Advertisements

Daily Archives: செப்ரெம்பர் 2nd, 2014

கேட்ஜெட் : க்ளவுட் ஸ்டோரேஜ் சேவைகள்… எங்கேயும், எப்போதும் தீர்வு !

பென்-டிரைவ், மெமரி கார்ட், ஹார்ட்டிஸ்க் போன்றவற்றை நாம் செல்லும் இடங்களுக்கெல்லாம் எடுத்து செல்வது கஷ்டமான விஷயம்தான். வங்கியில் நம் சேமிப்புக் கணக்கில் பணம் போட்டு, ஏதாவது ஒரு ஏடிஎம் மூலம் பணம் எடுக்கிற மாதிரி, நம் புகைப்படங்கள், வீடியோகள், ஃபைல்ஸ் போன்றவற்றை நம் ‘க்ளவுட் ஸ்டோரேஜ்’ அக்கவுன்ட்டில் சேமித்துவிட்டு, எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் எந்தக் கருவியின் மூலமும் பயன்படுத்திக்கொள்வதுதான் ‘க்ளவுட் ஸ்டோரேஜ் சேவைகள் (Cloud Storage Services)’. சில சிறந்த ‘க்ளவுட் ஸ்டோரேஜ்’ சேவைகளை இனி பார்ப்போம்.

1. கூகுள் டிரைவ் (Google Drive)

Continue reading →

Advertisements

ஐ.டி ரிட்டர்ன்… கெடு தேதி தவறினால்.. என்னென்ன பாதிப்புகள்?

மாதச் சம்பளக்காரர்கள் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய கடைசி தேதி ஜூலை 31. இந்த தேதியை பல்வேறு காரணங் களுக்காகப் பலரும் தவறவிட்டிருப் பார்கள். அவர்கள் இனி வரிக் கணக்குத் தாக்கலை எப்படி செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

ஜூலை 31-ம் தேதிக்குள் வரிக் கணக்குத் தாக்கல் செய்யாதவர்கள், 2015 மார்ச் வரை வரிக் கணக்குத் தாக்கல் செய்யலாம். அபராதம் எதுவும் கிடை யாது. இதை ஆங்கிலத்தில் காலதாமதமாக ரிட்டர்ன் தாக்கல் (Belated Return) செய்வது என்பார்கள்.

 பாதிப்புகள் என்னென்ன?

Continue reading →

மங்கள யோகங்கள்!

செவ்வாய் என்றதுமே தோஷம் குறித்த நினைவுகளே நம்மை பயமுறுத்தும். ஆனால், மங்களகாரகனான செவ்வாய், பல அற்புதமான யோகங்களையும் வாரி வழங்குகிறார். மனோபலம், எதிர்ப்புகள் இல்லாத உயர்ந்தநிலை, தாய்வழிச் சொத்துகள் சேர்தல்… என்று பல்வேறு நன்மைகளை அளிக்கும் அந்த ‘மங்கள’ யோகங்களில் சில உங்களுக்காக இங்கே…

Continue reading →

தயிர்

தயிர்… உயிர் காக்கும் ஆரோக்கியக் கூறுகள் அடங்கிய உணவுப்பொருள். புரோபயாடிக் நிறைந்த தயிரில் துத்தநாகம், வைட்டமின் இ, பாஸ்பரஸ் ஆகியவை இருக்கின்றன.

உள்ளே…

கெட்டித் தயிரைச் சாப்பிட்டால் ஆயுள்  கெட்டிதான். எப்படி என்கிறீர்களா?

Continue reading →

உணவு யுத்தம்!-33

எந்த ஒரு புதிய உணவுப் பொருளையும் மேல்தட்டு அல்லது அடித்தட்டு மக்களிடம் அறிமுகப்படுத்தி அங்கீகாரம் பெறுவது கடினமானது. ஆனால், மத்திய தர வர்க்கத்தில் அந்தப் பிரச்னையே இல்லை. அவர்கள் எந்தப் புதிய உணவையும் எளிதாக அங்கீகரித்து ஏற்றுக் கொண்டுவிடுவார்கள். ஆகவே, பன்னாட்டு உணவு நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள 25 கோடி மத்தியதர வர்க்கத்தினரைத்தான் குறிவைக்கின்றன. இவர்களால்தான் பன்னாட்டு உணவு வகைகள் இந்தியாவில் அறிமுகமாகிக் காலூன்றின.

மத்தியதர வர்க்கத்தின் மாறிவரும் உணவுப் பழக்கமே சமகால உடல் நலப் பிரச்னைகளுக்கு முக்கியக் காரணி. அடித்தட்டு மக்கள் இன்னமும் தங்களின் மரபான உணவு வகைகளில் இருந்து பெரிதும் மாறிவிடவில்லை. தங்களின் உழைப்புக்கு ஏற்றார் போலவே உணவைத் தேர்வு செய்கிறார்கள். மேல்தட்டினர் உணவு என்பது சாப்பிடும் பொருள் இல்லை. அந்தஸ்து மற்றும் ஆடம்பரத்தின் அடையாளம் என்பதால் அவர்கள் சுவையைப் பிரதானப்படுத்துகிறார்கள். தேர்வு செய்து சாப்பிடுகிறார்கள்.

Continue reading →