Daily Archives: செப்ரெம்பர் 9th, 2014

மோடி 100 நாள்….ஓர் அலசல்…

இவர் ஆட்சிக்கு வந்தால் இந்தியா நவீனமயமாகும்; இந்தியாவின் பொருளாதார நிலை உயரும்; இவர்தான் இந்தியாவின் டிஜிட்டல் மேன்… மோடி பிரதமராவதற்குமுன் இப்படித்தான் செய்திகள் முன்வைக்கப்பட்டன. மக்களும் ஆட்சி மாற்றத்தை விரும்பி மோடியை பிரதமராக்கினார்கள். பிரதமரான மோடி ஆட்சியைப் பிடித்ததும் தன் அமைச்சர்களிடம் 100 நாட்களுக்கான ப்ளூ பிரின்ட்டை தயார் செய்யச் சொன்னார்.

உடனடியாக தொடங்கப்பட வேண்டிய திட்டங்களை வரிசைப்படுத்தினார். இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு மாற்றிக் காட்டுவோம் என்று கடந்த மே 26-ம் தேதி பிரதமராகப் பதவியேற்றார்  மோடி. அவரது ஆட்சியின் 100-வது நாளான செப்டம்பர் 2-ம் தேதிக்குள் அவர் சொன்ன வாக்குறுதிகளையும், செயல்திட்டங்களையும் நிறைவேற்றினாரா? மோடி தனது முதல் 100 நாட்களில் என்ன செய்தார் என்பது பற்றி விரிவான அலசல் இதோ…

மோடி ஆட்சிக்கு வந்ததும் அவர் அறிவித்த 10 அம்ச கோரிக்கையில் மிகவும் முக்கியமானது,  ‘கல்வி, சுகாதாரம், தண்ணீர், எரிசக்தி மற்றும் சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு முன்னுரிமை வழங்கப்படும்’ என்பதுதான்.

Continue reading →

நலம் 360’ – 13

சீன மருத்துவ, சித்த, ஆயுர்வேத மருத்துவ இலக்கியங்களில் பன்னெடுங்காலத்துக்கு முன்பே தைராய்டு கோளத்தின் நோய்கள் பேசப்பட்டுள்ளன. தைராய்டு கோளத்தில் வரும் முன் கழுத்து வீக்கத்தை (Goitre) லியோனார்டோ டாவின்சியின் உலகப் புகழ்பெற்ற ‘Madonna of the Carnation’ ஓவியம் சித்திரித்திருக்கிறது. தைராய்டு என்பது, முன் கழுத்தில் மூச்சுக்குழலில் அமைந்திருக்கும் பட்டாம்பூச்சி வடிவக் கோளம். அந்த வடிவம் ‘தைராய்டு’ என்ற பழங்காலப் போர் ஆயுதம்போல இருந்ததாக உணர்ந்த தாமஸ் வார்ட்டன் என்கிற விஞ்ஞானி, அந்தக் கோளத்துக்கு ‘தைராய்டு’ எனப் பெயர் சூட்டினார். இந்தக் கோளம் சுரக்கும் சுரப்பு குறைந்தால்… ஹைப்போதைராய்டு, அளவு அதிகமானால்… ஹைப்பர்தைராய்டு, முன் கழுத்து வீங்கியிருந்தால்… ‘காய்ட்டர்’ என்கிற கோளவீக்கம் என நோய்களாக அறியப்படுகின்றன. இவ்வளவு நீண்ட வரலாறு கொண்ட இந்த நோயை, இன்றளவிலும் முழுமையாகக் குணப்படுத்தும் மருந்து ஆதாரபூர்வமாகக் கண்டறியப்படவில்லை. காலை எழுந்து பல் துலக்கியதும், முதல் வேலையாக தைராக்சின் மருந்தை விழுங்குவோர் இப்போது அநேகர்.

