Daily Archives: செப்ரெம்பர் 12th, 2014

மைக்ரோசாப்ட் ஒன் ட்ரைவ்

இலவசமாக இணைய வெளியில் நம் பைல்களைத் தேக்கி வைத்திட மைக்ரோசாப்ட் நிறுவனம் OneDrive வசதியை வழங்கியுள்ளது. இது எம்.எஸ். ஆபீஸ் பைல்களை மட்டும் சேவ் செய்திடத் தரப்பட்ட வசதி அல்ல. இதன் மூலம் நம் பைல்கள், நம் போட்டோக்கள் மற்றும் டாகுமெண்ட்களைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளலாம். அதற்கான உதவிக் குறிப்புகள் கீழே தரப்படுகின்றன.
1. ஒன் ட்ரைவ் போல்டரை நகர்த்த: தற்போதைய விண்டோஸ் சிஸ்டத்தில் பைல்களை ஒருங்கிணைத்து சேவ் செய்திடலாம். நாம் உருவாக்கும் பைல்கள் நம் கம்ப்யூட்டரில் மட்டுமின்றி, நமக்கெனத் தரப்பட்ட க்ளவ்ட் ஸ்டோ ரேஜ் ஒன் ட்ரைவிலும் பதியப்படுகின்றன. நம் விண்டோஸ் பெர்சனல் கம்ப்யூட்டரில், இந்த பைல்கள் (synced files) பயனாளரின் ப்ரபைல் போல்டரில் ஒரு துணை போல்டரில் காட்டப்படுகின்றன. ஆனால், இந்த பைல்களை இன்னொரு போல்டரில் அல்லது இன்னொரு தனி ட்ரைவில் நாம் எடுத்துச் சென்று வைக்கலாம்.

Continue reading →

‘உண்மைகளை மறைத்து வாதிட்டுள்ளனர்!’ ஜெயலலிதாவுக்கு எதிராக தி.மு.க. வக்கீல்

”இன்றைய சூழ்நிலையில் உயர் பதவியில் இருப்பவர்கள் மீது ஒரு வழக்குத் தொடரப்பட்டால் அந்த வழக்கை விரைவாக நடத்த சிரமப்பட வேண்டியிருக்கிறது. அப்படிப்பட்ட காலகட்டத்தில் இந்த வழக்கு, முடிவை எட்டியிருப்பது மகிழ்ச்சியான விஷயம். மக்களுக்கு நிச்சயம் சட்டத்தின் மீது நம்பிக்கை ஏற்படும்!” – ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் தி.மு.க தரப்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர் குமரேசனை சந்தித்தபோது இப்படிச் சொன்னார். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

”வழக்கு தாமதமானதற்கு பேராசிரியர் அன்பழகன் தான் காரணம் என்று சசிகலாவின் வழக்கறிஞர் மணிசங்கர் சொல்லியிருக்கிறாரே?”

Continue reading →

வருஷம் ஆனாலும் வயது ஏறாது இளமைக்கு 25 வழிகள்!

யாராவது உங்களை ‘அங்கிள்’ என்றோ ‘ஆன்ட்டி’ என்றோ கூப்பிட்டால், நீங்கள் வருத்தப்படத் தொடங்குகிறீர்களா? ஆண்டொன்று போனால் வயதொன்று போகும். ஆனாலும் வயதாவதை ஒப்புக்கொள்ளாமல் மனசு மல்லுக்கட்டும். ”சான்ஸே இல்லை, அன்னைக்குப் பார்த்த மாதிரியே நதியா இன்னைக்கும் இருக்காங்க’ என்று பெருமூச்சுவிடாத பெண்களோ, ”சரத்குமாருக்கு 60 வயசு ஆச்சாம். எப்படிய்யா உடம்பை மெயின்டெய்ன் பண்றாரு’ என்று பொறாமையோடு புலம்பாத ஆண்களோ இருக்கிறார்களா என்ன?

Continue reading →

பார்வை கூர்மைக்கு அப்ரிகாட்

சூரியனின் தங்க முட்டை என்று கிரேக்க மொழியில் அழைக்கப்படும் ஊட்டச்சத்துக்கள், தாது உப்புக்கள் நிறைந்த பழம் அப்ரிகாட். பழத்துக்கு எந்த பாதிப்பும் இன்றி நீர்ச்சத்து மட்டும் வெளியேற்றப்படுகிறது.

சத்துக்கள்  பலன்கள்:  கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, சி உள்ளிட்ட சத்துக்கள் இதில் நிறைவாக உள்ளன. இதில் அதிக அளவில் இரும்புச்சத்து உள்ளதால், ரத்த அணுக்கள் உற்பத்திக்குப் பெரிதும் உதவியாக இருக்கிறது. இது  ரத்த சோகையை வராமல் தடுக்கும்.  ரத்த சோகை வந்தவர்களுக்கு அருமருந்தாகவும் அப்ரிகாட் இருக்கிறது.  எனவே, பெண்கள் மாதவிலக்கு நேரத்தில் இந்தப் பழத்தை எடுத்துக்கொள்வது பெரிதும் பயனளிக்கும். குடலில் தேவையற்ற பொருட்கள் தங்குவதை வெளியேற்றி செரிமான மண்டலத்தைத் தூய்மைப்படுத்துகிறது.

Continue reading →

நீரிழிவு நோயாளிகளுக்கோர் வரப்பிரசாதம்

நீரிழிவு நோயின் தலைநகரமான, இந்தியாவில் தற்போது, 6.24 கோடி நீரிழிவு நோயாளிகளும், 7.72 கோடி பேர், நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையிலும் உள்ளனர். இத்தகைய நிலைக்கு காரணம், துரிதமான பொருளாதார மற்றும் உணவு முறை மாற்றமே காரணம்.
இன்றைய நகரமயமாக்கலின் தாக்கத்தால் ஏற்பட்ட உணவு முறை மாற்றத்தில் சுத்திகரிக்கப்பட்ட மாவுப் பொருட்கள், கொழுப்பு மற்றும் விலங்குகளிலிருந்து பெறப்படும் உணவு வகைகளால், இந்த சத்துணவு மாற்றம் பெருமளவு நிகழ்கிறது. இந்த உணவு முறை மாற்றம் நீடித்த அல்லது நாட்பட்ட நோய்கள் தோன்றுவதற்கு முக்கிய பங்காற்றுகிறது.
மனிதனுக்குத் தேவையான சத்துகளை வழங்குவதில், தானிய வகைகள் பெரும் பங்காற்றுகின்றன. நம்மில் பெரும்பாலானவர்களுக்கு அரிசி உணவே வாழ்வாதாரமாக உள்ளது. இத்தகைய அரிசியே மனிதனுக்குத் தோன்றும் நோய்களின் ஆதாரமாக விளங்குகிறது.

Continue reading →

மனிதன் மாறி விட்டான்!-19

மனிதனில் மட்டும்தான் பேச்சு உறுப்பாக நாக்கு இருக்கிறது!

ஒட்டகச்சிவிங்கிகளில் உணவைப் பிடிக்கவும், பூனைகளில் திரவங்களை நக்கவும், பாம்புகளில் சுற்றுச்சூழலை நுண்ணுரவும், நாய்களில் வெப்பத்தைத் தணிக்கவும், பச்சோந்திகளிலும், தேரைகளிலும் தாக்குகிற உறுப்பாகவும், எறும்புண்ணிகளில் பொறியாகவும் செயல்படுகின்றன.  மனிதன் அதனை பேசுவதற்கும் சேர்த்துப் பயன்படுத்துகிறான்.

Continue reading →