Daily Archives: செப்ரெம்பர் 6th, 2014

பாலில் தண்ணீர் கலப்படம் செய்தாரா ? அமைச்சர் மூர்த்தி இன்று அதிரடி நீக்கம்

சென்னை : தமிழக பால்வளத்துறை அமைச்சர் மூர்த்தி இன்று அமைச்சரவையில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இவரை பொறுத்தவரையில் கட்சி தொண்டர்களுக்கு பதவி வழங்குவதற்கு கல்லா கேட்பது, மற்றும் இவரது சொந்த மாவட்டமான திருவண்ணாமலையில் குவாரி சட்ட விரோத செயல்பாட்டுக்கு துணைபோவது , மற்றும் ஆவின் பாலில் தண்ணீர் கலப்படம் செய்வது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சொல்லப்படுகின்றன. தமிழகத்தில் ஆட்சி அமைத்து ஜெ., அமைச்சர் நீக்கம் இன்றுடன் 19 வது முறை என்பது முக்கிய இடம் பிடிக்கிறது.
தமிழக முதல்வர் ஜெ., இன்று பிறப்பித்துள்ள உத்தரவில் பால்வளத்துறை அமைச்சர் மூர்த்தி நீக்கப்படுவதாகவும், இவருக்கு பதிலாக பி.வி.,ரமணா நியமிக்கப்படுவதாகவும், இவர் இன்று மாலை கவர்னர் மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சியில் அமைச்சராக பொறுப்பேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் மூர்த்தியை பொறுத்த வரை பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சொல்லப்படுகின்றன. இவரது மகன்கள் கண்ணதாசன், தமிழ்செல்வன் ஆகிய இருவரும் பல்வேறு அரசு துறை பணிகள் டெண்டருக்கு தனி கமிஷன் கலெக்சன் பண்ணி வந்தனராம். மேலும் மணல் வளம் கொண்ட திருவள்ளூர் மாவட்டத்தில் சட்ட விரேதாமாக குவாரிகளை கொண்டு கொள்ளை லாபம் அடித்தது வெளிச்சத்திற்கு வந்தது. மேலும் குவாரிகள் தி.மு.க.,காரர்களுக்கு வழங்கிட அமைச்சர் துணை போனார் என்றும் ஒரு தரப்பு கூறப்படுகிறது. கட்சியில் பொறுப்புகள் வாங்கி தரவேண்டுமென்றால் மாவட்ட செயலராக இருக்கும் அமைச்சர் மூர்த்திக்கு ஒரு தொகை கல்லா கட்ட வேண்டுமாம். இப்படி பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும் ஆவின் பாலில் தண்ணீர் கலப்பு முக்கியமாக கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் கலப்படம் கொடிகட்டி பறந்துள்ளது. இந்த கலப்படத்தின் பின்னணியில் அமைச்சரே காரணமாக இருந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் தன்னை வளப்படுத்தி கொண்டார் என்றும் கூறப்படுகிறது.

Continue reading →

பேய் பிடித்த மகளுக்கு நாயுடன் திருமணம் : ஜோதிடத்தால் விநோதம்

ராஞ்சி: மகளுக்கு பேய் பிடித்திருப்பதாக கூறிய கிராமத்தினரின் சந்தோசத்திற்காக பெற்றோர் அவரை நாய்க்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்தது.ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த 18 வயது இளம்பெண மங்லிமுண்டா. இவரின் நடவடிக்கைகள் குறித்து சந்தேகம் கொண்ட கிராமத்தினர் இவருக்கு பேய்

Continue reading →

மிஸ்டர் கழுகு: சாட்டை சுழற்றிய சகாயம்…

”’லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து’ என்று சொல்லி வந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்தை 23 வருடத்தில் 23-வது தடவையாக டிரான்ஸ்ஃபர் செய்துவிட்டார்கள். இது வழக்கமான டிரான்ஸ்ஃபர் என்று சொன்னாலும் அதற்குப் பின்னால் பல அரசியல் காரணங்கள் இருக்கிறது. சகாயம் நிர்வாக இயக்குநராக இருந்த கோ-ஆப்டெக்ஸிலும் நேர்மையை விட்டுக்கொடுக்காத காரணத்துக்காகவே அவர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார் என்று சொல்கிறார்கள்” என்றபடி வந்து அமர்ந்தார் கழுகார்!

