மருத்துவமனை அமைக்கும் அளவுக்கு இன்று சளி, இருமல், காய்ச்சல் என பருவத்துக்கான நோய்களின் பாதிப்புகள் அதிகரக்கின்றன.
எபோலா எமன்! தப்புவது எப்படி?
இப்போது உலகை அதிரவைக்கும் ஒரு சொல் ‘எபோலா’. பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் என்று விதவிதமான வியாதிகள், விஞ்ஞான முன்னேற்றத்துக்குச் சவால்விட்டு, அவ்வப்போது மனிதனை மரணபீதிக்குள் உறையவைக்கும். அந்த வரிசையில் வந்திருக்கும் மற்றொரு அபாயத்தின் பெயர் ‘எபோலா’.
1976ல் ஆப்பிரிக்க நாடுகளில் கடும் உயிரிழப்பை ஏற்படுத்திய இந்த வைரஸ் கிருமி, இப்போது மீண்டும் ஆப்பிரிக்க நாடுகளில் பரவ ஆரம்பித்துள்ளது. அச்சத்தில் ஆழ்ந்துபோயிருக்கிறது ஆப்பிரிக்கா.
இந்தியாவுக்கு இப்போதைக்கு எந்த ஆபத்தும் இல்லை. ‘எபோலா வைரஸ் தாக்குதலில் இருந்து நாம் வெகுதொலைவில் இருக்கிறோம்’ என்கிறார் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன். ஆனாலும், ஆப்பிரிக்க நாடுகளில் வசிக்கும் ஏராளமான இந்தியர்கள் மூலம் இந்த வைரஸ்
இன்று முதல் அனைவருக்கும் வங்கிக் கணக்கு- பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

மிஸ்டர் கழுகு: அழகிரியின் 5 டிமாண்ட்!
”கத்தி திரைப்படம் ரிலீஸ் ஆகுமா என்ற சந்தேகம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது!” – என்றபடி கழுகார் உள்ளே வந்தார்.
”சர்ச்சைக்குரிய லைக்கா நிறுவனம் தனது பெயரை வாபஸ் வாங்கிக்கொண்டு, வேறொரு பேனரில் படத்தை ரிலீஸ் செய்யத் தயாராகி வருவதாக செய்திகள் வருகிறதே?” என்றோம்.
”நான் இப்போது சொல்லப்போவது இன்னொரு பிரச்னை!
சிக்கல்–65 -ஜிலீரிட வைக்கும் சிக்கன் ரிப்போர்ட்!
சிக்கன் பிரியாணி, சிக்கன்-65, சிக்கன் குழம்பு என வாரா வாரம் சிக்கன் சுவைக்கும் குடும்பமா நீங்கள்?! உங்களுக்குத்தான் இந்த அதிர்ச்சித் தகவல்கள்!
சமீபத்தில் ‘சென்டர் ஃபார் சயின்ஸ் அண்ட் என்விரான்மென்ட்’ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பிராய்லர் கோழிகள் வளர்ப்பில் டெட்ராசைக்ளின், ஃப்ளோரோகைனோலோன், அமினோக்ளைக்கோசைட் உள்ளிட்ட அதிகப்படியான ஆன்டிபயாடிக் அந்தக் கோழிகளுக்குச் செலுத்தப்படுகிறது. இத்தகைய கோழிகளை உணவாக எடுத்துக்கொள்பவர்களுக்கும் அதிகப்படியான ஆன்டிபயாடிக் உடம்பில் தங்குகிறது. இது, பல்வேறு சிகிச்சைகளுக்காக நாம் எடுத்துக்கொள்ளும் ஆன்டிபயாடிக் மருந்துகளை வேலை செய்யவிடாமல் தடுத்துவிடுகிறது’ எனும் அந்த அறிக்கை, ‘கோழிகளை சமைப்பதால் அதன் உடம்பில் உள்ள ஆன்டிபயாடிக் அழிந்துவிடாது’ என்றும் அதிர்ச்சி கிளப்புகிறது.
