Daily Archives: செப்ரெம்பர் 17th, 2014

மனசை ரிலாக்சா வச்சுக்குங்க… எல்லாம் இனிதாய் நடக்கும்; தற்கொலை எண்ணம் வராது!

உலகில் ஆண்டுக்கு, எட்டு லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஒவ்வொரு, 40 நொடிகளுக்கும், ஒரு தற்கொலை நடக்கிறது. ஆண்டுக்கு, 1.35 லட்சம் தற்கொலைகள் என, உலக நாடுகளில், இந்தியா முதல் இடத்தில் உள்ளது. அதில், 12.5 சதவீத தற்கொலைகள் தமிழகத்தில் நடக்கின்றன. வளர்ச்சி பெற்ற மாநிலமான, தமிழகம், தற்கொலையில் முதல் இடத்தில்
இருப்பது, கவலை தரும் செய்தி.உலக தற்கொலை தடுப்பு நாள், செப்., 10ஐ அனுசரித்துள்ள நிலையில், ‘எப்போதும் மனதை ரிலாக்சாக வைத்துக் கொள்ளுங்கள்; பிரச்னைகளைக் கண்டு பயம் வேண்டாம்; மனம் விட்டு பேசுங்கள், தற்கொலை எண்ணமும் வராது’
என்கிறார், அரசு மருத்துவமனை, மனநல நிபுணர் ஆனந்த் பிரதாப். கேள்விகளுக்கு, அவர் அளித்த பதில்கள்:
1சிறு சிறு பிரச்னைகளுக்கு எல்லாம் தற்கொலை என, செய்தி வருகிறதே? இந்த நிலைக்கு என்ன காரணம்?

Continue reading →

ஜன் தன்: காப்பீடு + கடன் தரும் திட்டம்!

அரசு   மானியம்  பெறுகிறவர்களில் பலருக்கு வங்கிகளில் சேமிப்புக் கணக்கு இல்லை. இதனால்  அந்த மானியம் மக்களுக்குப் போய்ச் சேராமலே இருக்கிறது. எனவே, 7.5 கோடி பேருக்கு வங்கிக் கணக்கு ஆரம்பித்துத் தரும் ஜன் தன் யோஜனா திட்டத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார் பிரதமர் மோடி. இந்தத் திட்டத்தால் என்ன  பயன் என ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் முதன்மை பொது மேலாளர் பி.எஸ்.பிரகாஷ் ராவிடம் கேட்டோம்.

“பிரதமர் துவக்கி வைத்த அனைவருக் கும் நிதிச் சேவை திட்டத்தின் கீழ் இதுவரை வங்கிக் கணக்கு இல்லாத வர்கள் வங்கிக் கணக்கை ஆரம்பிக்க முடியும். இதில் ரூபே டெபிட் கார்டு இலவசமாக வழங்கப்படும். இதனுடன் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள விபத்து காப்பீடும் இலவசமாகக் கிடைக்கும். மேலும், ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள லைஃப் இன்ஷூரன்ஸ் கவரேஜ் வழங்கப்படுகிறது. சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர் மரணம் அடைந்தால் இந்தத் தொகை கிடைக்கும்.

Continue reading →

ட்ரோன்… – கில்லர் ரோபோ

லகமே தீவிரவாதிகளைப் பார்த்துப் பயந்தால், அந்தத் தீவிரவாதிகளைப் பயமுறுத்துவது ‘கில்லர் ரோபோ’. ‘ட்ரோன்’ (Drone) எனப்படும் ஆள் இல்லா உளவு மற்றும் தாக்குதல் விமானம். ‘டெர்மினேட்டர் 3 ரைஸ் ஆஃப் தி மெஷின்ஸ்’ படத்தில் ‘ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ்’ மூலம் எதிரிகளை இனம்கண்டு ஆள் இல்லா விமானங்கள் தாக்குதல் நடத்தும். கிட்டத்தட்ட அதே மாதிரி துல்லியமாகத் தாக்குதல் நடத்தி ஆட்களைக் கொல்கிறது இந்த ட்ரோன்!

உண்மையில், இந்த ட்ரோன் நிலங்களை அள க்க, காட்டுத் தீயைக் கண்காணிக்க, மக்கள் கூட்டத்தைக் கண்காணிக்க, பைலட்கள் பயிற்சி எடுக்க… எனப் பலவித சமூக பயன்பாடுகளுக்காக உருவாக்கப்பட்டது. பின்னர் அதை உளவு வேலைகளுக்காகப் பயன்படுத்தினார்கள். ஒரு ட்ரோன் விமானம் மேகக் கூட்டங்களிடையே பறந்து நிலங்களைப் படம் பிடித்து அனுப்பும். அதில் தீவிரவாத முகாம்கள் இருந்தால், அடுத்ததாக போர் விமானங்கள் கிளம்பிச் செல்லும். ஜெகஜ்ஜாலக் கில்லாடிகளான அல்கொய்தாவினர், ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைத்தளத்துக்கு அருகிலேயே தங்களது சோர்ஸை வைத்திருப்பார்கள். ஒரு அமெரிக்கப் போர் விமானம் அரக்கப்பரக்கக் கிளம்பினால், ஊர்சுற்றிப் பார்க்கவா கிளம்பும்? நிச்சயம் தாக்குதல் நடத்தத்தானே! உடனே அல்கொய்தா டீம் தங்கள் கேம்ப்பை காலி செய்துவிடுவார்கள். அப்புறம் என்ன… ஒருவரும் இல்லாத இடத்தில் குண்டுகளை வீசிவிட்டுத் திரும்பும் அமெரிக்கப் போர் விமானம். தீவிரவாதிகள் தப்பிவிட்டார்கள் என்பது ஒரு பக்கம்… தேவை இல்லாத செலவு மற்றொரு பக்கம். (போர் விமான எரிபொருள் அவ்வளவு காஸ்ட்லி. அமெரிக்காவின் எஃப்-22 போர் விமானத்தை ஒரு முறை இயக்க, சுமார் 40 ஆயிரம் டாலர் செலவு ஆகும். இந்திய ரூபாயில் சுமார் 24 லட்சம்!)

Continue reading →

சமுதாயத்தை சமப்படுத்தும் இணையம்

1. இன்டர்நெட் தான், மக்களை அவர்கள் வசிக்கும் இடத்தின் அடிப்படையில் அல்லாமல், அவர்களின் பொதுவான ஆர்வம் மற்றும் நோக்கங்களின் அடிப்படையில் சமுதாயத்தை அமைக்க உதவியுள்ளது. தமிழ் பேசுவோர், டிஜிட்டல் போட்டோ எடுப்போர், ரஜினி ரசிகர்கள், கல்லூரி அறைத் தோழர்கள் எனப் பல குழு சமுதாயங்களை அமைக்க முடிகிறது. இதனால்நல்ல உறவு தொடர்கிறது.

Continue reading →