நாம் நிமிர்ந்து உட்கார்ந்தோம். ”மதுரையில் முறைகேடாக நடந்து வந்த கிரானைட் குவாரிகள் மீது நடவடிக்கை எடுத்தார் அங்கே ஆட்சியராக இருந்த சகாயம். அதன் பிறகு இந்த கிரானைட் முறைகேடு பற்றி அ.தி.மு.க ஆட்சியே பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கினாலும் அன்று சகாயம் அந்தப் பதவியில் இருந்து மாற்றப்பட்டு கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்படவும் அந்த கிரானைட் விவகாரம்தான் காரணம் என்று சொல்லப்பட்டது. ‘இந்தப் பதவிக்கு

Continue reading →

லக்னத்தை கண்டறிவது எப்படி ?

நீங்கள் உங்களுடைய ஜாதகத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அதில் ‘ல’ என்று குறிப்பிட்டு இருப்பதுதான் லக்னம் என்பதாகும். இந்த லக்னத்தை அடிப்படையாகக் கொண்டுதான் ஜாதகப் பலன்கள் கணிக்கப்படுகின்றன.

இந்த லக்னத்தைக் கண்டறிவது எப்படி என்று பார்ப்போம். சூரியனின் நகர்வை 360 பாகைகளாகப் பகுத்து ஒவ்வொரு ராசிக்கும் 30 பாகைகள் வீதம் 12 ராசிகளுக்கும் பிரித்துக் கொடுக்கப் பட்டிருக்கின்றன. ஒரு பாகை என்பது 4 நிமிடங்களைக் கொண்டதாகும். 30 பாகைகள் 120 நிமிடங்களாகும். ஆக, ஒரு ராசிக்கான லக்னம் என்பது சுமார் 2 மணி நேரம் ஆகும். ஒவ்வொரு லக்னத்துக்குமான நேரக் கணக்கீடு சற்றே கூடவோ குறையவோ செய்யலாம். ஒவ்வொரு லக்னத்துக்குமான கால அளவு பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

Continue reading →

எலெக்ட்ரானிக் வடிவத்தில் பாலிசிகள்… இலவசமாகவே மாற்றலாம்!

இன்ஷூரன்ஸ் பாலிசி பத்திரங்களைப் பத்திரமாக வைத்து பாதுகாப்பது மிகப் பெரிய வேலை. சில சமயங்களில் இந்த பாலிசி பத்திரங்கள் கிழிந்துவிடும். சில சமயங்களில் பாலிசி பத்திரங்கள் காணாமலேகூட போய்விடும்.

இந்தப் பிரச்னைக்கு ஒரு நிரந்தர தீர்வாக இன்ஷூரன்ஸ் பாலிசிகள் அனைத்தையும் டீமேட் வடிவத்தில், அதாவது எலெக்ட்ரானிக் வடிவத்தில் மாற்ற உத்தரவிட்டது  இன்ஷூரன்ஸ் நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் அமைப்பான ஐஆர்டிஏ.

கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதமே அனைத்து இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்கும் டீமேட் கணக்கு கொண்டுவர வேண்டும் என ஐஆர்டிஏ திட்டமிட்டது. இதற்காக என்எஸ்டிஎல் டேட்டாபேஸ் மேனேஜ்மென்ட், சென்ட்ரல் இன்ஷூரன்ஸ் டெபாசிட்டரி, ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் புராஜெக்ட், கேம்ஸ் ரெப்பாசிட்டரி சர்வீஸ், கார்வி இன்ஷூரன்ஸ் ரெப்பாசிட்டரி ஆகிய ஐந்து நிறுவனங்களை நியமித்தது. இந்த ரெப்பாசிட்டரிகளின் கீழ் செயல்படும் முகவர்கள் மூலமாக இன்ஷூரன்ஸ் டீமேட் கணக்கைத் துவங்கலாம் என ஐஆர்டிஏ சொன்னாலும், இந்த வேலை வேகமாக நடக்கவில்லை.

Continue reading →

எக்ஸெல்: அடுத்த இரட்டைப்படை எண்ணுக்கு

புள்ளிவிபரங்களைக் கொண்டு ஆய்வு செய்திடும் வாசகர் ஒருவர், எக்ஸெல் ஒர்க்புக்கில், தன் கணக்கில் கிடைக்கும் முடிவு எண்களை அருகே உள்ள இரட்டைப்படை இலக்கத்திற்குக் கொண்டு செல்ல ஏதேனும் வழி உள்ளதா எனக் கேட்டு எழுதி இருந்தார். இதனைச் சற்று விரிவாக இங்கு காணலாம்.

