விண்டோஸ் சிஸ்டத்திற்கு மாற்றாக உள்ள இயக்க முறைமைகள்

பெர்சனல் கம்ப்யூட்டரில், விண்டோஸ் இயக்கமே பெரும்பான்மையான கம்ப்யூட்டர்களில் கையாளப்படுகிறது. சிலர் இதற்கு மாற்றாக வேறு சிஸ்டம் இல்லை என்று எண்ணிக் கொண்டுள்ளனர். பலர், லினக்ஸ் சிஸ்டம் மற்றுமே இதற்கு மாற்று என்று முடிவு செய்து, அதனைப் பயன்படுத்துகின்றனர். அவ்வளவு தானா? இந்த இரண்டினைத் தவிர வேறு எதுவும் இல்லையா? என்ற கேள்விக்கான பதிலை இங்கு பார்க்கலாம். பெர்சனல் கம்ப்யூட்டரை இயக்க உதவிடும் வேறு இயக்க முறைமைகள் இங்கு தரப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. தெரிந்து கொள்ளலாம். அல்லது விண்டோஸ் இருக்கும் கம்ப்யூட்டரிலேயே பாதுகாப்பான வழிகளில் பதிந்து இயக்கிப் பார்க்கலாம். இதற்கு விர்ச்சுவல் பாக்ஸ் அல்லது வி.எம். வேர் ப்ளேயர் (VirtualBox or VMware Player) போன்ற அப்ளி கேஷன் புரோகிராம்கள் உங்களுக்கு உதவும்.

1.லினக்ஸ்:
விண்டோஸ் சிஸ்டத்திற்கு மாற்றான இயக்க முறைமைகளில், முதலில்

நிற்பது லினக்ஸ் சிஸ்டம் தான். இதனை மட்டுமே மாற்றாகப் பலர் உறுதியாகக் கூறுகின்றனர். இது Linux distributions.Ubuntu and Mint எனப் பல வகைகளில் கிடைக்கிறது. இது யூனிக்ஸ் சிஸ்டம் போன்ற இயக்கத்தைக் கொண்டது. இதனுடன் FreeBSD என்ற சிஸ்டமும் கிடைக்கிறது. இது வேறு ஒரு கட்டமைப்பினைக் கொண்டிருந்தாலும், லினக்ஸ் சிஸ்டத்தில் இயங்கும் சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் இதிலும் இயங்குவதைக் காணலாம்.
2. குரோம் ஓ.எஸ்.: இரண்டாவதாக நமக்குக் கிடைப்பது குரோம் ஓ.எஸ். இது லினக்ஸ் கட்டமைப்பில் வடிவமைக்கப்பட்டதாகும். ஆனால், இதன் சாப்ட்வேர் மற்றும் டெஸ்க்டாப் இயக்கங்கள் குரோம் பிரவுசர் மற்றும் குரோம் அப்ளிகேஷன்களை மட்டுமே இயக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இதனைப் பொதுவான் பெர்சனல் கம்ப்யூட்டர் சிஸ்டம் என்று சொல்ல இயலாது. குரோம் புக்ஸ் என அழைக்கப்படும், தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்ட லேப்டாப் கம்ப்யூட்டர்களில் மட்டுமே பதிந்து இயக்க முடியும்.

3. ஸ்டீம் ஓ.எஸ்.:
தொழில் நுட்ப ரீதியில் பார்த்தால், இது லினக்ஸ் வகையில் ஒன்று எனச் சொல்லலாம். இது இன்னும் சோதனை முறையில் தான் உள்ளது. இருப்பினும், இதனை புதிய PC gaming operating system என வகைப்படுத்தி உள்ளனர். வரும் 2015ல் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதிந்த கம்ப்யூட்டர்களை வாங்கலாம். அவை steam machines என அழைக்கப்படும்.மேலும் தகவல்களுக்கு http://store.steampowered.com/livingroom /SteamOS/ என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்ல வேண்டும்.

