Daily Archives: செப்ரெம்பர் 11th, 2014

பால் கலப்படத்துக்கும் பதவி பறிப்புக்கும் சம்பந்தம் உண்டா?

”உயிர் கொடுத்தார் கடவுள். வெற்றுடலைப் பெற்றெடுத்து வளர்த்தாள் தாய். ஆனால், இன்று கற்றவரும் உற்றாரும் உறவினரும் புகழுரைக்க, பெற்ற தாய்க்கும் மேலாக பெரும்பேறு எனக்கும் என் குடும்பத்துக்கும் அளித்து, எங்களை எல்லாம் ஆளாக்கும், பாதுகாக்கும், எங்கள் குடும்ப தெய்வம் எங்கள் அம்மா!” – பால்வளத் துறை மானிய கோரிக்கையின்போது ஜூலை 25-ம் தேதி சட்டசபையில் அமைச்சர் மாதவரம் மூர்த்தி உதிர்த்த வார்த்தைகள் இவை.

அமைச்சராக்கிய அம்மாவே இப்போது மூர்த்தியை முன்னாள் அமைச்சர் ஆக்கிவிட்டார்.

அம்மா கேபினட்டில் அமைச்சர்கள் வெளியேற்றப்படுவதற்கு உறவுகள், சொந்த பிரச்னைகள், கோஷ்டி அரசியல் ஆகியவைதான் தூக்கலான காரணமாக இருக்கும். ஆனால், மாதவரம் மூர்த்தியை வெளியேற்றியதற்கு பால் பிரச்னையும் முக்கியமான காரணமாம்.

Continue reading →

பார்க்க, ருசிக்க நல்லா தான் இருக்கும் ‘புரோட்டா…’ – உடலுக்கு ஆபத்துங்கிறது எவ்ளோ பேருக்கு தெரியும்?

நகரங்களில் மட்டுமல்ல, தமிழகத்தின் பட்டி தொட்டியென, புரோட்டா கடைகள் இல்லாத இடமே இல்லை. புரோட்டா, கொத்து புரோட்டா, விருதுநகர் எண்ணெய் புரோட்டா, தூத்துக்குடி புரோட்டா, சில்லி புரோட்டா என, சொல்லும்போதே நாக்கில் எச்சில் ஊறும். சிக்கன், மட்டன் குருமா, காய்கறி குருமாவோடு அவற்றை ருசிப்பதில், நம்மவர்களுக்கு அலாதி பிரியம் தான்.
விடுமுறை நாள் என்றால், விதவிதமான புரோட்டா கடைகளை தேடி அலையும் இளைஞர்கள் ஏராளம். தமிழகத்தில், அரிசி உணவு போன்று மக்களோடு கலந்து விட்டது புரோட்டா. பார்க்க, ருசிக்க நல்லாதான் இருக்கு… ருசித்து சாப்பிடும் புரோட்டா பிரியர்களுக்கு, அதனால் ஏற்படும் ஆபத்து பற்றி தெரியாது என்பதே உண்மை.
‘புரோட்டா சாப்பிடுவது, ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதாகும்’ என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். அப்படி என்ன தான் பிரச்னை… ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்றதை கேளுங்க….

Continue reading →

அடைமழையில் அழகு காக்க!

ஜில்லுன்னு ஒரு மழைக்காலம் தொடங்கியாச்சு!  மழைக்காலத்தை நினைத்தாலே மனசுக்குள்ளும் மழையடிக்கும். ஆனால் ஈரப்பதம் நிறைந்த சூழல் நம் சருமத்தைப் பாதிக்கும் என்பதுதான் சந்தோஷத்திலும் நெருடும் சங்கடம். மழைக்காலத்தில் சருமத்தைப் பராமரிக்கும் வழிகளை விவரிக்கிறார் சென்னை நியூஸ்டைல் டிரெண்டு அழகுக்கலை நிபுணர் ராதா.

”எண்ணெய் சருமத்தினரும், வறண்ட சருமத்தினரும்தான் இந்த பருவநிலையில் அதிகப் பாதிப்புக்கு உள்ளாவார்கள். எப்போதும் சருமம் உலர்வாகவும் இல்லாமல், அதிக எண்ணெய்ப் பசையுடனும் இல்லாமல் இருப்பவர்களுக்கு எந்தப் பிரச்னையும் கிடையாது.

