Daily Archives: செப்ரெம்பர் 10th, 2014

சரக்கு… பிரியாணி… சிகரெட்… வயிற்றெரிச்சலுக்கு இது போதும்!

உணவு செரிமானம் ஆவதற்கு தேவையான அமிலம், வயிற்றையும் வாயையும் இணைக்கும், ‘ஈசோபாகஸ்’ எனும் பகுதியில் படரும்போது, புளிப்பு தன்மையுடன் எரிச்சல் ஏற்படும்; நாளடைவில் புண்ணாக மாறும். இரைப்பையில் காணப்படும் ‘ஹைட்ரோ குளோரிக்’ அமிலம், உணவுக் குழாய்க்குள் நுழைவதால் ஏற்படும் விளைவு தான், நெஞ்சு எரிச்சல்.
மது, சிகரெட், ஸ்வீட், சாக்லெட் ஆகியவை தான் வயிற்றெரிச்சலுக்கு மூலக் காரணிகள். வயிறு புடைக்க சாப்பிடுதல், வான்கோழி போல் மின்னல் வேகத்தில் சாப்பிடுதல், சரியாக மென்று தின்னாமல் அள்ளி விடுவது போன்ற செயல்கள் தான், வயிற்றில் எரிச்சலை கிளப்பி விடுகிறது
Continue reading →

மிஸ்டர் கழுகு: ஸ்டாலின் அடுத்த அஸ்திரமா தா.மோ.அன்பரசன்?

கடந்த இதழ் ஜூ.வி-யை கையோடு எடுத்து வந்த கழுகார், ”ஐ.ஏ.எஸ் அதிகாரியான சகாயத்தை 23 வருஷத்துல 23 இடத்துக்கு டிரான்ஸ்ஃபர் செஞ்சிட்டாங்கன்னு நான் சொல்லியிருந்தேன் இல்லையா… இப்போது அந்த எண்ணிக்கை 24 ஆக மாறிவிட்டது. கோ-ஆப்டெக்ஸில் இருந்து இந்திய மருந்து மற்றும் ஹோமியோபதி துறைக்கு மாற்றினார்கள் இல்லையா… அங்கே போய் அவர் பணியில் சேருவதற்கு முன்பே, அறிவியல் இயக்கம் என்ற துறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். ஒரே இரவில் இந்த அதிரடி நடந்திருக்கிறது” என்று சொல்ல ஆரம்பித்தார்.

”ஓர் இரவில் என்ன நடந்தது?”

”சகாயத்தை கோ-ஆப்டெக்ஸில் இருந்து மாற்ற வேண்டும் என்று முடிவெடுத்ததும், இந்திய மருந்து மற்றும் ஹோமியோபதி துறைக்கு மாற்றப்பட்டார். இந்தத் துறையில் கிட்டதட்ட 8 ஆயிரம் பேருக்கு மேல் வேலை செய்கிறார்கள். இது சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் வரும். சகாயம் இங்கே மாற்றப்பட்டது, சிலருக்குப் பிடிக்கவில்லையாம். ‘கைத்தறித் துறை மாதிரியே இங்கேயும் சிக்கல் வருமே!’ என்று சொன்னார்களாம். அதன் பிறகு விவகாரம் முதல்வரிடம் போனதாம். அன்று இரவு மீண்டும் சகாயத்தை அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட அறிவிப்பு வெளியானது.”

”அறிவியல் நகரத்தின் துணைத் தலைவரா… கேள்விப்படாத துறையாக இருக்கிறதே?”

Continue reading →

புற்றுநோய் செல்களை அழிக்கும் புதிய கருவி!

மனிதகுலத்தை மருளவைக்கும் நோய்களில் புற்றுநோய்க்குதான் முதல் இடம். இப்போதெல்லாம் காய்ச்சல், தலைவலியைப் போல, ‘அவருக்கு பிளட் கேன்சர்’, ‘இவருக்கு பிரெஸ்ட் கேன்சர்’ என்று சர்வசாதாரணமாகக் கேட்கமுடிகிறது. நோயாளிகளை அதிக சிரமத்துக்கு உள்ளாக்காமல், அதே சமயத்தில் வேகம், நேரம், செயல்பாட்டுத்தன்மை என நோய்களை கண்டறியும், அதிநவீன மருத்துவக் கருவிகளும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டேயிருக் கின்றன.

