Monthly Archives: செப்ரெம்பர், 2014

எம்.எஸ். ஆபீஸ் முக்கிய ஷார்ட் கட் கீகள்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பின் பல அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளில், அடிக்கடி பயன்படுத்தக் கூடிய சில ஷார்ட்கட் கீ தொகுப்புகள் இங்கே தரப்பட்டுள்ளன.

வேர்ட் தொகுப்பு:

Continue reading →

மனிதன் மாறி விட்டான்! -23

மரணம் ஏன்?

சூழலால் நாம் எப்படி பாதிக்கப்படுகிறோம் என்பதற்கு மீனை உதாரணமாகக் கொள்ளலாம்.  ‘தலஸோமா டூபெர்ரி’ என்கிற ஒரு மீன் சின்னக் குழுவாக வாழும் இயல்பைக் கொண்டது.  அதில் ஒன்று மட்டும் ஆணினம்.  மற்றவை பெண் இனங்கள். திடீரென அந்த ஆண் மீன் இறந்துவிட்டால், ஒரு புதிய ஆண் மீன் எங்கிருந்தாவது வந்து அந்தக் கூட்டத்தில் இணைந்துகொள்ளும். ஒருவேளை ஆண் மீன் எதுவும் வராவிட்டால், ஒரு பெண் மீனே ஆணாக மாறிவிடும்.  அப்படி மாறிய பெண் மீன், ஆண் மீனைப்போல நடந்துகொள்வது மட்டுமில்லாமல் உயிரணுக்களையும்  உற்பத்திச் செய்யக்கூடியது. எப்படிச் சூழல் ஒன்றைத் தீர்மானிக்கிறது என்பதற்கு இது இயற்கையில் நடக்கும் ஓர் அதிசயம். 

Continue reading →

நீளும் ஆயுள், குறையும் பென்ஷன்… மகிழ்ச்சியான ஓய்வுக்காலத்துக்கு கைகொடுக்கும் முதலீட்டு பிளான்!

30 வயதில் மகிழ்ச்சியாக வாழ்பவர்கள், 60 வயதுக்குப்பின் வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் கழிக்க என்ன செய்யப் போகிறோம் என்பது குறித்து யோசிப்பதே இல்லை. இளமையின் மகிழ்ச்சியில் முதுமையை மறந்தே போய்விடுகிறார்கள். ஆனால், வாழ்க்கையில் முதுமையைத் தவிர்க்கவே முடியாது. இந்த முதுமைக் காலத்தில் என்னென்ன தேவைகள் இருக்கும், இந்தத் தேவைகளைப் பொருளாதார ரீதியாக எப்படி சமாளிக்கப் போகிறோம், இதற்காக எப்படிப்பட்ட சேமிப்பை நாம் கொண்டிருக்க வேண்டும் என்கிற கேள்விகளுக்கான பதில் பற்றி இதுநாள் வரை நீங்கள் யோசிக்காமல் இருந்திருக்கலாம். இனி இந்த கேள்விகளுக்கான பதிலை கண்டறிவதற்கான கட்டாயம் வந்துவிட்டது. காரணம், பலப்பல.

அதிகரிக்கும் ஆயுட்காலம்!

Continue reading →

நலம் 360’ – 16

கில உலகத்துக்கும் பொதுவான மொழி எது? சிரிப்பு!

உலகில் பிறக்கும் அனைத்து குழந்தைகளும் தங்களின் தாய்மொழிக்கு முன்னரே முந்திக்கொண்டு தொடர்புகொள்ளும் ஊடகம்… சிரிப்பு! ‘புன்னகைதான் மொழிக்கும் முன்னர் மனிதன் கண்டுபிடித்த முதல் தொடர்பு ஊடகம்’ என்கிறார், தலைசிறந்த ‘சிரிப்பு’ ஆய்வாளர் பேராசிரியர் ராபர்ட் புரொவின். பார்வையற்ற, கேட்கும்திறன் இல்லாத குழந்தைகூட பிறந்த சில நாட்களில் சிரிக்கும் என்பது சிரிப்பின் தனிச் சிறப்பு. ஆனால், கைக்குழந்தையாக இருக்கும்போது நாள் ஒன்றுக்கு 200-300 முறை சிரித்துக்கொண்டிருந்த நாம், வளர்ந்து பொறுப்பானவர்கள் ஆகியதும் 15-20 முறைதான் சிரிக்கிறோம்… ஏன்?

Continue reading →

உணவு யுத்தம்!-39

உணவு குறித்து ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக அறிவுரைகள், ஆலோசனைகள், பயமுறுத்தும் எச்சரிக்கைகளை மக்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதில் எது உண்மை, எது பொய் என அவர்களால் வேறுபடுத்திக் காண முடியவில்லை. 

‘காலை எழுந்தவுடன் காபி குடிக்கக் கூடாது, வேண்டுமானால் க்ரீன் டீ குடியுங்கள்’ என ஒருவர் ஆலோசனை சொல்கிறார். மற்றவர், ‘க்ரீன் டீயை விடவும் ‘சாமோமிலா’ அல்லது ‘கிரான்பெரி டீ’ குடியுங்கள், அதுதான் நல்லது’ என்கிறார்.

