விண்டோஸ் 9 வர இருக்கிறது
மிகப் பெரியஎதிர்பார்ப்புகளுடனும், முற்றிலும் மாறுபட்ட தொழில் நுட்பத்துடனும் வெளியிடப்பட்ட விண்டோஸ் 8 மக்களின் ஆதரவினைப் பெறுவதில் வெற்றி அடையவில்லை. வழக்கமான இயக்கத்தில், முற்றிலுமாக மாறுபட்ட மாறுதல்களை மேற்கொள்ள பயனாளர்கள் தயங்கினார்கள். விண்டோஸ் 8.1 மற்றும் அதற்கான அப்டேட் வந்தும் கூட, விண்டோஸ் 8 பயனாளர்களின் எண்ணிக்கை இன்னும் எதிர்பார்த்தபடி உயரவில்லை.
மனிதன் மாறி விட்டான்! -15
செல்வத்துள் செல்வம்
காதுகளை மான்கள், யானைகள், முயல்கள் போன்றவை அசைக்க முடியும், ஓசை வருகிற பக்கம் திருப்ப முடியும். ஆனால் அது குரங்குகளுக்கு இல்லை. எனவே, மனிதனும் அவற்றை அடையவில்லை. மனிதனின் காதுக்குள் செவிக்குழாய் ஒன்று செல்கிறது. காது மடல் சேகரிக்கும் ஓசைகள் செவிக்குழாய் வழியாக உள்ளே செல்கின்றன. செவிக்குழாயின் உள்பகுதியில் ஒரு சின்ன மெல்லிய பறை இருக்கிறது. அதுவே செவிப்பறை. அதன் கனம் பத்தில் ஒரு மில்லிமீட்டர் மட்டுமே. அது ஒலியின் வேகத்துக்கேற்ப அசைகிறது.
தீராத நோய்களைத் தீர்க்கும் திபெத் மருத்துவம்!
விரிந்து பரந்துகிடக்கும் சி.பி.ராமசாமி ஃபவுண்டேஷன் வளாகத்துக்கு வெளியே இருந்து பார்த்தால், உள்ளே அப்படி ஒரு மருத்துவமனை இருப்பது தெரியாது. சென்னை தேனாம்பேட்டை, எல்டாம்ஸ் ரோட்டில் உள்ள அந்தப் பிரமாண்டமான கட்டடத்தின் உள்ளே நுழைந்தால் அழகிய குடிலுக்குள் அமைந்திருக்கிறது திபெத்தியன் மெடிக்கல் சென்டர். உள்ளே நுழைந்தால் வழக்கமாய் மருத்துவமனைகளில் நாம் உணரும் மருந்து வாசனையோ, நோயின் தடமோ இல்லை. திபெத் கொடிகள் இரண்டு, சுவரில் தொங்க, நடுநாயகமாய்ச் சிரிக்கிறது தலாய்லாமா புகைப்படம். இங்குதான் பல அலோபதி மருத்துவர்களால் தீர்க்க முடியாத நோய்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கிறார்கள்.
நாடி பிடித்துப் பார்த்து நோயின் மூலத்தைக் கண்டறிபவர்கள் மாத்திரைகளாகவும் மருந்துகளாகவும் தருவது எல்லாமே மூலிகைகளால் செய்யப்பட்டவை.
ஜாவா வல்லுநர்களே தேவை
தற்போதைய சாப்ட்வேர் வேலை வாய்ப்பு சந்தையில், அதிகம் தேடப்படுபவர்கள், ஜாவா தொழில் நுட்பம் தெரிந்தவர்களே. வேலை தேடிப் பதிந்தவர் களைத் தேடுகையில், இந்த தொழில் நுட்பத்தில் வல்லுநர்களாக இருப்பவர்களையே, வேலை தருபவர்கள் தேடுகிறார்கள் என்று இந்த பிரிவில் செயல்படும் Dice.com என்ற இணைய தளம் தெரிவித்துள்ளது. இருபது ஆண்டுகளுக்கு முன் ஒரு புரோகிராமிங் மொழியாக அறிமுகப்படுத்தப்பட்டு, இன்று பல்வேறு பிரிவுகளில், பல வகைகளில் பயன்படுத்தப்படும் ஜாவா தொழில் நுட்பம், இன்றும் உறுதியான கட்டமைப்பை ஏற்படுத்தக் கூடிய மொழியாக இயங்குகிறது என Dice.com நிறுவனத் தலைவர் கூறியுள்ளார்.