Daily Archives: செப்ரெம்பர் 3rd, 2014

2ஜி-யை அடுத்து சூடுபிடிக்கிறது ஏர்செல் மாக்ஸிஸ்!

2ஜி வழக்கில் ஏற்கெனவே இரண்டு வழக்குகள் வட்டமடிக்க, மூன்றாவது பதிவான வழக்கு முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனையும் அவரது சகோதரர் கலாநிதி மாறனையும் வளைத்துள்ளது.

ஏர்செல்- மாக்ஸிஸ் நிறுவன விவகாரம் பல ஆண்டுகளாகப் பேசப்பட்டது. இப்போதுதான் அது நீதிமன்றத்தை எட்டியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று, சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி முன்னிலையில் சி.பி.ஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை அனைவரையும் உன்னிப்பாகக் கவனிக்க வைத்துள்ளது. ஒன்பது அலுமினியப் பெட்டிகளில் ஆவணங்கள், ஆதாரங்கள் ஆகியவற்றை சி.பி.ஐ அதிகாரிகள் எடுத்து வந்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார்கள். நான்கு நபர்கள், அவர்களோடு நான்கு நிறுவனங்கள் மற்றும் இறந்துபோன ஒருவர் என மொத்தம் ஒன்பது பேர் இதில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

Continue reading →

மிஸ்டர் கழுகு: ”அக்கா விடுதலையானால் போதும்!”

பெங்களூரு பரபரப்பில் இருந்துதான் கழுகார் ஆரம்பித்தார்.

”17 ஆண்டுகளாக நடந்து வந்த சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 20-ம் தேதி வரப்போகிறது. நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா தீர்ப்பை அறிவிக்க இருக்கிறார். செப்டம்பர் 20-ம் தேதி, சனிக்கிழமை. பொதுவாக அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்களுக்கு விடுமுறை நாள். அந்தத் தேதியைத் தேடிப் பிடித்துத் தீர்ப்பு நாள் என்று அறிவிக்க என்ன காரணம் என்று பலரும் தலையைப் பிய்த்துக் கொள்கிறார்கள்.”

”என்ன காரணமாம்?”

”மிகமிக முக்கியமான வழக்கு என்பதால் அன்றைய தினம் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகப்படுத்த வேண்டும் என்று நீதிபதி நினைக்கிறாராம். சென்னையில் இருந்து வரும் தமிழக முதலமைச்சருக்கு பெங்களூரு போலீஸார் பாதுகாப்பு தரவேண்டும். இரண்டாவது, தீர்ப்புக்குப் பிறகு ஏதாவது அசம்பாவிதம் நடக்காமல் இருக்க மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தாக வேண்டும். வார வேலை நாட்களாக இருந்தால் போலீஸாருக்குக் கவனச் சிதறல்கள் வரலாம் என்பதால் சனிக்கிழமையைத் தேர்வு செய்தார் என்றும் சொல்கிறார்கள்.”

Continue reading →

அடுத்த மாதம் இந்தியாவில் ‘ஆண்ட்ராய்ட் ஒன்’ திட்டம்

பட்ஜெட்விலையில் வெளியாகும் ஸ்மார்ட் போன்களில், சீரிய வசதிகளைத் தந்து வாடிக்கையாளர்களை மகிழ்விக்க, கூகுள் ”ஆண்ட்ராய்ட் ஒன்” என்ற ஒரு திட்டத்தினை வடிவமைத்துள்ளது. இதனை அடுத்த மாதம் இந்திய மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்கும் ஸ்மார்ட் போன்களில் முதன் முதலாக, கூகுள் அறிமுகப்படுத்த இருக்கிறது. மைக்ரோமேக்ஸ், கார்பன் மற்றும் ஸ்பைஸ் நிறுவனங்கள் இந்த சிஸ்டத்துடன் கூடிய ஸ்மார்ட் போன்களை செப்டம்பரில் அறிமுகப்படுத்த இருக்கின்றன. இந்த ஸ்மார்ட் போன்களின் விலை ரூ.7,000 முதல் ரூ.10,000 வரையில் இருக்கலாம். (பட்ஜெட் விலை என்பதால் இவை ரூ.6,000க்கும் கீழாக இருக்கும் என முன்பு எதிர்பார்க்கப்பட்டது) இங்கு வாடிக்கையாளர்கள் கொடுக்க இருக்கும் வரவேற்பிற்கு ஏற்றபடி, மற்ற நாடுகளிலும் இந்த திட்டத்தினை கூகுள் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு வாடிக்கையாளர்கள் கொடுக்கும் வரவேற்பு, தன்னை நிலைப்படுத்திக் கொள்ள உதவும் என கூகுள் எதிர்பார்க்கிறது.

