Daily Archives: செப்ரெம்பர் 4th, 2014

உயிர் அணுவைப் பெருக்கும் மெனு!

 

மாதுளை வெல்கம் ட்ரிங்க், முருங்கைக் கீரை சூப், மாப்பிள்ளைச் சம்பா சோற்றுடன் முருங்கைக் காய் பாசிப்பயறு சாம்பார், நாட்டு வெண்டைக்காய்ப் பொரியல், தூதுவளை ரசம், குதிரைவாலி மோர் சோறு… முடிவில் தாம்பூலம்… இவை புது மாப்பிள்ளைகளுக்கான அவசிய மெனு.

நாட்டுக்கோழியும் சிவப்பு இறைச்சிகளும் காமம் பெருக்கும் காம்போ உணவுகள்.

Continue reading →

நலம் 360’ – 12

முன்புபோல இளவட்டக்கல் தூக்கி, நான்கைந்து மாடுகளை விரட்டி, குதிரையில் போய் குறுக்கு சிறுத்தவளைக் கவர்ந்துவரும் கஷ்டம் எல்லாம் இன்றைய இளைஞர்களுக்கு இல்லைதான். ஆனாலும், சிக்ஸ்பேக் சித்ரவதை, ‘செல்லம்… தங்கம்… புஜ்ஜிம்மா’ கொஞ்சல்களுக்காக நித்திரை வதை… எனக் காதலுக்கான ஆண்களின் மெனக்கெடல்கள் இன்றும் தொடரத்தான் செய்கின்றன.

‘எனக்கு மட்டும் சொந்தம்
உனது இதழ் கொடுக்கும் முத்தம்;
உனக்கு மட்டும் கேட்கும்
எனது உயிர் உருகும் சத்தம்’

போன்ற வைரமுத்து வரிகளை ‘காப்பி-பேஸ்ட்’  செய்து, வாட்ஸ்-அப், ஃபேஸ்புக்களில் காதலித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். காதலின் சாஃப்ட்வேர் இப்படி காலமாற்றத்துக்கு ஏற்ப தரம் உயர்ந்தாலும், ஹார்டுவேர் நிறையவே பழுதாகி வருவதாக மருத்துவ ஆய்வுகள் பலமாக எச்சரிக்கின்றன.

Continue reading →

தள்ளாடாத முடிவில் கேரள அரசு! மதுவிலக்கு பாதையில் உம்மன் சாண்டி

இது ஒரு வாய்வழிக் கதை!

பழங்காலத்தில் கேரளாவுக்கு சாது ஒருவர் வந்துள்ளார். மக்களிடம் பல நல்ல விஷயங்களைப் பற்றி அவர் சுவாரஸ்யமாகப் பேசிய போதிலும் ஒருவரும் அவரது கருத்துக்கு செவி சாய்க்கவில்லை. கடல் மீது நடந்து காட்டினார். ஆனாலும், மக்கள் அவரை கண்டுகொள்ளவில்லை. என்ன செய்தாலும் மக்கள் கவனம் தன் பக்கம் திரும்பவில்லையே என சிந்தித்த சாது, உயிரிழந்த ஒரு மனிதனை உயிர் பெறச் செய்தார். அப்போதும் அவர் பக்கம் ஒருவரும் கவனம் செலுத்தவில்லை. உடனே, தண்ணீரை எடுத்து அதனை ‘ஒயின்’ ஆக மாற்றினார். என்ன அதிசயம்! எல்லா மக்களும் அவர் பக்கம் வந்துவிட்டார்கள்! _ சொந்த மாநிலத்தில் மதுவுக்கு அடிமையானவர் தொகை அதிகமானபோது அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களே கிண்டலாகச் சொல்லிக்கொண்ட கதை இது!

