Daily Archives: செப்ரெம்பர் 13th, 2014

மிஸ்டர் கழுகு: முன்கூட்டியே ராஜினாமா?

கழுகார் உள்ளே நுழையும்போதே, ”எங்கே போனாலும் ‘செப்டம்பர் 20-ம் தேதி என்ன நடக்கும்?’ என்பதுதான் கேள்வியாக இருக்கிறது!” என்று சொன்னபடியே வந்தார்.

”சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை வைத்துத்தானே அனைத்து நகர்வுகளும் இருக்கப்போகிறது. அதனால்தான் அனைவரும் அதைப்பற்றியே கேட்கிறார்கள்” என்றோம் நாம். தலையாட்டியபடியே சொல்ல ஆரம்பித்தார் கழுகார்.

”ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 20-ம் தேதி வரப்போகிறது. தீர்ப்பின் வடிவத்தை நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா எழுதிக்கொண்டு வருகிறார். சொத்துக்குவிப்பு வழக்கு நடைபெற்ற சிறப்பு நீதிமன்றம், நீதிபதியின் வீடு மற்றும் அவரின் உறவினர்கள் அனைவரையும் மத்திய, மாநில அரசின் உளவுத் துறை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டனர். அனைவருமே கண்காணிக்கப்படுகின்றனர். நீதிபதி குன்ஹா மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்களின் மொபைல் நம்பர்களை உளவுத் துறையினர் வேவு பார்க்க ஆரம்பித்துவிட்டனர். ஆங்காங்கே சி.சி.டி.வி கேமராக்கள் மூலமும் வாட்ச் செய்துகொண்டு இருக்கிறது உளவுத் துறை. தவிர, தனியார் உளவு நிறுவனங்களும் வேவு பார்த்துக்கொண்டிருக்கின்றன.

Continue reading →

பெப்டிக் அல்சர் அறிகுறிகளை அறிவோம்

நேரத்துக்கு சரியா சாப்பிட மாட்டேன். அதுதான் அல்சர் வந்திடுச்சு’  இப்போதெல்லாம் சர்வசாதாரணமாகக் கேட்கும் புலம்பல் இது. அல்சர் பற்றி கொஞ்சம் அலசு வோமா? உணவுக்குழாய், இரைப்பை மற்றும் சிறுகுடலின் முன்பகுதி உட்சுவரில் தோன்றும் புண்களை ‘குடல் புண்’ என்கிறோம். வயிற்று வலிதான் இதன் பொதுவான அறிகுறி.

வகை

Continue reading →

வேர்ட்: ஓவர் டைப் நிலை

வேர்ட் புரோகிராமில், ""ஓவர்டைப் நிலை” என்பது, ஏற்கனவே அமைக்கப்பட்ட வரியில், நாம் டை செய்திடும் டெக்ஸ்ட், வலதுபுறமாக இருக்கும் டெக்ஸ்ட்டை நீக்கும் நிலையாகும். இந்த நிலை இயக்கப்படாத போது, நாம் ஏற்கனவே அமைந்த வரியில், டைப் செய்தால், அது இடையே செருகலாக அமைக்கப்படும். எனவே, இந்த செயல் தன்மையை வைத்து, ஓவர் டைப் நிலை இயக்கப்பட்டுள்ளதா என்று அறிந்து கொள்ளலாம். அப்படி இல்லாமல், டாகுமெண்ட் பக்கத்தினைப் பார்த்த நிலையில் இதனை உணர்ந்து கொள்ள வேண்டும் எனில், ஸ்டேட்டஸ் பாரில் அதனை அமைத்துக் கொள்ளவும் எளிதான வழி ஒன்று

Continue reading →

சேமிப்பை பெருக்க சிறப்பான 5 வழிகள்!

சேமிப்புதான் ஒரு மனிதனையும், அவனைச் சார்ந்திருப்பவர்களையும் நிம்மதியாக வாழவைக்கும். ஆனால், இன்றைய நிலையில் பெரும்பாலானவர்களின் வாழ்க்கையில், சேமிப்பு என்பது இல்லாமலேயே போகிறது. இதனால் அவர்களின் எதிர்காலம் என்பது பெரிய கேள்விக்குறியாக மாறி வருகிறது.  சேமிப்பை செம்மையாகச் செய்யவும், இன்னும் அதிகமான பணத்தைச் சேமிக்கவும் என்ன வழி? இதோ இந்த ஐந்து வழிமுறைகளைக் கடைப்பிடித்துப் பாருங்களேன்…

1 சேமிப்புக்கென தனியாக வங்கிக் கணக்கு!