4. ஆண்ட்ராய்ட்:
இந்த சிஸ்டமும் லினக்ஸ் கட்டமைப்பினையே பயன்படுத்துகிறது. ஆனால், இதன் செயல் குறியீடுகள் மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் லினக்ஸ் சிஸ்டம் தரும் வசதிகளிலிருந்து மாறுபட்டவை. முதலில் இவை ஸ்மார்ட் போன்களுக்கு எனவே வடிவமைக்கப்பட்டவை. பின்னர் லேப்டாப் கம்ப்யூட்டர்களுக்கு உருவாக்கப்பட்டன. தொடர்ந்து பலர் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் இயங்கும் வகையிலும் இதனைக் கொண்டு வந்துள்ளனர். ஆனால், பெர்சனல் கம்ப்யூட்டருக்கான சரியான சிஸ்டம் இதுவல்ல. இன்றைய நிலையில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அப்ளிகேஷன்களை இதில் இயக்க முடியாது. இருப்பினும் நீங்கள் விரும்பினால், இதனைப் பதிந்து இயக்க முடியும்.
5. மேக் ஓ.எஸ். எக்ஸ்: ஆப்பிள் நிறுவனத்தின் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம், மேக் கம்ப்யூட்டர்களில் பதிந்து கொடுக்கப்படுகிறது. இதனை நாமாக எந்த கம்ப்யூட்டரிலும் பதிய முடியாது. இதற்கு ஆப்பிள் நிறுவனத்தின் உரிமம் வழங்கும் பழக்கம் ஒரு தடையாக உள்ளது. மேலும், இதற்கான சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை, ஆப்பிள் நிறுவனத்தின் அனுமதி இன்றி இயக்க முடியாது. ஆனாலும், சிலர் இதனைப் பதிந்து இயக்குகின்றனர். அத்தகைய கம்ப்யூட்டர்களை ""ஹேக் இன் டோஷ்” (hackintoshes) என அழைக்கின்றனர்.
6. பி ஓ.எஸ்./ஹைக்கூ (BeOS/ Haiku): Be Inc என்ற நிறுவனம் வழங்கிய ஓ.எஸ். இது. இது 1998 ஆம் ஆண்டிலேயே வெளியானது. மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான பைல்களில் சிறப்பாக இயங்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக இருந்தது. ஆனால், விண்டோஸ் கொடுத்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விளம்பரத்தில் இதனால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. ஹிடாச்சி மற்றும் காம்பேக் நிறுவனங்களிடம், அவர்கள் விற்பனை செய்திடும் கம்ப்யூட்டர்களில் ஹைக்கு சிஸ்டத்தைப் பதிந்து கொடுக்கக் கூடாது என மைக்ரோசாப்ட் உத்தரவே இட்டது. இதனை எதிர்த்து Be Inc நிறுவனம் வழக்கு மன்றம் சென்றது. மைக்ரோசாப்ட் நிறுவனம், நீதிமன்றத்திற்கு வெளியே இந்த வழக்கினை முடித்துக் கொள்ளும் வகையில் 2.35 கோடி டாலர் கொடுத்தது. பின்னர் Be Inc நிறுவனத்தை Palm Inc என்ற நிறுவனம் வாங்கிக் கொண்டது. மைக்ரோசாப்ட் மிக மோசமான வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டதால், இந்த ஓ.எஸ். மக்களைச் சென்றடையவில்லை. சரியாகச் சென்றிருந்தால், விண்டோஸ் இந்த அளவிற்கு வந்திருக்காது என அனைவரும் அந்நாளில் கூறி வந்தனர். இது ஓப்பன் சோர்ஸ் சிஸ்டம் என்பதால், நிச்சயம் இது வெற்றி பெற்றிருக்கலாம்.
7. இ.காம் ஸ்டேஷன் / ஓ.எஸ்/2: மைக்ரோசாப்ட் மற்றும் ஐ.பி.எம். இணைந்து இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை உருவாக்கின. இடையே மைக்ரோசாப்ட் விட்டுவிட, ஐ.பி.எம். இதனைத் தொடர்ந்தது. பின் நாளில், ஓ.எஸ்.2, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் டாஸ் மற்றும் விண்டோஸ் சிஸ்டங்களுக்குப் போட்டியாக இருந்தது. விண்டோஸ் ஜெயித்தது அனைவரும் அறிந்ததே. ஆனால், இன்றும் இந்த பழைய ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கும் ஏ.டி.எம். சாதனங்கள் மற்றும் பழைய பெர்சனல் கம்ப்யூட்டர்களை இயங்கும் நிலையில் காணலாம். இந்த சிஸ்டம் OS/2 Warp என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டது.
இந்த சிஸ்டத்தினை ஐ.பி.எம். இப்போது தொடுவதே இல்லை. கை விட்டுவிட்டது. ஆனால், இதனை தொடர்ந்து உருவாக்கும் உரிமையையும் விநியோகிக்கும் பொறுப்பினையும் Serenity Systems என்ற நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் வடிவமைக்கும் ஓ.எஸ். eComStation என அழைக்கப்படுகிறது. இது சிஸ்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு, கூடுதலாக பல அப்ளிகேஷன்கள், ட்ரைவர்கள் மற்றும் பிற மேம்படுத்தல்கள் தரப்படுகின்றன. இதன் சோதனை சிஸ்டத்தினை இலவசமாக தரவிறக்கம் செய்து பயன்படுத்திப் பார்க்கலாம். செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://www.ecom station.com/
8. ரீ ஆக்ட் ஓ.எஸ். (ReactOS): இலவசமாகக் கிடைக்கக் கூடிய சிஸ்டம். விண்டோஸ் என்.டி. கட்டமைப்பில், ஓப்பன் சோர்ஸ் முறையில் உருவாக்கப்பட்டது. இன்னொரு வகையில் கூறுவது என்றால், இது விண்டோஸ் சிஸ்டத்தின் ஓப்பன் சோர்ஸ் வகை எனலாம். அனைத்து விண்டோஸ் அப்ளிகேஷன்களும் ட்ரைவர்களும் இதில் இயங்கும்படி அமைக்கப்பட்டது. இப்போது என்ற சிஸ்டத்திற்கு இணையாக இதனை அமைக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டுள்ளனர். எனவே, இது முழுமையாகக் கிடைக்கச் சில ஆண்டுகளாகும்.
9. சிலபிள் (Syllable): என்ற சிஸ்டத்திலிருந்து பிரித்து எடுக்கப்பட்டு, ஓப்பன் சோர்ஸ் முறையில் உருவாக்கப்பட்டது. இது பல சாப்ட்வேர் திட்டங்களில் பயன்படுத்தப்பட்டது. சாதாரண பயனாளர்களுக்கு இது உதவவில்லை. மேலும் இதில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கையும் மிகவும் குறைவே.
10. ஸ்கை ஓ.எஸ்.: AtheOS பொழுதுபோக்காக ஆப்பரேட்டிங் சிஸ்டம் உருவாக்குபவர்கள் கொண்டு வந்த ஓ.எஸ். இது. ஆனால், இது இலவசமாகத் தரப்படவில்லை. கட்டணம் செலுத்திப் பெற்றவர்களுக்கு இதன் குறியீடுகள் தரப்பட்டு மேலும் சிறப்பாக அமைத்திட வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. 2009 ஆம் ஆண்டில் இதில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் முடிவிற்குக் கொண்டு வரப்பட்டன. 2013 வரை இதன் சோதனைத் தொகுப்பு இலவசமாகத் தரப்பட்டது.

%d bloggers like this: