Daily Archives: செப்ரெம்பர் 16th, 2014

ஜெயலலிதா கோரிக்கை ஏற்பு: சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு செப்.27ஆம் தேதிக்கு மாற்றம்!

பெங்களூரு: முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 27ஆம் தேதி வழங்கப்படும் என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இறுதி வாதம் நிறைவடைந்து 20ஆம் தீர்ப்பு வழங்கப்படும் என்று பெங்களூரு நீதிமன்றம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், தனக்கு அச்சுறுத்தல் இருப்பதால் நீதிமன்றத்தை பரப்பன அக்ரஹாராவுக்கு மாற்றக் கோரி முதல்வர் ஜெயலலிதா, பெங்களூரு நீதிமன்றத்தில் நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "சொத்து குவிப்பு வழக்கில் 20ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்றும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளவர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக முதல்வராக உள்ள ஜெயலலிதா ‘இசட்’ பிரிவு பாதுகாப்பில் உள்ளார். தற்போது வழக்கு நடைபெறும் சிறப்பு நீதிமன்றத்தில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லை. ஜெயலலிதா நேரில் வந்து வாக்குமூலம் அளித்தபோது உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி பரப்பன அக்ரஹாராவுக்கு நீதிமன்றம் தற்காலிகமாக மாற்றப்பட்டது.
அதேபோல் தீர்ப்பு வழங்கப்படும் தினத்தன்று நீதிமன்றத்தை பரப்பன அக்ரஹாராவுக்கு மாற்ற வேண்டும். போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா, ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார்.
பாதுகாப்பு கருதி பரப்பன அக்ரஹாரம் சிறை வளாக நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் செப்டம்பர் 20ஆம் தேதிக்கு பதில் 27ஆம் தேதிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதற்கிடையே, ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு வழங்க தயாராக உள்ளதாகவும், இந்தப் பணியில் 5 ஆயிரம் போலீசார் ஈடுபட இருப்பதாகவும், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் அம்மாநில காவல்துறை அபிடவிட் தாக்கல் செய்துள்ளது.

அழகை நிரந்தரமாக்கும் டோட்டல் கேர்!

”பார்லர் சர்வீஸைப் பொறுத்தவரை, நாளுக்கு நாள் புதுசு புதுசா பலவிதமான அழகு சிகிச்சைகள் வந்துட்டே இருக்கு. இவை குறிப்பிட்ட பிரச்னைகளுக்கானவை. தவிர, மாதம் ஒருமுறை செய்யக்கூடிய ‘டோட்டல் கேர்’ எனப்படும் உச்சி முதல் உள்ளங்கால் வரையிலான சிகிச்சைகளைத் தொடர்ந்து எடுத்துக்கிட்டாலே, அழகு சார்ந்த பிரச்னைகளைத் தவிர்க்கலாம்” என்று சொல்லும் ‘க்ரீன் டிரெண்ட்ஸ்’ நிறுவனத்தின் சீனியர் டிரெயினர் பத்மா, ‘டோட்டல் கேர்’ சர்வீஸ் பற்றி விளக்கினார்.

பார்லர்

ஹேர் ஸ்பா

ஹேர் ஸ்பா செய்வதால் முடி ஆரோக்கியமா இருப்ப துடன், மனதுக்கும் நல்ல ரிலாக்ஸேஷன் கிடைக்கும். இந்த சிகிச்சையில் முதலில் ஹேர் வாஷ் செய்து, கஸ்டம ருடைய கேசத்தின் தன் மைக்கு ஏற்ற ஹேர் க்ரீம்

Continue reading →

திருமணத்தின்போது மோதிரம் போடுவதன் ரகசியம் தெரியுமா?

தாலி: தாயாகி தாலாட்டுப்பாட, கணவன் தரும் பரிசு சின்னம்.
தோடு: எதையும் வெளியில் சொல்லாமல், காதோடு போட்டு வைத்துக்கொள்.
மூக்குத்தி: முதலில் சமையலை, அதன் வாசனையை அறியும் உத்தி, மூக்குக்கு உண்டு என்பதால்.
வளையல்: கணவன் உன்னை வளைய வளைய வர வேண்டும் என்பதற்காக.
ஒட்டியாணம்: கணவன், மனைவி இருவரும், ஈருடல் ஓருயிராய் ஒட்டியானோம் என்பதற்காக.
மோதிரம்: எதிலு

Continue reading →

யூசர் அக்கவுண்ட் கண்ட்ரோல்

மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் விஸ்டா பதிப்பிலிருந்து யூசர் அக்கவுண்ட் கண்ட்ரோல் என்னும் கட்டுப்பாட்டினை அமல்படுத்தியது. இது இப்போதும் விண்டோஸ் 7 மற்றும் 8ல் இயங்குகிறது. UAC எனச் சுருக்கமாக அழைக்கப்படும் இந்த டூல், உங்களுடைய அனுமதியின்றி புரோகிராம்கள் இயங்குவதைக் கட்டுப்படுத்துகிறது. இதனுடன் ஒரு அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட்டினைப் பயன்படுத்துவது லிமிடெட் யூசர் அக்கவுண்ட் போல அல்ல.
அப்ளிகேஷன் புரோகிராம்கள் உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்க அனுமதியைத் தானாகப் பெறுவதில்லை. முதலில் இயக்குபவரைத்தான் கேட்கும்.
யு.ஏ.சி. தீர்த்து வைக்கும் பிரச்னைகள்: விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் முதலில் ஒரு பிரச்னை கண்டறியப்பட்டது. பெரும்பாலானவர்கள், அவர்களுடைய

Continue reading →

நலம் 360’ – 14

திடீரென ஒரு நாள் ‘சுரீர்’ என பல் வலியெடுத்து, முகம் கோணி, காது, தொண்டை, பின்மண்டை வரை வலித்த பிறகே நாம் பல் மருத்துவரைத் தேடுகிறோம். ஆனால் பல் மருத்துவ உலகம் சொல்வதெல்லாம், ‘பற்களின் பாதுகாப்பு பிறந்தவுடன் தொடங்கியிருக்க வேண்டும்’ என்பதைத்தான்!

சிசுவுக்கு தாய்ப் பால் புகட்டியதும் மிருதுவான, சுத்தமான துணியால் மிகமிக மென்மையாக ஈறுகளைத் துடைப்பதில் இருந்து பல் பராமரிப்பு தொடங்குகிறது. நள்ளிரவில் பால் கொடுத்துவிட்டு ஈறுகளைச் சுத்தம் செய்யாமல் விடுவதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு அனைத்து

Continue reading →

ஜெயலலிதாவின் சொத்துப்பட்டியல்! (விகடன் நியூஸ் )

மிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வருகிற 20 ஆம் தேதியன்று வழங்கப்பட உள்ள நிலையில், இந்த வழக்கில் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் சொத்துப்பட்டியல் விவரம்….

1. சென்னை போயஸ் தோட்டம்- கதவிலக்கம் 36 ல் பத்து கிரவுண்டு 330 சதுர அடி நிலமும், கட்டடமும்
3. ஐதராபாத் ஸ்ரீநகர் அலுவலர் காலனியில் 651.18 சதுர மீட்டர் கட்டடம்.
3. ஐதராபாத் அருகே ஜிடிமெட்லா மற்றும் பஷீராபாத் கிராமங்களில் இரண்டு பண்ணை வீடுகள், பணியாளர்களுக்கான வீடுகள், மற்றும் திராட்சை தோட்டம் (11.35 ஏக்கர்)

Continue reading →

கோவில் விளங்க குடி விளங்கும்!