Continue reading →

ரத்த சோகையை போக்கும் பேரீச்சம் பழம்

 

அனைத்து ஊட்டச்சத்துக்களையும் அள்ளி வழங்கி இயற்கை ஆரோக்கியத்துக்கு அச்சாரமாக விளங்கும் ஆல் இன் ஆல் பழம் இது. ஆற்றலை அள்ளி வழங்குவதுடன் இதயம் முதல் முடி வரை அனைத்து உறுப்புக்களுக்கும் பலன் அளிக்கக்கூடியது.

சத்துக்கள்  பலன்கள்: வைட்டமின் ஏ, சி, இ, கே, பி காம்ப்ளெக்ஸ் என அனைத்து வைட்டமின்களும் இதில் நிறைவாக உள்ளன. வைட்டமின்களின் தங்கச்சுரங்கம் என்று இதை அழைக்கின்றனர். இந்த வைட்டமின்கள்தான் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் அடிப்படையாக இருக்கின்றன. எனவே, இந்தப் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படும்.

Continue reading →

முதியோர் தவறி கீழே விழுந்தால் அலட்சியம் வேண்டாம்

முதியோர் தவறி கீழே விழுந்தால் அலட்சியம் வேண்டாம்; தவறினால் அது நாளடைவில், படுத்த படுக்கையாகி, உயிரிழப்புக்கு வழி வகுத்து விடும். அதுபோல், நீண்ட நேரம், ‘ஷூ’ அணிவது கூடாது என்கிறார், டாக்டர் டேவிட் விஜய் குமார்.
சென்னையில், முதன் முறையாக, தவறி கீழே விழும் முதியோருக்கான சிறப்பு பிசியோதரபி மையம் ஒன்றை நடத்தி வருகிறார். முதியோருக்கான பிரச்னைகள் குறித்த கேள்விகளுக்கு, அவர் அளித்த பதில் இதோ:

1முதியோர் அடிக்கடி தவறி கீழே விழுவது ஏன்?
குழந்தைகள் கீழே விழுந்தால் சிறிது நேரம் அழுதுவிட்டு, பழைய படியே சிரித்துக் கொண்டு விளையாட ஆரம்பித்து விடும். ஆனால், முதியோர் விழுதல், சாதாரண உடல் சிராய்ப்பில் ஆரம்பித்து, தலைக்காயம் வரை ஏற்பட்டு, மரணத்தைக் கூட ஏற்படுத்தி விடும். வயது ஆக ஆக, இயங்கும் உறுப்புகளின் திறன், கொஞ்சம் கொஞ்சமாக குறையும் என்பதால், உடலை சரியான நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு, சிறு மூளை, கண், தசைகள் மற்றும் மூட்டுக்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இதில், ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால் நிலை தடுமாறி கீழே விழ வாய்ப்பு உண்டு.

Continue reading →

திருப்பம் தரும் திருப்பதி ! புரட்டாசியில் புண்ணிய தரிசனம்!

‘வேங்கடேத்ரி சமஸ்தானம் பிரம்மாண்டே நாஸ்திகிஞ்சன
வேங்கடேஸ சமோதேவோ நபூதோந பவிஷ்யதி’

திருமலை திருப்பதி  இந்த க்ஷேத்திரத்துக்கு இணையான வேறு க்ஷேத்திரம் இல்லை; திருமலை திருவேங்கடவனுக்கு இணையான வேறு தெய்வம் இல்லை.

உண்மைதான்! ஏழுமலையானைக் கண்கண்ட தெய்வமாக ஏற்றுக்கொண்ட அவன் அடியார்களுக்கு, அவனுடைய திருநாமமே உயிர் உந்தும் மந்திரம்; அவன் கோயில்கொண்டிருக்கும் திருமலையே உலகம். இன்றைக்கும்… வழக்கமான நாட்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் லட்சோபலட்சம் பக்தர்களும் திருமலையில் குவிகிறார்கள் என்றால், திருவேங்கடவனின் அருட்கருணையே அதற்குக் காரணம்!

Continue reading →