Continue reading →

தமிழகத்தில் ஓணம்!

செப்., 6 – ஓணம்
ஓணம் கேரள மக்களின் பண்டிகையாக இருந்தாலும், தமிழகத்திலும் ஓணம் கொண்டாடப்பட்டுள்ளது. கேரளத்தில் உள்ள அனைத்து கோவில்களிலுமே கஜபூஜை நடக்கும்; ஓணம் பண்டிகையின் போதும், யானைகளை அலங்கரித்து அணிவகுப்பு நடத்துவர். அதேபோன்று மதுரையில், பாண்டியர் ஆட்சிக் காலத்தில், ஓணம் பண்டிகை காலத்தில் யானைச் சண்டை நடக்கும். நான்கு புறமும் கூழாங்கற்களைக் குவித்து, மேடான பகுதியாக்கி அதன் மேல் மக்கள் அமர்ந்து கொள்வர். நடுவிலுள்ள பள்ளத்தில் யானைகளை சண்டையிடச் செய்வர். வெற்றி பெறும் யானையின் உரிமையாளருக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது சேவல் சண்டை, ஆட்டுக்கிடா சண்டை நடப்பது போல் அக்காலத்தில் யானைச் சண்டையும் நடந்துள்ளது.
மதுரைக்கும், ஓணத்திற்கும் புராண ரீதியாகவும் தொடர்பு இருந்துள்ளது. மகாபலி மன்னன் மிகவும் நல்லவன்; ஆனால், ஆணவக்காரன். அந்த ஆணவம் மட்டும் நீங்கி விட்டால், அவன் மோட்சத்திற்கு தகுதியுள்ளவனாகி, தேவலோகத்தை அடக்கியாண்டு விடுவான் என்று நினைத்த தேவேந்திரன், திருமாலின் உதவியை நாடினான். திருமால், குள்ள வடிவம் எடுத்து வாமனராக பூமிக்கு வந்தார்.
உலகை தன் கட்டுக்குள் கொண்டு வர, யாகம் நடத்திக் கொண்டிருந்த மகாபலி, வந்தவர்கள் கேட்டதையெல்லாம் கொடுத்தான்.
வாமனர் அவனிடம், தனக்கு மூன்றடி நிலம் வேண்டுமென கேட்டார். இந்த சின்னஞ்சிறு கால்கள் எவ்வளவு நிலத்தை அளந்து விடும் என நினைத்து சம்மதித்தான் மகாபலி. அவரோ விஸ்வரூபமெடுத்து, இரண்டடியால் உலகை அளந்து, மூன்றாம் அடிக்கு, ‘எங்கே நிலம்…’ என கேட்டார்.
மகாபலி தன் தலையைக் கொடுக்க, அவனை பாதாளத்திற்குள் அனுப்பினார். பிற அவதாரங்களில், திருமால் அசுரர்களைக் கொன்று விடுவார்; ஆனால், வாமன அவதாரத்தில் மகாபலியை ஆட்கொண்டார். அதனால் தான் அவரை, ‘ஓங்கி உலகளந்த உத்தமன்’ என பாராட்டுகிறாள், ஆண்டாள். பெருமாள் உலகளந்த சமயத்தில், அவரது ஒரு திருவடி வானத்தை கிழித்து, பிரம்மலோகத்தை எட்டியது. இதைக்கண்டு மகிழ்ந்த பிரம்மா, அந்த திருவடியை தன் கமண்டலத்தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்தார். அந்த நீர் பூமியை நோக்கி வந்தது; அதுவே, ‘நூபுர கங்கை’ எனப்பட்டது. ‘நூபுரம்’ என்றால் சிலம்பு; திருமாலின் திருவடி சிலம்பின் மீது பட்ட நீர், கங்கையாகப் பெருகியதால் இந்த தீர்த்தத்திற்கு நூபுர கங்கை என பெயர் ஏற்பட்டது. இந்த தீர்த்தம் மதுரை அழகர் மலையில் இருக்கிறது; இங்கு புனித நீராடுவதை பக்தர்கள் பெரும் பாக்கியமாகக் கருதுகின்றனர்.
ஓணம் திருநாளன்று, நீங்களும் நூபுர கங்கைக்கு வந்து நீராடுங்கள்; அன்று இல்லங்களில் பல வகை உணவு சமைத்து, குழந்தைகளுடன் ஓணத்தைக் கொண்டாடி மகிழுங்கள்.