Continue reading →

மோடி100:தெற்காசியாவில் வல்லரசு: சொல்லாமல் சொன்ன மோடி

எங்கு பார்த்தாலும் ஊறிக்கிடந்த ஊழல், நசுக்கப்படும் ஜனநாயகத்தின் குரல்வளை, நகராமல் தேங்கி நின்ற பொருளாதாரம், சுதந்திரம் பெற்று 67ஆண்டுகள் ஆகியும் அடிப்படை வசதிகளை காணாத கிராமங்கள், ஏழைகள் ஏழைகளாகவே இருக்க பணத்தில் கொழித்தஅரசியல்வாதிகள்… இப்படியான சமுதாய அபாயங்களுக்கு எப்போது தான் விடிவு என சராசரிஇந்தியர்கள் ஏங்கிக்கொண்டு இருந்தபோது வந்தவர் தான்நரேந்திர மோடி.
பிரதமராக மோடி பணியைதுவக்கி 100 நாட்கள் நிறைவடைகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சி செய்யப்போகும் ஒரு அரசுக்கு இது குறைவான நாட்களாக இருந்தாலும், ஒரு அரசின் முழு செயல்பாட்டை அதற்குள் எடை போடமுடியாது என்றாலும்… இதுவரை மோடி அரசின் செயல்பாடுமக்களிடையேபரவலாகபாராட்டையே பெற்றுள்ளது. இதோ,முக்கிய துறைகளில் மோடி அரசின் செயல்பாடுகள்:

Continue reading →

வேர்ட் டிப்ஸ்

புதுவகையான டாகுமெண்ட் பார்மட்: பொதுவாக, வேர்ட் டாகுமெண்ட்டில், டெக்ஸ்ட் ஒன்றை பார்மட் செய்து, அதனை அழுத்தமாக, சாய்வாக, அடிக்கோடிட்டபடி அமைக்க வேண்டும் என்றால், அந்த சொல்லைத் தேர்ந்தெடுத்து, பின் அதனை அழுத்தமாக அமைக்க வேண்டும் என்றால், bold டூலின் மீது கிளிக் செய்திடுவோம். அல்லது கண்ட்ரோல் + B அழுத்துவோம். ஒரே ஒரு சொல்லை நீங்கள் பார்மட் செய்திட விரும்பினால், சொல்லைத் தேர்ந்தெடுக்கும் வேலை எல்லாம் தேவை இல்லை. அந்தச் சொல்லின் மீது கர்சரை எந்த இடத்தில் வேண்டுமானாலும் நிறுத்துங்கள். பின்னர், ரிப்பனில், ஹோம் டேப்பினைக் காட்டவும். அடுத்து Font குரூப்பில், Bold டூலின் மீது கிளிக் செய்திடவும். நீங்கள் கர்சரைக் கொண்டு சென்று வைத்த சொல் முழுவதும் அழுத்தமாகக் காட்சி அளிக்கும். இவ் வாறே, எந்த ஒரு டூலையும் இந்த முறையில் பயன்படுத்தலாம். Ctrl+U அழுத்தினால், சொல்லின் கீழாக அடிக்கோடிடப்படும். டாகுமெண்டின் பழைய மாறா நிலைக்கு, பார்மட்டிங் எதுவும் இல்லாமல் கொண்டு செல்ல வேண்டுமா? கர்சரை பார்மட் செய்த சொல்லுக்குள்ளாக நிறுத்திப் பின்னர், Ctrl+Space Bar அழுத்தவும்.

Continue reading →

கூகுள் தரும் பொருளாதார முன்னேற்றம்

கூகுள் அப்ளிகேஷன்களை அன்றாட அலுவலகச் செயல்பாட்டிற்குப் பயன்படுத்தும் நிறுவனங்கள் நல்ல பொருளாதார முன்னேற்றத் தினைக் கொண்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. Forrester Consulting என்னும் அமைப்பு, "The Total Economic Impact of Google Apps,” என்ற தலைப்பில் இந்த ஆய்வுக் கணக்கெடுப்பினை மேற்கொண்டு முடிவுகளை அறிவித்துள்ளது.
தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும், செயல்பாடுகளை ஒருங்கிணைத்துக் கொள்ளவும் இந்த நிறுவனங்கள் கூகுள் அப்ளிகேஷன்களைப் பயன்படுத்திக் கொண்டன. இதனால் பல நன்மைகள் ஏற்பட்டதாகவும், அதன் மூலம் இந்நிறுவனங்களின் செயல்திறனும், வருமானமும் அதிகரித்ததாகவும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Continue reading →

மனிதன் மாறி விட்டான்!

வெளியே தெரியும் காது மடலைப் பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி அமைந்திருக்கிறது.  இரு நபர்களின் காதுகள் ஒரே தோற்றத்தை ஒத்திருப்பதில்லை.  தொடக்கத்தில் கைரேகைக்குப் பதிலாக காதுகளையே அடையாளங்களாகப் பயன்படுத்தலாம் என்றுகூட யோசனைகள் சொல்லப்பட்டன.  

காதை அறிவுக்கு அடையாளமாக ஆக்குவதுண்டு.  சரியாகப் படிக்காத மாணவர்களின் காதுகளை இழுத்து ஆசிரியர்கள் தண்டனை வழங்குவது, அவர்களிடம் முடங்கிக்கிடக்கும் நுண்ணறிவை எழுப்பிவிடத்தான் என்பதும் உண்டு. தமிழ்நாட்டில் விநாயகருக்கு  முன்னால் தோப்புக்கரணம் போடுவதும் அதனால்தான்.  சில வெளிநாடுகளில் ‘காது தெரபி’ என தோப்பு​க்கரணம் போட வைத்து பணம் பண்ணுகிறார்கள்.  தவறு செய்யாமல் தோப்புக்கரணம் போடுவது உடலுக்கு நல்லது.  அணிகலன்களை காதில் அணிவது தீய சக்திகள் காதின் வழியாக நுழையாமல் இருப்பதற்குவழியாக நம்பப்படுகிறது.  மிக நீளமான தோடுகளை அணிகிற பழங்குடியினர் இன்றும் இருக்கிறார்கள். 

Continue reading →