Daily Archives: செப்ரெம்பர் 18th, 2014

மிஸ்டர் கழுகு: காந்தி நகர் to பரப்பன அக்ரஹாரா!

பெரும்பாலும் பெங்களூரிலேயே முகாமிட்டு உள்ளார் கழுகார். அங்கிருந்து நேராக நம்முடைய அலுவலகத்​துக்கு வந்தார்.

”சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு 20-ம் தேதி வரப்போகிறது. அதற்குத் தடை ஏற்படுத்துவதற்காகச் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் காலாவதி ஆகிவிட்டன. 16-ம் தேதிக்கும் 19-ம் தேதிக்கும் இடையில் ஏதாவது புதிய மனு போடப்போகிறார்களா எனத் தெரியவில்லை. 15-ம் தேதி காலை ஜெயலலிதா தரப்பு ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவைப் பார்க்கும்போது 20-ம் தேதி அன்று ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வரும் நீதிமன்றத்தில் நிச்சயம் ஆஜராவார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது!”

Continue reading →

கர்ப்பிணிகளுக்கு கைகொடுக்கும் மருத்துவ ஆலோசனைகள்

கர்ப்ப காலத்தில், பெண்கள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் அதிகம். மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகளை அப்படியே ஏற்று, பின்பற்றினால், பிரசவம் சுகமாக அமையும்.
அந்த ஆலோசனைகளில் மிக முக்கியமான சில:

  • கர்ப்பம் தரித்ததும் அல்லது மாதவிலக்கு தள்ளிப் போனதும், ஏதாவது மருந்து, மாத்திரை சாப்பிட்டு வந்தால், மருத்துவரின் ஆலோசனை பெற்று, அதை நிறுத்த வேண்டும்.

Continue reading →

விண்டோஸ் 8.1 ஷட் டவுண்

விண்டோஸ் 8 சிஸ்டம் பதிந்தவர்கள் தற்போது விண்டோஸ் 8.1 தொகுப்பிற்கு மாறியுள்ளனர். பல வாசகர்கள், இது குறித்து நமக்குப் பல சந்தேகங்களை எழுப்பி கேள்விகளை அனுப்பி உள்ளனர். அவற்றில் அதிகம் இடம் பெறுவது, சிஸ்டம் ஷட் டவுண் விஷயமே. அது குறித்து இங்கு பார்க்கலாம்.
தற்போது வந்திருக்கும் விண்டோஸ் 8.1. சிஸ்டம், விண்டோஸ் 8 சிஸ்டம் தரும் வழிகளுக்கும் மேலாக, கூடுதலாகச் சில வழிகளையும் தந்துள்ளது.
விண்டோஸ் ஷட் டவுண்ட் செய்வதற்கான எளிய வழி, ஸ்டார்ட் பட்டனைப் பயன்படுத்துவது தான். ஸ்டார்ட் பட்டனில் ரைட் கிளிக் செய்திடவும். இதில்

Continue reading →

உஷார், உஷார்…மொபைல் பேங்கிங் மோசடி!

பேசுவதற்கும் எஸ்எம்எஸ் அனுப்புவதற்கும் நாம் அதிகம் பயன்படுத்தும் செல்போன், இப்போது பணப் பரிமாற்றம் செய்வதற்கும் பெரிய அளவில் பயன்படுகிறது.

இன்டர்நெட் மூலம் பணப் பரிமாற்றம் செய்யும்போதுதான் நம் வங்கிக் கணக்கு தொடர்பான தகவல்களைத் திருடினார்கள் என்றால், இப்போது செல்போன் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும்போதும் நம் வங்கிக் கணக்கு தொடர்பான தகவல் களைத் திருடி, நம் கணக்கில் இருக்கும் பணம் அனைத்தையும் கொள்ளையடிக்கத்தான் செய்கிறார்கள். இருந்த இடத்தில் இருந்தபடி பணத்தை அனுப்ப  நினைத்தால், நம் பணத்தை இழக்க வேண்டிய துர்பாக்கியம் ஏற்படுகிறது.

இதெப்படி சாத்தியம்? என் செல்போனில் இருக்கும் தகவல்கள் என்னைத் தவிர வேறு யாருக்குத் தெரியப்போகிறது என அப்பாவியாகக் கேட்கும் பலருக்கும் காத்திருக்கிறது பல அதிர்ச்சித் தகவல்கள்.

Continue reading →

நீங்கள் சாப்பிடும் சூப் நல்லதா… கெட்டதா?!

மாநகரங்களில் மட்டுமல்ல, சிறுநகரங்களிலும்கூட தற்போது மலைக்கவைக்கும் எண்ணிக்கையில் முளைவிட்டுக் கொண்டிருக்கின்றன சூப் கடைகள். இதன் அலாதி சுவை சுண்டியிழுப்பதால், சுற்றிச் சுற்றி வருகின்றன குழந்தைகள்! ‘சூப் குடிப்பது ஆரோக்கியம்’ என்கிற பிரசாரத்தால் படையெடுக்கின்றனர் பெரியவர்கள்!

”வீட்டுல செய்யுற சூப், கஷாயம் மாதிரி இருக்கும். ஆனா, கடைகள்ல குடிக்கிற சூப், சூப்பர்! சூப் குடிச்சா ஸ்ட்ரெங்த் கிடைக்கும்னுதான் ஆரம்பத்தில் சூப் கடைகளில் பைக்கை நிறுத்த ஆரம்பிச்சேன். இப்போ நான் கிட்டத்தட்ட அடிமை ஆயிட்டேன்னு நினைக்கிறேன். யெஸ்… ஐயாம் எ சூப் பாய்!” என்று சொல்லிச் சிரிக்கிறார், திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சந்திரமௌலி. இப்படி பலதரப்பினரின் ஓட்டுகளும் ஒட்டுமொத்தமாக விழ ஆரம்பித்திருப்பதால்… வேகவேகமாக சூடுபிடித்து வருகிறது சூப் டிரெண்ட்!

Continue reading →