வேர்ட் டிப்ஸ்-சரியான அளவில் டேபிள் செல்கள்:
சரியான அளவில் டேபிள் செல்கள்: வேர்டில் ஓர் அட்டவணையை அமைக்கும் போது எத்தனை வரிசை எத்தனை கட்டங்கள் என்று கம்ப்யூட்டர் கேட்கிறது. நாமும் நாம் அமைக்க இருக்கும் அட்டவணையில் தேவையான கட்டங்கள் மற்றும் வரிசைகளின் எண்ணிக்கையை குறிப்பிட்டவுடன் அட்டவணை குறிப்பிட்ட அளவில் அமைகிறது. பின் அட்டவணையில் உள்ள கட்டங்களை சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ மாற்றி அமைத்திட ரூலரில் சென்று மவுஸ் இடது பக்கம் அழுத்தி இழுத்து மாற்றி
போதும் அம்மா நாமம்! முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்
அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா மருந்தகம், அம்மா உப்பு, அம்மா அமுதம் அங்காடி, அம்மா விதைகள், அம்மா பேபி கேர் கிட்…. என எல்லா இடத்திலும் அம்மா.
அம்மா குழந்தை நலப் பரிசு பெட்டகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள, ‘அம்மா பேபி கேர் கிட்’ திட்டப்படி அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைக்கு 16 பொருட்கள் தரப்படுகின்றன. புதுத் துண்டு, குழந்தை உடை, குழந்தைப் படுக்கை, பராமரிப்பு வலை, நாப்கின், எண்ணெய் டப்பா, ஷாம்பு, சோப்பு, சோப்புப்பெட்டி, நகவெட்டி, கிலுகிலுப்பை, பொம்மை, கை கழுவும் திரவம், கை கழுவும் சோப்பு, தாய்க்கு சுண்டிலேகியம்… இவ்வளவையும் வைத்துக்கொள்ள ஒரு பெட்டி ஆகியவற்றைக்கொண்டதாக அது இருக்கப் போகிறது. சாமான்ய மக்களுக்கு இவை கைக்குக் கிட்டாத அதிசயப் பொருட்கள். சிலருக்கு இதில் ஏதாவது ஒன்றிரண்டு பொருட்களை வாங்கும் சக்தி இருக்கலாம். மொத்தமாக அனைத்தும் வாங்க இயலாது. இவ்வளவையும் மொத்தமாக வாரிக்கொடுப்பது வரவேற்கவேண்டியதே.
ஆனால், எல்லோரும் தன்னைப் போற்றும்விதமாக அல்லது மரியாதை நிமித்தமாக அழைக்கும் ‘அம்மா’ என்ற பதத்தையே, தாம் உருவாக்கும் திட்டங்களுக்குப் பெயராகச் சூட்ட வேண்டுமா?
நலம் 360’ – 11
எபோலா… உலகை உலுக்கிக்கொண்டிருக்கும் புதிய தொற்றுநோய். மரணித்த காட்டு வெளவால்களிடம் இருந்தும், சிம்பன்சி யிடம் இருந்தும் மனிதனுக்குள் எபோலா நுழைந்ததாகக் கருதப்படுகிறது. பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் எனக் கடந்த சில வருடங்களில் கொத்துக்கொத்தாக மரணங்களைத் தந்துவிட்டுப்போன, தொற்றுநோய்களைப்போல இந்த வைரஸால் வரும் நோயும் அதிக மரணங்களைத் தரும் என, உலக சுகாதார நிறுவனம் கடுமையாக எச்சரிக்கிறது.
ஜிமெயில் இணைப்புகளிலும் தேடலாம்
நீங்கள் ஜிமெயில் பயன்படுத்துபவரா? பயன்படுத்தாதவர் வெகு சிலரே இருக்க முடியும். பல்வேறு வசதிகளைத் தரும் கூகுளின் வெப் மெயில் தளமான ஜிமெ யில், இப்போது புதியதாக இன்னொரு வசதியையும் தருகிறது. இதுவரை நமக்கு வந்த இமெயில் செய்திகளைத் தேடல் மூலம் பெற்று, நாம் தேடும் மின்னஞ்சல் செய்திகளைப் பெற முடியும். ஏதேனும் இணைப்பினை மீண்டும் பெற வேண்டும் எனில், அனுப்பியவரின் பெயர் அல்லது அஞ்சல் செய்தியின் சொற்கள் வழி தேடிப் பெற்று வந்தோம்.
விப்ரதனும், விநாயகரும்!