Continue reading →

ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி

‘வாழ்தல் உயிர்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து.’
– ஆராய்ந்தறிந்த நல்ல அணிகலன்களை அணிந்த இப்பெண்ணோடு சேர்ந்திருத்தல், உயிர், உடலோடு சேர்ந்து இருக்கும் வாழ்வு போன்றது. இவளைப் பிரிந்து வாழ்தல், உயிர் உடலிலிருந்து நீங்கிச் சாதலைப் போல் துன்பம்
தருவதாம்.
ஓர் இளம்பெண் அணியும் அணிகலன்களிடையே, நன்கு ஆராய்ந்தறிந்து மங்களகரமாக அணிவது, மூக்குத்தி தான். மூக்குத்தி அணிந்திருப்பதே ஒரு பெண்ணிற்கு பெருமையும், கவுரவத்தையும் கொடுக்கிறது.
உலகம் முழுவதும் அணியப்படுகிற உடைகளாகட்டும், நகைகளாகட்டும், அவரவரின் நாகரிகத்தை பறை சாற்ற, தங்களை முன்னிலைப்படுத்த என்பதற்காக தான் இருக்கும். ஆனால், இந்தியப் பெண்கள் அணியும் மூக்குத்தி, அழகுக்காக மட்டுமல்ல; ஆரோக்கியத்தின்
குறியீடாகவும் கருதப்படுகிறது.
பெண்களின் உடம்பில், தலை முதல் கால் வரை, நகைகளை அணியலாம். ஒவ்வொரு நகைக்கும், ஓர் அர்த்தம் உண்டு. மூக்குத்தி, பெரும் பணக்காரர்கள் மட்டுமல்ல; பரம ஏழைகள் கூட கண்டிப்பாக அணிகிற ஒரு நகை.
மூக்கு என்ற மனிதனின் ஓர் உடல் உறுப்பு, வாசனை நுகர, சுவாசிக்க மட்டுமல்ல, பல ஆராய்ச்சிகளுக்கு பின், மூக்கு, ‘எமோஷனல், செக்சூவல், ரொமான்ட்டிக்’ போன்ற உணர்ச்சிகளின் ஆதாரம் என, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மூக்கு குத்தும் போது அழுத்தம் கொடுக்கப்படும் நரம்பு, மகப்பேறு சமயத்தில், சுலபமான, வலியில்லாத குழந்தை பிறப்பிற்கு வழிவகுக்கும் என, இந்திய
மருத்துவ ஆராய்ச்சி கூறுகிறது.

Continue reading →

வாழ்நாளை கூட்டும் வால்நட்

 

சுவை சற்று குறைவாக இருந்தாலும், இதை சில கேக் வகைகள் மற்றும் சாக்லெட்டில் சேர்த்து சாப்பிட்டிருப்போம். தொடர்ந்து சாப்பிட்டால் ஆளை மயக்கும் அளவுக்கு சுவை கொண்டதாகத் தோன்றும். ஆரோக்கியமான தூக்கத்துக்கு மூளையில் மெலட்டோனின் என்ற ஹார்மோன் சுரப்பு மிகவும் அவசியம். வால்நட்டில் இயற்கையான முறையில் மெலட்டோனின் ஹார்மோன் இருப்பதால், தூக்கத்தை ஒழுங்குபடுத்துவதில் வால்நட் முக்கியப் பங்காற்றுகிறது. மேலும் டிமென்ஷியா என்ற ஞாபக மறதி நோய்க்கான வாய்ப்பையும் இது குறைக்கிறது.

சத்துக்கள்  பலன்கள்:  இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், இதயத்துக்கு மிகவும் ஆரோக்கியமானது என்று பரிந்துரைக்கப்படுகிறது. ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பு அளவை அதிகரிக்கச் செய்யும்.  மேலும் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுவதன் மூலம் இதயம் மேலும் காக்கப்படுகிறது.

Continue reading →