இன்று, நாட்டின் பல்வேறு இடங்களில் பழுதுபட்டு கிடக்கும் ஒவ்வொரு பழமையான கோவிலுக்கு பின்பும், ஒரு உயிரோட்டமுள்ள வரலாறு உள்ளது. அதனால் தான், காஞ்சி மகா பெரியவர், ‘புதுசு புதுசா கோவில் கட்டறதை விட, பழைய கோவில்களை புதுப்பிச்சு, விளக்கேத்தி, ஒரு வேளை பூஜையாவது நடக்கும்படி செய்வது பெரிய புண்ணியம்…’ என்றார்.
‘கோவில் விளங்க குடி விளங்கும்’ என்பது முதுமொழி. பழுதுபட்டு கிடக்கும் கோவிலை சுத்தப்படுத்தி, விளக்கேற்றி வழிபட்டால், கடவுளின் அனுக்கிரகம் மட்டுமல்ல, குடும்பமும் சுபிட்சம் அடையும்.
ஒரு ஊரில் தம்மக்கா என்ற பெண்மணி வாழ்ந்து வந்தாள். அவள் ராமரிடம் அளவில்லாத பக்தி கொண்டவள். நாளாக நாளாக, ராமரை நேராக தரிசிக்க வேண்டும் என்ற ஆர்வம் தம்மக்காவிற்கு ஏற்பட்டது. அதனால், ஒவ்வொரு நாளும், தன் மனதுள் உறைந்துள்ள ஆசையை விண்ணப்பமாக வைத்து, ராமபிரானிடம் வேண்டி வந்தாள் தம்மக்கா.
சரணாகதி ரட்சகனான ராம பிரான், தம்மக்காவின் விருப்பத்தை நிறைவேற்றத் தீர்மானித்தார். ஒரு நாள், இரவு நேரம்… தம்மக்கா வழிபாட்டை முடித்து, ராமரைத் தியானித்தபடியே தூங்கி விட்டாள். கனவில் அவளுக்கு காட்சியளித்த ராமர், ‘தம்மக்கா… இதோ அருகில் உள்ள மலையில் நான் இருக்கிறேன்; அங்கு வந்து வழிபாடு செய்…’ என்று அருளி, மறைந்தார்.
கனவு கலைந்தது; அதன்பின், தம்மக்கா தூங்கவில்லை.
காரணம், நல்ல கனவு கண்டால், அதன் பின் தூங்கக்கூடாது; அப்போதுதான் அது பலிக்கும். கெட்ட கனவு கண்டால், அதன் பின் தூங்கிவிட வேண்டும்; அப்போது தான் அது பலிக்காது என்பர் பெரியோர். அதன் காரணமாக, கனவில் இறை தரிசனம் கிடைத்த தம்மக்கா, அதன்பின் தூங்கவில்லை.
காலையில் எழுந்ததும், தான் கண்ட கனவை ஊர் மக்களிடம் தெரிவித்து, ‘கனவில் வந்து கருணை பொழிந்த அந்த ராமருக்கு அவர் சொன்னபடியே, கோவில் கட்டி வழிபாடு செய்ய வேண்டும்…’ என்றாள். தர்ம சிந்தனையும், தெய்வ பக்தியும் கொண்ட பெரும் செல்வந்தர் ஒருவர், ‘அம்மா… நானே முன்னின்று உன் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன்…’ என்றார்.
ஊர் மக்களும், தம்மக்காவும், கனவில் ராமபிரான் கூறிய மலைக்கு சென்றனர். நீண்ட நேரம் தேடிய பின், அங்கே ஒரு புதரின் அடியில் ராமர், லட்சுமணன், சீதை மற்றும் அனுமார் ஆகிய நால்வரின் விக்கிரகங்கள் இருந்தன. அழகொழுகும் அந்த விக்கிரகங்களைத் தரிசித்ததும், கண்ணீர் விட்டு, கை கூப்பி தொழுது மகிழ்ந்தாள் தம்மக்கா.
பின்னர், தரும சிந்தனை கொண்ட செல்வந்தர் மற்றும் ஊர் மக்களால், அம்மலை மேல், அழகானதொரு கோவில் உருவானது.
கோவில் உருவாவதற்கு மூல காரணமாக இருந்த தம்மக்கா, ராமரை வழிபட்டு, திருவருள் பெற்றாள். தம்மக்காவால் உருவாகிய அக்கோவிலை, பிற்காலத்தில் அரசர் ஒருவர் செப்பனிட்டார். அதன்பின் கவனிப்பாரின்றி கால வெள்ளத்தில் அக்கோவில் பழுதடைந்து, முள்ளும், புதரும் மண்டிப் போனது. அக்கோவிலை மீண்டும் கோபமண்ணா என்பவர் புதுப்பித்தார். அக்கோவில்தான், பத்ராசல ராமர் கோவில். ராமரே வந்து வெளிப்படுத்திய அந்த விக்கிரகங்களை, இன்றும் நாம் தரிசிக்கலாம். தம்மக்காவிற்கு அருள் புரிந்த ராமர், நமக்கும் அருள் புரிவார்.