Continue reading →

டெஸ்க்டாப்பில் இன்னும் விண்டோஸ் 7 ஆட்சியே

விண்டோஸ் எக்ஸ்பி கொஞ்சம் கொஞ்சமாகத் தன் பயனாளர்களை இழந்து தன் மொத்த முடிவை நோக்கிச் சென்று கொண்டுள்ளது. விண்டோஸ் 8 பயன்பாடு சிறிது சிறிதாக உயர்ந்து வருகிறது. ஆனல், விண்டோஸ் 7, டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களின் பயன்பாட்டில் இன்னும் முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. சென்ற மே மாதத்தில், மொத்த ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில், 50% க்கும் அதிகமான பயனாளர்களைப் பெற்ற சிஸ்டமாக, விண்டோஸ் 7 இடம் பெற்றிருந்ததாக, இதில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. புதிய பயனாளர் களை வசப்படுத்துவதில், விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 இடையே தான் பலத்த போட்டி இருந்து வருகிறது.

Continue reading →

வரமா….. சாபமா?

உட்கார்ந்த இடத்திலேயே எல்லாம் கிடைக்க வேண்டும்; உலகத்தில் உள்ள அனைத்தையும் உடனடியாக கண்டு களித்து, உண்டு தீர்த்தாக வேண்டும். மொத்தத்தில், உழைக்காமல் உல்லாசமாக வாழ வேண்டும்; இதுதான் இன்றைய பெரும்பாலான மக்களின் விருப்பமாக இருக்கிறது. உழைக்க விரும்பாத சோம்பேறிகளின் வாழ்க்கை எப்படி முடிந்து போகும் என்பதற்கு வியாசர் கூறிய கதை இது:
ஒட்டகம் ஒன்று, தனக்கு நீண்ட கழுத்து இருந்தால், இருந்த இடத்திலிருந்தே சுலபமாக உணவைப் பெற்று விடலாமே என நினைத்து, அத்தகைய நீண்ட கழுத்தைப் பெறுவதற்காக பிரம்மாவை நோக்கி கடும் தவம் செய்தது. அதன் தவத்திற்கு இரங்கிய பிரம்ம தேவர், ‘ஏன் இவ்வளவு கடுமையாக தவம் செய்கிறாய்… உனக்கு என்ன வரம் வேண்டும்?’ என்று கேட்டார்.
‘சிருஷ்டி கர்த்தாவே… என் கழுத்து நூறு மீட்டருக்கு மேல் நீண்டதாக இருக்க வேண்டும்; அந்த வரத்தைத் தாருங்கள்…’ எனக் கேட்டது ஒட்டகம். அவ்வாறே வரத்தைக் கொடுத்தார் பிரம்மதேவர்.
ஒட்டகத்திற்கு இப்போது கழுத்து மிக நீண்டதாக மாறியது. இதனால், அதற்கு சந்தோஷத்தில் தல, கால் புரியவில்லை. ‘அப்பாடா… இனிமேல் உணவு தேடி அலைய வேண்டாம்; இருந்த இடத்தில் இருந்தபடியே கழுத்தை நீட்டி, வளைத்து தின்னலாம்…’ என நினைத்து மகிழ்ந்தது; அது நினைத்தபடியே வாழ்க்கை சொகுசாக சென்றது.
இவ்வாறு சுகமாக வாழ்ந்து கொண்டிருந்த போது, ஒரு நாள் பெருத்த புயற் காற்றுடன் மழை பெய்தது. ஒட்டகம் பயந்து போய் தன் தலையையும், கழுத்தையும் ஒரு குகையில் நுழைத்துக் கொண்டது. குகைக்குள் கழுத்தை மட்டுமே நுழைக்க முடிந்தது; உடல் வெளியே இருந்தது.
அப்போது நரி ஒன்று, தன் துணையுடன் பசியால் களைத்து, மழையிலிருந்து ஒதுங்குவதற்காக அக்குகைக்குள் நுழைந்தது. அதன் பார்வையில், ஒட்டகத்தின் கொழுத்த நீண்ட கழுத்து தென்பட்டது. உடனே நரியும், அதன் மனைவியும் ஆளுக்கொரு பக்கமாக ஒட்டகத்தின் கழுத்தை கடித்து, தின்னத் துவங்கியது. சோம்பேறி ஒட்டகம் இறந்து போனது. தெய்வம் வரம் தந்தாலும், சோம்பேறி அதை நல்ல விதமாக உபயோகப்படுத்திக் கொள்ளாமல், தன்னுடைய சோம்பேறித்தனத்தால் அழிந்து விடுவான் என்கிறார் வியாசர்.