Daily Archives: செப்ரெம்பர் 14th, 2014

வெளிநாட்டு முதலீடு கோடிகளில் குவிகிறது: ஒளிரப்போகுது இந்திய ரயில்வே

புதுடில்லி: இந்தியாவில் ஜப்பான் ரூ. 2 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு செய்ய முன்வந்துள்ள நிலையில், சீனா ரூ. 3 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது. இதனால் இன்னும் 5 ஆண்டுகளில் இந்திய ரயில்வே சேவை சர்வதேச தரத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசியாவின் 3 மிகப்பெரும் பொருளாார வல்லரசுகளான சீனா, ஜப்பான் ஆகியவை இந்தியாவுடனான உறவுகளை மேம்படுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்திய பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் ஜப்பான் சென்றார். அப்போது வாரணாசியை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவது, இந்தியாவில் புல்லட் ரயில் சேவையை துவக்குவது, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் என ரூ. 2 லட்சம் கோடி அளவுக்கு இந்தியாவில் முதலீடு செய்யப்போவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியது.

சீனாவும் ஆர்வம்: Continue reading →

இந்தியாவில் அல்கொய்தா..! நிஜ நிலவரம் என்ன?

பிரபல உணவகத்தின் கிளை வேளச்சேரியில்  திறக்கப்பட்டது’ என்பதைப்போல, ‘இந்தியாவில் அல் கொய்தா கிளை தொடக்கம்’ என்று கடந்த வாரம் முழுக்க செய்திகள் ஓடின. உலகின் அதிபயங்கர தீவிரவாத இயக்கமான அல் கொய்தா இனி இந்தியாவிலும் செயல்படத் தொடங்கும் என்ற செய்தி, புதிய பீதியையும் பரபரப்புகளையும் கிளப்பிவிட்டுள்ளது.

பின்லேடனுக்குப் பிறகு அல் கொய்தாவுக்கு தலைமை தாங்குபவர் அய்மான் அல் ஜவாஹிரி. இவர் பேசும் 55 நிமிடங்கள் கொண்ட வீடியோ பதிவு இணையத்தில் வெளியானது. அதில் அல் கொய்தா அமைப்புக்கு இந்தியாவில் கிளை தொடங்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் அது ‘காயிதத் அல் ஜிகாத்’ என அழைக்கப்படும் என்றும் கூறுகிறார். ‘திடீரென அமைப்பு தொடங்கப்பட வில்லை. இரண்டு ஆண்டுகள் கடுமையாக உழைத்த பின்பே, இந்தியாவில் அல்  கொய்தாவைத் தொடங்கி உள்ளோம். இந்தியத் துணைக் கண்டம், ஒரு காலத்தில் இஸ்லாமிய ஆட்சியின் அங்கமாகவே இருந்தது. அதைத் திரும்பவும் கட்டி அமைப்பதே எங்கள் நோக்கம்!’ என்கிறார் அல் ஜவாஹிரி. இந்தியாவை மட்டும் அல்ல… அவரது பேச்சில் மியான்மர், பங்களாதேஷ் ஆகிய இந்தியாவுக்கு அருகாமை நாடுகளையும் குறிப்பிடுகிறார்.

Continue reading →

வெற்றியின் மந்திரம் பிராண்ட்!

ஒரு மனிதனுக்கு அடையாளம்  முக்கியம் என்பதுபோல, ஒரு பொருளுக்கும், அதைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் பிராண்ட் என்பது மிக மிக முக்கியமானது.

சுயமாகத் தொழில் ஆரம்பித்து அதை வெற்றிகரமாக நடத்த வேண்டுமெனில் நிதி, தொழில் நிறுவனம் அமையும் இடம், அதன் பணியாளர்கள், மார்க்கெட்டிங் ஆகிய காரணிகளைப்போல பிராண்ட் மதிப்பை உயர்த்துவதென்பதும் மிக முக்கியமானது.

Continue reading →

எக்ஸெல் டிப்ஸ்

சார்ட்களில் லேபிள் அமைக்க: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் சார்ட்களுக்கு டேட்டா லேபிள் அமைப்பது அந்த சார்ட் தெரிவிக்கும் முக்கிய தகவல்களை எடுத்துக்காட்டும். நீங்கள் அமைக்கும் சார்ட் பார்மட்டைப் பொறுத்து இந்த லேபிள்கள் தகவல்களைக் காட்டுவதில் சிறப்பிடங்களைப் பெறுகின்றன. இது எப்படி என்று பார்க்கலாம்.
எடுத்துக்காட்டாக நீங்கள் ஒரு பை – சார்ட் அமைத்தால் அதில் டேட்டாவிற்கான லேபிள் இல்லை என்றால் நிச்சயம் தகவல்கள் என்ன சொல்ல வருகின்றன, ஒன்றுக்கொன்று எப்படித் தொடர்புடையன என்று தெரியாது. இந்த டேட்டா லேபிள்களை எப்படி அமைப்பது என்று காணலாம். எக்ஸெல் 2007 பயன்படுத்துபவர்களுக்கு:
1. முதலில் எந்த சார்ட்டுக்கு டேட்டா லேபிள் அமைக்க வேண்டுமோ அதன் மீது கிளிக் செய்து இயக்கவும்.
2. லேஅவுட் டேப் ரிப்பன் காட்டப்படுவதனை உறுதி செய்திடவும்.
3. இதில் உள்ள Data Labels என்ற டூலைக் கிளிக் செய்திடவும். இந்த வகையில் எந்த இடத்தில் டேட்டா லேபிள்களை அமைக்க வேண்டும் என்பதற்கு பல ஆப்ஷன்களை எக்ஸெல் தருகிறது.
4. எங்கிருந்தால் சிறப்பாக அந்த லேபிள் தன் பணியைச் செய்திடுமோ அங்கு வைக்கவும்.
அடுத்து, எக்ஸெல் 2003 பயன்படுத்துபவர்களுக்கு:

Continue reading →