Continue reading →

டிப்ஸ்… டிப்ஸ்-பாண்ட் டயலாக் பாக்ஸ்:

பாண்ட் டயலாக் பாக்ஸ்: வேர்ட் டாகுமெண்ட் தயாரிக்கையில், அவசரமாக டெக்ஸ்ட்டின் ஒரு பகுதியைக் குறிப்பிட்ட வகையில் பார்மட் செய்திட வேண்டியதிருந்தால், மெனு பார் சென்று Format கிளிக் செய்து பின்னர், Font தேர்ந்தெடுக்கிறோம். பின்னர், நமக்கு பாண்ட் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் டெக்ஸ்ட் பார்மட் செய்வதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் தரப்பட்டிருக்கும். இது சற்று நேரம் எடுக்கும் வேலை ஆகும். ஒரு சில சொற்கள் அல்லது

Continue reading →

டூயல் பூட்டிங் சிஸ்டம்

ஒரு கம்ப்யூட்டரில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைப் பதிந்து இயக்கலாம். இரண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை இயக்கும் வசதியையே டூயல் பூட் என்று அழைக்கிறோம். இதனால் எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரை இயக்க விரும்புகிறீர்கள் என்று நீங்களே கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கும்போது தீர்மானிக்கலாம். எடுத்துக்காட்டாக உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விண்டோஸ் விஸ்டா என இரண்டு மைக்ரோசாப்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை நிறுவிப் பயன்படுத்தலாம். இதனை நீங்களே பதிந்து இயக்கலாமா என்ற கேள்விக்கு ஆம் என்றுதான் பதில் சொல்வேன். Boot loader என்ற புரோகிராம் மூலம் நீங்களே இரண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை பதிந்து இயக்கலாம். என்ன செய்யப் போகிறோம் என்பதனை நன்கு உணர்ந்து படித்து அறிந்து கொண்டு செய்வது நல்லது.

Continue reading →

காதுகளில் ஏற்படும் வலியை நீக்குவதற்கான சில எளிய வீட்டு சிகிச்சைகள்!!

காது வலி என்பது குழந்தைகளுக்கு மட்டுமல்லாது பெரியவர்களுக்கும் அது பெரிய தொந்தரவாக இருக்கும். அதனால் தான் குழந்தைகளுக்கு காது வலி ஏற்படும் போது உடனடி சிகிச்சைக்காக அவர்களை மருத்துவர்களிடம் அழைத்து வருவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. பெரியவர்களை விட குழந்தைகளை தான் கிருமிகளும், சளியும் வேகமாக தாக்கும். அதே போல் குழந்தைகளுக்கு தான் நோய் எதிர்ப்பு சக்தி வளர்ச்சியானது அதிகரித்துக் கொண்டு இருக்கும். அதனால் குழந்தைகளுக்கு தான் பெரும்பாலும் காது வலி ஏற்படுகிறது. பல் வலியை போக்கும் எளிய வீட்டு வைத்தியங்கள்!!!

Continue reading →

டாஸ்க்பாரும் டூல் பாரும்

டாஸ்க் பார் என்பது மானிட்டர் திரையில் கீழாக கிரே கலரில் அமைந்திருப்பது. இதன் வண்ணமும் மாறும்; இடமும் மாறும். இதனை மேலாக அல்லது இடது வலது புறங்களில் அமைத்துக் கொள்ளலாம். இதில் தான் இடது பக்கம் ஸ்டார்ட் பட்டன் உள்ளது. அதனை அடுத்து உள்ளதை சிஸ்டம் ட்ரே என அழைக்கிறோம். நீங்கள் இயக்கும் புரோகிராம் பட்டன்கள் எல்லாம் இதில் தான் அமர்ந்து கொள்கிறது. ஒன்று மாற்றி ஒன்று நீங்கள் இயக்க விரும்பினால் இதில் மவுஸின் கர்சரைக் கொண்டு சென்று கிளிக் செய்தால் போதும்.

Continue reading →

திருமணமான பெண்களுக்கான சொத்துரிமை சட்டம்…

ஒருவர் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதன் முக்கிய நோக்கமே, தனக்குப்பின் தன் குடும்பம் பொருளாதார ரீதியில் எந்த வகையிலும் கஷ்டப்படக் கூடாது என்பதற்காகத்தான். இந்த நோக்கம் சரியாக நிறைவேற பெண்களுக்கு உறுதுணையாக இருக்கிறது திருமணமான பெண்களுக்கான சொத்துரிமை சட்டம் Married Women’s Property Act 1874). இந்தச் சட்டம் திருமணமான பெண்களுக்கு எந்தவகையில் பாதுகாப்பு அளிக்கிறது என்பது குறித்து விளக்கமாக எடுத்துச் சொல்கிறார் வழக்கறிஞர் நாகஷீலா.

‘‘இந்தச் சட்டம் மிகவும் பழைமையான சட்டம் ஆகும். இதில் தற்போது பிரிவு 6 மட்டும்தான் செயல்பாட்டில் உள்ளது. இந்தப் பிரிவானது கணவர் எடுக்கும் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை பெண்கள் சொத்தாக மாற்றுவதற்கு உதவுகிறது.

குடும்பத்தில் வருமானம் ஈட்டுபவர்கள் கட்டாயம் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டும். அப்போதுதான் வருமானம் ஈட்டுபவர் எதிர்பாராதவிதமாக உயிரிழக்கும் பட்சத்தில்,  அந்தக் குடும்பம் பொருளாதார ரீதியான பாதிப்புகளுக்கு  உள்ளாகாது.

Continue reading →