Daily Archives: செப்ரெம்பர் 1st, 2014

அதிகரிக்கும் ஏடிஎம் கட்டணம்… சமாளிப்பது எப்படி?

இனி ஏடிஎம் கார்டு மூலம் தினமும் 100 ரூபாய் எல்லாம் நீங்கள் எடுக்க முடியாது. அப்படி எடுத்தால், எக்கச்சக்கமான பணத்தைப் பயன்பாட்டுக் கட்டணமாக கட்ட வேண்டியிருக்கும். வருகிற நவம்பர் 1-ம் தேதியிலிருந்து இந்தப் புதிய விதிமுறையை அமல்படுத்த வங்கிகளுக்கு மத்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் தந்துவிட்டது.

ஏடிஎம் இயந்திரம் அறிமுகப்படுத்தப் பட்டதன் நோக்கமே, வங்கிக்குப் போய் வரிசையில் நின்று பணம் எடுப்பதைத் தவிர்க்கவும், அதிகப் பணத்தைப் பாதுகாப்பாக வங்கியில் சேமித்து வைக்கவும்தான். ஆனால், இன்று அந்த ஏடிஎம் இயந்திரங்களைப் பயன் படுத்துவதைக் குறைக்க ஆர்பிஐ புதிய விதிமுறைகளைக் கொண்டுவந்திருப்பது வேடிக்கைதான். ஏடிஎம்மைப் பயன் படுத்துவதில் புதிதாக கொண்டுவரப் பட்டிருக்கும் நடைமுறைகள் என்னென்ன என்று முதலில் பார்த்துவிடுவோம்.

1. சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் தான் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் ஒரு மாதத்துக்கு ஐந்து முறை எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் பணம் எடுக்கலாம். அதற்குப்பின் வங்கிகள் தேவைப்பட்டால் பயன்பாட்டுக் கட்டணம் வசூலிக்கலாம்.

Continue reading →

மிஸ்டர் கழுகு: கோபம் ஆன நீதிபதி குன்ஹா!

பெங்களூருவில் இருந்து பறந்து வந்தார் கழுகார்!

”இறுதிக்கட்ட கோர்ட் காட்சிகளை கவனிப்பதற்காக பெங்களூரு சென்றிருந்தேன். அதிரடித் திருப்பமாக தீர்ப்பு தேதியையே அறிவித்துவிட்டார் நீதிபதி குன்ஹா. தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை செப்டம்பர் 20-ம் தேதி தரப்போவதாக நீதிபதி குன்ஹா அறிவித்துள்ளார்” என்றபடி சொல்ல ஆரம்பித்தார் கழுகார்.

”தீர்ப்பு தேதி உடனடியாக அறிவிக்கப்படும் என்று ஜெயலலிதா தரப்பு நினைக்கவில்லை. கடந்த 27, 28 தேதிகளில் நடந்த விஷயங்கள்தான் உடனடியாக தீர்ப்பு தேதியை அறிவிக்க வைத்தன என்று சொல்கிறார்கள்!”

”வரிசையாகச் சொல்லும்!”

”ஜெயலலிதா, சசிகலா ஆகியோரின் வழக்கறிஞர்கள் தங்களது இறுதி​வாதத்தை முடித்துவிட்​டார்கள். அடுத்ததாக சுதாகரன், இளவரசி ஆகியோரின் வழக்கறிஞர் அமீத் தேசாய் கடந்த 8 நாட்களில் 24 மணிநேரம் வாதாடி தன் இறுதிவாதத்தை நிறைவு செய்திருக்கிறார். அவர் தன்னுடைய இறுதிவாதத்தின்​போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டினார். உடனே குறுக்கிட்ட நீதிபதி குன்ஹா, ‘உங்கள் தரப்பு வழக்கறிஞர்கள் பல உச்ச நீதிமன்ற தீர்ப்பை முன்னுதாரணம் காட்டிப் பேசியிருக்கிறார்கள். நீங்கள் சொல்ல வேண்டிய தீர்ப்பின் பாயின்ட்டை மட்டும் சொல்லுங்கள். நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்காதீர்கள்’ என்று சொன்னார். இவை கடந்த 26-ம் தேதி அன்று நடந்தது. அன்று முதலே நீதிபதி குன்ஹா பதற்றமாக இருந்தார். விரைவில் தீர்ப்பை அளித்துவிட வேண்டும் என்றும் இருந்தார்!”

Continue reading →

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 குறித்த எச்சரிக்கை

இந்தியாவில் இணைய வெளியில் ஏற்படும் தாக்குதல்களைக் கவனித்து, பாதுகாப்பிற்கான ஆலோசனைகளை வழங்கி வரும் Computer Emergency Response Team of India (CERTIn) மையம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில் உள்ள குறியீட்டுப் பிழைகள் மிக அதிக ஆபத்து விளைவிப்பவனாக உள்ளன என்று அறிவித்துள்ளது.

Continue reading →

தடுப்பூசி ரகசியங்கள்! – 6

போயே போச்சே போலியோ!

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அதிகம் பாதிக்கும் போலியோ நோய், வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. குறிப்பாக, குழந்தைகளின் கை, கால் தசைகளைப் பாதித்து, அவற்றின் இயங்கும் சக்தியை இழக்கச் செய்கிறது. இதனால் கை, கால் தசைகள் சிறுத்து, இளம்பிள்ளை வாதம் ஏற்படு்கிறது.

இந்த மோசமான இளம்பிள்ளை வாத நோயை, ஒவ்வொரு முறையும் இரண்டே இரண்டு மருந்துச் சொட்டு்க்கள் மூலமாக இருந்த இடம் தெரியாமல் ஒழித்தே விட்டோம். அப்படி ஒரு மகத்தான சாதனை புரிந்த மருந்துதான் போலியோ சொட்டு மருந்து.

 

நோய் பாதிப்பு  

போலியோ கிருமிகள் அசுத்தமான உணவு மற்றும் குடிநீர் மூலம் நம் குடலுக்குள் சென்று, அங்கிருந்து ரத்தத்தின் வழியே மூளையை அடைந்து, நரம்பு மண்டலத்தைப் பாதிக்கின்றன. முக்கியமாக, கால் தசைகளை இயக்குகின்ற நரம்புகளைப் பாதிப்பதால், இந்த நோய் உள்ளவர்களுக்குக் கால்கள் செயல் இழக்கும்.  இந்த நோய்க் கிருமிகள் மலத்தின் வழியாக வெளியேறி, மற்றவர்

களுக்கும் பரவும். பல நேரங்களில் போலியோ கடுமையான விளைவுகளை ஏற்படுத்துவது இல்லை. ஆனால், சில நேரங்களில் மரணத்தைக்கூட ஏற்படுத்திவிடும். சுவாசத்துக்கு உதவும் தசைகளை இந்தக் கிருமி தாக்கும்போது, பாதிக்கப்பட்ட நபர் சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறி இறப்பைத் தழுவலாம் என்பதால், இது மிகவும் அபாயகரமானது.

போலியோ தடுப்பின் முக்கியத்துவம்

Continue reading →