Daily Archives: செப்ரெம்பர் 15th, 2014

தடுப்பூசி ரகசியங்கள்! – 7

மக்களைத் தாக்கும் நோய்க் கிருமிகளில் வைரஸ் மிக மோசமானது. இது ஏற்படுத்தும் பாதிப்புகள் கடுமை யானவை; மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியவை. உதார ணத்துக்கு… சென்ற நூற்றாண்டில் எய்ட்ஸ்; இப்போது எபோலா. இந்த வரிசையில் சத்தம் இல்லாமல் உயிரைப் பறிக்கும் மற்றொரு வைரஸ் கிருமி ‘ஹெபடைட்டிஸ் பி’  (Hepatitis – B). இதற்கு ‘உயிர்க்கொல்லி நோய்’ என்ற பட்டப் பெயரும் உண்டு. ஆனால், இந்த வைரஸ் தொற்றைத் தவிர்க்க தடுப்பூசி உள்ளது என்பது ஆறுதலான விஷயம்.

பொதுவாக, எந்த ஒரு கிருமி கல்லீரலைத் தாக்கினாலும் மஞ்சள் காமாலையை உண்டாக்கும்.  அது பாக்டீரியாவாகவும் இருக்கலாம்; வைரஸாகவும் இருக்கலாம். வைரஸ்களில் ‘ஹெபடைட்டிஸ்’ வைரஸ் முக்கியமானது. ஏ, பி, சி, டி, இ என இவற்றில் பல வகைகள் உள்ளன. இவற்றில் ஹெபடைட்டிஸ் பி மற்ற வைரஸ்களைவிட மிகவும் மோசமானது. இது கல்லீரலைத் தாக்கி மஞ்சள் காமாலை – பி எனும் தொற்று நோயை ஏற்படுத்துகிறது.

உலகில் சுமார் 20 கோடிப் பேர் இந்த நோயால் அவதிப்படுகிறார்கள். இதற்குப் பிரத்யேகமாக மருந்து, மாத்திரை, சிகிச்சை எதுவும் இல்லை. இது வந்தால் மரணம் நிச்சயம் என்பதால், ஒவ்வொருவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியிருக்கிறது.

பரவும் விதம்

Continue reading →

மனிதன் மாறி விட்டான்!-20

புன்னகை மன்னர்கள்!

சொற்களைக் காட்டிலும் சக்திவாய்ந்தது ஒரு புன்னகை.  மனித மனங்களை ஒரு புன்னகையால் இணைக்கும்போதுதான் உறவுகள் மேம்படுகின்றன.  உதடுகளும் பற்களும் கூட்டணியமைத்துக்கொண்டு புன்னகையை உருவாக்குகிறபோதுதான் அது சக்திவாய்ந்ததாக அடுத்தவர் இதயங்களில் நங்கூரம் பாய்ச்சுகிறது. ஒரு புன்னகையை சிந்துவதற்கு எந்தச் செலவும் இல்லை.  ஆனால், அதுவே நமக்கு சிரமமான செயலாக இருக்கிறது. புன்னகை, அனைத்தையும் நேராக்கும் ஒரு வளைவு.   

Continue reading →

மொபைல் சாதனங்களில் பாதுகாப்பற்ற வழிகள்

மொபைல் சாதனங்கள், குறிப்பாக ஸ்மார்ட் போன்கள், நம் வாழ்வை, வர்த்தகத்தை புதிய பரிணாம வளர்ச்சிக்குக் கொண்டு சென்றுள்ளன. எங்கு சென்றாலும் நம் தொழில் குறித்து பணி மேற்கொள்ள இவை உதவுகின்றன. இந்த அளவிற்கு நம்மை முன்னேற்றமடைய உதவும் இந்த சாதனங்களைப் பயன்படுத்துவதில் நாம் பல பாதுகாப்பற்ற வழிகளைப் பின்பற்றுகிறோம். அவை எவை என்பதனையும், அவற்றிலிருந்து நம்மப் பாதுகாத்துக் கொள்ள என்ன செய்திட வேண்டும் என்பதனையும் இங்கு காணலாம்.
1. சாதனத்தினை பூட்டி வைக்க மறத்தல்: நம் சாதனத்தை லாக் செய்தல் பெரிய அளவில் பாதுகாப்பினை வழங்கப் போவது இல்லை என்றாலும், அதுவே நம் பாதுகாப்பு கட்டமைப்பில் முதல் படியாகும். இந்த லாக் எப்படிப்பட்டதாக வேண்டுமானாலும் இருக்கலாம். தற்போது வந்துள்ள ஐபோன் 5ல் தரப்பட்டுள்ள விரல் ரேகை பூட்டு முதல், சாதாரணமாக பின் (PIN) எண் அல்லது பாஸ்வேர்ட் கொடுத்து பூட்டு போடும் முறை வரை இருக்கலாம். இதனுடன் கூட நம் போன் தொலைந்து போனாலும், ரிமோட் கட்டுப்பாடு முறையில் அதில் உள்ள தகவல்கள் அனைத்தையும் மொத்தமாக அழித்திடும் வழிமுறைகளையும் பின்பற்றலாம்

Continue reading →