Daily Archives: செப்ரெம்பர் 8th, 2014

‘ஜோதிபாசுவை போல கருணாநிதி ஓய்வு பெற வேண்டும்’: தா.மோ.அன்பரசன் ராஜினாமா கடிதம்?

தி.மு.க., தலைமை பொறுப்பை, ஸ்டாலினுக்கு வழங்க வேண்டும். அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்’ என, அந்தக் கட்சியின், 17 மாவட்ட செயலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதை வலியுறுத்தி, ராஜினாமா செய்யவும் தயாராகி வருகின்றனர்.

தாரை வார்ப்பு:

இதுதொடர்பாக, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:தி.மு.க.,வில், அடுத்த தலைவர் யார் என்ற சர்ச்சை நீடிக்கிறது. உட்கட்சி தேர்தல் முடிந்ததும், கட்சியின் தலைமை பொறுப்பை, மீண்டும் கருணாநிதி ஏற்பாரா அல்லது ஸ்டாலினுக்கு அந்தப் பதவியை தாரை வார்த்து கொடுப்பாரா என்ற கேள்வி, ஸ்டாலின் ஆதரவாளர் கள் மத்தியில் எழுந்துள்ளது. அவர்களின் கேள்விகளுக்கு விடை தேடிக் கொடுக்கும் வகையில், ஸ்டாலின் குடும்பத்தினர், ஒரு குழுவாக செயல்பட்டு வருகின்றனர். இந்தக் குழுவில், ஸ்டாலின் மனைவி துர்கா, மருமகன் சபரீஷ், மகன் உதயநிதியின் மைத்துனர் கிரீஷ் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். சமீபத்தில், சென்னை அன்பகத்தில், தி.மு.க., இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டம் முடிந்ததும், மாலையில், ஸ்டாலினின் குடும்ப உறுப்பினர் ஒருவர் தலைமையில், முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது.மேலும், பிரதமர் மோடியின் இணையதளத்தில் பணியாற்றிய, 10 பேர் கொண்ட குழுவினர், தற்போது ஸ்டாலினின் இணைய தளத்திற்காகவும் பணிபுரியத் துவங்கியுள்ளனர். அவர்கள் அனைவரும், சென்னையில் உள்ள, முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவருக்கு, சொந்தமான ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவினர் தெரிவித்த ஆலோசனைப்படி, முதல் கட்டமாக, கருணாநிதியை எதிர்த்தும், ஸ்டாலினுக்கு ஆதரவாகவும் கட்சியில் குரல் எழுப்ப, அவரின் ஆதரவாளர்கள் துவங்கியுள்ளனர்.

Continue reading →

அடியாட்களை உருவாக்கும் அதிசய கிராமம்!

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை உயர்ந்து நிற்கும் கட்டடங்கள், வாகனங்களின் இரைச்சல், ஷாப்பிங் மால்கள், சொகுசு கார்களின் அணிவகுப்பு என, தலைநகர் டில்லிக்கு ஒரு அடையாளம் உண்டு.
ஆனால், டில்லியின் புறநகர் பகுதியில் உள்ள, அசோலா பதேபூர் பெரி என்ற கிராமம், முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையில் அமைந்துள்ளது. எங்கு பார்த்தாலும் கால் நடைகள் சுதந்திரமாக உலா வருகின்றன. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமை போர்த்திய வயல் பரப்புகள், டிராக்டர்கள் என, பக்கா கிராமத்து அடையாளத்துடன் உள்ள இந்த ஊரில், 50,000 பேர் வசிக்கின்றனர். இங்குள்ள இளைஞர்கள் ஆஜானுபாகுவான உயரம், பரந்து விரிந்த மார்புகள், கர்லாக்கட்டை புஜங்கள் என, ‘டெர்மினேட்டர்’ ஆங்கில படத்தில் வரும் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு போன்ற தோற்றத்தில் உள்ளனர். அவர்களை பார்க்கும்போதே நமக்கு உதறல் எடுக்கிறது.

Continue reading →

பெங்களூரு ஜுரம்… ஜெயமா, பயமா? பக்பக் போயஸ்

”ஒரு மன்னர், யானை மீது அமர்ந்தபடி நாட்டைச் சுற்றி வலம் வருவதை வாடிக்கையாக வைத்திருந்தார். குறிப்பிட்ட ஒரு கிராமத்துக்கு மன்னர் ஒவ்வொரு முறை போகும்போதும், ஓர் இளைஞன் யானையின் வாலைப் பிடித்து இழுப்பதும், யானை மேற்கொண்டு நடக்க முடியாமல் நின்றுவிடுவதும் தொடர்ந்தன. அவன் ‘யார்’ என்று மன்னர் விசாரித்தார். ‘பலம் வாய்ந்த யானையை, சாதாரண ஓர் இளைஞன் எப்படி இழுத்து நிறுத்துகிறான்?’ என்று கேட்டார். ‘அந்த இளைஞனின் மனவலிமைதான் அதற்குக் காரணம்’ என்றார் மந்திரி. இந்த மனவலிமையை மாற்ற மன்னர் யோசித்தார்.

Continue reading →

கால் வீக்கம், நரம்பு சுருக்கமா? – அலட்சியம் காட்டினால் சிக்கல்!