‘செய்த பாவமெல்லாம் பரிபூரணம் உணர்ந்த ஞானி விழிபட ஓடுமே…’ – என்பது பெரியோர் வாக்கு. இதன் அர்த்தம், அறிந்தும், அறியாமலும் நாம் செய்த பாவங்கள், ஆத்ம ஞானம் பெற்ற ஞானியின் பார்வைபட்டால் நீங்கி விடும் என்பதாகும். நந்துரம் எனும் நகரத்தை ஒட்டி இருந்த காட்டில், கொடும் கொலை பாதகச் செயல்களைச் செய்து வந்த விப்ரதன் என்ற வேடன் வாழ்ந்து வந்தான்; காட்டு விலங்குகள் கூட அவனைக் கண்டால் பயந்து ஓடி ஒளிந்து கொள்ளும். அந்தப் பக்கமாக யார் வந்தாலும், அவர்களைக் கொன்று, உடைமைகளைக் கவர்வதே அவனது தொழில்.
ஒருநாள், அந்த காட்டு வழியாக முற்கல முனிவர் என்பவர், தன்னை மறந்த நிலையில், விநாயகப் பெருமானைத் துதித்து பாடியபடி வந்தார். அவர் குரலைக் கேட்டதும், விப்ரதன் அவரைக் கொல்வதற்காக, கத்தியுடன் அவர் எதிரில் போய் நின்றான். முற்கல முனிவர் பயந்து நடுங்காமல், அன்போடு அவனைப் பார்த்தார்.
‘யாராக இருந்தாலும் என்னைப் பார்த்தவுடன் தலை தெறிக்க ஓடுவர்; ஆனால், இவர் அமைதி யாக நிற்கிறாரே…’என்று நினைத்து, ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்தான் விப்ரதன். அப்போது அவன் கையில் இருந்த கத்தி, அவனையறியாமலேயே கீழே விழுந்ததுடன் அவன் மனதில் இருந்த குரூரம் குறைந்து, கனிவு வந்தது.
தன் மனமாற்றத்தை எண்ணி ஆச்சரியம் அடைந்த விப்ரதன், அவரின் திருவடிகளில் விழுந்து, ‘என் குரூரத்தை அழித்த கருணா மூர்த்தியே… உங்களைப் பார்த்ததும் என் பாவமெல்லாம் நீங்கியது; மனம் அமைதி அடைந்தது. எனக்கு வழி காட்டுங்கள் குருவே…’ என, கண்ணீர் மல்க வேண்டினான்.
விப்ரதனை நீராடி வரச்சொல்லிய முற்கல முனிவர், அவன் தலையில் தன் கரத்தை வைத்து, ‘ஓம் கணேசாய நமஹ…’ எனும் மந்திரத்தை அவன் செவியில் ஓதினார்.
அதன் பின், பட்டுப்போன ஒரு கொம்பை தரையில் நட்டு, ‘நான் சொன்ன மந்திரத்தை சொல்லி, தினமும் இந்தக் கொம்பிற்கு தண்ணீர் ஊற்றி வா; இது தழைக்கும் காலத்தில், உனக்கு மந்திர சித்திகள் கைகூடும்…’ என்று சொல்லிச் சென்றார். அவர் சொன்னபடியே செய்து வந்தான் விப்ரதன். கட்டையும் துளிர்க்க துவங்கியது; அதன் அருகிலேயே அமர்ந்து தவம் செய்யத் துவங்கினான் விப்ரதன்.
ஆண்டுகள் பல உருண்டோடியது. ஒரு நாள் அந்தக் காட்டிற்கு வந்த முற்கல முனிவர், ஆழ்ந்த தவத்தில் அமர்ந்திருந்த விப்ரதனைப் பார்த்தார். ‘முற்றும் துறந்த முனிவர்கள் கூட இந்நிலையை அடைய முடியாதே…’ என வியந்தவர், தன் கமண்டல நீரை, விப்ரதன் மீது தெளித்தார்.
முனிவரின் கமண்டல நீர் பட்டதும், விப்ரதனிடம் இருந்த கொஞ்ச நஞ்ச தீவினைகளும் விலகி, அவனுக்கு புருவ மத்தியில், சிறு தும்பிக்கை முளைத்தது. இதன் காரணமாகவே விப்ரதனுக்கு, புருசுண்டி என்ற பெயர் ஏற்பட்டது. ‘சுண்ட’ என்றால், தும்பிக்கை.
விநாயக பக்தர்களில் இந்தப் புருசுன்டி தான் முதலாவதாக வைத்து போற்றப்படுகிறார். தீயவன் திருந்துவது மட்டுமல்ல மிகவும் உயர்ந்த நிலையை அடையலாம்; அவ்வாறு செய்யும் ஆற்றல், ஞானிகளின் பார்வைக்கு உண்டு. ஞானிகளின் அருள் கடாட்சம் நம் அனைவர் மீதும் வீசட்டும்.