Continue reading →

தூக்கத்தை தொலைக்கும் கணினிகள்

இன்றைய உலகில், கம்ப்யூட்டரின் பயன்பாடு அதிகம். கம்ப்யூட்டர் இல்லாத அலுவலகம் மட்டுமல்ல; வீடும் இல்லை. அதனால், ஒவ்வொருவரும் கம்ப்யூட்டர் முன் அதிக நேரம் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அது நல்லதா; கெட்டதா என்பது குறித்து, அமெரிக்க விஞ்ஞானிகள் சமீபத்தில் ஒரு ஆய்வு செய்துள்ளனர். அதன்மூலம், அவர்கள் கண்டுபிடித்த விஷயம், தூக்கம் தொலைகிறது என்பது தான்.

Continue reading →

கவர்ச்சி வேண்டாமே கண்ணியம் பேசும் உங்கள் பெருமையை

சமுதாயத்தில் ஆண் ஒரு காரியத்தை செய்து விட்டால், அதை ஒரு சம்பவமாக நினைத்து தாண்டி போகும் பட்சத்தில், ஒரு பெண் செய்யும் சின்ன தவறான காரியம் கூட, ஒரு வரலாறாக, ஒரு தலைமுறையின் பதிவாக பார்க்கும் சூழ்நிலை உள்ளது.
ஒரு குடும்பத்தின் வேரும், அந்த குடும்பம் என்ற வாகனத்தை, சரியான பாதையில் நடத்திச் செல்லும் ஓட்டுனரும் பெண் தான். படிப்பறிவு இல்லாத காலத்திலேயே, பெண்கள் தங்கள் குடும்பத்தை திறம்பட நடத்தி, தங்கள் திறமையை நிலை நாட்டினர். ஒவ்வொரு விஷயத்தையும், ஒவ்வொரு பிரச்னைக்கான தீர்வையும், அவர்கள் குடும்பத்தை நடத்துவதால் ஏற்படுகிற அனுபவத்தினாலேயே தெரிந்து, புரிந்து ஜெயித்துக் காட்டினர்.
‘புகழ் பெற்ற, அனைவராலும் பாராட்டப்படுகிற பெண்ணாக சாதிப்பதை விட, ஒரு குடும்பத்தை வெற்றிகரமாக நடத்துவது பெரிய காயம்…’ என்று, வாழ்க்கை அனுபவம் நிறைந்த ஒரு பெண் கூறுகிறார். இது, 100 சதவீதம் உண்மை.
எதற்கு இந்த பீடிகை தெரியுமா?

Continue reading →

பளபள சருமத்துக்கு பிஸ்தா

சுவை மிகுந்த பிஸ்தா ஆரோக்கியத்தின் அடையாளம். வலிமையை அளிக்கக்கூடியது.  இதி்ல் ஏராளமான ஊட்டச்சத்துக்கள், மருத்துவ நலன்கள் நிறைவாக உள்ளன. பாதாம் முந்திரியைப் போலவே… புரதம், கொழுப்பு மற்றும் தாது உப்புக்கள் நிறைவாக உள்ளன.

சத்துக்கள்  பலன்கள்: 100 கிராம் பிஸ்தாவைச் சாப்பிடும்போது, 557 கலோரி ஆற்றல் கிடைக்கிறது. மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் இதில் உள்ளன. இதைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் கெட்ட கொழுப்பின் அளவு குறைந்து நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கும்.

Continue reading →

ஏகாதசி விரதத்தின் பலன்!