Continue reading →

நிறுவனத்தில் நிலைத்திருக்க…அறிவுத்திறனை மேம்படுத்துங்கள்!

‘‘ஐ.டி துறையில் வேலை பார்த்து வருகிறார் சபரி. அந்த நிறுவனம், நன்கு வேலை செய்பவர்களை முதல் பக்கெட் பிரிவிலும், சுமாராக வேலை செய்பவர்களை இரண்டாவது பக்கெட் பிரிவிலும், மிகச் சுமாராக வேலை செய்பவர்களை மூன்றாவது பக்கெட் பிரிவிலும், மோசமாக வேலை செய்பவர்களை நான்காவது பக்கெட் பிரிவிலும் வைத்திருக்கும்.

நான்காம் பக்கெட் பிரிவில் இருப்பவர்களின் வேலை செய்யும் திறனானது மேலும் குறைந்தால், நிறுவனத்தைவிட்டே அந்தப் பணியாளரை வெளியேற்றிவிடுவார்கள். சபரி தற்போது நான்காவது பக்கெட் பிரிவில் இருக்கிறார். இனியாவது  அவர் சுதாரித்துக்கொண்டு தன்னைத் திருத்திக் கொள்ளவில்லை எனில், வேலையை விட்டு வெளியேற வேண்டியிருக்கும்.  
சபரியின் இந்த இக்கட்டான சூழ்நிலை நமக்கும் உருவாகாமல் இருக்கவும், பக்கெட் ஒன்றிலேயே தொடர்ந்து நாம் இருக்கவும் என்ன செய்ய வேண்டும்? அறிவைப் பட்டைதீட்டுங்கள்!

Continue reading →

உடல் எடையை அதிகரிக்கும் உலர்திராட்சை

திராட்சையில் 16 சதவிகிதத்துக்கும் குறைவான ஈரப்பதம் உள்ளதையே உலர் திராட்சை என்கிறார்கள். மிகவும் பழைய உலர் திராட்சையை வாங்குவதைவிட நடுத்தரமானதை தேர்ந்தெடுத்து வாங்குவது சிறந்தது. உலர் திராட்சையில் அதிக அளவு ஆற்றல், ஊட்டச்சத்துக்கள், தாது உப்புக்கள் உள்ளன.  மேலும், இதில் பல ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல், ரத்தசோகை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கும் தீர்வளிக்கிறது.சத்துக்கள்  பலன்கள்: இதில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. இது நீரில் கரையாத சுருங்கிய நிலையில் உள்ள நார்ச்சத்து, வயிற்றுக்குள் சென்றதும் நீரை உறிஞ்சிவிடும்.  இதனால் சிறுகுடலில் தங்கிய உணவுப் பொருட்களை இயற்கையான முறையில் வெளியேற்ற உதவும். நார்ச்சத்தானது வயிற்றில் உள்ள நீர்ச்சத்தை உறிஞ்சுவதால் வயிற்றுப்போக்கு பிரச்னைக்கு இயற்கையான முறையில் தீர்வு அளிக்கிறது.

இதில் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள், ஆற்றல் உள்ளதால், உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம். விளையாட்டு வீரர்கள், கட்டுக்கோப்பான உடல் அமைப்பைப் பெற விரும்புகிறவர்களுக்கு இது ஏற்ற உணவுப் பொருள். சிறிது கூட கொலஸ்ட்ரால் இல்லாமல் இது உடனடியாக ஆற்றலை தருவதால், உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது.

Continue reading →

உணவு யுத்தம்!-35

இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய ரயில்களில் தொடர்ந்து பயணம் செய்து கொண்டிருப்பவன் என்ற முறையிலும் இந்தியாவின் 16 ரயில்வே மண்டலங்களிலும் பயணம் செய்திருப்பவன் என்ற முறையிலும் நெடுநாட்களாக எனக்குள்ளே இருக்கும் தீராக்குறை, ரயிலில் தரப்படும் உணவு.

Continue reading →