Daily Archives: செப்ரெம்பர் 5th, 2014

உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் அத்திப்பழம்

ஆதிகாலம் தொட்டே மனிதன் சாப்பிட்டு பழக்கப்பட்ட பழம் அத்தி. இது எல்லா பருவத்திலும் கிடைப்பது இல்லை. ஆனால் உலர் பழமாக எல்லா பருவத்திலும் கிடைக்கிறது. பழங்கால கிரேக்க இலக்கியத்தில் அத்திப்பழத்தை குழந்தைப் பேறுக்கும், காதலுக்கும் தொடர்புடையதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அறிவியல் பூர்வமாக அத்திப்பழம் குழந்தைப்பேறுக்கான வாய்ப்பை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது.

சத்துக்கள்  பலன்கள்: வெறும் மூன்று உலர் அத்தியில் 5 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது ஒரு நாள் தேவையில் 20 சதவிகிதம். அத்திப்பழம் ஒரு மிகச்சிறந்த மலமிளக்கியாகவும், செரிமானப் பிரச்னைகளைத் தீர்க்கும் மருந்தாகவும் விளங்குகிறது. இதில் கலோரியின் அளவு மிகமிகக் குறைவு. எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு மிகச்சிறந்த சிற்றுண்டியாக இது இருக்கிறது. இதில் துத்தநாகம், மாங்கனீஸ் மற்றும் மக்னீசியம் உள்ளிட்ட தாதுப்பொருட்கள் இனப்பெருக்க மண்டலத்தை மேம்படுத்த உதவுகின்றன.

Continue reading →

பலத்தைக் கூட்டும் பாதாம்

நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் நிறைந்தது பாதாம். அதனால்தான் இதை உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்துகின்றனர். எந்த அளவுக்கு வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்களைத் தருகிறதோ அதேபோன்று ஆற்றலையும் அளிக்கிறது.

சத்துக்கள்  பலன்கள்: இதில் மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம் உள்ளது. இது கெட்ட கொழுப்பு எனப்படும் எல்.டி.எல் அளவைக் குறைத்து நல்ல கொழுப்பான ஹெச்்.டி.எல் அளவை அதிகரிக்க உதவுகிறது. இதனால் இதய நோய்கள் மற்றும் ரத்தக் குழாய் அடைப்பால் ஏற்படக்கூடிய பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் குறைகிறது.

வைட்டமின் இ இதில் நிறைவாக உள்ளது. 100 கிராம் பாதாம் பருப்பில் 25 கிராம் வைட்டமின் இ சத்து உள்ளது. இது நம் ஒரு நாளையத் தேவையில் 170 சதவிகிதம். இதுதவிர, பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் இதில் அதிக அளவில் உள்ளன. அதாவது, தயாமின், நியாசின், ரிபோஃப்ளேவின்,் ஃபோலிக் அமிலம் போன்ற சத்துக்கள் இதில் அதிகம்.

இதில் உள்ள வைட்டமின் இ, பைட்டோ கெமிக்கல்ஸ் மற்றும் ஃபிளவனாய்டுகள் மார்பகப் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மேலும் அதிக அளவில் இதில் உள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்தை சுத்தப்படுத்தி குடல் புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

p74

இது மிகவும் குறைவான கிளைசிமிக் இ்ண்டெக்ஸ் கொண்டதால், ரத்தத்தில் சர்க்கரை அளவை உடனடியாக அதிகரிக்காது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

பாதாம் எண்ணெயை தொடர்ந்து சருமத்தில் பூசி வந்தால் சருமம் உலர்தல் பிரச்னை நீங்கி, பளபளப்பைக் கூட்டும். 

p72

தேவை: நாள் ஒன்றுக்கு ஒரு கை அளவு பாதாம் மட்டுமே சாப்பிடுவது அன்றைக்குத் தேவையான அளவு தாது உப்புக்கள், வைட்டமின்கள், புரதம் உள்ளிட்டச் சத்துக்கள் கிடைக்கச் செய்கிறது. பொதுவாக, தினமும் 4 பாதாம் எடுத்துக் கொள்ளலாம். உடலில் அதிக கொழுப்பு உள்ளவர்களும், குண்டானவர்களும் ஒன்றிரண்டு எடுத்துக் கொண்டாலே போதும்.

பரு, கருந்திட்டு, கருவளையம்… அசத்தல் தீர்வுகள்!

”பிளாக் அண்ட் வொயிட் ஹெட்ஸ்:

முகத்தில் ‘T’ ஸோன் எனப்படும் நெற்றி – மூக்கு – முகவாய் பகுதிகளில் அதிக அளவில் சீபம் எனும் எண்ணெய் சுரக்கும். அந்த இடங்களில் சருமத் துவாரங்கள் பெரிதாகத் திறக்கும். அதன் வழியாக வெளியேறும் சீபத்தின் மீது காற்று பட்டதும், கறுப்பாக மாறிவிடும். இதன் மீது அழுக்கும் படிவதால் சரும துவாரம் அடைத்து, முள் போன்ற பிளாக் ஹெட்ஸாக தங்கிவிடும். அதேபோல, சரிவர சுத்தப்படுத்தப்படாத சருமத்தின் இறந்த செல்கள், சரும துவாரங்களை அடைத்துக்கொள்வதுதான் வொயிட் ஹெட்ஸ்.