கடவுள் மீது முழு நம்பிக்கை வைத்து பக்தி செலுத்தினால், நமக்கு வரும் இடர்களை அவனே தாங்கிக் கொள்வான் என்பதை உணர்த்தும் புராணக்கதை இது:
சூரிய வம்சத்து அரசர் ருக்மாங்கதன்; நீதி நெறி முறைப்படி நல்லாட்சி நடத்தி வந்தார். அவர் பெருமாள் மீது கொண்ட அளவுக்கடந்த பக்தியினால், ஏகாதசி விரதத்தை தவறாமல் கடைபிடித்து வந்தார். அத்துடன், தன் நாட்டு மக்களும் ஏகாதசி விரதம் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதன் காரணமாக அனைத்து மக்களும் ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்து வந்ததால், அந்நாட்டில் இறந்த அனைவரும் சொர்க்கத்தையே அடைந்தனர்; எமலோகத்திற்கு ஒருவர் கூட செல்லவில்லை. அதனால், எமதர்மன் பிரம்மதேவரிடம் சென்று முறையிட, அவர் மோகினி எனும் ஒரு அழகிய பெண்ணை சிருஷ்டித்து, ‘நீ போய் ருக்மாங்கதனின் ஏகாதசி விரதத்தை கெடுத்து வா…’ என அனுப்பினார்.
அதன்படி மோகினியும் வர, அவள் வீசிய மோக வலையில் அகப்பட்ட அரசர், தன்னை மணம் செய்து கொள்ள வேண்டினார். மோகினியோ, ‘நான் என்ன சொன்னாலும், அதை கேட்டு நடக்க வேண்டும்; மறுக்கக் கூடாது…’ என நிபந்தனை விதித்தாள்.
மன்னர் ஒப்புக் கொள்ள, திருமணம் நடந்தது. மோகினியுடன் மன்னர் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தாலும், வழக்கம் போல் அரசனும், அந்நாட்டு மக்களும் ஏகாதசி விரதத்தை கடைபிடித்து வந்தனர். ஏகாதசி விரதத்தை நிறுத்துவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியிருந்தாள் மோகினி.
ஒருநாள், மன்னர் மோகினியுடன் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்த போது, ஏகாதசி விரதம் பற்றிய அறிவிப்புக்கான முரசொலி கேட்டது. அதைக் கேட்டதும் மன்னர் உடனே எழுந்து, ஆலயத்திற்கு புறப்பட தயாரானார். மோகினி அவரைத் தடுத்து, ‘மன்னா… என்னை மணம் செய்து கொள்ளும் போது என் விருப்பப்படி நடப்பேன் என்று சொன்னீர்களல்லவா… அப்படி கொடுத்த வாக்கின்படி, இப்போது நீங்கள் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க கூடாது…’ என்றாள்.
‘மோகினி…ஏகாதசி விரதத்தின் பேரில் எனக்குள்ள விருப்பத்தை நீ அறிவாய். ஆகையால், அதை தவிர வேறு எது வேண்டுமானாலும் கேள் தருகிறேன்…’ என்றார்.
மோகினியும் சளைக்கவில்லை. ‘அப்படியானால், உங்கள் மகனின் தலையை வெட்டிக் கொடுங்கள்… எனக் கேட்டாள்.
அதைக்கேட்ட மன்னர் மனம் கலங்கி, அவளிடம், ‘வேறு எதையாவது கேள்’ என, மன்றாடிப் பார்த்தார்; மோகினி ஒப்புக் கொள்ளவில்லை. அந்தநேரம் அங்கு வந்த மன்னரின் மகன், விஷயத்தை அறிந்து, ‘தந்தையே… பூமியில் ஜனனம் எடுத்து விட்டாலே மரணம் நிச்சயம்; என்றோ போகக் கூடிய என் உயிர், என் தந்தையின் கொள்கைக்காக போகிறதென்றால் எனக்கு சந்தோஷமே… வெட்டுங்கள் என் தலையை…’ என்றான்.
வேறு வழியின்றி, மன்னர் தன் மகனை வெட்ட துணிந்த போது, பகவான் நாராயணன், ருக்மாங்கதனுக்கு காட்சியளித்து, அருள் புரிந்தார்; இளவரசன் உயிர் பிழைத்தான். தன் எண்ணம் பலிக்காததால், மோகினி அங்கிருந்து விலகினாள்.
ஏகாதசி விரதத்தின் மீது ருக்மாங்கதன் கொண்ட நம்பிக்கையே, அவனுக்கு வந்த இடர்களை தவிடு பொடியாக்கி, அவனை காத்தது.