கால்களில் வீக்கம், நரம்பு சுருக்கம் இருந்தால் அலட்சியம் காட்ட வேண்டாம். அது ரத்தக்குழாய்களில் சிக்கலை ஏற்படுத்தி, உயிரிழப்புக்கு வழி வகுத்து விடும் என்கிறார், சென்னை அரசு பல்நோக்கு மருத்துவமனை, ரத்த நாள அறுவை சிகிச்சை துறை தலைவர் ஜெயக்குமார்.
பிரச்னைகள் குறித்த கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும்:
1. ரத்த நாள பிரச்னை என்றால் என்ன?
நல்ல ரத்தம் தமனி (arteries) வழியாகவும், கெட்ட ரத்தம், இதயத்திற்கு சிரை (veins) வழியாகவும் செல்கிறது. இந்த பகுதிகளிலும், திசுக்களுக்கு பிராண வாயு அல்லது சக்திக்கான பொருட்களை கொண்டு செல்லும் நுண்ணிய பிரத்யேக குழாய்களிலும், ‘மால் பார்மேசன்’ பாதிப்பு ஏற்பவதையே, ரத்த நாள பிரச்னை எனப்படுகிறது.

Continue reading →

மனிதன் மாறி விட்டான்!-18

முத்தம் தோன்றிய விதம் முத்தாய்ப்பானது. மாமிச உணவை உண்ணத் தொடங்கிய மனிதன், அதை மென்று தின்று ஜீரணிக்க வேண்டியதாக இருந்தது. தாய்மார்கள்  உதடுகள் மூலம் குழந்தைகளுக்கு மென்ற உணவை ஊட்டினர்.  அப்போது ஒருவிதமான வெதுவெதுப்பு குழந்தைகளுக்கு ஏற்பட்டது.  பசியால் குழந்தை அழும்போது, அதை சாந்தப்படுத்த உணவை ஊட்டுவதைப்போல தாய் அக்குழந்தையின் உதடுகளை தன் உதடுகளால் அழுத்த தொடங்கினாள்.  பிறகு அது அன்பின் பரிமாற்றமாக ஆனது.   நாளடைவில் ஆண்களிடமும் அன்பை பரிமாறிக்கொள்ள அந்த செயல்பாடு தொடர, அதுவே முத்தமாகப்போனது.  இப்போது உதடுகள் மூலம் உணவு பரிமாறப்படாவிட்டாலும் உணர்வு பரிமாறப்பட்டு வருகிறது.   

Continue reading →

விண்டோஸ் சிஸ்டத்திற்கு மாற்றாக உள்ள இயக்க முறைமைகள்

பெர்சனல் கம்ப்யூட்டரில், விண்டோஸ் இயக்கமே பெரும்பான்மையான கம்ப்யூட்டர்களில் கையாளப்படுகிறது. சிலர் இதற்கு மாற்றாக வேறு சிஸ்டம் இல்லை என்று எண்ணிக் கொண்டுள்ளனர். பலர், லினக்ஸ் சிஸ்டம் மற்றுமே இதற்கு மாற்று என்று முடிவு செய்து, அதனைப் பயன்படுத்துகின்றனர். அவ்வளவு தானா? இந்த இரண்டினைத் தவிர வேறு எதுவும் இல்லையா? என்ற கேள்விக்கான பதிலை இங்கு பார்க்கலாம். பெர்சனல் கம்ப்யூட்டரை இயக்க உதவிடும் வேறு இயக்க முறைமைகள் இங்கு தரப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. தெரிந்து கொள்ளலாம். அல்லது விண்டோஸ் இருக்கும் கம்ப்யூட்டரிலேயே பாதுகாப்பான வழிகளில் பதிந்து இயக்கிப் பார்க்கலாம். இதற்கு விர்ச்சுவல் பாக்ஸ் அல்லது வி.எம். வேர் ப்ளேயர் (VirtualBox or VMware Player) போன்ற அப்ளி கேஷன் புரோகிராம்கள் உங்களுக்கு உதவும்.

1.லினக்ஸ்:
விண்டோஸ் சிஸ்டத்திற்கு மாற்றான இயக்க முறைமைகளில், முதலில்

Continue reading →

குருவும் குணமும்! கிரகங்களின் சேர்க்கை…

குரு – சூரியன்:

பெரியவர்களிடம் பக்தி சிரத்தை உடையவர்களாகவும், கல்வியில் திறமை கொண்டவர்களாகவும், தெய்வபக்தி மிகுந்தவர்களாகவும், பூஜை வழிபாடுகளில் சிரத்தை கொண்டவர்களாகவும் தார்மிக சிந்தனை உடையவர்களாகவும் திகழ்வார்கள். செல்வச் செழிப்புடன் இருக்கும் இவர்கள், படித்த பெரிய மனிதர்களின் நட்பைப் பெற்றிருப்பர். ஆசானாகவும், புத்திசாலியாகவும் இருப்பர். சண்டையிடுவதில் விருப்பம் கொண்ட வர்களாக இவர்கள் இருப்பதால், ராணுவத்தில் பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றிருப்பர். செய்நன்றி மறவாத குணம் கொண்டிருப்பர்.

Continue reading →