Continue reading →

எங்கே ‘செல்’லும் இந்த ‘செல்ஃபி’?!

‘செல்ஃபி… 2013-ம் ஆண்டுக்கான பிரபல வார்த்தை’ (word of the year) என்று ‘ஆக்ஸ்ஃபோர்டு டிக்ஷ்னரீஸ்’ அறிவிக்கும் அளவுக்கு தீயாக பரவிக்கொண்டிருக்கிறது.

‘இன்ஸ்டாகிராம்’ எனும் புகைப்படத் தளத்தில் உலக அளவில் தினசரி 200 மில்லியன் புகைப்படங்கள் பதிவேற்றப்படுகின்றன. இதில் ஒரு மில்லியன் புகைப்படங்கள், ‘செல்ஃபி’ (selfie) எனப்படும் தங்களைத் தாங்களே எடுத்துக்கொள்ளும் வகையைச் சேர்ந்தவை. 91 சதவிகித இளைஞர்கள் தங்களது செஃல்பி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொள்கிறார்கள். குறிப்பாக, பெண் களிடையே அதீதமாக பிரபலமடைந்து வருகிறது இந்த ‘செல்ஃபி’ கலாசாரம்!

Continue reading →

வீட்டுக் கடன்: வட்டி கட்டாமலே வரிச் சலுகை பெறலாம்

வீடு வாங்க/கட்ட/புதுப்பிக்க, வீட்டுக் கடன் வாங்கும்போது அதற்கான வட்டியை ஆண்டு வருமானத்திலிருந்து கழித்துக் கொள்ளலாம். இப்படி ஒரு சலுகை  இருப்பதினாலேயே பலரும் சொந்த வீடு என்கிற கனவை நிறைவேற்றிக் கொள்ள முடிகிறது. இதுமாதிரி தரப்படும் வரிச் சலுகைக்கு சில நிபந்தனைகளை வருமான வரிச் சட்டம் விதிக்கிறது. வீட்டுக் கடன் வாங்கி, அதற்கான சலுகைகளைப் பெற நினைப்பவர்கள் இந்த நிபந்தனைகளைத் தெரிந்து கொள்வது அவசியம். என்னென்ன நிபந்தனைகள்?

1. வட்டித் தொகையை வருடத்துக்கு ஒருமுறை, அதாவது, நீங்கள் கடனுக்கான வட்டியைக் கட்டவில்லை என்றாலும் கழித்துக் கொள்ளலாம். இதைக் கொஞ்சம் விரிவாக எடுத்துச் சொன்னால், தெளிவாகப் புரியும்.

Continue reading →

மனிதன் மாறி விட்டான்!-17

ஆண்களைவிட பெண்களுக்கு மூக்கின் அளவு சிறியது. ஆதிவாசிகளாக இருந்த மனிதன் வேட்டையாடி உணவைச் சேகரித்தான்.  அப்போது இரையைத் துரத்துவதற்கும், மாமிசப் பட்சிணிகளிடம் இருந்து வேகமாக ஓடித் தப்பிப்பதற்கும் அதிகமான காற்றை உள்ளிழுக்க வேண்டியதாக இருந்தது.  எனவே அவனுக்கு மூக்குப் பெரிதாக ஆனது. பெண்களுக்கு அப்படிப்பட்ட தேவையில்லாமல் இருந்ததால் மூக்கு சிறிதானது. மூக்கு சிறிதாகச் சிறிதாக பெண்மையின் லட்சணமாக அது கருதப்பட்டது. குழந்தைகளுக்கு மூக்கு சின்னதாக இருப்பதைப் பார்க்கலாம்.  எனவே சின்ன மூக்கு இருக்கிறவர்கள் இளமையாக இருப்பதாகக் கருதப்பட்டார்கள்.  பெண்களில் பெரிய மூக்கை சிறிதாக அறுவைச்சிகிச்சையின்மூலம் மாற்றுவது அழகாக்குவதில் ஒரு பகுதியாகத் தொடர்ந்துகொண்டி​ருக்கிறது.

முகர்தல்  தொலைவிலிருந்தே உணரக்கூடிய புலன். பார்வைக்கு சூரிய வெளிச்சம் தேவை.  கும்மிருட்டில் கண்கள் செயலிழந்து விடுகின்றன.  ஆனால் முகர்தல் இரவு பகலாக பயன்படுகிறது. கேட்பதுகூட சத்தத்தை நிறுத்திவிட்டால் பயனற்றதாகிவிடுகிறது.  ஆனால், உடலின் மணம் கட்டுப்படுத்த முடியாததாகிவிடுகிறது.

Continue reading →

இணைய இணைப்பு இல்லாமல் பேஸ்புக்

பொதுத்துறை நிறுவனமான பி.எஸ். என்.எல்., தன் வாடிக்கையாளர்களுக்குப் புதுமையான வசதி ஒன்றை அளிக்கிறது. இந்நிறுவனத்தின் மொபைல் போன் இணைப்பு கொண்டிருப்பவர்கள், தங்கள் போன்களில் இணைய இணைப்பு இல்லாமல் இருந்தாலும், பேஸ்புக் தளத்தைத் தொடர்பு கொள்ள முடியும் மூன்று நாட்களுக்கு ரூ.4, வாரத்திற்கு ரூ.10 மற்றும் மாதத்திற்கு ரூ.20 இதற்கென கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

Continue reading →